திருக்குறள்அகரமுதலி புகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி புகரவரிசை[தொகு]

புகரம்[தொகு]

பு


புகல்
= புகுதல் = நுழைதல், 144
= ௸, 243
= ௸, 840.
புகழ்
= இசை, கீர்த்தி, 05
= ௸, 39
= ௸, 59
= ௸, 156
= ௸, 232
= ௸,233
= ௸, 234
= ௸, 237
= ௸, 296
= ௸, 457
= ௸, 966;
= இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்குங் கீர்த்தி[புகழ்], அதி. 24.
புகழை
= இசையை = கீர்த்தியை, 532
புகழொடு
= இசையொடு, 236
= ௸, 632.
புகழ்ந்தவை
= உயர்த்துக் கூறிய செயல்கள், 538.
புகழ்மை
= இசையுடைமை, 533.
புகின்
= நுழைந்தால் = கழிந்தால், 937.
புகு
= இருக்கும்(இடம்), 340.
புகுத்திவிடும்
= திண்ணமாக அடைவித்துவிடும், 608
= ௸, 616.
புகும்
= எய்தும், 346.
புக்கு
= புகுந்து, 835
= ௸, 996.

புடை[தொகு]

புடை
= பக்கம், 1187.

புண்[தொகு]

புண்
= சிறங்கு, வடு, 129
= ௸, 257
= ௸, 393
= ௸, 575
= ௸, 776.
புணரின்
= கூடுமாயின், 308.
புணர்ச்சி
= ஒரு தேயத்தராதல், 785;
= சேர்க்கை, 887;
= தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் அப்புணர்ச்சியினை மகிழ்ந்து கூறல்[புணர்ச்சி மகிழ்தல்], அதி. 111.
= தலைமகனுந் தலைமகளும் புணர்ச்சிக் கண்ணே விரைதல்[புணர்ச்சி விதும்பல்], அதி. 129.
புணர்தல்
= கூடல், 1109.
புணர்தலின்
= கூடலைக் காட்டிலும், 1326.
புணர்ந்து
= சேர்ந்து = சேர, 1260.
புணர்பவர்
= மெய்யாற் பொருந்தும் மகளிர், 917.
புணர்வது
= சேர்தல், 1307.
புணர்வு
= மீளச் சேர்தல், 1152;
= மீளக் கூடுதல், 1155.
புணை
= தெப்பம், 1134
= ௸, 1164.
புணையை
= தெப்பத்தை, 306.

புதல்[தொகு]

புதல்
= புதர், 274.
புதல்வர்
= ஆண்மக்கள்[புதல்வரைப் பெறுதல்] = நன்மக்களைப் பெறுதல், அதி. 07.
புதை
= அம்புக்கட்டு, 597.
புத்தேள்
= வானவன், 213
= ௸, 234
= ௸, 290
= ௸, 966
= ௸, 1323.
புத்தேளிர்
= வானவர், 58.

புயல்[தொகு]

புயல்
= மழை, 14.

புரந்தார்[தொகு]

புரந்தார்
= ஆண்ட மன்னவர், 780.
புரளவிடல்
= கழிய விடுக, 755.
புரிந்த
= விரும்பிய, 59
= ௸, 511
= ௸, 994;
= மிக்க, 977.
புரிந்தார்கண்
= விரும்பினவரிடத்தில், 287.
புரிந்தார்மாட்டு
= விரும்பினார் இடத்தில், 05.
புரிந்து
= விரும்பி, 143
= ௸, 541|1|;
= பொருந்தி, 607|1|;
= மிகச் செய்து, 607|2|.
புருவம்
= புருவம், 1086.
புரை
= குற்றம், 292;
= உயர்வு, அறிவு, 919.

புல்[தொகு]

