புணர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

புணர்தல்:
இவர்கள் அளவளாவுகின்றனர்
புணர்தல்:
இவர்கள் கலவியில் ஈடுபடுகின்றனர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • புணர்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

 1. பொருந்துதல். (திவா.)
 2. கலவிசெய்தல்.
  (எ. கா.) மன்னியவளைப் புணரப்புக்கு (திவ். பெருமாள். 6, 9).
 3. அளவளாவுதல். (பிங்.)
  (எ. கா.) ஊதியமில்லார்ப் புணர்தல் (நாலடி. 233).
 4. மேற்கொள்ளுதல்.
  (எ. கா.) பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் (பெருங். வத்தவ. 6, 6).
 1. ஏற்புடையதாதல்.
  (எ. கா.) குரல் புணர்சீர் (புறநா. 11).
 2. விளங்குதல். (J.)
 3. எழுத்து முதலியன சந்தித்தல்.
  (எ. கா.) (தொல். எழுத். 108). (இலக்கணம்)
 4. உடலிற்படுதல்.
  (எ. கா.) மென்முலைமேற் பனிமாருதம் புணர (கம்பரா. சூர்ப்பண. 77).
 5. கூடிய தாதல்
  (எ. கா.) புணரின் வெகுளாமை நன்று (குறள். 308).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்

v tr

 1. To join,unite
 2. To cohabit, copulate
 3. To associate with, keep company with
 4. To undertake

v.intr

 1. To suit fit
 2. To appeal to the mind; to be understood
 3. To combine, coalesce, as letters or words in canti
 4. To touch
 5. To be possible( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்தல்&oldid=1279326" இருந்து மீள்விக்கப்பட்டது