வேதாந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வேதாந்தம் (பெ)

 1. வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள உபநிடதம்
 2. அத்வைதம்
 3. வாழ்வு பற்றி ஒரு ஞானியைப் போல தன்னளவில் கொண்டுள்ள தத்துவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. The Upanisads, as the concluding portions of the Vedas
 2. the Advaita philosophy
 3. philosophical outlook about life
விளக்கம்
 • வேதாந்தம் = வேதம் + அந்தம்
 • ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை (தமிழ் விக்கிப்பீடியா)
பயன்பாடு
 • எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். (தினமணி, 18 ஆகஸ்டு 2010)
 • நாயுடு சம்பாதிப்பார் - குடிக்க மட்டுமே தான் அந்தப் பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் போலச் சில சமயம் நடந்து கொள்வார். சில சமயம், வேதாந்தம் பேசுவார். சில வேளைகளில் ஏதோ போன ஜென்மத்திலே நமக்குள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேதான் இந்த ஜென்மத்திலே இது ஏற்பட்டது என்பார் (ரங்கோன் ராதா, அண்ணாதுரை)
 • நைந்துபோனவனைக் கொன்று விடுவதுதானே இயற்கை, உங்கள் ஓநாய் வேதாந்தம்? (ராமனாதனின் கடிதம், புதுமைப்பித்தன்)
 • உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும் (அலை ஓசை, கல்கி)
 • பையன் தமிழ் எம்.ஏ. தேறிவிட்டு வீட்டோட வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் (பொன் விலங்கு, தீபம் நா. பார்த்தசாரதி)
 • அவன் தான் மெய்யுணர்வு பெற்றவன். அவன் தான் உண்மை உணர்ந்த ஞானி. மற்றவர்கள் எல்லோரும் திண்ணை வேதாந்தம் பேசுகிறவர்களே (எதையோ பேசினார், மு.வரதராசன்)
 • பொதுவாகச் சொன்னாலே சித்தாந்தம், அது புரியாமல் போனாலே வேதாந்தம் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

 • திருநெறி ஆவது சித்த அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமா நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே (திருமந்திரம், திருமூலர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேதாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

சொல் வளப்பகுதி

 :விதி - சித்தாந்தம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதாந்தம்&oldid=778721" இருந்து மீள்விக்கப்பட்டது