போதை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
போதை(பெ)
- மது மற்றும் இலாகிரியால் ஏற்படும் மயக்கம்
- மயக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- intoxication, inebriation, giddiness, kick, as from drink
விளக்கம்
பயன்பாடு
- போதை பானம் - intoxicating drink
- போதை மருந்து - intoxicating drug
- போதை தெளிதல் - becoming sober after getting intoxicated
- நண்பர்களுடன் மது அருந்தினான். கொஞ்சம் போதை ஏறியதும், “வேண்டாம், போதும்” என்று நிறுத்திவிட்டான்.
- கள் அருந்த அருந்த, அவனது போதை தலைக்கேறியது.
- நன்றாகச் சாராயம் குடித்துவிட்டுத் போதையில் தள்ளாடியபடியே வீடு வந்தான்.
- விடிந்ததும் அவன் போதை தெளிந்தது.
- நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்த போது தன் அறிவு தன்னை விட்டு அகன்று ஒருவித போதை உணர்ச்சி உண்டாகியிருந்தது (பொன்னியின் செல்வன், கல்கி)
- நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில், வீர நடை போடும் திருமேனி தரும் போதையில் (பாடல்)
- பாதையில் எங்குமே போய் வரலாம், போதையின் நடுவே வரலாமா (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- போதை (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +