கிட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கிட்டி:
எனில் கைத்தாளம் என்று ஒரு பொருள்
கிட்டி:
எனில் நாழிகை வட்டில் என்று ஒரு பொருள்..படம்:-கொரிய நாட்டிலுள்ள ஒருவகை நாழிகை வட்டில்
கிட்டி:
எனில் ஒருவகைச் செடி-acalypha fruticosa
கிட்டி:
எனில் பன்றி என்பதும் ஒரு பொருள்
(கோப்பு)
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--घृष्टि--க்4ருஷ்டி1---பொருள் 9 க்கு மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गृष्टि--க்3ருஷ்டி1---பொருள் 10 க்கு மூலச்சொல்
 • acalypha fruticosa..(தாவரவியல் பெயர்)---* பொருள் 8

பொருள்[தொகு]

 • கிட்டி, பெயர்ச்சொல்.
 1. இறுக்குங்கோல்
  (எ. கா.) கையுந் தாள்களுங் கிட்டியார்த்தார் (திருவிளை. நரிபரி. 9).
 2. கவரிறுக்கி--*வேலிமுதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம்
 3. கொல்லர்கருவிவகை----(C. E. M.)
 4. நுகமுளை (சங். அக.)
 5. பிள்ளைகளின் விளையாட்டுக்கருவியுள் ஒன்று
 6. கைத்தாளம் (திவா.)
 7. நாழிகை வட்டில் (W.)
 8. காண்க...சின்னி--*ஒருவகைச் செடி--கிட்டிக் கிழங்கு
  (எ. கா.) கிட்டிக்கிழங்காற் கிளர்தீபன முண்டாம் (பதார்த்த. 435)
 9. பன்றி (சூடாமணி நிகண்டு)
 10. தலையீற்றுப் பசு (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. clamps used to press hands, feet, etc., in torture, to castrate bulls, to press out medicinal oils, etc.,
 2. fork of a branch planted at the mouth of a fence, path, etc., to prevent animals from entering fields, houses, etc.,
 3. iron cramp
 4. pegs that confine the bullock's neck to the ends of the yoke in drawing carts, etc.,
 5. cat in the game of tip-cat
 6. cymbal
 7. clepsydra
 8. indian shrubby copper leaf
 9. hog
 10. young cow that has calved once

விளக்கம்[தொகு]

 • பொருள்--7--நாழிகை வட்டில் எனில் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு நேரம் அறியும் கருவி அல்லது கட்டுமானம்...சாதாரண வழக்கில் வட்டில் எனில் உயரம் குறைந்த, வட்டவடிவமான, பலத்தரப்பட்ட கொள்ள ளவுகளில் உள்ள கலயம்/பாத்திரம்...பெரும்பாலும் தண்ணீர்/சந்தனம்/குங்குமம் போன்றவற்றை வைக்கவே பயன்படுத்தப்படுகிறது...
 • பொருள்--8--இது ஒரு மருத்துவ குணமுள்ளத் தாவர வகை...இதன் கிழங்கால் நாட்பட்ட பிரமேகம், சிலேட்டும நோய் போகும்...மிக்கப் பசியும் பித்த சாந்தியும் உண்டாகும்...
 • பொருள்--10-ஒரேயொரு முறைமட்டும் கன்று ஈன்ற பசுமாடு தலையீற்றுப் பசு எனப்படும்..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டி&oldid=1456708" இருந்து மீள்விக்கப்பட்டது