உள்ளடக்கத்துக்குச் செல்

பரிசாரகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பரிசாரகன்(பெ)

  1. பணியாள், சேவகன், ஊழியன், ஏவற்காரன்
  2. சமையற்காரன், பரிமாறுபவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. servant, temple-servant
  2. cook, server in a restaurant
விளக்கம்
பயன்பாடு
  • இரண்டு பேர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று பயமாயிருக்கிறது.முன்னைப்போல சமைக்கப் பரிசாரகனாவது இருக்கிறானா? அதுவும் இல்லை.உன் மாமாவுக்குக் கடன் உடன் அதிகமாகப் போய் விட்டது.பரிசாரகன் வைத்துக் கொள்ளக் கட்டவில்லை! (அலை ஓசை, கல்கி)
  • நடிகை பத்மினி கேட்ட சகல உணவு வகையும் அகப்படும் ஒரு உணவகம் ரொறொன்ரோவில் இருந்தது. ஓர் ஈழத்துக்காரர்தான் அதை நடத்தினார். பெயர் Hopper Hut. பத்மினியை அங்கே அழைத்துப் போனோம். பத்மினி மெனு அட்டையைப் பார்த்து தனக்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளுக்கும் ஆணை கொடுத்தார். அப்பம், நண்டு, மீன், றால், கோழிப் பிரியாணி. அப்பத்தின் நடுவில் மீனை வைத்து மடித்து, பின்னர் றாலை வைத்து இன்னொருதரம் மடித்து ருசித்து ருசித்து சாப்பிட்டார். பரிசாரகன் 20 வயதுப் பையன். அவன் பத்மினியை கவனித்ததாகவே தெரியவில்லை. பத்மினி அவன் முகத்தை பார்த்தார், பின்னர் அப்பத்தை பார்த்தார். மறுபடியும் பையனின் முகத்தை பார்த்தார். அவன் கவனத்தை என்ன செய்தும் திருப்ப முடியவில்லை. இறுதியில் ஆற்றாமல் "நான் யாரென்று தெரிகிறதா?" என்றார். மேசை துடைத்த பையன் அரைக் கணம் அந்த வேலையை நிறுத்திவிட்டு "தெரியாது" என்றான். அந்த மேசையை சுற்றிய இலையானின் மேல் அவனுக்கிருந்த கவனம்கூட பத்மினியின் மேல் இல்லை. பில் கொடுத்தபோது மறுபடியும் "நான் யார் தெரியுமா?" என்றார். வாயை திறக்காமல் தலையை கிழக்கு மேற்காக ஆட்டினான். இந்த வேதனையை நீடிக்கவிடாமல் நான் "இவர்தான் நடிகை பத்மினி" என்றேன். அவன் "எந்த பத்மினி?" என்றான். பத்மினியின் அத்தனை நடிப்பும், அத்தனை அழகும், அத்தனை புகழும் அந்த ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போயின. (பத்மினியின் முத்தம், அ.முத்துலிங்கம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பரிசாரகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பரிசாரகம், பரிசாரம், பரி, பரிசாரிகை, பரிசாரகர், சேவை, ஊழியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிசாரகன்&oldid=1022951" இலிருந்து மீள்விக்கப்பட்டது