பயனர் பேச்சு:Info-farmer/2013

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பயனர் பேச்சு:தகவலுழவன்/2013 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெளிஊடகப் படங்களைப் பதிவேற்றும் முறை என்ன?[தொகு]

என் பேச்சு பக்கத்தில் நான் கேட்டது கூகில் போன்ற தேடு பொறிகளில் கிடைக்கும் எனக்குத் தேவையானப் படங்களை எப்படி நகலெடுத்து விக்சனரியில் சேர்க்கப்படும் சொற்களோடு இணைப்பது என்பதுதான்...உதாரணமாக 'கோவில் ஆழ்வார்' என்னும் வழிப்பாட்டுப் பெட்டியின் படம் கூகில் செய்யும்போது கண்டேன்...அதை நகலெடுத்து ஒரு சொல்லை சேர்க்கலாம் என்றால் வழி தெரியவில்லை..என் பேச்சு பக்கத்தில் தாங்கள் கொடுத்த விளக்கம் சரியென்றால் மேலும் சற்று விரிவாகச் சொல்லமுடியுமா? .நான் விக்கிபீடியாவிற்குப் புதியவன்...--Jambolik (பேச்சு) 13:56, 8 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]

காப்புரிமை இல்லாப்படங்களை, உங்கள் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டப்படி பதிவேற்றலாம். மற்றொன்று தலைப்பை எப்பொழுதுமே இரண்டு சமக்குறியீடுகள் கொண்டு தொடங்கவும். அப்பொழுதான் வலப்பக்கம் தொகு வசதிவரும். வணக்கம். -- உழவன் +உரை.. 11:35, 10 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]
 • தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதற்கு மன்னிக்கவும்...வெளி ஊடகப்படங்களை எப்படி நகலெடுத்து விக்சனரியில் எப்படி ஒட்டுவது என்று கேட்டிருந்தேன்...காப்புரிமை உள்ள படங்கள் என்று எவ்வாறு தெரிந்துகொள்வது? நான் விக்சனரிக்கு ஒரு 'pre-LKG'..ஐயம் வரும்போதெல்லாம் தெளிவு பெற அணுகலாமா?...,என் பேச்சு' பக்கத்தில் பகுப்பிடல் பற்றி விவரங்கள் கொடுத்தீர்கள்...ஆனால் அதில் நான்கு புள்ளிகளுக்கு மேல் எனக்குச் செய்யத் தெரியவில்லை! உதவ முடியுமா?--71.62.61.237 14:05, 10 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]
தொந்தரவு என்ற சொல்லைக் கூட நான் நினைப்பதில்லை. ஆனால், உடனுக்குடன் உதவ இயலவில்லையே என்று வருத்தப்படுகிறேன். பொதுவாக ஒரு படம் காப்புரிமையா? இல்லையா? எனக்கண்டறிவது சற்று சிரம மானப்பணி. அதனால் நான் எனது கருவியிலேயே எடுத்து விடுகிறேன். அதற்கு முன்பு commonsஇல் இருக்கிறதா என தேடிப்பார்ப்பேன். உங்களைப்பற்றி மேலும் அறிய ஆவல். அண்மையயமாற்றங்கள் பகுதியில் உங்கள் பெயர் சிகப்பாக வருகிறதே? பலர் உங்களைப் பற்றி அறிய விரும்புவர். ஏதேனும் குறிப்புகள் உங்களைப்பற்றி அங்கு இருப்பின், உங்கள் பெயர் நீலநிறமாகத் தெரியும். என் ஆவலை முழுமை செய்வீர்களா?Jambolik! வணக்கம்-- உழவன் +உரை.. 07:30, 14 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]
உங்கள் பதிலுக்கும், என்னைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.., அனாமதேயமாக இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது...விக்சனரிக்கு நான் பங்களிப்பதில் ஏதாவது குற்றம்,குறை இருந்தால் சொல்லுங்கள்...திருத்திக் கொள்ளுகிறேன்...மீண்டுமொருமுறை நன்றி...வணக்கம்...
சரி வணக்கம்-- உழவன் +உரை.. 17:31, 14 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]

பேட்ரிக் vs பெட்ரிக்[தொகு]

Hi Loganathan, can you tell me why ta.Wikipedia has two transcriptions for the name "Patrick"?

w:ta:பேட்ரிக் ஹோல்மன் (Patrick Holman)
w:ta:பெட்ரிக் ஹால் (Patrick Hall)

