அருகு
Appearance
பொருள்
அருகு(வி)
- குறை
- ஒன்னார் மதிநிலை யருக (இரகு. யாக. 34).
- அரிதாகு
- அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 142)
- கிட்டு, நெருங்கு
- அஞ்சு
- அஞ்செஞ் சாய லருகா நணுகும் (சிலப். 30, 126).
- அருவு; நோவுண்டாகு
- கெடு
- பருகு வன்ன வருகா நோக்கமோடு (பொருந. 77)
- குறிப்பி
- அறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- become scarce, become rare; diminish, be reduced
- happen rarely,be of uncommon occurrence
- approach
- be afraid, fear
- smart, prick, pain
- disappear, perish
- indicate one's intention
- know
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
அருகு(பெ)
- சமீபம்
- சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரெள. 36).
- ஓரம்
- மொய்ம்மலரைத் தும்பி யருகுடைக்கும் (நள.கலிநீங். 24).
- பக்கம்
- அவ்வருகு கடத்தும்ஓடம் (ஈடு)
- இடம்
- மரியாதைத் தீவட்டி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- nearness, contiguity, neighbourhood
- border, edge, vicinity
- side
- place
- lamp or torch carried before a great person
விளக்கம்
பயன்பாடு
- அருகில் உள்ள வங்கி - பக்கத்தில் உள்ள வங்கி
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +