தணிக்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தணிக்கை (பெ)
- திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல்
- ஒரு நிறுவனத்தின் வரவுசெலவு, கணக்குவழக்குகள் ஒழுங்காக உள்ளனவா என அதிகாரபூர்வமாகச் சரிபார்த்தல்; கணக்காய்வு
- மேற்பார்வை; கண்காணிப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- censorship, as for movies
- audit, auditing, inspection
- supervision
விளக்கம்
- அரபு வார்த்தையான tanqiya என்பது மருவி திணிக்கையானது.
பயன்பாடு
- திரைப்படத் தணிக்கைக் குழு - film censor board
- தணிக்கைச் சான்றிதழ் - censorship certificate
- கணக்கில் உள்ளதைவிட மிகக்குறைவான லாபம்தான் அந்நிறுவனத்தால் ஈட்டப்பட்டது; அவையே தணிக்கை மூலம் அங்கீகரிக்கச்செய்யபப்ட்டன. (தனியார் மயம், மேலும் கடிதங்கள், ஜெயமோகன்)
- மெகாத் தொடர்களாகட்டும், செய்திகளாகட்டும், எந்த அளவிற்கு அவை தணிக்கை செய்யப்படுகின்றன ? தணிக்கையே செய்யப்படுவது இல்லை (தனியார் ஊடகங்களுக்குத் தேவை - தணிக்கை!, தஞ்சாவூரான் )
- (வலைப்பூவில்) உங்கள் கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களை (Comments) நீங்களே தணிக்கை செய்யலாம் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
- தொடர்ந்த அச்சுறுத்தல்கள். கடுமையான தணிக்கை, சிறை தண்டனை என்று அதிகாரம் அவரை முடக்கிய போதும் அவரது செயல்பாடுகள் முடங்கவில்லை. (சிரிப்பதற்காக அல்ல, எஸ். ராமகிருஷ்ணன்)
- வந்திருந்தோரின் கணக்கை திரு. ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்த போது நான் வரவில்லை என்ற குறித்திருந்ததைக் கண்டார். (மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை, தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தணிக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +