விசும்பல்
Appearance
பொருள்
விசும்பல்(பெ)
- விசும்புதல்; விசும்பும் போது கேட்கும் ஒலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகைப் பொங்கி வெடித்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு. (குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி)
- மெல்லிய விசும்பல் ஒலி அத்தையின் செவிகளில் விழுந்தது. "என்னடி, பெண்ணே? இதற்காகவா அழுகிறாய்? அழுகை வரும்படி நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது?" என்று கேட்டுக் கொண்டே கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தினாள் அத்தை. அவளுடைய விழிகள் கண்ணீர்க் குளங்களாக மாறியிருந்தன. (பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி)
- மாணிக்கம் அழுதுகொண்டே தன் படுக்கைக்குச் சென்று சுருண்டு படுத்துக் கொண்டான். கண்கள் மூடினாலும் தூக்கம் வர மறுத்தது. விசும்பல் மட்டும் இடைவிடாமல் தொடர்ந்தது. (விகடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- விசும்பல் (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---விசும்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +