வளையம்
Appearance
வளையம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மலர்வளையம் - round wreath of flowers
- பாதுகாப்பு வளையம் - security ring
- ஒளி வளையம் - halo
- முழு சூரிய கிரகணத்தின் போது பார்த்தால் சூரியன் ஒரு கறுப்பு வட்டத்தால் மறைக்கப்படும்! அப்போது அந்தக் கறுப்பு வட்டத்தைத் தாண்டி ஒரு ஒளி வளையம் தெரியும். (Halo என்பார்கள்) (சூரியன், அப்புசாமி.காம்)
- முக்காடு போட்ட பெண்கள், முகத்திரை போல சேலை மறைத்த பெண்கள் , முழங்கை வரை வளையல் அணிந்த பெண்கள். கால்களில் வெள்ளி வளையங்கள் அணிந்தவர்கள் (கும்பமேளா, ஜெயமோகன்)
- சில சாவிகளைக்கொண்ட வளையம். அதைப் பிடித்திருந்த சிவந்த விரல்களின் கொத்து. (மனசு, அப்புசாமி.காம்)
- புகை வளையம் வளையமாக மேலெழும்பி சோபாவுக்கு மேலே புகைக் கோபுரமொன்றைச் சமைப்பதும் அழிப்பதுமாக க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக் கொண்டிருந்தது (சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- இப்போதாயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும் (ஈடு, 2, 6, 11).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வளையம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +