கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒழுக்கம்:
எனில் வழி என்பதுமாகும்..படம்: ஒரு சாலை
வழி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- நடை
- (எ. கா.) நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள்
- சீலம்
- (எ. கா.) ஒழுக்க முயிரினு மோம்பப் படும் (குறள். 131).
- விதித்த கடமைகளினின்று வழுவாது நடக்கை (குறள். உரைப்பாயிரம்.)
- உலகத் தோடொட்ட ஒழுகுகை (சி. சி. 2, 23, சிவஞா.)
- செல்லுகை
- வழி (திவா.)
- உயர்ச்சி (சூடாமணி நிகண்டு)
- குலம் (பிங்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- conduct, behaviour, demeanour, discipline
- good conduct, morality, virtue, decorum
- behaving in conformity with the canons of right conduct laid down for observance
- acting according to established rules or customs
- going, passing
- way
- height, elevation
- caste, tribe, family
(வாக்கியப் பயன்பாடு)
- ஒழுக்கம் என்பது கல்வியை விட முக்கியமானது ஆகும்.
சொல்வளம்[தொகு]
- ஒழுகு, ஒழுங்கு, ஒழுக்கம்
- ஒழுக்கமுடைமை, ஒழுக்க நெறி
- நல்லொழுக்கம், தீயொழுக்கம், இல்லற ஒழுக்கம்
- சமய ஒழுக்கம்
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)
+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +