கொந்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொந்து (வி)
- கொத்து
- பழம் முதலியவற்றை அலகால் குதறுதல்
- அச்சுறுத்து
- குத்து
- மகளிர்ஆட்டத்தில் மேலெறிந்த காய் விழுவதற்குள் தரையிலுள்ள காய்களை எடு. அவள் புளிய விதையைக் கொந்தி விளையாடுகிறாள்.
- கொடியிலிருக்கும் ஆடையைக் கோல் கொண்டு எடுத்தல்
- கிந்து; ஒற்றைக்காலால் குதி
- மிக்க ஆசாரம் காட்டிக்கொள்
- எரிதல்
- கோபம் மூளுதல்
- (கணினியியல்) கணினியில் இயங்கும் மென்பொருளைத் தன் அறிவுத் திறமையால், உரிமையாளரின் இசைவு இன்றித் திருத்தியமைத்தல் அல்லது அதன்வழி கணினியில் இருக்கும் தகவல்களைத் திருடுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- peck, pick, mince
- injure fruits by pecking, gnawing
- threaten, intimidate, terrify
- gore, pierce
- pick up shells, etc., from the floor before a thrown-up shell comes down, as in game played by girls (Colloq. )
- remove a cloth from the clothes' line with a stick (Colloq.)
- hop, as in a game
- hacking
- pretend to be very orthodox
- burn; to be in flames
- be enraged, furious; to be inflamed with anger
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கொந்தி யிரும்பிற் பிணிப்பர் கயத்தை (நான்மணி. 12).
- கொந்தழல் (சீவக. 1499)
(இலக்கணப் பயன்பாடு)
கொந்து (பெ)
- ஒற்றைக் காலால் குதித்தாடும் விளையாட்டு வகை
- கோபம்
- கொத்து
- திரள்
- கொத்துமாலை
- பூந்தாது. கொந்து சொரிவன கொன்றையே (தக்கயாகப். 62)
- பிரதேசம். இந்த மழை கன்னியாகுமரிக் கொந்தில் பெய்யவில்லை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a hopping game
- anger, wrath
- cluster of flowers
- gathering, multitude
- garland of many wreaths
- side, region
- pollen
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இந்தனக் குழுவைக் கொந்தழ லடூஉம் (ஞானா. 63, 11)
- கொந்தா ரிளவேனல் (சிலப். 8, வெண்பா. 1)
- கொந்தினாற் பொலியும் வீதி (இரகு. இரகுவு. 53)
- கொந்தார் தடந்தோள் (திருக்கோ. 391).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கொந்தர் - கொத்து - குதறு - அச்சுறுத்து - கோபம்