உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி வகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள்அகரமுதலி வகரவரிசை

[தொகு]

வகரம்

[தொகு]


வகுத்த
= வகைப்படுத்திய = திட்டம் செய்த, 377.
வகுத்தல்
= (அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுக்) கொடுத்தல், 385.
வகுத்தான்
= வகைசெய்தவன் = கடவுள், 377.
வகை
= கூறுபாடு, திறம், 23
= ௸, 27
= ௸, 377
= ௸, 465
= ௸, 713
= ௸, 721
= ௸, 878;
= கூறு, 953;
= உறுப்பு = அமைச்சர் முதலோர், 897;
= [தெரிந்து செயல்வகை], அதி. 47;
= [வினை செயல்வகை], அதி. 68;
= [பொருள் செயல்வகை], அதி. 76;
= [குடி செயல்வகை], அதி. 103.
வகைமை
= வேறுபாட்டின் தன்மை, 709.
வகையர்
= கூறுபாட்டையுடையவர், 817.
வகையான்
= திறத்தால், 33
= ௸, 514|1|;
= இயல்பினால், 514|2|.

வசை

[தொகு]
வசை
= பழிப்பு, 238
= ௸, 239
= ௸, 240.

வஞ்ச

[தொகு]
வஞ்ச
= ஏமாற்றுவதாகிய [வஞ்சமனம்], 271.
வஞ்சரை
= ஏமாற்றுந் தன்மையுடையவரை, 824.
வஞ்சித்து
= ஏமாற்றி, 276.
வஞ்சிப்பது
= ஏமாற்றுவது, 366.

வடு

[தொகு]
வடு
= பழி, 549
= ௸, 1079;
= தாழ்வு, 689;
= தழும்பு, 129.
வட்டு
= உண்டை, 401.

வண்

[தொகு]
வண்
= வளப்பமான [வண்பயன்], 239.
வணக்கம்
= வளைவு, 827.
வணங்கா
= பணியாத, 09.
வணங்கிய
= பணிந்த, 419.
வண்ணத்தால்
= வகையாக, 561.
வண்ணம்
= வகை, 654;
= நிறம், 714.

வந்த

[தொகு]
வந்த
= போந்த, நேர்ந்த, 569
= ௸, 609
= ௸, 754
= ௸, 764
= ௸, 767
= ௸, 807|2|
= ௸, 809
= ௸, 1044
= ௸, 1211;
= அழிவு வந்தவை = கேடுகள் வந்தவற்றை [அழிவந்த], 807|1|.
வந்தது
= இழிவானது [இளிவந்தது], 1066.
வந்தவிடத்து
= வந்த சந்தர்ப்பத்தில், 968.
வந்தானை
= வந்த சுற்றத்தானை, 530.
வந்து
= வந்தாற்(போல்வது), 1058.

வயிற்றுக்கு

[தொகு]
வயிற்றுக்கு
= வயிற்றுக்கு, 412.
வயின்
= [அவர்வயின் விதும்பல்], அதி. 127.

வரல்

[தொகு]
வரல்
= வருதல், 1205
= ௸, 1263.
வரவு
= பழைய குடி வரவு = வம்சத்திற்கு உரிய நடைமுறை [தொல் வரவு], 1043;
= வருகை, 1151
= ௸, 1165
= ௸, 1264.
வரன்
= மிக்கது, 24.
வரிசை
= தகுதிக்கேற்ற தன்மை, 528.
வரின்
= வந்தால், 969
= ௸, 970
= ௸, 1052
= ௸, 1179
= ௸, 1267;
= வரினும், 433
= ௸, 625
= ௸, 669;
= மேல்வரினும், 765.
வரு
= வந்த [வருவிருந்து], 83;
= பின்செல்லக் கடவ [வருவிருந்து], 86;
= வரக்கடவதாகின்ற [வருமுன்னர்], 435;
= வருவதாகிய [வருபுனலும்], 737;
= வரக்குறித்த [வருநாள்], 1269.
வருக
= போதுவானாக, 1266.
வருங்கால்
= வரும்போது, 621
= ௸, 733
= ௸, 830
= ௸, 859.
வருதலால்
= தொடர்வதால், 11;
= உண்டாகும் ஆதலால், 642.
வருத்த
= (வருந்திய)வருத்தத்தின் (கூலி), 619.
வருத்தம்
= முயற்சி, 468.
வருந்தா
= முயலாத, 468.
வருந்தினார்க்கு
= துன்புற்ற ஆடவர்க்கு, 113.
வருப
= வருஞ்செயல்கள், 961.
வருபவன்
= திரிகின்றவன், 774.
வரும்
= வந்தடையும், 63
= ௸, 220
= ௸, 264
= ௸, 303
= ௸, 319;
= உண்டாம், 362
= ௸, 364
= ௸, 367
= ௸, 368
= ௸, 455
= ௸, 529
= ௸, 1042;
= வாராநின்றது, 1223
= ௸, 1224.
வருவது
= நிகழ்வது, 39
= ௸, 429
= ௸, 1202;
= வரும், 1048.
வரை
= எல்லை, 234
= ௸, 480|2|
= ௸, 488;
= அளவு, 480|1|.
வரைத்து
= அளவையுடையது, 105.
வரையாள்
= வரம்பிலே உள்ளவள், 150.
வரையான்
= உரித்தாகச் செய்யாதவன், 150.
வரைவு
= உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் வரம்பு, 919.

வல்

[தொகு]
வல்
= வலிய, 273
= ௸, 496
= ௸, 721;
= விரைவான, 582
= ௸, 1151;
= அழியாத, 737.
வலி
= நோன்மை, 273
= ௸, 471
= ௸, 473
= ௸, 1131;
= (மிக்க)வலிவுடையன [பெருவலி], 380;
= [அறன் வலியுறுத்தல்], அதி. 4;
= உபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியும் அளந்தறிதல் [வலியறிதல்], அதி. 48.
வலியார்
= வலிமையுடையவர், 250.
வலியார்க்கு
= வலிமையுடையவர்க்கு, 861.
வலை
= கண்ணி, 348.
வல்லது
= திறமையுடையது, (கற்று) வல்ல கலை, 713;
= கற்ற நூல், 845;
= வல்லவன், 385
= ௸, 585
= ௸, 633
= ௸, 634;
= வல்லதாகின்றது, 1321.
வல்லர்
= திறமையுடையவர், 999.
வல்லன்
= வல்லவனாய், 647;
= திறமையுடையவன், 683.
வல்லார்
= திறமையுடையவர், 648
= ௸, 795;
= (கற்று) வல்லவர் அவைக்கண் [வல்லாரகத்து], 717.
வல்லாரை
= திறமையுடையவரை, 855.
வல்லார்க்கு
= திறமையுடையவர்க்கு, 578
= ௸, 808.
வல்லாற்கு
= திறமையுடையவனுக்கு, 387.
வல்லானை
= திறமையுடையவனை, 446.
வல்லை
= விரைய, 480.
வல்லையேல்
= நீ திறமையுடையாய் என்றால், 1118.

வழக்கு

[தொகு]
வழக்கு
= நெறியின்பயன், 73
= ௸, 75;
= உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல், 795;
= நன்னெறி, 991
= ௸, 992.
வழங்காது
= செய்யாது, 19.
வழங்கி
= நிலைபெற்று, 11.
வழங்கும்
= இயங்குகின்ற, 245;
= ஒழுகும், 477.
வழங்குவது
= சொல்லுதல், 99;
= கொடுக்கும் பொருள், 955.
வழி
= பாதை, 38;
= தேயத்து, 1170;
= மரபு, 44
= ௸, 508;
= தொன்று தொட்டது = பழையது, 764
= ௸, 807
= ௸, 809;
= நன்னெறி, 766;
= நீதிநூல், 865;
= பிற் பொழுது, 451;
= சந்தர்ப்பத்தில், 770
= ௸, 846;
= பொழுது, 1224
= ௸, 1299
= ௸, 1300
= ௸, 1308;
= சொல்லியவாறே(சொல்லுவான்) [வழியுரைப்பான்], 688;
= [பெண்வழிச் சேறல்], அதி. 91.
வழியது
= ஒத்துநின்றது, 80.
வழுக்காமை
= ஒழிவின்றி, 536.
வழுக்கி
= மறந்து, 139;
= தவிர, 165.
வழுக்கினுள்
= பயன்படாது கழிந்த நாளுள், 776.
வழுத்தினாள்
= வாழ்த்தினாள், 1317

வள

[தொகு]
வள
= வருவாய்க்கு [வளத்தக்காள்], 51;
= செல்வத்தினது, 480.
வளத்தன
= செல்வத்தையுடையவை, 739.
வளம்
= பயன், 14;
= செல்வம், 512
= ௸, 726
= ௸, 739.
வளர
= முதிர, 1223.
வளர்வதன்
= வளர்ச்சி அடைகின்றதனுடைய, 718.
வளா
=(குளப்)பரப்பு [குளவளா], 523.
வளி
= காற்று, 245
= ௸, 1108
= ௸, 1239;
= வாதநீர், 941.
வளை
= சங்குவளையல்கள், 1157
= ௸, 1277.
வள்ளி
= கொடி, 1304.
வள்ளியம்
= கொடைத்தன்மையுடையோம், 598.

வறக்குமேல்

[தொகு]
வறக்குமேல்
= பெய்யாதாயின், 18.
வறம்
= வறுமை, 1010.
வறியார்க்கு
= சிறுமையுடையவர்க்கு = ஏழைகட்கு, 221.
வறுமை
= சிறுமை = ஏழ்மை, 769
= ௸, 934.
வறுமையின்
= ஏழ்மையைவிட, 408.
வற்றல்
= உலர்ந்ததாகிய(இலை,கிளை இல்லாத மரம்), 78.
வற்று
= வல்லது, 587
= ௸, 1079.

வன்

[தொகு]
வன்
= வலியதாகிய, 78
= ௸, 9:= ௸,9
= ௸, 228
= ௸, 276
= ௸, 632
= ௸, 689
= ௸, 726
= ௸, 762
= ௸, 764
= ௸, 775
= ௸, 1027
= ௸, 1156
= ௸, 1198
= ௸, 1222;
= வலியை = முருட்டுத்தன்மை(உடையது) [வன்பாட்டது], 1063;
= தறுகண் = அசைவின்மை [வன்கண்], 632
= ௸, 762;
= வீரமுடையது [வன்கணது], 764;
= வீரமுடையவர் [வன்கணவர்], 228;
= வீரமுடையவர்க்கு [வன்கணவர்க்கு], 775;
= திண்மையுடையவன் [வன்கணவன்], 689;
= தறுகணாளர் [வன்கணார்], 276
= ௸, 1198;
= வீரமுடையது [வன்கண்ணது], 1222;
= வீரமுடையவர் [வன்கண்ணர்], 726
= ௸, 1027
= ௸, 1156.
வன்மை
= வலிமை, 153
= ௸, 682;
= [சொல் வன்மை], அதி. 65.
வன்மையின்
= முருட்டுத் தன்மை போல, 1063.
வன்மையுள்
= வலிமையுள், 153
= ௸, 444.



திருக்குறள் அகரமுதலி வகர வரிசை முற்றும்


பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா-| வி,வீ-| வெ,வே,வை. ||