உள்ளடக்கத்துக்குச் செல்

குமரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
குமரி:
எனில் கன்னிப்பெண்

[[|thumb|180pxpx||குமரி:
எனில் துர்க்கை..படம்:ஒன்பது தோற்றங்களில் துர்க்கை]]

குமரி:
எனில் கன்னியாகுமரி எனும் இடம்-தமிழ்நாடு
குமரி:
எனில் கற்றாழை எனும் தாவரம்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • குமரி, பெயர்ச்சொல்.
  1. கன்னி
    (எ. கா.) குமரிமணஞ் செய்துகொண்டு (திவ். பெரியாழ். 3, 8, 3).
  2. பருவமடைந்த பெண்
  3. புதல்வி
    (எ. கா.) தக்கனீன்ற . . . குமரியான (கந்த பு. பாயி. 57).
  4. துர்க்கை
    (எ. கா.) விழிநுதற் குமரி (சிலப். 11, 214)
  5. குமரியாறு
    (எ. கா.) வடவேங்கடந் தென் குமரி (தொல். பாயி.)
  6. குமரி முனை
  7. கன்னியாகுமரி தீர்த்தம்
    (எ. கா.) தென்றிசைக்குமரி யாடியவருவோள் (மணி. 13, 7.)
  8. அழிவின்மை
    (எ. கா.) குமரிக் கூட்டிற் கொழும் பல்லுணவு (சிலப். 10, 123).
  9. கற்றாழை (திவா.) (சோற்றுக்கற்றாழை)
  10. மலைநிலத்துச் செய்யும் விவசாயம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. virgin, maid
  2. grown-up unmarried girl
  3. daughter
  4. durga
  5. An ancient river that flowed in the ocean-swallowed tamil country
  6. cape comorin
  7. sacred waters at cape comorin
  8. perpetual youthhood, uncorrupt, unspoilt condition
  9. aloe
  10. cultivation in hills
பயன்பாடு
  • பருவக் குமரி

(இலக்கியப் பயன்பாடு)

  • குமரி பெண்ணின் உள்ளத்திலே (பாடல்)
  • மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம் (விவேக சிந்தாமணி)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரி&oldid=1900255" இலிருந்து மீள்விக்கப்பட்டது