மண்டலம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்டலம்(பெ)
- வட்டம்
- வட்ட வடிவம்
- கிராந்திவீதி, சூரியவீதி
- பிரதேசம். மேக மண்டலம்.
- பாம்பு முதலியவற்றின் சுற்று
- வட்டவடிவான வியூகவகை
- நாட்டின் பெரும்பகுதி
- ஊர்
- மந்திரசக்கரம்
- மண்டில நிலை - தேசிக்கூத்தின் வகை
- 40, 41 அல்லது 45 நாள் கொண்ட காலவளவு
- குதிரைக் கதிவகை
- கூட்டம்
- பரிவேடம்
- நடுவிரனுனியும் பெருவிரனுனியும் கூடி வளைந்திருக்கமற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை
- நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று
- காதலியின் அவயவத்திற் காதலனிடும் நகக்குறி ஆறனுள் வட்ட வடிவுள்ள அடையாளம்
- வில்லோர் நிலையுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- zone, circle, sphere, orbit
- disc, as of sun or moon
- circle of the sun's course, ecliptic
- region, as of sun, moon or clouds
- coil, as of a snake or rope
- array of an army in a circular form
- district,division of a country
- town
- mystic circular diagram
- a posture in folk dance
- period or regimen of 40, 41 or 45 days
- a pace of horse
- assembly; serried array
- halo, as round sun or moon
- (Nāṭya.) A gesture with one hand in which the tips of the middle finger and the thumb are joined and the other fingers are bent, one of 33
- An Upaniṣad, one of 108
- (Erot.) circular nail mark made on a woman's body by her lover during sexual union, one of six
- A posture in archery, one of four
விளக்கம்
பயன்பாடு
- ஒரு மண்டலம்மருந்து சாப்பிடவேண்டும்
- சூரியனைச்சுற்றி மண்டலம்பாட்டிருக்கிறது
- சந்திரமண்டலம் - region of the moon; moon
- சூரியமண்டலம் - region of the sun; sun
- "நீங்க சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு ஒரு மண்டலம் - அதாவது நாற்பத்தெட்டு நாள் எள் விளக்குப் போட்டு, தினம் பன்னிரண்டு பிரதட்சணம் பண்ணா - உங்க வீட்டுக்காரர் விடுதலை ஆயிடுவார்" (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 23-பிப்ரவரி -2011)
(இலக்கியப் பயன்பாடு)
- சுடர்மண்டலம் (திருநூற். 80)
- மண்டலம் பயி லுரகர் (பாரத. குருகுல. 3).
- சோழமண்டல மீதே (திருப்ப. 94).
- பண்ணிய வீதிபற்றி மண்டலம்பயிற்றினானே (சீவக. 795).
- சேனை மண்டலங்களுடனே (பாரத.பத்தாம. 30).
(இலக்கணப் பயன்பாடு)
- மண்டு - மண்டலம்
- மண்டல பூசை
- வளிமண்டலம், ஒரை மண்டலம், காற்று மண்டலம்
- வெப்ப மண்டலம், துருவ மண்டலம்,
- நரம்பு மண்டலம், கழிவு மண்டலம், நிணநீர் மண்டலம், சுவாச மண்டலம்
- காந்த மண்டலம், அயனி மண்டலம்
- வட்டம், பிரதேசம், சுற்று, பகுதி, கூட்டம், பரிவேடம்
ஆதாரங்கள் ---மண்டலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- உலகம்