பூரணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பூரணை(பெ)

  1. நிறைவு, பூரணம்
    • பூரணையாற் பதினாற்கயிற்றோக்கப்புவனமெல்லாம் (திருநூற். 91)
  2. முழுமதி, பூர்ணிமை
  3. பஞ்சமி, தசமி, உவா என்ற திதிகள்
  4. சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி

(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

(பெ)

  1. fullness, perfection
  2. full moon
  3. the 5th, 10th and 15th days in a lunar fortnight
  4. (Jaina.) The tank to the north of a 'camavacaraṇam'

(பெ)

விளக்கம்
பயன்பாடு
  • பூரணைகேள்வன் - ஐயனார் - Aiyanar
  • சத்ய பூரணர் என்ற மகரிஷி, மகா தபஸ்வி. அவருக்கு பூரணை, புஷ்கலை என இரண்டு மகள்கள். தெய்வ சக்தி கொண்ட முனிவரின் புதல்விகளை மணந்து கொள்ள மற்றவர்கள் அஞ்சினர். பெண்களும் அற்புத சக்தி கொண்ட ஒரு தெய்வ மகனையே மணக்க வேண்டும் என்று உறுதி கொண்டனர். அதற்காக இறைவனை நினைந்து கடும் தவம் இருந்தார்கள். அவர்கள் தவத்துக்கு இரங்கிய இறைவன், தமது அம்சமும், திருமால் அம்சமும் இணைந்த அய்யனாரை மணக்க அருள்புரிந்தார். பூரணை, புஷ்கலை இருவரையும் மணந்தார் அய்யனார்.
  • (தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இராஜகிரியில் அமைந்துள்ள) கரைமேல் அழகர் அய்யனார் ஆலயத்தில் மதிற்சுவரை ஒட்டி கரைமேல் அழகர் அய்யனாரும், உள்ளே பூரணை, புஷ்கலையுடன் மூலவராக யானை மேல் அழகர் அய்யனாரும், பிராகாரத்தில் பரிமேல் அழகர் அய்யனாரும் அருள்பாலித்து வருகிறார்கள்.
  • ...இந்திராணி சிவலோகம் செல்ல இயலாத நிலையில் தனியே இருக்க அஞ்சினாள். இந்திரன் அவளுக்கு தைரியம் சொல்லி, சிவன்-திருமால் அம்சமாகப் பிறந்த ஹரிகர புத்திரன் அய்யனாரை வணங்கித் துதித்தார்.. அய்யனார் கோடி சூரியப் பிரகாசத்துடன் வெள்ளை யானை மேல், பூரணை, புஷ்கலை சமேதராக காட்சி அளித்தார். (காவல் தெய்வம் கரைமேல் அழகர், வெள்ளிமணி, 09 மார்ச்சு 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பூரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரணை&oldid=1986797" இலிருந்து மீள்விக்கப்பட்டது