Should one of the articles be moved? Thanks --Patrick LAX (பேச்சு) 01:47, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

In my opinion, பேட்ரிக் Is correct. But it is a foreign noun for Tamil. So, naturally Tamil people pronuncing differently. I started a talk page here.-- உழவன் +உரை.. 02:02, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]
Thanks for the fast answer! --Patrick LAX (பேச்சு) 02:37, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]
Me again ;) The answers are to complicated for me (and Google Translator). What do they say: Both versions are correct? --Patrick LAX (பேச்சு) 02:48, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]
Both versions are correct. Indian Tamil people pronounce as 'பேட்ரிக் / பாட்ரிக். Srilankan Tamil people pronounce as பெட்ரிக் / ட்ரிக். Google Translator is 60% ok in its all work.Indian Tamil people mostly use long vowel. Srilankan Tamil people mostly use the short vowel. Don't worry about the pronunciation because its a name of a person which differs country to country. May i know, what purpose you are using Tamil script?-- உழவன் +உரை.. 05:00, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]
I'm just curious because it's my name. My first though was to move the "wrong" article to get a uniform transcription. I've looked up en:Tamil script and could not understand the difference ... Thanks again! --Patrick LAX (பேச்சு) 05:53, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]
Both are correct like photo / foto. okay.bye!-- உழவன் +உரை.. 06:04, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

ஒலிக்கோப்புகள்[தொகு]

வணக்கம்! நீண்ட நாள் கழித்துச் சந்திக்கிறோம். :) ஒலிக்கோப்புகளை பதிவேற்ற விருப்பம். ஏற்கனவே சொல்லியிருந்தேன். மேலதிக விவரங்கள் தரவும். இது தொடர்பான விக்கிப்பொதுவக இணைப்புகளையும் வழங்குக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:02, 10 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

இவ்வார இறுதியில் உங்களைத்தொடர்பு கொள்ளவிருப்பம் எனது மின்னஞ்சலுக்கு உங்களின் அலைப்பேசி எண்ணை அனுப்புக. இணையவழி நிகழ்பட வழிகாட்டிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன். தொடர்வோம். இனி இனிதாகும். வணக்கம்.-- உழவன் +உரை.. 04:26, 12 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

உரையாடி நாட்களாகிவிட்டன. வார இறுதியில் அழைக்கிறேன்[தொகு]

அன்புள்ள தகவலுழவன், அனைத்தும் நலமாகச் சென்றுகொண்டிருக்கும் என நம்புகிறேன். உங்களோடு உரையாடி நிறைய நாட்களாகிவிட்டன. எனது பணிப்பழுவின் காரணமாக அழைக்கமுடியவில்லை. வார இறுதியில் அழைக்க முயற்சிக்கிறேன். பழ.கந்தசாமி (பேச்சு) 04:32, 12 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

காத்திருப்பேன். நமது எண்ணங்களை! அவசரமில்லை. பணியடர்வின் நிலையை எனக்கும் புரிகிறது.வணக்கம்.-- உழவன் +உரை.. 07:02, 12 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

தொடர்ந்த சேவைக்குப் பாராட்டுகள்[தொகு]

தகவலுழவன், பணி நிமித்தமாக எனது பங்களிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டாலும், உத்வேகத்துடன் நீங்கள் பங்களிப்பது மகிழ்ச்சி. விரைவில் அழைக்கிறேன். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 00:40, 24 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

இன்னும் வேகமாக செய்ய, மூன்று சிறு இடர்கள் உள்ளன. அதைத்தாண்டினால், ஒரு நாளைக்கு ஆயிரம் சொற்களை என்னால் பதிவேற்ற முடியும்.
அதாவது பின்வரும் முறையில் Find and replace வசதி வேண்டும்.
 1. அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் முற்றுப்புள்ளியை, Find and replace செய்யாதே. (எ. கா.) (சி. போ. பா. பக்.) (கந்தபுராணம் திருமண. )
 2. ஒரு வாக்கியத்தின் இறுதியில் வரும், முற்றுப்புள்ளியை மட்டும் நீக்கி விடு.
 3. ஒரு வாக்கியத்தின் முதலில் வரும் முற்றுப்புள்ளியை எடுத்து விட்டு, #: போடுக.
 4. (எ.கா- வாக்கியம்) ஆச்சரியப்படுதல்#: அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபுராணம் திருமண. )
இதையெல்லாம் பற்றி நாம் பேசணும். அல்லது பிறரிடம் உதவிகள் கேட்கணும். உங்கள் பணியடர்வு எனக்குத் தெரிந்ததுதானே. அவசரமில்லை. சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 01:46, 24 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]
ஏதோ எனக்கு தெரிஞ்சத செஞ்சு உங்களுக்கு அனுப்பியிருக்கேன்; என்ன என்ன வேணுமோ சொல்லுங்க சேர்த்திடலாம். மின்னஞ்சலைப் பார்க்கவும். --Dineshkumar Ponnusamy (பேச்சு) 15:24, 9 மே 2013 (UTC)Reply[பதில் அளி]

கவனிக்கவும்[தொகு]

பேச்சு:tide--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:52, 7 மே 2013 (UTC)Reply[பதில் அளி]

நலமா?[தொகு]

தகவலுழவன், பேசி நிறைய நாட்கள் ஆகிவிட்டன. நலமா? பணி எவ்வாறு செல்கிறது?

இவ்வார இறுதியில் பேச முயல்கிறேன். அலைபேசி எண்ணை அஞ்சலிடவும். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 14:56, 11 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

நலமே. 90 95 34 33 42 என்ற அதே எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தமிழ் சொற்களை அதிகரிக்கப்பதற்கானத் திட்டப்பணிகளில் மூழ்கியுள்ளேன். அடுத்த மாதம் தொடங்கி விடுவேன். சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 01:44, 12 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

த. இ. க. கழக இணைப்புகள் எங்கும் செயல்படவில்லை[தொகு]

அனைத்து சொல்லிலும் உள்ள த. இ. க. கழக இணைப்புகள் இயங்கவில்லை. அது எல்லாத்தையும் மாற்ற முடியாதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:19, 10 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் குறிப்பிடும் வெளிப்புற இணைப்புகள் அனைத்தும் சுந்தர் தானியங்கியால், அந்த இணையம் ஒருங்குறி ஆவதற்கு முன் ஏற்படுத்தப்பட்டவை. சுந்தர் தானியங்கி, அச்சொற்களை ஒருங்குறிக்கு மாற்றிய பின்புதான் அவர்கள் ஒருங்குறிக்கு மாறினார்கள். அவ்வாறு மாறிய பின்பு, பழைய பதிப்புகளை இணையத்தில் இருந்து அவர்கள் நீக்கியதால் இணைப்பு இங்கு வரவில்லை. அதுபற்றிய உங்கள் ஆலோசனை என்ன? இங்கும், சுந்தர் தானியங்கி பக்கத்திலும் குறிப்பிடக் கோருகிறேன். எனது கருத்தை நான், 2 மார்ச் 2012 அன்றே குறிப்பிட்டுவிட்டேன். விரைவில் தமிழ்சொற்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகும். தற்போது தமிழ்170 மொழி விக்சனரி திட்டத்தில் 13வது இடத்தில் உள்ளது.வணக்கம்.-- உழவன் +உரை.. 16:51, 10 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

நலமா?[தொகு]

தகவலுழவன், நலமா? விடுமுறைக்குப் பின் பணியில் சேர்ந்துவிட்டீர்களா? இன்னும் சில நாட்களில் அழைக்கிறேன்.

நலமே. சந்திப்போம்.90 95 34 33 42-- உழவன் +உரை.. 16:58, 19 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

கபம்[தொகு]

கபம் என்றால் நீர். சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் உள்ள மூன்று நாடிகளில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று, இங்கு கபம் நீர் தொடர்பானவற்றைக் குறிக்கும் (நெஞ்சில் கபம் (சளி) கட்டியிருக்கு)

இதை விக்சனரியில் ஏற்றிவிடுகிறீர்களா? எனக்கு இது பெயர்சொல்லா என்று தெரியவில்லை (இலக்கணம் சுத்தம்) இதன் மூலமும் தெரியவில்லை--குறும்பன் (பேச்சு) 02:04, 6 செப்டம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

தீர்வு விக்சனரியில் பங்களிப்பது முடிந்தவரை எளிமையாக்கப்பட்டுள்ளது. அதற்குரியவைகளை, இப்பக்கத்தில் தொகுத்து வருகிறேன். அவ்வப்போது காணவும். அது ஓரளவு முடிந்த பிறகு விக்கியாக்கம் செய்வேன்.நீங்கள் தொடர்ந்து வருக என வேண்டி விடைபெறுகிறேன். உங்கள் மின்னஞ்சல் தருக. வணக்கம்.-- உழவன் +உரை.. 03:24, 6 செப்டம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

