பயனர் பேச்சு:TRYPPN/2009
தலைப்பைச் சேர்This is a Sub-page of User Talk --- for the year 2009
வரவேற்புரைகள்
[தொகு]வருக!
[தொகு]தமிழ் விக்சனரிக்குத் தங்களை வரவேற்கிறோம்! தொடர்ந்து தங்களால் இயன்றவரை சொற்பங்களிப்புகள் அளிக்க வேண்டுகிறோம் பழ.கந்தசாமி 17:31, 30 நவம்பர் 2009 (UTC)
வரவேற்புக்கு நன்றி
தற்போது
கோரப்படும் சொற்கள் --- Wiktionary:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல், பகுதியில், ஆரம்பித்துள்ளேன்.
வணக்கம்
--TRYPPN 03:42, 1 டிசம்பர் 2009 (UTC)
வாங்க!
[தொகு]ஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! TRYPPN/2009,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!! தொடரும் உங்களது ஆக்கங்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.
- இனி நானும் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன். இங்ஙனம் நாம் பங்களிக்கும் போது, நமக்கு முன்னவர் செய்த செயல்விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கருதுகிறேன். அதுபற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Explanation Required
[தொகு]தகவலுழவன் அவர்களக்கு வணக்கம். தங்களது வரவேற்புக்கு நன்றி.
Please Explain in English --- How to find out by using TAB the Number of Bytes it contains in a PAGE. I tried my level best to understand and attempted all sort of methods. I did not find the details. So, I request your good self to Explain on this matter.
மேலே கூறியபடி கொஞ்சம் விளக்கம் தேவை. வணக்கம் --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:00, 3 டிசம்பர் 2009 (UTC)
- ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
- இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.
ஒவ்வொரு சொல்லின் மேலும் உள்ள வரலாறு என்ற தத்தலைச் சொடுக்கி, அச்சொல்லுக்குரிய பைட்டுகள் கணக்கைக் காணலாம். குறிப்பிடாததற்கு மன்னிக்கவும்.
- ஒவ்வொரு பக்கத்திலும் கூடுமானவறை
விக்கி ஊடக நடுவத்தின் படங்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போது அதிக பைட்டுகள் கிடைக்கும். மற்ற விக்சனரி பக்கங்களை விட, தமிழ் விக்சனரி அழகாகவும் இருக்கும்.
- நன்றி. ('_')த*உழவன் 13:22, 1 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
கருத்துக்கள்
[தொகு]நன்றி!
[தொகு]- நல்ல துவக்கம். மேலும், நமது விக்சனரியை ஆங்கில விக்சனரியில் இலகரம் தொட்ட பட்டியலில் சேர்க்கக் கோரிச் செய்து கொடுத்தமைக்கு நன்றி! பழ.கந்தசாமி 03:51, 1 டிசம்பர் 2009 (UTC)
- அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியலில் உங்களது துவக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.
- முடிந்தவரை தமிழ் சொற்களிலும், விக்கி ஊடக நடுவப்படங்களை இடுங்கள். த*உழவன் 13:22, 1 டிசம்பர் 2009 (UTC)
கோளம் என்று நீங்கள் ஆரம்பித்தப் பதிவினை சோதனை முயற்ச்சிக்காக மேம்படுத்தியுள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன். என்னுடைய கருத்து வருமாறு;-
- 1) ஒவ்வொருசொல்லுக்கும் வலப்பக்க மேல் மூலையில் மிகப் பொருத்தமான ஒரு படம் இருந்தால் நலம்.
- 2) பிற படங்கள் சொல் இறுதியில் இருந்தால் நலம். அங்கும் நான்கு படங்களுக்கு மேல் வேண்டாம்.
விக்கி ஊடக நடுவப் படங்கள், சில சமயம் காப்புரிமைக் கொள்கைகளால் நீக்கப்படுவதுண்டு. அதனால் தான் இத்தகைய ஏற்பாடு. பல படங்களைக் கடைசியில் போட காரணம், மொழிப்பெயர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குத் தான்.
எனினும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். ஏனெனில், உமது கோளம் ஏற்படுத்திய மாற்றம், சிறந்தவையே ஆகும்.நன்றி! த*உழவன் 13:52, 3 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
பல பகுப்புப் பிழைகளை, நீக்கியமைக்கு மிக்க நன்றி! இனி அப்பிழைகள் வராமல் பார்த்துக் கொள்வேன்.த*உழவன் 05:07, 4 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
எசுப்பானியம் - உடற்பகுதிகள் பகுப்புகளுக்கு நன்றி. முன்பிருந்த பகுப்பினை நீக்கி விட்டேன்.த*உழவன் 02:07, 16 டிசம்பர் 2009 (UTC)
கருவச் சொற்கள்
[தொகு]TRYPPN! நீங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வார்த்தைகளைச் சரிபார்ப்பதற்கு நன்றி! ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறோம். ஒரு சிறிய வேண்டுகோள்.
கருவச் சொற்கள் என்ற பகுப்பு இருந்தால் அவற்றை நீக்கவேண்டாம் என்பது என் கருத்து. அவை அடிப்படையான வார்த்தைகளைக் குறிக்கும் பகுப்பு. தேவையான பகுப்புகளை வேண்டுமென்றால் புதிதாகச் சேர்த்துக் கொள்ளவும்.
தங்கள் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் மீண்டும் மிக்க நன்றி! பழ.கந்தசாமி 00:05, 8 டிசம்பர் 2009 (UTC)
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:32, 8 டிசம்பர் 2009 (UTC)
Pazha.kandasamy|பழ.கந்தசாமி அவர்களுக்கு, வணக்கம். தங்களது கருத்துக்களை கவனித்தேன். நான் தற்போது, பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள், பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள், பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள் --- ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். மேற்கண்ட பகுப்புக்களை மிகுந்த கவனத்துடன் செய்துகொண்டிருக்கிறேன். பழைய பகுப்புக்களை நீக்காமல், அதனுடன் 1,2,3 எழுத்து சொல் பகுப்புக்கள் இல்லாமல் இருந்தால் மட்டும், இந்த 1 / 2 / 3 எழுத்து சொல் பகுப்புக்களை இணைத்துவருகிறேன்.
வரும் நாட்களில் தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்கிறேன். தங்களது கருத்துக்களுக்கு நன்றி. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:32, 8 டிசம்பர் 2009 (UTC)
பகுப்புகள் செய்வது குறித்து
[தொகு]- நீங்கள் தொடர்ந்து தமிழ் பகுப்புகளில் கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
- 500bytes கணக்கை, நான் உங்களுக்கு அறிய வைத்தேனா?
- பழ.கந்தசாமி அவர்கள் எசுப்பானியம் மொழியில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு நாம் தோள் கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன். (நான் அச்சொற்களுக்கு விக்கிப்படம், இந்தி மற்றும் தமிழ்சொற்களுடன் இணைத்தலைச் செய்கிறேன்.)
- நீங்களும் இணைய விரும்பினால், கீழ்கண்ட இணைப்பிலுள்ள சொற்களில் பகுப்பு மாற்றம் செய்யலாம்.
இதிலுள்ள 10 சொற்களிலுள்ள பகுப்பை நீக்கி விட்டு, பகுப்பு: எசுப்பானியம் - உடற்பகுதிகள் என்று சேர்க்கலாம்.
- திரு.பெரியண்ணன் அவர்களே! தங்களுடைய தொடர் அர்ப்பணிப்புக்கு நன்றி!
நான் த*உழவன் பேச்சில் குறிப்பிட்டதுபோல எசுப்பானியம் போன்ற வேறுமொழிச் சொற்களுக்கு மொழிபெயர்ப்புகளை தமிழ், ஆங்கிலத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். தமிழ் மொழி வார்த்தைகளுக்கு நமக்குத் தெரிந்த எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
பழ.கந்தசாமி 06:21, 15 டிசம்பர் 2009 (UTC)
- நீங்கள் தந்த பதிலுரைக்கு, நன்றி! எப்பொழுதும் பதிலை இங்கேயே தாருங்கள். ஏனெனில், அப்பதிலுக்கான தொடக்கம் இங்கு தானே? முடிவும் இங்கு தான் இருக்க வேண்டும். சில நாட்கள் கழித்து, நாமே படிக்கும் போது என்ன உரையாடினோம் என்று புரியும். உங்களது பதில், எப்போதும் எங்களுடன் இணைந்திருப்பீர் என்ற நம்பிக்கையைத் தந்த து.மிக்க நன்றி!! த*உழவன் 07:29, 15 டிசம்பர் 2009 (UTC)
பகுப்பு: எசுப்பானியம் - உடற்பகுதிகள்
[தொகு]இதிலுள்ள 10 சொற்களிலுள்ள பகுப்பை நீக்கி விட்டு, பகுப்பு: எசுப்பானியம் - உடற்பகுதிகள் என்று சேர்க்கலாம்.
தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி, அவர்களுக்கு, வணக்கம். தங்களது கருத்துக்களை கவனித்தேன்.
தாங்கள் குறிப்பிட்ட பக்கங்களை பார்த்தேன். அவற்றில்
(1)
பகுப்பு:எசுப்பானியப் பெயர்ச்சொற்கள், பகுப்பு:எசுப்பானிய ஆண்பால் பெயர்ச்சொற்கள், பகுப்பு: எசுப்பானிய உடல் பாகங்கள்
(2)
பகுப்பு:எசுப்பானியப் பெயர்ச்சொற்கள், பகுப்பு:எசுப்பானிய பெண்பால் பெயர்ச்சொற்கள், பகுப்பு: எசுப்பானிய உடல் பாகங்கள்
இவற்றி்ல் -- பகுப்பு: எசுப்பானிய உடல் பாகங்கள் --- என்ற பகுப்பை நீக்கிவிட்டு, தாங்கள் கூறியபடி -- பகுப்பு: எசுப்பானியம் - உடற்பகுதிகள் --- என்பதை மட்டும் சேர்த்தால் போதுமா --- சிறு விளக்கம் தேவை.
"músculo" --- இந்த சொல்லை பார்க்கவும். நான் செய்தது சரி என்று எண்ணுகிறேன். --- தங்களது கருத்துக்களை கூறவும்.
- நன்றி! பகுப்பாக்கம் சரியாக இருக்கிறது. 38.99.25.34 16:48, 15 டிசம்பர் 2009 (UTC)
- நன்றி! பழ.கந்தசாமி 16:48, 15 டிசம்பர் 2009 (UTC)
விக்கிப்படங்களால் இணைவோமா?
[தொகு]- உங்களின் மாரிபலே. அதற்குரிய இந்திச்சொற்களை உருவாக்கிவிட்டேன். ஒரு சொல்லுக்கு ஒரு படம், அதிகமாக மாரி போல இணைப்போமா?
- ஒரு நாளைக்கு ஒரு சொல் என்ற அடிப்படையில், விக்கிப்படங்களை இணைப்போமா?
- இந்த(பகுப்பு:கருவச் சொற்கள்) பகுப்பிலுள்ளபகுப்பு:எசுப்பானியம் - உடற்பகுதிகள் சொற்களுக்கு இணைப்போமா? அல்லது இப்பகுப்பில் இணைப்போமா?
- சொல்லில் உயர்ந்த சொல் தமிழ் சொல் என்பதாலும்,பல்லாண்டு ஆராய்ந்து கருவச் சொற்கள் உருவாக்கப் பட்டதாலும் எனக்கு இதற்கு(பகுப்பு:கருவச் சொற்கள்) முதலிடம் தர ஆசை.
- கருவச் சொற்களை ஐந்து இந்திய மொழிகளிலாவது நான் மொழிபெயர்க்கத் (பிறர் உதவியுடன்) திட்டமிட்டுள்ளேன்.தற்பொழுது அச்சொற்களை இந்தி மொழிக்கு எனது சகோதரிகளின் துணைக்கொண்டு மொழிபெயர்க்கிறேன்.
- நீங்கள் திருச்சியில் புனித வளனார் கல்லூரியில் படித்திங்களா? இயேசு சபையினர் (Jesuits) உலகின் கல்வியில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தினர்.அவர்களைப்பற்றி நம் தமிழ் விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகள் எழுதலாமா?
உங்களின் ஆர்வமறிய ஆவல். இணையத்தில் இனியவைகளுக்காக இணைவோமே! த*உழவன் 13:56, 16 டிசம்பர் 2009 (UTC)
தகவலுழவன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்களது கருத்துக்களை கவனித்தேன்.
நன்று.
தாங்கள் குறிப்பிட்டபடியே --- பகுப்பு:கருவச் சொற்களுக்கு முன்னுரிமை கொடுத்து தினமும் குறைந்தபட்சம் ஒரு சொல்லுக்கு படம் இணைப்போம்.
மற்றவை பின்பு பார்ப்போம். தங்களது கருத்துக்களுக்கு நன்றி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:25, 17 டிசம்பர் 2009 (UTC)
- அன்பு பெரியண்ணன், என்னை த*உழவனே என்று அழைத்தாலே மகிழ்வேன். அவர்களுக்கு என்றெல்லாம் அழைத்து, என்னை அந்நியப்படுத்தாதிங்க!! காலத்தினை வெல்லும், விக்கித்திட்டத்தில் நாம் பயணிக்கிறோம். நான் உங்களுக்கு முன் வந்த சகபயணி அவ்வளவே. பகுப்பு:கருவச் சொற்கள் மேம்பாட்டில் இணைவோம். அதில் படம், ஒத்த சொற்கள், எடுத்துக்காட்டு வாக்கியங்கள், பிற மொழிப்பெயர்ப்புகள் போன்று எது உங்களுக்கு வசதியானதோ அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும், மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் அது எத்தகையது ஆயினும் உடன் கூறவம். தங்களின் பணிநேரங்களுக்கு, என் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்த*உழவன் 05:48, 17 டிசம்பர் 2009 (UTC)
விக்கிக் காட்சியகம்
[தொகு]- வைக்கோல் விக்கிக் காட்சியகம் அருமை. அதிலுள்ள தனிப்படமான வைக்கோல் வீட்டை 10 நிமிடங்களுக்கும் மேலாகப் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும் இணைத்து விட்டேன். அப்படத்தை எடுத்தவர், ரூமேனிய நாட்டில் அதற்கு வரி செலுத்தி எடுத்துள்ளதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.
- எனினும், நிறைய படங்கள் இருக்கும் விக்கிக்காட்சியகம் மொழிப்பெயர்ப்புகளுக்கு கீழே இருத்தல் நலம்.வலப்பக்க படச் சேர்ப்பை நாம் தொடரலாம்.
- தலைமை விக்கியில் படங்களின் அவசியம் குறித்து, முன்பு கருத்துக் கணிப்பு நடந்தது. முடிவை அறிய முடியவில்லை. நான் ஆங்கில விக்சனரியில் சில விக்கிக்காட்சியகத்தை உண்டாக்கிய போது, அந்நிர்வாகம் அவசியமில்லை. ஒரு படம் போதும் என்றனர்.
- என்னுடைய அனுபவத்தில் ஒரு படம் மட்டும் சேர்ப்பதைத் தவிர்க்க விரும்புகிறேன். காரணம், காப்புரிமை மற்றும் சில காரணங்களால், சேர்க்கப்பட்ட படங்கள் பல சமயத்தில் நீக்கப்பட்டு விடுகின்றன. அப்பொழுது நாம் உருவாக்கிய சொல்லில் படம் இல்லாமலே போய்விடுகிறது.
- எனவே, ஒரு படம் வைக்கோலில் நீங்கள் சேர்த்தது போல வலப்பக்கமும், 4மடங்கள் மட்டும் விக்கிக் காட்சியகமாக மொழிப்பெயர்ப்புகளுக்கு கீழும் அமைப்பது மிகவும் நல்லது.8 படங்கள் சேர்க்கலாம் என்று கூறியிருந்தீர்கள். என்னைப்பொறுத்தவரை, அது காலத்தை கடத்தும் என நினைக்கிறேன்.
- படங்களை அதிகம் பயன்படுத்துவது தமிழ் விக்சனரி மட்டுமே. நாம் இன்னும் நிறைய சொற்களில் சேர்க்க வேண்டியுள்ளது. நீங்கள் இங்கு இருக்கும் நேரத்தில், அதிக படங்களைச் சேர்க்க வேண்டுமென எண்ணுகிறேன்.
அதனால் தான் இவையனைத்தையும், உங்களிடம் கூற விரும்பினேன்.
- நீங்கள் முன்பு செய்த பகுப்புப் பங்களிப்புகளை தானியங்கி மூலம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.திரு.பழ.கந்தசாமி.
நீங்கள் கணினிமென்பொருளில் ஈடுபாடு உள்ளவரென்றால், அவரைத் தொடர்பு கொள்ளவும்.
- நன்றி. வணக்கம்த*உழவன் 08:23, 18 டிசம்பர் 2009 (UTC)
தகவல் உழவருக்கு, பெரியண்ணன் வரைவது. தங்களது கருத்துக்களை கவனித்தேன். நன்று.
1. படங்கள் இணைப்பது எனக்கு பரவசமூட்டுகிறது. ஒரு படம் பத்து சொல்லுக்கு சம்ம் என்பது எனது கருத்து. ஆகவே அதை நான் தொடர்ந்து செய்வேன்.
2. நீங்கள் முன்பு செய்த பகுப்புப் பங்களிப்புகளை தானியங்கி மூலம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.திரு.பழ.கந்தசாமி. நீங்கள் கணினிமென்பொருளில் ஈடுபாடு உள்ளவரென்றால், அவரைத் தொடர்பு கொள்ளவும். --- என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
நன்று.
தாங்கள் நினைத்து சரியே.
நான் பல ஆண்டுகளாகளாக கணினிமென்பொருளில் ஈடுபாடு உள்ளவர். ஆகவே கணினிமென்பொருளில் நான் எதையும் சுலபமாக கற்றுக்கொண்டு அதனை நடைமுறை படுத்த முடியும்.
ஆகவே, நான், திரு. பழ.கந்தசாமி அவர்களுடன் இணைந்து செயல்பட முடியும்.
தங்களிடம் சிறு வேண்டுகோள். தாங்கள் திரு. பழ.கந்தசாமி அவர்களுடன் தொடர்பு கொண்டு என் விருப்தை தெரியபடுத்த வேண்டுகிறேன்.
நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:02, 21 டிசம்பர் 2009 (UTC)
தானியங்கிப் பதிவு திட்டமிடல்
[தொகு]TRYPPN! நன்றி! இந்த வாரம் த*உழவன், நீங்கள், நான் மூவரும் கூகுளில் அரட்டை(chat) செய்வோம். வியாழன், வெள்ளி, அல்லது சனி நாட்களில் எனக்குச் சரிப்படும்.அப்போது, பக்க வடிவமைப்பு, தானியங்கி பற்றி கருத்துக்கள் பரிமாறிச் செயல்படுவோம். கடந்தவாரம் எனக்குப் பணிப்பளுவால் அதிகம் பங்களிக்கவில்லை. தானியங்கிக்கு ஏதுவான பக்கவடிவமைப்பு முடிவு செய்யவேண்டியுள்ளதால், தானியங்கிப் பதிவையும் நிறுத்தியுள்ளேன்.
தங்களின் தொடரும் பங்களிப்புகள் எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. பழ.கந்தசாமி 04:21, 21 டிசம்பர் 2009 (UTC)
பரிமாணம் என்ற சொல்லின் அமைப்பு
[தொகு]- பரிமாணம் அற்புதம். குறைந்தது இப்பக்கத்தை உருவாக்க ஒருமணி நேரத்திற்கும் மேலாக ஆகியிருக்கும். காட்சியகத்தை, மொழிப்பெயர்ப்புக்கு பின்னால் அமைத்தமைக்கு மிக்க நன்றி.
இது மேலும் சிறக்க பின்வருவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- ஒவ்வொரு பக்கத்திலும், மேலுள்ள புதுப்பயனர்களுக்கான உதவி என்பதிலுள்ள விதிகளை, மறவாமல் பின்பற்றவும். அப்பக்கத்திலுள்ள விதி3 எச்சொல்லுக்கும், பொருந்துமென்பதால் சுருக்கமாகக் கூறுகிறேன்.
- ஒருபக்கத்திற்கு ஒரு சொல் மட்டும் விளக்கவும். ஒத்தச் சொற்களையும், பிறத்தொடர்புடையச் சொற்களையும் சொல்வளப்பகுதி என்ற தலைப்பின் கீழ் தரவும்.
- ஆனால் அவற்றிற்குரிய விளக்கங்களை, இதே போன்று, சிறந்த மற்றொரு பக்கத்தில் உருவாக்கவும்.
- பன்மைச் சொற்களில் தலைப்பினை எழுதாதிங்க! அதாவது இருபரிமாண வடிவங்கள்என்பதை, இருபரிமாண வடிவம் என ஒருமையில் எழுதுக. அதனையும், வேறொரு பக்கத்தில் உருவாக்கவும்.
- ஆங்கிலச் சொற்பக்கத்தில் ஆங்கிலத்தலைப்புகள், தமிழ்பக்கத்தில் தமிழ் தலைப்புகள் என எழுதவும். இரண்டும் கலந்தது மாதிரி எழுதவேண்டாம். ஆங்கிலம் பயன்படுத்தாத நாட்டிலிருந்து கூட நிறைய பேர், தமிழ் சொல்லைப் பார்க்கின்றனர்.
- இவ்விதிகளை அனைத்து விக்சனரிகளிலும் பின்பற்றுகிறார்கள். நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
- இங்கு நமக்கு முன் பங்களித்தவர்களின் அனுபவங்களை, நாம் உள்வாங்கிக் கொண்டு செயல் பட வேண்டும். ப
- உங்களுக்கு நேரமில்லையெனின், உங்களுக்காக, உங்கள் அனுமதியுடன், இந்தப்பக்கத்தினை 4 பக்கங்களாக நான் மாற்றி காண்பிக்கவா?
- பரிமாணம்,
- வடிவமைப்பு
- 2D
- 3D
- தினம் 1000 நபர்களுக்கும் மேலாக, தமிழ் விக்சனரி பார்வையிடப்படுகிறது. அனைத்து சொற்களும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். எனவே, ஒரு சொல்லுக்குரிய பொருளைத் தேடி வருபவர் அதற்குரிய மொழிப்பெயர்ப்பினை உடனே காண வேண்டும். அவர் மேலும் படிக்க விரும்பினால், சொல் வளப்பகுதியிலுள்ள பிற சொற்களைச் சொடுக்கி பார்க்க, பக்கங்களை வடிவமைக்க வேண்டும் என்பது என் கருத்து.
உங்கள் நேரம் வீணாவதைத் தடுக்க, அவ்வப்போது நான் கவனித்துக் கூறுகிறேன். எனக்குத் தரப்பட்ட, இத்தள நிர்வாகப் பணிகளுள் அதுவும் ஒன்று. உங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சியே.
பின்வரும் தொடுப்புகள் உங்களுக்கு பயனாகுமென நினைக்கிறேன்.
- விக்கித்திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள்
- தமிழ் விக்சனரியில் உங்கள் பங்களிப்புகள்
- விக்கித்தளங்களைப் பார்க்கும் பார்வையாளர் பற்றியக் கணக்கீடு
நன்றி. வணக்கம்த*உழவன் 12:56, 20 டிசம்பர் 2009 (UTC)
தகவலுழவன், பழ.கந்தசாமி, ஆகிய இருவருக்கும்,, வணக்கம்.
1. ஏற்கனவே நாம் பேசியபடி,
(Topic --- Standardisation of Pages --- while adding NEW Words.) புதிய பக்கத்தை உருவாக்குதல்.
--- புதிய பக்கத்தை உருவாக்கும் சமயத்திலேயே ஒரு சரியான வடிவமைப்பை கொடுத்தோமானால் அதுவே தரப்படுத்துதலுக்கு (standardisation) வித்திட்டதாகும் என்பது எனது கருத்தாகும்.
