திருக்குறள்அகரமுதலி பாகாரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி பாகாரவரிசை
[தொகு]பாகாரம்
[தொகு]பா
- பாகம்
- = பாதி, 1092.
- பாக்கியத்தால்
- = தெய்வத்தன்மையால், 1141.
பாடற்கு
[தொகு]- பாடற்கு
- = பாடுதல் தொழிலோடு, 573.
- பாடு
- = பெருமை, 409;
- = ௸, 597
- = ௸, 768
- = ௸, 1322;
- = ஆண்மை, 906;
- = மேம்பாடு, 1237.
பாத்தி
[தொகு]- பாத்தி
- = பகுக்கப்பட்ட நிலம் = வளரும் நிலம், 465.
- பாத்தியுள்
- = பகுத்த நிலத்தில், 718.
- பாத்து
- = பகுத்து = பிரித்துக் கொடுத்து, 44
- = ௸, 227;
- = (பகுத்த பங்கு), 1107.
பாம்பு
[தொகு]- பாம்பு
- = பாம்பு- ஈண்டு இராகு, 1146.
- பாம்போடு
- = பாம்புடன், 890.
- பாய்பவர்
- = பாய்பவர் செயல், 1287.
பார்
[தொகு]- பார்
- = வன்னிலம், 1068.
- பாராட்டுதல்
- = கொண்டாடுதல், 521.
- பாராட்டும்
- = கொண்டாடும், 994.
- பாராட்டுவானை
- = பலகாலும் சொல்லுவானை, 196.
- பாரிக்கும்
- = வளர்க்கும்(குற்றம்), 851.
- பாரித்து
- = விரித்து, 193.
- பாரிப்பார்
- = பரப்புகின்றவர், 916.
- பார்க்கும்
- = நோக்கும், 130
- = ௸, 1186|2|;
- = பார்த்து நெருங்கிவரும்(இருள்)[பார்க்கும்- இருள்], 1186|1|.
- பார்த்து
- = நோக்கி, 86
- = ௸, 487;
- = சீர்தூக்கி, 676.
- பார்ப்பார்கண்
- = காணுபவரிடத்தில், 285.
- பார்ப்பான்
- = அந்தணன், 134.
- பார்வல்
- = நோக்கு, 1152.
பால்
[தொகு]- பால்
- = பக்கம், 118;
- = முறைமை, 111;
- = பகுதி, 209
- = ௸, 950;
- = வகை, 533;
- = ஊழ்வினை, 376;
- = கண், இடத்தில் (7-ஆம் வேற்றுமை உருபின் பொருள்), 422
- = ௸, 999;
- = ஆவின்பால், 1000;
- = அறத்தினது பகுதி[அறத்துப் பால்], அதி. 5 முதல் 38 வரை;
- = பொருளினது பகுதி[பொருட் பால்], அதி. 39 முதல் 108 வரை;
- = காமத்தினது பகுதி[காமத்துப் பால்], அதி. 109 முதல் 133 வரை.
- பால
- = கூற்ற =வகைமையுடையவை, 206;
- = முறைமையுடையவை, 342
- = ௸, 378
- = ௸, 437;
- = பகுதியவாயவை, 672.
- பாலது
- = தன்மையுடையது, 40
- = ௸, 437.
- பாலவை
- = (தூய வினையான் வந்த)பொருள்கள்[நற்பாலவை], 659.
- பாலால்
- = கூறுபாட்டால், 279.
- பாலொடு
- = பாலுடன், 1121.
பாவம்
[தொகு]- பாவம்
- = தீவினை, 146.
- பாவாய்
- =(கண்ணில் உறையும்) பாவையே (= கருவிழியுள் தோன்றும் படிவமே), 1123.
- பாவி
- = தீவினையாற் கொடியது, 168
- = ௸, 1042.
- பாவை
- = பதுமை, 407
- = ௸, 1020
- = ௸, 1058.
பாழ்
[தொகு]- பாழ்
- = கெடுதலாக, 735.
பாற்கண்
[தொகு]- பாற்கண்
- = (வலிய)நிலத்தில், 78.
- பாற்று
- = தன்மையுடையது, 11
- = ௸, 829;
- = முறைமையுடையது, 82
- = ௸, 825;
- = இயல்புடையது, 515;
- = இயற்கையுடையது, 871.
திருக்குறள் பாகார வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி பிகர வரிசை
[தொகு]பிகரம்
[தொகு]பி
- பிடித்து
- = (குறிக்)கொண்டு[கடைப்பிடித்து], 944;
- = ஒருகைப்பிடியளவு[பிடித்தெரு], 1037.
பிணம்
[தொகு]- பிணம்
- = சவம், 913.
- பிணி
- = நோய், 227
- = ௸, 734
- = ௸, 238
- = ௸, 949
- = ௸, 1014.
- பிணிக்கு
- = நோயைத் (தீர்ப்பதற்கு), 1102.
- பிணிக்கும்
- = கவர்ச்சிக்கும், 643;
- = கூட்டாநிற்கும், 570.
- பிணை
- = பெண்மான், 1085
- = ௸, 1089.
பிரிதல்
[தொகு]- பிரிதல்
- = நீங்குதல், 394;
- = நீங்குதல்[தலைப்பிரிதல்], 955.
- பிரித்தல்
- = நீக்குதல் = தனித்தனியாக்கல், 633.
- பிரிந்த
- = நீங்கிய, 258.
- பிரிந்தவர்
- = நீங்கிப் போனவர், 1248.
- பிரிந்தார்
- = விட்டு நீங்கியவர், 633, 1264.
- பிரிந்து
- = நீங்கி, 530.
- பிரிப்பர்
- = விலகப்பண்ணுபவர், 187.
- பிரியலம்
- = விட்டு நீங்க மாட்டோம், 1315.
- பிரியா
- = நீங்காத, 97.
- பிரியாதார்
- = நீங்காதவர், 810.
- பிரிவின்கண்
- = நீங்குதல் வந்துழி, 839.
- பிரிவு
- = நீங்குதல், 1152
- = ௸, 1153
- = ௸, 1158
- = ௸, 1160
- = ௸, 1295;
- = செலவு, 1155
- = ௸, 1156;
- = வரைந்தெய்திய பின், தலைமகன் அறம் பொருளின்பங்களின் பொருட்டுச் சேயிடையேனும், ஆயிடையேனும் தலைமகளைப் பிரிந்து செல்லும்; செல்லுஞான்று, அப்பிரிவினை அவள் ஆற்றாளாந் தன்மை[பிரிவாற்றாமை], அதி. 116.
பிழை
[தொகு]- பிழை
- = குற்றம், 535.
- பிழைத்த
- = (குறி)தவறிய, 772.
- பிழைத்தது
- = தப்பியது, 779.
- பிழைத்து
- = பிறழ்ந்து = பிறழ, 417;
- = தவறு செய்து, 896.
- பிழைப்பின்
- = குற்றப் பட்டால், 1019.
- பிழையாது
- = தவறாதது (போன்றது)[பிழையாதற்று], 307.
- பிழையாமை
- = தவறு செய்யாமை[பெரியாரைப் பிழையாமை], அதி. 90.
பிற
[தொகு]- பிற
- = மற்றவை, 34
- = ௸, 61
- = ௸, 95
- = ௸, 120
- = ௸, 213
- = ௸, 300
- = ௸, 302
- = ௸, 495
- = ௸, 661
- = ௸, 710
- = ௸, 917
- = ௸, 1011
- = ௸, 1102;
- = பிறவாகிய, 08
- = ௸, 297
- = ௸, 304
- = ௸, 321
- = ௸, 909
- = ௸, 982;
- = (அசைநிலை), 1181
- = ௸, 1184.
- பிறக்கும்
- = உண்டாதற் கேதுவாகிய, 1044.
- பிறங்கா
- = உண்டாகாத, 62.
- பிறங்கிற்று
- = உயர்ந்தது, 23.
- பிறத்தல்
- = உளவாதல், 303;
- = தோன்றுதல், 681
- = ௸௸, 992.
