கழுநீர்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
கழுநீர்(பெ)
- சமைப்பதற்கு முன் அரிசி முதலியன கழுவிய நீர்
- தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்தநீர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- water in which rice has been washed or rinsed before cooking
- sacred water for cleansing away sin, as that of the Ganges
விளக்கம்
- கழுநீர் = கழுவு + நீர் (பேச்சு வழக்குகள்: கழனி, கழனித்தண்ணி )
- சிற்றூர்களில் அரிசி முதலியவனற்றின் கழுநீர் பசு முதலிய கால்நடைகளுக்கு தவிட்டுடன் கலந்தோ தனியாகவோ உணவாக அளிக்கப்படுகிறது.
பயன்பாடு
- அவர்களுக்கு என்னுடைய "நடப்பும் பெருமாற்றமும்" பிடித்திருந்தால், பசுவுக்கு தவிடுபோடுவதுபோலவோ கழுநீர் ஊற்றுவதுபோலவோ பெண் வந்து முகம் காட்டுவாள். (கோட்டி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
கழுநீர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- purple Indian water-lily
- blue Indian water-lily
விளக்கம்
- கழுநீர் = கெழு-மை + நீர்-மை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +