உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி பொகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


திருக்குறள் அகரமுதலி பொகர வரிசை

[தொகு]

பொகரம்

[தொகு]

பொ


பொச்சாந்தார்
= மறந்தவர், 246.
பொச்சாந்து
= மறந்து, 199
= ௸, 719.
பொச்சாப்பார்க்கு
= மறந்தொழுகுவார்க்கு, 533.
பொச்சாப்பு
= சோர்வு, 285;
= மறவி, 532
= ௸, 534.
பொச்சாவா
= மறவாத, 537.
பொச்சாவாமை
= மறவாமை = சோர்தலைச் செய்யாமை[பொச்சாவாமை], அதி. 54.

பொதிந்து

[தொகு]
பொதிந்து
= (முடிச்சாக)முடிந்து, 155.
பொது
= பலவும் ஒரு தன்மையவாதல், 528
= ௸, 915
= ௸, 1311;
= யாவர்மாட்டும் ஒருதன்மைத்தாகிய,1099.
பொத்துப்படும்
= புரைபடும் = தவறும், 468.

பொய்

[தொகு]
பொய்
= இல்லாதது, மெய் அல்லாதது, 06
= ௸, 938
= ௸, 1246.
பொய்படும்
= திண்ணமாகப் பின் ஆகாவகை உள்ளழியும், 836.
பொய்த்தபின்
= பொய் கூறிய பிறகு, 293.
பொய்த்தல்
= புரைபடுதல், 1287.
பொய்த்து
= பொய்யாகி, 182
= ௸, 183.
பொய்ப்பின்
= பொய்யானால் = பெய்யாவிடில், 13.
பொய்ம்மை
= பொய்யாந்தன்மை, 292
= ௸, 913.
பொய்யற்க
= பொய் கூறாது ஒழிக, போய் பேசாதிருக்க, 293.
பொய்யா
= பொய்படாத, 299;
= நந்தா விளக்கு = அவியாத விளக்கு[பொய்யா விளக்கம்], 753.
பொய்யாது
= பொய் கூறாமல், 294.
பொய்யாமை
= ்பொய் கூறாது இருத்தல், 296
= ௸, 297
= ௸, 323.

பொரு

[தொகு]
பொரு
= தாக்கு(கின்ற)[பொரு தகர்], 486.
பொருட்டு
= நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு = கு, 81
= ௸, 725
= ௸, 784;
= பயத்த = பயனுடையன, 212;
= காரணம், 256
= ௸, 1017.
பொருத
= அராவப்பட்ட, 888.
பொருது
= தாக்கப்பட்ட, 888.
பொருத்தல்
= சேர்த்தல் = சந்தி, 633.

பொருள்

[தொகு]
பொருள்
= உண்மை, மெய்ப்பொருள், 05
= ௸, 351;
= வினை, 509;
= செய்தி, 423|1|2|
= ௸, 695;
= பயன், 199
= ௸, 423|3|
= ௸, 434
= ௸, 583;
= உறுதிப்பொருள், 122
= ௸, 246;
= அறம், 91
= ௸, 254;
= குணம், 307;
= சிறந்தது, 741;
= சொற்பொருள் உரை, 128
= ௸, 424
= ௸, 1046;
= பொருள் நூல், 141;
= நூற்பொருள், 249
= ௸, 857;
= உடைமை = சொத்து, 63
= ௸, 171
= ௸, 176
= ௸, 212
= ௸, 226
= ௸, 241
= ௸, 247
= ௸, 248
= ௸, 252
= ௸, 285
= ௸, 477
= ௸, 501
= ௸, 592
= ௸, 644
= ௸, 660
= ௸, 751|4|
= ௸, 753
= ௸, 754
= ௸, 755
= ௸, 756
= ௸, 757
= ௸, 909
= ௸, 911
= ௸, 913
= ௸, 914
= ௸, 925
= ௸, 933
= ௸, 938
= ௸, 1001
= ௸,1230;
= ஒரு பண்டம் = வஸ்து = செல்வம், 178
= ௸, 355
= ௸, 356
= ௸, 358
= ௸, 371
= ௸, 462
= ௸, 675
= ௸, 746
= ௸, 751|3|
= ௸, 760
= ௸, 870
= ௸, 897
= ௸, 901
= ௸, 1009;
= மதிப்பு, 751|1|2|.
பொருள
= பொருளையுடையனவாய், 424.
பொருளார்
= பயனாகவுடையவர், 914.
பொருளால்
= பொருளுடைமையால், 732.
பொருளாள்
= உரிமையானவள், 141.
பொருளான்
= பொருளொன்றும் உண்டாக அதனால், 1002.
பொருளை
= உடைமையை, 282;
= காரியத்தை, 588;
= மறை பொருளை = இரகசியத்தை, 695;
= செல்வத்தை, 759.

பொல்லாத

[தொகு]
பொல்லாத
= குற்ற நெறிகள், 176.
பொழுதின்
= நேரத்தைக் காட்டிலும், 69;
= நேரத்தின்கண், 1105.
பொழுது
= நேரம், கணம், 337
= ௸, 481
= ௸, 1215;
= பொழுதே, 1221;
= மாலைப் பொழுது வந்துழி அதனைக் கண்டு தலைமகள் இரங்குதல்[பொழுதுகண்டிரங்கல்], அதி. 123.

பொள்ளென

[தொகு]
பொள்ளென
= சரேலென, 487.

பொறி

[தொகு]
பொறி
= ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்குச், செவி, 06;
= விதி, வாய்ப்பு, 618.
பொறியின்
= பொறி போல, 09.
பொறுக்கும்
= பொறுத்துக் கொள்கின்ற(மன்னவன்)[பொறுக்கும் வேந்தன்], 389.
பொறுத்த
= சுமந்த, 239.
பொறுத்தல்
= மன்னித்தல், 151;
= மன்னிக்க, 152.
பொறுத்தாரை
= பிழையைப் பொறுத்துக் கொண்டவரை, 155.
பொறுத்தார்க்கு
= பிழையைப் பொறுத்துக்கொண்டவருக்கு, 156.
பொறுத்தானோடு
= காவுவானோடு = சு்மப்பவனோடு, 37.
பொறுத்து
= பொறுக்கும், மன்னிக்கும்[பொறுத்தாற்றும் -ஒரு சொல் நீரது], 579;
= தாங்குதலால், 1032.
பொறேன்
= தாங்கும் மதுகை (ஆற்றல்) இல்லாதேன், 1247.
பொறை
= மன்னித்தல், 153
= ௸, 154;
= சுமை, 189
= ௸, 570
= ௸, 572
= ௸, 733
= ௸, 990
= ௸, 1003
= ௸, 1027;
= தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தலையுடையராதல் [பொறையுடைமை], அதி.16.

பொன்

[தொகு]
பொன்
= தங்கம், 155
= ௸, 267;
= இரும்பு, 888
= ௸, 931.
பொன்றா
= அழிவில்லாத, 36.
பொன்றாது
= இறவாமல், 233.
பொன்றாமை
= இறவாதிருத்தல், 886.
பொன்றி
= அழிந்து (=கெடச்செய்து), 171.
பொன்றும்
= அழியும் (காலத்தில்)[பொன்றுங் கால்], 36;
= அழியும் (அளவும்)[பொன்றும் துணையும்], 136.


திருக்குறள் அகரமுதலி பொகரவரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி போகார வரிசை

[தொகு]

போகாரம்

[தொகு]

போ

போஒம்
= நீங்கும்(வரைக்கும்)[போஓம் அளவும்], 848;
= போய்விடும், 1070.
போஒய்
= சென்று, 46;
= விட்டு நீங்கி, 933.

போக

[தொகு]
போக
= நீங்க[போக விடல்] = கைவிடுதல், 831.
போகா
= நீங்கமாட்டா, 376.
போகாது
= (கீழறுக்கப்)படாதது(ஆகி)[அறைபோகாதாகி], 764.
போகார்
= நீங்கமாட்டார், 1126.
போகு
= செலவழியும்(வகை)[போகாறு], 478;
= அழிக்கும்(ஊழ்)[போகூழ்], 371.
போக்கி
= செலுத்தி, 774.
போக்கு
= கலைந்து போகுதல், 332.

போதாய்

[தொகு]
போதாய்
= நீ வருவாய், நீ போதருவாயாக, 1123.
போது
= பேரரும்பு, 1227.
போம்
= தொலையும், 659.

போர்

[தொகு]
போர்
= சண்டை, 758
= ௸, 767.
போர்த்த
= சுற்றி மூடியன, 80.
போர்த்து
= போர்வையாகச் செய்து, 273.

போல்

[தொகு]
போல்
= நிகராக, 59
= ௸, 118
= ௸, 120
= ௸, 126
= ௸, 155
= ௸, 190
= ௸, 253
= ௸, 267
= ௸, 276
= ௸, 315
= ௸, 334
= ௸, 395
= ௸, 574
= ௸, 706
= ௸, 781
= ௸, 826
= ௸, 882
= ௸, 887
= ௸, 940
= ௸, 946
= ௸, 957
= ௸, 1078
= ௸, 1090
= ௸, 1096
= ௸, 1097
= ௸, 1118
= ௸, 1180
= ௸, 1186
= ௸, 1222
= ௸, 1253
= ௸, 1269
= ௸, 1273
= ௸, 1274
= ௸, 1285
= ௸, 1287;
= (உரையசை), 235.
போல
= ஒத்திருப்ப, ஒக்க, 77
= ௸, 151
= ௸, 283
= ௸, 288
= ௸, 435
= ௸, 454
= ௸, 479
= ௸, 614
= ௸, 674
= ௸, 788
= ௸, 822
= ௸, 888
= ௸, 974
= ௸, 1027
= ௸, 1047
= ௸, 1095
= ௸, 1099
= ௸, 1117
= ௸, 1159
= ௸, 1161
= ௸, 1196
= ௸, 1224;
போலின்
= ஒத்திருந்தாலும், 811.
போலும்
= ஒத்திருக்கும், 339
= ௸, 552
= ௸, 783
= ௸, 1054
= ௸, 1105
= ௸, 1232
= ௸, 1233;
= ஒத்திருக்கின்ற[போலும் கூர்மையர்], 997
= ௸,[போலும் நிரப்பு], 1048
= ௸,[போலும் மாலைக்கு], 1228|1|
= (உரையசை), 1228|2|.
போல்க
= ஒத்திருக்க, 691.
போல்வர்
= ஒத்திருப்பர், 997
= ௸, 1071.

போழ

[தொகு]
போழ
= நுழைந்ததாக, 1239.
போழப்படாஅ
= இடையறுக்கப்படாத, 1108.
போழ்தில்
= நேரத்தில், 569
= ௸, 930.
போழ்து
= நேரம், 412
= ௸, 539
= ௸, 1229.

போற்றல்

[தொகு]
போற்றல்
= (வராமற்)காக்க, 693.
போற்றலுள்
= காவல்கள் எல்லாவற்றுள்ளும், 891.
போற்றாக்கடை
= (குறிக்கொண்டு)காவாவிடத்து, 315.
போற்றாதார்க்கு
= பாதுகாவாதவர்க்கு, 252.
போற்றாது
= பேணாது, 234.
போற்றார்கண்
= பகைவர் மாட்டு, 493.
போற்றி
= காத்து, 154
= ௸, 477
= ௸, 493;
= எண்ணி, 537
= ௸, 538;
= தெளிய அறிந்து, 942.
போற்றின்
= பாதுகாத்தால், 468;
= காக்கக் கருதினால், 693.
போற்றுபவர்க்கு
= அடைபவர்களுக்கு, 741.
போற்றுவார்
= தீங்கு வராமற் காப்பவர், 891.

போன்று

[தொகு]
போன்று
= ஒத்து, 135
= ௸, 822
= ௸, 1097
= ௸, 1170
= ௸, 1203.


திருக்குறள் அகரமுதலி போகார வரிசை முற்றும்


[[]]

பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | [[]][[]] [[]]