கன்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|100pxpx||கன்னி:
எனில் குமரிப் பெண்]]

கன்னி:
எனில் பெண்
கன்னி:
எனில் இறைவி துர்க்கை
கன்னி:
எனில் இறைவி பார்வதி
கன்னி:
எனில் கன்னியா ராசி-படம்:கன்னியா ராசி நட்சத்திர மண்டலம்
கன்னி:
எனில் கற்றாழை
கன்னி:
எனில் காக்கணம் எனும் காக்கட்டான்
(கோப்பு)

பொருள்[தொகு]

 • கன்னி, பெயர்ச்சொல்.
 1. குமரி
  (எ. கா.) கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.)
 2. இளமை
  (எ. கா.) கன்னிப் புன்னை (திருக்கோ. 177)
 3. புதுமை
  (எ. கா.) கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900)
 4. முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர்
 5. அழிவின்மை
  (எ. கா.) கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2, 9, 7)
 6. பெண் (சூடாமணி நிகண்டு)
 7. தவப் பெண் (சூடாமணி நிகண்டு)
 8. என்றும் இளமையழியாத பெண்,சத்தகன்னியர் (பிங்.)
 9. துர்க்கை
  (எ. கா.) கன்னிசெங்கோட்டம் (கல்லா. 58)
 10. பார்வதி (பிங்.)
 11. குமரியாறு
  (எ. கா.) கன்னியழிந்தனள் கங்கை திறம் பினள் (தமிழ்நா. 81).
 12. கன்னியாராசி (பிங்.)
 13. புரட்டாசி மாதம்
 14. காண்க...அத்தம் நட்சத்திரம் (திவா.)
 15. தசநாடியிலொன்று (சிலப். 3, 26, உரை.)
 16. காண்க...கற்றாழை (சூடாமணி நிகண்டு)
 17. காண்க...காக்கணம் (திவா.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. virgin, maiden, young unmarried woman
 2. youthfulness, tenderness, juvenility, virginity
 3. freshness
 4. state of being earliest in time
 5. imperishable state
 6. woman
 7. female ascetic
 8. female possessing perpetual youth, as celestials
 9. durga, a female hindu deity
 10. parvati, a female hindu deity, consort of lord shiva
 11. name of a river that flowed in ancient times, south of cape comorin
 12. virgo, a zodiacal sign
 13. the tamil month Puraṭṭāci
 14. the 13th nakṣatra (star) of hindu almanac
 15. a principal tubular vessel of the human body, one of taca-nāṭi-தசநாடி
 16. aloe
 17. mussel-shell creeper
பயன்பாடு
 • கன்னி மேரி (Virgin Mary)
 • கனவுக் கன்னி (dream girl)
 • கன்னி கழியாத பெண் (a girl who has not lost virginity)
 • கன்னி உரை (maiden i.e. first speech)
 • கன்னி முயற்சி (first attempt)

(இலக்கியப் பயன்பாடு)

 • கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட (பாடல்)
 • கன்னி மனக்கோயில் கைக்கொள்ள (நளவெண்பா

சொல்வளம்[தொகு]

இராசிகள்
உதள்
மேஷம்
ஏற்றியல்
ரிஷபம்
ஆடவை
மிதுனம்
நள்ளி
கடகம்
மடங்கல்
சிம்மம்
ஆயிழை
கன்னி
நிறுப்பான்
துலாம்
நளி
விருச்சிகம்
கொடுமரம்
தனுசு
சுறவம்
மகரம்
குடங்கர்
கும்பம்
மயிலை
மீனம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னி&oldid=1990784" இலிருந்து மீள்விக்கப்பட்டது