அப்பால்
Appearance
பொருள்
அப்பால்(உ)
- (ஒன்றைத்) தாண்டி, பிறகு, அப்புறம், அதன்மேல்
- அக்கூற்று
- அப்பகுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பத்து மணிக்கு அப்பால் - beyond or after 10 o'clock
- எல்லைக்கு அப்பால் - beyond the border
- தொடர்பு எல்லைக்கு அப்பால் - beyond reach/the coverage area
- நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து டையல் செய்யவும்!
- போ! அப்பால் போ! - go away!
- சுமார் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இன்னொரு தீவு தெரிந்தது. அதற்கு அப்பால் கொஞ்ச தூரத்தில் இன்னொரு தீவு காணப்பட்டது (மயில்விழி மான், கல்கி)
- சக்கரவர்த்தியையும் அப்பால் அழைத்துப் போங்கள் (பொன்னியின் செல்வன், கல்கி)
- அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன் (வாய்த் திறக்க மாட்டேன், மு வரதராசன்)
- வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு (அலைகளென்பவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- அவற்றுள் அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளபு இசைக்குங் குற்றெழுத்து என்ப. - (தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நூன்மரபு, நாற்பா 3)
ஆதாரங்கள் ---அப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +