உள்ளடக்கத்துக்குச் செல்

அடுக்குத் தொடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அடுக்குத் தொடர்

பொருள்

[தொகு]

தமிழ் இலக்கணப் பதம்.

விளக்கம்

[தொகு]

ஒரு தொடரில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வருவது, அடுக்குத் தொடர் ஆகும்.

அடுக்குத் தொடர் "இரண்டு முதல் நான்கு" முறை அடுக்கி வரும்.

( எடுத்துக்காட்டு )

[தொகு]

It means , when you split the word . The two words must have separate meaning

For Example : இரண்டு இரண்டு so when we split it there is a meaning which is 2 the number

  1. புலி, புலி என்று ஒருவன் கத்தினான்.
    1. இதில் புலி புலி என்பது அடுக்குத் தொடர் ஆகும்.
    2. புலி என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் ஒரு பொருளை மட்டும் தரும்.
  2. அழ. வள்ளியப்பா பாடல்
    1. கூட்டம் கூட்டமாகவே குருவி பறந்து சென்றிடும்
    2. குவியல் குவியலாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும்
    3. குலை குலையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும்
    4. மந்தை மந்தையாகவே மாடு கூடி மேய்ந்திடும்
    5. சாரை சாரையாகவே தரையில் எறும்பு ஊர்ஊர்ந்திடும்
  3. அவன் அப்பொருளைச் சுக்கு சுக்காக நொருக்கிவிட்டான்.
  4. நான் சிங்கத்திடமிருந்து வேக வேகமாக ஓடியதால் உயிர் தப்பினேன்.வழி வழி

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

கிளவி , இரட்டைக்கிளவி , இணைச்சொல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுக்குத்_தொடர்&oldid=1997980" இலிருந்து மீள்விக்கப்பட்டது