உள்ளடக்கத்துக்குச் செல்

புன்னை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


புன்னை:
புன்னை மரம்
புன்னை:
புன்னைப் பூ
புன்னை மரம், காய்களுடன்

புன்னை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  • a tree called punnai - mast-wood, (calophyllum inophyllum)
விளக்கம்
  • புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதன் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை calo கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை.
பயன்பாடு
  1. அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? (பொன்னியின் செல்வன், கல்கி)
  2. புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீயாடு(பாடல்)
  3. பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க, வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க (பாடல்)
  4. புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறுநூறு 117 )

(இலக்கியப் பயன்பாடு)

உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை
(நற்றிணை-231)

(புன்னை மரத்தின் பூ சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாகக் கூறுகின்றது).

  • குரீஇ = குருவி
  • போது= மலர், மலரும் பருவத்து அரும்பு,
  • கருந்தாட் புன்னை = கருந்தாள் புன்னை, கரும்பச்சை நிறமான இலை உடைய புன்னை)
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்னை&oldid=1968651" இலிருந்து மீள்விக்கப்பட்டது