உள்ளடக்கத்துக்குச் செல்

ஊழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. தடவை, முறை
  2. விதி
    • பல்லூழ் = பலமுறை ((கலித்தொகை 25)
    • பலகாலத்திற்கு முன் = முற்பிறவி
    • ஊழிற் பெருவலி யாவுள - திருக்குறள்-380.
    • விதியை விட பெரிய வலிமை ஏது?
  3. பழமை
  4. பழவினை
  5. பழவினைப்பயன்
  6. முறைமை
  7. குணம்(திவா.)
  8. முதிர்வு
  9. முடிவு
  10. பகை (பிங்.)
  11. மலர்ச்சி
  12. சூரியன்
மொழிப்பெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்:
  1. time, occasion
  2. a long time ago
  3. that which is pristine, of long date - பழமை
  4. karma - பழவினை
  5. rule, established usage, long standing custom - முறைமை
  1. disposition, temper - குணம்
  2. time, turn, occasion - தடவை
  3. maturity - முதிர்வு
  4. end, completion, termination - முடிவு
  5. hatred, enmity, malice - பகை
  6. blossoming - மலர்ச்சி
  7. sun - சூரியன்



( மொழிகள் )

சான்றுகள் ---ஊழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. ஊழ்படு காதலானை (சீவக. 1452)
  2. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380)
  3. ஊழிற்றாகநின் செய்கை (புறநா. 29)
  4. பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்கும் (கலித். 61)
  5. பயம்புக்கூழுற்றலமரும் (மலைபடு. 133)
  6. ஊழின் மண்டிலமாச் சூழுமிந்நுகர்ச்சி (மணி. 30, 118)
  7. முதிரிணரூழ்கொண்ட...வேங்கை (கலித். 44,4)
  8. பொங்கூ ழொளிநிகர் வெங்கை புரேசர் (வெங்கைக்கோ. 90)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழ்&oldid=1979688" இலிருந்து மீள்விக்கப்பட்டது