உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காற்றாடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
காற்றாடி (பெ) ஆங்கிலம் இந்தி
சுழல் கறங்கு; சுழல் விசிறி that which whirls in the wind
காற்றிற் பறக்கவிடும் பட்டம் paper kite; fan
காற்றின் சுழற்சியால் மின்சாரம் தயாரிக்கும்/நீர் இறைக்கும் கருவி windmill
நிலையில்லாதவன் restless, fidgety person; waverer
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • சென்னையில் பொது இடங்களில் காற்றாடி பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது (flying kites in public places prohibited in Chennai)
  • மேல் தொங்கிக் கொண்டிருந்த மின் காற்றாடி சுழன்று கொண்டிருந்தது (the electric fan hanging above was rotating)
  • பனை ஓலையில் செய்த காற்றாடியைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான் (he ran holding the little whirler made of palm leaf)

(இலக்கியப் பயன்பாடு)

  • பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா அடி ஆத்தாடி மனசுக்குள்ள காற்றாடி (பாட்டு)
  • வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன் (அகல் விளக்கு, மு. வரதராஜன்)
  • உயரே பறக்கும் காற்றாடி உதவும் ஏழை நூல்போலே (பாட்டு)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்றாடி&oldid=1047907" இலிருந்து மீள்விக்கப்பட்டது