- பிறந்த
- = தோன்றிய, 603
- = ௸, 1026.
- பிறந்தார்
- = தோன்றியவர், 409
- = ௸, 952
- = ௸, 954
- = ௸, 959.
- பிறந்தார்கண்
- = தோன்றியவர் மாட்டு, 951
- = ௸, 957
- = ௸, 1044.
- பிறந்து
- = தோன்றி, 409
- = ௸, 502
- = ௸, 794.
பிறப்பின்
[தொகு]- பிறப்பின்
- = பிறப்பில், 1315.
- பிறப்பு
- = தோற்றம், 62
- = ௸, 107
- = ௸, 339
- = ௸, 345
- = ௸, 349
- = ௸, 351
- = ௸, 357
- = ௸, 358
- = ௸, 361
- = ௸, 972
- = ௸, 1002;
- = வருணம், சாதி, 133
- = ௸௸, 134.
பிறர்
[தொகு]- பிறர்
- = மற்றவர், 157
- = ௸, 160
- = ௸, 424
- = ௸, 436
- = ௸, 646
- = ௸, 984
- = ௸, 1009
- = ௸, 1015
- = ௸, 1018
- = ௸, 1079.
- பிறர்கண்
- = மற்றவரிடத்து, 206.
- பிறர்க்கு
- = மற்றவர்க்கு, 72
- = ௸, 311
- = ௸, 319
- = ௸, 834
- = ௸, 1076;
- = பிற மகளிர்க்கு, 1319.
- பிறவாமை
- = பிறக்காமல் இருத்தல், 362.
- பிறவி
- = பிறப்பு = பிறத்தல், 10.
- பிறற்கு
- = மற்றவனுக்கு, 149.
- பிறன்
- =மற்றவன், 49
- = ௸, 141
- = ௸, 142
- = ௸, 144
- = ௸, 147
- = ௸, 148
- = ௸, 150
- = ௸, 163
- = ௸, 178
- = ௸, 186
- = ௸, 204
- = ௸, 282
- = ௸, 1047;
- = பிறனுடைய இல்லாளை விரும்பாமை[பிறனில் விழையாமை], அதி. 15.
- பிறனை
- = தன்னோடு இயைபுடையன் அல்லாதானை, 508.
- பிறன்கண்
- = மற்றவன்கண், 316.
- பிறிதின்
- = மற்றதனுடைய, 315.
- பிறிது
- = மற்றது, 251
- = ௸, 257
- = ௸, 327
- = ௸, 645
- = ௸, 841
- = ௸, 842.
- பிறை
- = இளமதி, 782.
பின்
[தொகு]- பின்
- = பிறகு, 160
- = ௸, 184
- = ௸, 207
- = ௸, 225
- = ௸, 319
- = ௸, 323
- = ௸, 535
- = ௸, 659
- = ௸, 782
- = ௸, 791
- = ௸, 966
- = ௸, 967
- = ௸, 1033
- = ௸, 1160
- = ௸, 1248
- = ௸, 1255
- = ௸, 1256
- = ௸, 1265
- = ௸, 1293;
- = (வினையெச்சம், விகுதி), 293
- = ௸, 342
- = ௸, 391
- = ௸, 467
- = ௸, 491
- = ௸, 509
- = ௸, 662
- = ௸, 693
- = ௸, 1265.
- பின்றை
- = பிறகு, 518.
- பின்னது
- = வழியது, 1031.
திருக்குறள் அகரமுதலி பீகார வரிசை
[தொகு]பீகாரம்
[தொகு]பீ
- பீடு
- = பெருமிதம், 59
- = ௸, 1014;
- = மானம், 968;
- = பெருமை, 1021;
- = வலிமை, 1088.
- பீலி
- = மயிலின் தோகை, 475.
- பீழிக்கும்
- = வருத்தும்(வருத்தம்), 843.
- பீழிப்பது
- = துன்புறுத்தல், 1217.
- பீழை
- = துன்பம், 658
- = ௸, 839;
- = வருத்தம், 843.
திருக்குறள் பீகார வரிசை முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- பா,பி,பீ-| பு,பூ-| [[]]