--- இம்முயற்சியில் நான் கொஞ்ச தூரம் சென்றிருக்கிறேன். அதாவது வார்புருவை எப்படி மாற்றுவது என்பது வரை தெறிந்து வைத்துள்ளேன். --- மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு தங்களிருவரது கருத்தையும், அந்த அந்த வார்ப்புருக்களை தொகுத்தவர்களது (Editors) கருத்துக்களையும் அறிந்து கொண்டு செய்தலே சரி என்று தோன்றுகிறது.
ஆகவே, தாங்கள் இருவரும், கருத்துக்களை கூறவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
2. பரிமாணம் என்ற சொல்லின் அமைப்பு --- பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.
நன்று.
தாங்கள் கூறியபடி --- புதுப்பயனர்களுக்கான உதவி --- விதி3 --- படிக்கிறேன்.
3. எந்த ஒரு சொல்லிலும் தவறு இருந்தால் தாங்கள் அதனை திருத்தும் போது காரணத்தை சுருக்கம்: --- பகுதியில் (Edit and Short History --- before saving) கொடுத்தால் போதும் என்பது என் கருத்து.
4. தாங்கள் கூறியபடி--- “உங்களுக்கு நேரமில்லையெனின், உங்களுக்காக, உங்கள் அனுமதியுடன், இந்தப்பக்கத்தினை 4 பக்கங்களாக நான் மாற்றி காண்பிக்கவா? (பரிமாணம், வடிவமைப்பு, 2D, 3D)”
--- தாங்கள் இதனை செய்யுங்கள். நானும் சிறிது கற்றுக்கொள்வேன்
தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:48, 21 டிசம்பர் 2009 (UTC)
சோதனை முயற்சி - PPNTEST
[தொகு]- உங்களின் PPNTEST என்ற சோதனை முயற்சி, விதிகளின் படி இப்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இது போன்ற நன்முயற்சிகளை, இப்பக்கத்தில் செய்யவும். இது போன்ற மாற்றங்களை, ஏற்கனவே உள்ள 1,00,000 மேற்பட்ட சொற்களிலும் ஏற்படுத்த வேண்டும். இல்லாத சொற்களை உருவாக்குவதில், இப்பொழுது இருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுவோமே. அனைத்திலும் உயர்வானது உழைக்கும் நேரம் இல்லையா?
- விக்சனரி குழுமம் என்பதில் உறுப்பினராகி, உங்களது கருத்துக்களைக் கூறவும்.நம்மைப் போன்று நேரக் கட்டுப்பாட்டினை, அனைவரும் பின்பற்றுவரென்பதை, நாம் மறக்கக் கூடாது.
- கோளம், பரிமாணம் போன்ற, நீங்கள் உருவாக்கிய சொற்களில் ஏற்படும் மாற்றங்களை உணருங்கள். அது குறித்த கருத்துகளை, அவற்றிற்குரிய மேல் உள்ள உரையாடல் பக்கத்தில்(tab) தெரிவிக்கவும். அச்சொல்லை, பிறர் பார்க்கும் போது பதிலளிப்பர்.
- பகுப்பு செய்வதன் அவசியத்தை உணர்ந்த நீங்கள், மேலும் அதில் ஈடுபட விரும்புகிறீர்களா? பகுப்புகளில், நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். நான் தினம் கொஞ்சம் செய்கிறேன்.
தங்களின் உயர்வான உழைக்கும் நேரத்தினை, தமிழுக்காக செலவிட்டமைக்கு மிகவும் மகிழ்கிறேன்த*உழவன் 05:42, 22 டிசம்பர் 2009 (UTC)
தகவல் உழவருக்கு, பெரியண்ணன் வரைவது. தங்களது கருத்துக்களை கவனித்தேன். நன்று. கொஞ்சம் விளக்கம் தேவை
நான் en.wikipedia - வில் 3 உப-பக்கங்களை உருவாக்கி உள்ளேன். (http://en.wikipedia.org/wiki/Special:PrefixIndex/User:TRYPPN/ )
அதில் நான் என்னுடை முயற்சிகளை தனிப்பட்ட முறையில் செய்து பார்க்க முடிகிறது.
மணல் தொட்டி என்பது பொது இடமாகும்.
ta.wiktionary ---யில் எப்படி உப-பக்கங்களை உருவாக்குவது ?(How to Create Subpages in ta.wiktionary ?) --- விளக்கம் தேவை.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:33, 22 டிசம்பர் 2009 (UTC)
- நீங்கள் உருவாக்கிய 3பக்கங்களைப் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில், உங்கள் பக்கத்தில் கண்ட கொல்லிமலைப்படத்தை இணைத்து விட்டேன்.சேலம் விமான நிலையப் படத்தை இணைக்க முடியவில்லை. அதனை இணைக்க முயற்சி செய்ய முடியுமா?
- Salem Airport (Tamil: சேலம் வானூர்தி நிலையம்) --- ta.wiktionary--யில் இணைக்கப்பட்டு விட்டது. வணக்கம்.
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:27, 24 டிசம்பர் 2009 (UTC)
- உபப்பக்கம் பற்றி வினவிச்சொல்கிறேன். பொதுவாக கூற வேண்டுமானால், விக்கிப்பீடியாவிலுள்ள பல வசதிகள் இங்கில்லை. அத்தகைய வசதிகள் இங்குமிருக்க எனக்கும் ஆசை தான். கணினி நிரல்கள் பற்றிய அறிவு என்னிடம் இல்லை. அதனால்தான் முன்பு உங்களிடம் நீங்கள் கணினி நிரலரா? என்று கேட்டிருந்தேன். உங்கள் பயனர் பக்கத்திலேயே, நீங்கள் தொடர்ந்து சோதனை முயற்சியைச் செய்யலாம்.
- அன்புடையீர் ! வணக்கம். To save time I am typing in English. I tried to create Subpage. It looks like that I am able to create the Subpage PPNTEST under the user TRYPPN.
- Please DO NOT DELETE it. It looks like that it will not disturb any where in the word area or template area. It is visible in my user area only.
- This is the same facility available in Wikipedia English. So, it looks like that it is alright.
- Thank you for the co-operation. நன்றி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:15, 25 டிசம்பர் 2009 (UTC)
- பொதுவாக தமிழ் சொல், மற்ற மொழிச் சொற்களை விட அமைய எனக்குத்தெரிந்த்தை செய்கிறேன்.தெரியாததைக் கற்றுக் கொள்கிறேன். நேரம் அதிகம் கிடைப்பதில்லை. நன்றி. பரிமாணம், கோளம் போன்றவற்றை தொடர்ந்து மாற்றங்கள் செய்கிறேன். அதுபற்றி அங்குள்ள உரையாடலில் (the tab) தெரிவிக்கவும்.த*உழவன்
பகுப்புகளில் மாற்றங்கள் செய்ய
[தொகு]தகவல் உழவருக்கு, பெரியண்ணன் வரைவது. தங்களது கருத்துக்களை கவனித்தேன்.
பகுப்புகளில், தங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொன்னால், என்னால் முடிந்த அளவுக்கு உடன் பணியாற்ற முடியும்.
தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:13, 22 டிசம்பர் 2009 (UTC)
- முன்பே கூற மறந்து விட்டேன். த*உழவனே! என்ற அழைத்தாலே மகிழ்ச்சி. உழவரே!என்றெல்லாம் அழைத்து, என்னை நெளிய வைக்காதிங்க.
- பகுப்புகள் பற்றி தற்பொழுதுதான் தெரிந்து கொள்கிறேன். நீங்களும் அதில் ஆர்வமாக இருப்பதால், அவ்வப்போது என் மனதில் எண்ணுவதைச் சொல்கிறேன்.
எடுத்துக்காட்டாக, பரிமாணம் என்ற சொல்லில் உள்ள பகுப்புகளை ஆராயலாம்.
- நிகண்டுகளின் சொற்கள் | தமிழ் - மனவியல் என்ற பகுப்புகளில் பரிமாணம் என்பது தெரியும்.
- கணிதம் | பொறியியல் | மருத்துவம் | வேதியியல் மற்ற பகுப்புகளில தெரியாது. அது ஏன்?
யோசியுங்கள்.தெரிய எண்ண செய்யலாம்? தொடர்ந்து, மீண்டும் பார்ப்போம்.த*உழவன் 12:58, 22 டிசம்பர் 2009 (UTC)
த*உழவனே! தங்களது கருத்துக்களை கவனித்தேன்
காலையில் தங்களது நினைவூட்டலை கண்டேன். கணிதம் --- பகுப்பு என்பதனை சரிசெய்தேன்.
தற்போது கணிதம் --- பகுப்பு --- ஐ பாருங்கள். சரியாகிவிட்டது. ஆனால் 'பரிமாணம்' --- என்ற சொல்லின் பகுப்பு --- கடைசியில் உள்ளது.
காரணம் --- ஆங்கிலம் சொற்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ் சொற்கள் தனியாக தெரிய வேண்டுமானால் --- கணிதம் --- பகுப்பு --- ஐ இரண்டாக பிரிக்க வேண்டும்.
1. கணிதம் --- தற்போது உள்ளவாறு
2. கணிதம் (தமிழ்) --- அல்லது --- தமிழில் கணிதம் --- அல்லது --- தமிழில் கணிதச் சொற்கள் --- அல்லது --- வேறு பொருத்தமான சொற் தொடர்
மேலும், கணிதம் என்ற பகுப்பில், மொத்தம் 4,347 பக்கங்கள் உள்ளன. ஒருமுறை தேடும் போது 200, பரிமாணம்---சொல்லை தேட 20 தடவைக்கும் மேலாகத் தேடவேண்டும்.
இங்கே பாருங்கள். இப்போது பரிமாணம்--- தெரியும். http://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பு:கணிதம்&from=uniform+catenary
பார்த்த பின் தங்களது கருத்துக்களை கூறவும்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:15, 23 டிசம்பர் 2009 (UTC)
- தங்களது ஆய்வு முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது தெரியாமல், ஆரம்ப காலத்தில் நான் பல தவறானப் பகுப்புகளை உருவாக்கி விட்டேன்.(எ.கா)பகுப்பு:வேளாண்மை. ராசுகுமார் என்பவர்(பிரான்சில் பிரெஞ்சு இலக்கியம் படிப்பவர்; எசுப்பானியம், தமிழ், இத்தாலி, இந்தி, ஆங்கிலம் என்பவற்றில் பங்களிப்பவர்) தீடிரென்று ஒரு நாள் வருவார், வேகமாக செயல்பட்டு விட்டு போய் விடுவார். அவர் செய்த பகுப்பு பகுப்பு: பெயர்ச்சொற்கள் என்னுடைய போக்கை மாற்றியது. தமிழும் பகுப்பில் முன்னுக்கு வந்தது.
இப்பகுப்பில் உள்ள வற்றை பகுப்பு:தமிழ் வினைச்சொற்கள் என மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அது முடிந்த பின்பு, பகுப்பு:பெயர்ச்சொற்கள் போல, பகுப்பு:வினைச்சொற்கள்-ஐ மாற்றணும். மற்ற பகுப்புகளைப், பிறகு பார்ப்போம். தமிழ் ஒலிக்கோப்புகளைப் பற்றி பதிவேற்ற முனைகிறேன். முழுமையாக தெரிந்து கொண்டு சொல்கிறேன். இணைவோமா?த*உழவன் 01:12, 24 டிசம்பர் 2009 (UTC)
- சந்தேகமென்ன?கட்டுப்படுத்துமிகச் சரி. இது ஒரு சிறு தொகுப்பு என்பதை தேர்ந்தெடுத்து பக்கத்தைச் சேமிக்கவும்.த*உழவன் 13:47, 24 டிசம்பர் 2009 (UTC)
- சேலம் வானூர்தி நிலையத்தினை, தமிழ் விக்கிப்பீடியாவில் எக்கட்டுரையில் இணைத்தீர். சேலம் கட்டுரையில் இல்லையே?த*உழவன் 14:07, 24 டிசம்பர் 2009 (UTC)
துப்புரவுப் பணிகள்
[தொகு]1)உங்களது துப்புரவு பணிகளால், நானும் பணிகளைத் துரிதமாக்க முடிந்தது. நன்றி. இங்கு இணைய வேகம் பாதிக்கு பாதி குறைந்து விட்டது. அரசு விடுமுறை என்பதால் பொறுக்க வேண்டியுள்ளது. {{delete}} என்ற வார்ப்புருவினை மட்டும், நீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டுரைக்குள் எழுதி, நீக்கப் படவேண்டிய காரணத்தை, சுருக்கமாக அதன் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தல் மரபு. சிறு தொகுப்புக் கட்டத்தில், விரிவாக குறிப்பிட வேண்டியதில்லை. {{delete}} என்று மட்டும் எழுதினால் போதும்.
