கொழுவு
Appearance
கொழுவு வினைச்சொல்
பொருள்
- கோபப்படல்
- மாட்டி வைத்தல்
- இணைத்து வைத்தல்
- சண்டை பிடித்தல் ((இப்படிப் பொருளிலும் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.))
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர் போலந்துக்காரர், வயது எண்பதுக்கு மேலே. பல மாதங்களுக்கு பிறகு ஆளை நேரில் பார்த்த நான் திடுக்கிட்டேன். எடை சரி பாதியாகக் குறைந்துவிட்டதென அவரே சொன்னார். உடைகள் ஆணியில் கொழுவிவிட்டதுபோல உடம்பில் தொங்கின. (ஆறாத் துயரம், அ.முத்துலிங்கம்)
- என் வீட்டில் ஒரு சின்ன தொலைக்காட்சி பெட்டி இருந்தது. புதுப்புது விதமான எத்தனையோ பெட்டிகள் சந்தையில் வந்து போய்விட்டன. அகலமானது, சதுரமானது, அதி துல்யமானது, பிளாஸ்மா, சுவரில் கொழுவுவது இப்படி பல. (ஜன்ம சாபல்யம், அ.முத்துலிங்கம்)
- நான் கோட்டைக் கழற்றியதும் அவர் அதை வாங்கி கொழுவினார். (ஆறாத் துயரம், அ.முத்துலிங்கம்)
- அவனோட கொழுவாம உன்னால ஒருக்காலும் இருக்க ஏலாது. (இலங்கை வழக்கு)
- எங்களோட அவர்கள் கொழுவினம். (இலங்கை வழக்கு)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொழுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ + க்ரியா அகரமுதலி