கபம் என்றால் சளி தான் ஒருநாளுக்கு 60 நாழிகையில் (தமிழர்களின் நேர அளவீடு) இரவு 30 நாழிகை பகலுக்கும், இரவுக்குமாக 60 நாழிகை அதில் பகல் 30 நாழிகையை 10 நாழிகை (காலை சூரியன் உதயத்திலிருந்து) வாதநாடியும், அடுத்த 10 நாழிகை பித்தநாடியும், அடுத்த 10 நாழிகை கபமநாடியும் என பிரித்து சித்தர்கள் மருத்துவம் செய்தனர், மருத்துவக் குறிப்பு எழுதினார்கள். கபம் என்பது உடலில் நீரின் அளவு கூடி உடல் மாற்றமடைவது.
 1. ஊரணி- என்பது ஓர் ஊரின் ஒரு பகுதியாக, ஊர் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நீர் தேக்கம்
 2. குளம்- எனபது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரணியை குளம் என்றே அழைக்கிறார்கள்.
 3. கண்மாய்- ஓர் ஊரின் தொலைவில் வேளாண் நிலங்கள் நிறைந்த பகுதிகளில் விவசாயத்திற்குரிய நீர் தேக்கி வைக்கும் பெரிய அளவிலான இடமாகும்.
 4. ஏரி- கண்மாய்க்கும், கடலுக்கும் இடைப்பட்ட நீர்த்தேக்க இடமாகும் என்பது தாழ்மையான தகவல்--Yokishivam (பேச்சு) 11:24, 3 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 • அருமையான விளக்கங்கள். உரிய பக்கத்தில் இணைக்க வேண்டுகிறேன். தயக்கம் வேண்டாம். வணக்கம்.-- உழவன் +உரை.. 03:47, 4 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

அன்பான தகவலுழவன்! விக்சனரிக்கும் பயனர் பக்கமும்,பேச்சு பக்கமும் உள்ளதா?--Yokishivam (பேச்சு) 12:05, 3 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

 • அனைத்து விக்கித்திட்டங்களிலும், எங்கெல்லாம் பயனர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் உண்டு.-- உழவன் +உரை.. 03:46, 4 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

நான் பல சொற்களை சேர்க்கிறேன் ஆனால் விக்கி வடிவத்தில் சேர்க்க கடினமாக உள்ளது நான் சேர்க்கும் சொற்களை விக்கிபடுத்த உதவ வேண்டுகிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும் புருனோ (பேச்சு) 03:53, 4 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

எழுதிக் கொண்டே இருந்தேன். அதற்குள் நீங்களே தெரிவித்து விட்டீர்கள். தேவையெனில், நிகழ்படமொன்றை(screencast) உருவாக்குகிறேன்.-- உழவன் +உரை.. 03:56, 4 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

அகரமுதலி[தொகு]

உழவன்! நீங்கள் அகரமுதலியைப் பார்த்தீர்களா? [1] நம்ப முடியவில்லை. அதை ஒரேயொரு நபர் (சஜீவன் யோகேந்திரன் என்ற யாழ்ப்பாணத் தமிழர்) மட்டுமே இயக்குகிறார் என்று. உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.--பரிதிமதி (பேச்சு) 18:04, 8 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

நம் விக்சனரியில் எந்த தமிழ்சொல்லும் கொடுத்தால், கீழுள்ள ஆதாரங்கள் பகுதியில் வரும். அவருடன் தொடர்பு கொண்டு இருக்கிறீர்களா? சுழற்சி முறையில் அத்தளத்தை மேலாண்மை செய்கின்றனர் போலுள்ளது. விரிவாக பிற விவரங்கள் தெரிந்தால் கூறவும்.-- உழவன் +உரை.. 18:28, 8 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

நன்றி சார்[தொகு]

நான் அரைகுறையாக செய்யும் பல தொகுப்புகளை நீங்கள் முழுமை படுத்துகிறீர்கள் நன்றி சார் புருனோ (பேச்சு) 15:55, 25 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்சனரியில் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன் :) புருனோ (பேச்சு) 06:35, 26 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/2013&oldid=1987912" இருந்து மீள்விக்கப்பட்டது