- தங்களது கருத்துக்களை கவனித்தேன். வரும் நாட்களில் கவனம் கொள்கிறேன். நன்றி கூறியமைக்கு நன்றி.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:07, 28 டிசம்பர் 2009 (UTC)
2) உங்களது PPN TEST பக்கத்தின் தோற்றம் பற்றி அறிய ஆவல்.அது உங்கள் பக்கத்தில் இல்லையே?
- அது என்னுடைய பயனர் பக்கத்தில் உள்ளது,
- user:TRYPPN/PPNTEST --- என்று எழுதி --- செல் அல்லது தேடுக மூலமாக அங்கே செல்ல முடியும்.
- தாங்கள் தங்களுடைய User subpage create --- செய்ய வேண்டுமானால் --- தேடுக --- கட்டத்தில் தங்களுடைய user:UserName/AnyName --- as I mentioned above
- I created PPNTEST Subpage and the procedure which I followed is given below:
- --- I searched for --- user:TRYPPN/PPNTEST
- --- then it said that --- it is not there --- do you want to create ?
- --- then I said "Yes", then it created the subpage.
- Creation of subpage will be useful for testing and it is under the specific user and it is one of the regular features which are available in the English Wikipedia. So, we have to encourage others to create for them for testing purposes.
- ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:07, 28 டிசம்பர் 2009 (UTC)
3)ஒவ்வொருமுறையும் படங்களை(எ.கா. -சேலம் வானூர்தி)விக்கிப்பீடியாவிலும், விக்சனரியிலும் பதிவேற்றத் தேவையில்லை, ஒரே முறை விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்றினால், அனைத்து விக்கித்திட்டங்களிலும், அனைத்து மொழிகளிலும் தெரியும். ஆனால், விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்றும் போது, அங்கு கொடுத்துள்ள வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
- தங்களது கருத்துக்களை கவனித்தேன். வரும் நாட்களில் தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்கிறேன். தங்களது கருத்துக்களுக்கு நன்றி.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:07, 28 டிசம்பர் 2009 (UTC)
4)உங்களின் மின்னஞ்சலை, இவ்விடத்தில் குறிப்பிடுங்கள். பழ.கந்தசாமி நம்மிடம் பேச உள்ளார். நீங்கள் இருவரும் இணைந்தால், பல பணிகளை கணினி செய்யுமென நம்புகிறேன். குறிப்பாக பகுப்பு மாற்றம். நன்றி! வணக்கம்.த*உழவன் 13:25, 26 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
- எனது மின்னஞ்சல் --- ppnindia@gmail.com --- மேலும் google talk --- மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். தங்கள் இருவரது மின்னஞ்சலை தெரிவிக்க வேண்டுகிறேன்.
- தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:07, 28 டிசம்பர் 2009 (UTC)
படங்களுடன் தமிழ்
[தொகு]TRYPPN! வெவ்வேறு ஊறுகாய் படங்களின் கீழே தமிழிலும் தந்தால் மிக அருமையாக இருக்கும். நன்றி! பழ.கந்தசாமி 01:41, 29 டிசம்பர் 2009 (UTC)
- இன்னும் 20நிமிடங்களில் 2 மணிநேர மின்தடை.3மணிநேரத்திற்கு பிறகு வருவேன். அப்போது ஊறுகாய் படங்களைத் தமிழாக்குகிறேன். எனது மின்னஞ்சல்(tha.uzhavan -> gmail), பழ.கந்தசாமி அவர்களின் மின்னஞ்சல் முகவரி (kandy.pal ->gmail). மீண்டும் பார்ப்போம்.த*உழவன் 02:06, 29 டிசம்பர் 2009 (UTC)
- பழ.கந்தசாமி அவர்களுக்கு, வணக்கம்.
- தங்களது கருத்துக்களை கவனித்தேன். வரும் நாட்களில் தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்கிறேன். தங்களது கருத்துக்களுக்கு நன்றி.
- மேலும், அதிகாலையில் படங்களை தேடும் போது தமிழில் விளக்கம் தருவது கொஞ்சம் கடினம். காரணம் --- எனக்கு தமிழ் தட்டச்சு வேகம் அதிகம் இல்லை. ஆகவே விளக்கத்தை பின்பு நேரம் கிடைக்கும் போது தரலாம் என்ற எண்ணியுள்ளேன்.
- தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம்.
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:35, 30 டிசம்பர் 2009 (UTC)
பக்கவடிவம்
[தொகு]dove பக்கத்தை உதாரணமாக வைத்து பக்கவடிவமைப்பு பற்றி நானும் த*உழவனும் உரையாடிக்கொண்டுள்ளோம். அந்தப் பக்கத்தின் பேச்சில் உங்கள் கருத்தயும் தரவும். நன்றி பழ.கந்தசாமி 03:15, 30 டிசம்பர் 2009 (UTC)
- dove என்பதில் சிலகருத்துக்கள் தெரிவித்துள்ளேன். தேவைப்படும் இடத்தில்இரண்டு**வைத்து, உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்.
doveவடிவமைப்பு முடிந்ததுதானே? வார்ப்புருவை வடிவமைக்கலாமா?
