நெஞ்சுரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெஞ்சுரம்(பெ)
- மனோதைரியம், மனவலிமை, துணிவு
- மனக்கடுமை
- தடித்தனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- boldness, courage, guts
- hard-heartedness (Colloq.)
- audacity (Colloq.)
விளக்கம்
பயன்பாடு
- நின்றவர்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. (ஆனால், ) நெஞ்சுரம் இருந்தது. (பேய் ஆட்சி செய்தால்..., ஆனந்தவிகடன், 15-டிசம்பர்-2010)
- தன் தசையின் அம்பு புதைந்தபோதும் அஞ்சாமல் முன்னால் பாயும் மதயானையைப்போல நெஞ்சுரம் கொண்டவர் வீழ்ச்சியிலும் கூட அஞ்சாமல் முன்செல்வார். (இந்திய சிந்தனை மரபில் குறள் 4, ஜெயமோகன்)
- என்னவொரு கோபம் இவளுக்கு! என்னவொரு ஆவேசம்! என்னவொரு சீற்றம்! என்னவொரு நெஞ்சுரம் இவளுக்கு ! தன்னம்பிக்கைச் சிகரத்தின் மீது, அதன் உச்சியின் மீது நின்று கொண்டு பேசுகிறாள் சீதை. (அரியும் நரியும், அ.கி.வரதராசன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெஞ்சுரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +