தள்ளாடு
Appearance
பொருள்
தள்ளாடு(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- totter from age, weakness, etc.
- be disconcerted, be confused
விளக்கம்
பயன்பாடு
- குழந்தை தள்ளாடித் தள்ளாடி நடந்தது.
- அவன் நிறைபோதையில் தள்ளாடினான்.
- கொஞ்சம் அதிகமாகவே சோர்ந்து போனதன் காரணமாக கோபால் தள்ளாடித் தள்ளாடி நடந்து தன் அறையில் போய்ப் படுக்கையில் விழுந்துவிட்டான் (சமுதாய வீதி, நா.பார்த்தசாரதி)
- தட்டுத் தடுமாறிக் கொண்டே தளத்தில் விரித்திருந்த விரிப்பில் தள்ளாடி எழுந்து உட்கார்ந்தான் (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
- காலை ஊன்றி நிற்கப் பார்த்தும் முடியாமல் தள்ளாடி நதி வெள்ளத்தில் விழுந்தான் (பொன்னியின் செல்வன், கல்கி)
- வைரவன் பிள்ளை கைத்தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்தார் (நினைவுப்பாதை, புதுமைப்பித்தன்)
- தை மாதப் பொங்கலுக்குத் தாய் தந்த செங்கரும்பே தள்ளாடி வாடி தங்கம் போலே (பாடல்)
பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன
(இலக்கியப் பயன்பாடு)
- தள்ளாடு (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---தள்ளாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தடுமாறு - குழறு - தள்ளாட்டம் - ஆட்டம் - போதை