- doveவடிவமைப்பை இன்று திரும்பவும் பார்த்தேன். அமைப்பில் முன்னேற்றம் தெரிகிறது. தற்போதுள்ள அமைப்பையே வடிவமைப்பாக மாற்றிவிடலாம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:08, 5 ஜனவரி 2010 (UTC)
- இன்று மேலும் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளேன். வாக்கியப் பயன்பாட்டில் தமிழ்ப்பொருள் தரும்போது சிறிய எழுத்துருவை எடுத்துவிட்டேன். இத்துடன் வடிவமைப்பு முடிந்தது. இதை நாம் பயன்படுத்தலாம். பழ.கந்தசாமி 15:56, 5 ஜனவரி 2010 (UTC)
<br /> என்ற குறியீடு, முன்பு பயன்படுத்தப் பட்டது. இப்ப ஒரு வரியில் எதுவும் எழுதாமல் விட்டுவிட்டு, அடுத்த வரியில் எழுதினால், அதன் பலனைப் பெறலாம். நான் இவ்வாரம், இந்தியப் பாலூட்டிகளில் பயிற்சி பெறுகிறேன். அதற்காக தமிழ்விக்கிப்பீடியாவில் ஆர்மடில்லோ கட்டுரை எழுதுகிறேன்.வாரம் ஒரு முறை தேவைப்படும் ஊடகக் குறிப்புகளை, அங்கு உங்கள் உரையாடலில் குறிப்பிடுகிறேன்.காணவும். நன்றி.த*உழவன் 13:56, 3 ஜனவரி 2010 (UTC)
படமும் வேகமும்
[தொகு]TRYPPN! புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இணைக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயம் பொருள் தேடும் பயனரின் பக்கம் எவ்வளவு வேகத்தில் காண்பிக்கப்படுகிறது என்பது. பக்கம் வர தாமதமானால் விக்சனரி பக்கம் வராமல் போய்விட வாய்ப்புண்டு. அதனால், முக்கியமான ஓரிரு படங்கள் போதும் என்பது என் எண்ணம். இது குறித்து உங்கள் எண்ணம் என்ன என அறிய ஆவல் பழ.கந்தசாமி 01:15, 1 ஜனவரி 2010 (UTC)
ஒரு சொல்லைத் தேடும் போது அதற்குரிய பக்கம் விரைவில் கிடைக்க வேண்டும் என்பது மிக அவசியம். எனவே, 4 படங்கள் கொண்ட விக்கிக் காட்சியகம் மட்டும் போதும். படமிடும் பணியை, அனைத்து சொற்களிலும் விரைவாக முடிக்கலாம். அதனையும், ஆதாரத்திற்க்கு மேலேயே, நாம் தரவேண்டும். (விரிவான பதிலை dove -இல் கொடுத்துள்ளேன்.)
ஒரு படம் பல விளக்கங்களை விரிவாக தரும் என்று நீங்கள் சொன்னது கவனிக்கத்தக்கது. நிறைய கட்டுரைகள், படங்கள் இடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. நாம் அங்கு இணைப்போம். வாரம் ஒருமுறை நான் அங்கு சென்று அப்பணிகளை கடந்த 6மாதங்களாகச் செய்கிறேன்.த*உழவன் 07:07, 1 ஜனவரி 2010 (UTC)
பழ.கந்தசாமி, த*உழவன் ஆகிய இருவருக்கும் வணக்கம்.
முதலில் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
படம் இணைப்பது பற்றி எனது கருத்துக்கள்.
- முதலில் wikimedia Commons - ல் எத்தனை நல்ல பொருத்தமான படங்கள் கிடைக்கின்றன என்பதாகும்.
- இரண்டாவதாக சொல்லுக்கு ஏற்றபடி இருந்தால், அதை சொல்லின் வலது புறத்தில் பெரிய படமாக இணைக்கிறேன்.
- மேலும் நிறைய விதவிதமான படங்கள், நாம் முன்னர் அறிந்திராத செய்திகளுடன் இருந்தால் அவற்றை --- காட்ச்சியகத்தில் (Gallery) இணைக்கிறேன்.
- அப்படி காட்ச்சியகத்தில் இணைக்கும் போது 1-2 படங்களை இணைத்தால் பார்ப்பதற்க்குச் சரியாக இல்லை. ஆகவே, இருக்கும் நல்ல படங்களில், மிகச்சிறந்த, காணக்கிடைக்காத, சிந்தனையை தூண்டும் வகையிலான படங்களையே காட்ச்சியகத்தில் இணைக்கிறேன்.
இங்கும் இணைய தளம் மெதுவாகவே வேலை செய்கிறது. இன்று காலை படம் இணைத்த பக்கங்களும் அவை காண்பிக்கபட்ட நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.
- --- banana --- 30 seconds
- --- வாழைப்பழம் --- 5 seconds
- --- wagon --- 17 seconds
- --- சுமை வண்டி --- 15 seconds
ஆகவே சொல்லை படிப்பதற்க்கு முனபே, படமும் தெரிகிறது. அங்கு தங்களது இணையதளத்தில் எவ்வளவு நேரத்தில் தெரிகிறது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
மேலும் தாங்கள் கூறியபடி, அதிகபட்சமாக, வலது புறம் ஒன்று, காட்சியகத்தில் நான்கு என்று (1+4) மொத்தம் 5 படங்களே போதும் என்று எண்ணுகிறேன்.
விக்கிக் காட்சியகத்தை நான் ஆதாரத்திற்க்கு, கீழேயே கடைசியில் இணைத்து வருகிறேன். இதனால் முந்தய தொகுப்புகளுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. இதுவே சரி என்றும் எண்ணுகிறேன்.
தாங்கள், சரியாக கூறினீர்கள். ஒரு படம் பல விளக்கங்களை கொடுக்கும்.
ஒரு படம் பத்து சொற்களுக்கு சமம் --- என்பது எனது கருத்தாகும்.
இங்கு தமிழ் விக்சனரியில் சிறிது பயிற்சி பெற்றபின்பே தமிழ் விக்கிப்பீடியா செல்ல எண்ணியுள்ளேன். தங்களிருவரிடமும் உரையாடுவதால் எனது தட்டச்சு வேகம் அதிகரித்துள்ளது. நன்றி.
நிறைய கட்டுரைகள், படங்கள் இடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன --- என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். எனக்கு ஒரு சிறு பட்டியல் கொடுத்தால் நன்றாக இருக்கும். பின்பு நாம் அங்கும் படங்களை இணைப்போம்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:40, 1 ஜனவரி 2010 (UTC)