புல்
= புல், 16;
= கீழ்மையாகிய, 331
= ௸, 719
= ௸, 846
= ௸, 914
= ௸, 915
= ௸, 916;
= கீழ்மை, அற்பம், 790;
= தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களைக் கொள்ளாமை[புல்லறிவாண்மை], அதி. 85.
புலத்தகை
= புலவிமிகுதி, 1305.
புலத்தக்கனள்
= (ஊடுதற்கு)அமைந்தாள்(புலக்கத்தக்கனள்>புலத்தக்கனள்), 1316.
புலத்தலின்
= சிறு துனி (=ஊடல்) செய்தல் போல, 1323;
= [நெஞ்சொடு புலத்தல்], அதி. 130.
புலத்தார்
= (தென்)திசையிலுள்ளவர் = பிதிரர், 43.
புலத்து
= இடத்தின் கண்(செய்யும்), 43.
புலத்தை
= நீ புலப்பாய், 1301;
= ஐம்புலன்களை, 343.
புலந்தாரை
= பிணங்கிய மகளிரை, 1303.
புலந்து
= வெறுத்து, 1039;
= பிணங்கி, 1246
= ௸, 1287.
புலப்பல்
= நான் பிணங்குவேன், 1259.
புலப்பேன்
= நான் பிணங்கக் கடவேன், 1267.
புலம்
= ஐம்புலம், 174;
= அறிவு, 407;
= நூற்பொருள், 716.
புலம்பல்
= தனிமையெய்துதல்[நினைந்தவர் புலம்பல்], அதி. 121.
புலவர்
= கற்று வல்லவர், 394.
புலவரை
= ஞானிகளை, 234.
புலவி
= பிணக்கு, இளைய கலாம், 1302
= ௸, 1306
= ௸, 1309;
= ஒருவரோடு ஒருவர் புலத்தல்[புலவி], அதி.131;
= காரணமின்றியும் தலைமகள் புலத்தல்[புலவி நுணுக்கம்], அதி. 132.
புலவியுள்
= பிணக்கினுள், 1324.
புலன்
= நுகர் பொருள், 1101.
புலாஅல்
= ஊன், இறைச்சி, 257.
புலாலை
= ஊனை, இறைச்சியை, 260;
= ஊனுண்டலை யொழிதல்[புலான் மறுத்தல்], அதி. 26.
புலி
= வேங்கை, 599.
புலியின்
= வேங்கையினது, 273.
புலை
= புலால் உண்ணுந் தொழில், 329.
புல்லல்
= தழுவல், 829.
புல்லாது
= தழுவாமல், 1301.
புல்லார்
= பொருந்தாதவராய், 755.
புல்லாவிடல்
= கலவாமல் விட்டுச் செல்லல், 1203.
புல்லாள்
= தழுவாதவளாய், 1316.
புல்லி
= தழுவி, 1187
= ௸, 1324.
புல்லினேன்
= தழுவினேன், 1259.
புல்லுதல்
= தழுவுதல், 1290
புல்லுவேன்
= தழுவுவேன், 1267.

புழுதி[தொகு]

புழுதி
= மண், துகள், 1037.

புள்[தொகு]

புள்
= பறவை, 274
= ௸, 338; (புள் என்றே ஒரு பறவை உண்டு என்பர்).

புறத்த[தொகு]

புறத்த
= வேறாயுள்ளவை (= துன்பத்தினிடத்த), 39.
புறத்தது
= வெளியில் இருப்பது, 82.
புறத்து
= புறமாகிய, 46;
= வெளியில், 79.
புறப்படுத்தான்
= வெளிப்படுத்தினவன், 590.
புறம்
= காணாத விடம், 181
= ௸, 183
= ௸, 185;
= வெளியிடம், 277;
= உடம்பு, 298;
= வெளிப்பட, 487;
= பிறர், 549;
= பகைவர், 933;
= எதிர்முகமாகாமை, 924;
= காணாதவழிப் பிறரை இகழ்ந்துரையாமை[புறங்கூறாமை], அதி. 19.
புறன்
= காணாதவிடம், 182;
= நீங்கின அளவு, 189.
புற்கென்ற
= புல்லியவாயின, 1261.
புற்கை
= கஞ்சி, 1065.

புன்[தொகு]

புன்
= துன்பம்[புன்கண்], 71
= ௸, 1222;
= அச்சம், 1152;
= தீ(நட்பு)[புன்கேண்மை], 815;
= தீய(சொல்)[புன்சொல்] = பழித்துரை, 189;
= இழிந்தார்க்கே உரிய(அழகு)[புன்னலம்], 914
= ௸, 915
= ௸, 916.
புனல்
= நீர், 737
= ௸, 1134
= ௸, 1287;
= கடல்[கடும்புனல்], 1167.
புனலின்
= நீரினின்றும், 495.
புனலுள்
= நீருள், 495.
புனை
= அணிந்த, 407;
= தளை, விலங்கு, 836.
புனைந்து
= அணிந்து[நலம் புனைந்துரைத்தல்], அதி. 112.
புனையின்
= சிறப்பித்துக் கூறினால், 790.
புன்மை
= குற்றம், 174;
= கீழ்மை, 329.
புன்மையால்
= கீழ்மையால், 185.

திருக்குறள் அகரமுதலி பூகார வரிசை[தொகு]

பூகாரம்[தொகு]

பூ

பூ
= மலர், 1112
= ௸, 1115
= ௸, 1305;
= மலர்மாலை, 1313.
பூசல்
= ஆரவாரம், 1237.
பூசனை
= வழிபாடு, 18.
பூணும்
= மாட்டிக் கொள்ளும், 836.
பூண்டார்
= மேற்கொண்டவர், 23.
பூண்டு
= விரதமாகக் கொண்டு, 30.
பூதங்கள்
= மண், நீர், எரி, கால், விசும்பு என்ற இயற்கைப் பெரும்படைப்புகள், 271.
பூப்பர்
= பொலிவர், 248.
பூரியர்கள்
= கீழ்மக்கள், 919.
பூரியார்கண்
= இழிந்தார்கண், 241.

திருக்குறள் அகரமுதலி பூகார வரிசை முற்றும்


பார்க்க:[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ [[]] [[]] [[]][[]] [[]]