பயனர் பேச்சு:Inbamkumar86

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை[தொகு]

வாங்க! Inbamkumar86

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 02:44, 29 ஜூலை 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


வருக![தொகு]

எங்கே, உங்களைக் கொஞ்ச நாட்களாக தமிழ்விக்கிப்பீடிய்யாவில் காணோம்? (இப்பொழுது அங்கும் பார்க்கிறேன்). வருக! --செல்வா 14:07, 29 ஜூலை 2010 (UTC)

  • தங்களை விக்சனரிக்கு வருக வருக என அழைக்கிறோம். எல்லோரும் இயன்றவரை பங்களித்தால், சிறுதுளி பெருவெள்ளமாகி விக்சனரி வளம் பெறும். நன்றி. பழ.கந்தசாமி 16:47, 29 ஜூலை 2010 (UTC)

பெரிய எழுத்து[தொகு]

சொற்களின் முதலெழுத்துச் சிறிய எழுத்துகளாகவேச் சேர்த்துவருகிறோம். காட்டாக, sacredஎன்ற சொல் ஏற்கனவெ உள்ளது, பழ.கந்தசாமி 20:40, 29 ஜூலை 2010 (UTC)

வேண்டுகோள்[தொகு]

  • நீங்கள் புதியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் அதனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுகிறேன். ஏனெனில், பக்க வடிவம் மாறிய பிறகு அனைத்தினையும் மறுபதிவேற்றம் செய்ய வேண்டும்.

நாம் அனைத்து பக்க வடிவம் குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக,ஆங்கிலச்சொல்லுக்கான பக்கவடிவினை முடிவு செய்ய உள்ளோம். ஏனெனில், தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு நமக்களித்தச் சொற்களை (ஏறத்தாழ75,000) பதிவேற்ற வேண்டியிருப்பதால், முதலில் ஆங்கிலச் சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நீங்களும் அதில் கலந்து கொள்ளுங்கள்.

உங்களின் கேள்வியொன்றுக்கு, அங்கேயே எனது கருத்தினையும் கூறியுள்ளேன்.--த*உழவன் 05:29, 30 ஜூலை 2010 (UTC)

    • மிக்க நன்றி! இன்பமே குமார்! உங்களைப் பற்றி அறிய ஆவல். எத்துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? என்னென்ன உதவிகள் தேவை? தற்காலிகமாக பதிவேற்றத்தை மட்டும் நிறுத்துக்கள். ஆனால்,
அட்டவணைநிரலியில் (spread sheet)ஒரு கட்டத்தில் சொல்தலைப்பு, அதற்கு அடுத்தக் கட்டத்தில் பொருள், அதற்கு அடுத்தகட்டத்தில் மொழிபெயர்ப்பு என எழுதுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். பிறகு அவற்றைப் பதிவேற்றும் போது எளிமையாக இருக்கும். உங்கள் கணக்கிலேயே ,அப்பதிவேற்றத்தை செய்து தருகிறேன். மின்தடை இணையத்தடை இல்லாமல் இருந்தால், நிமிடத்திற்கு 15-25 சொற்களை தானியங்கி பதிவேற்றம் செய்ய இயலும். அந்த மின்நூல் பயன் அளிப்பதாக இருக்கிறதா? அதனை விக்சனரிக்குள் நீங்கள் கொண்டு வர வேண்டுகிறேன்.பல பணிகளைச் செய்ய நினைக்கிறேன். வேகமாக செய்யக் கூடிய ஆற்றலை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. --த*உழவன் 06:46, 30 ஜூலை 2010 (UTC)
  • நாம் தொடர்ந்து இப்பக்கத்திலேயே உரையாடலாம். ஒரு கோர்வையாக இருக்கும். நீங்கள் தமிழகத்தில் இருப்பவராக இருந்தால், நேரம் பற்றி நாம் அதிக கவனம் கொள்ளவேண்டியதில்லை. நான் பெரும்பாலும் இந்திய நேரம் காலை6.30-8வரை தவறாமல் இருப்பேன். மற்ற நேரங்களில் மாறுபடும். இப்பொழுது உங்களுக்காக ஒரு 10நிமடம் எனது மின்னஞ்சல் (tha.uzhavan AT GMAIL COM)முகவரியின் அரட்டை அரங்கத்தில் காத்திருக்கிறேன். ஏனெனில், சில படங்களை இங்கு பதிவேற்றம் செய்தல் கூடாது என்பதால். வாருங்கள். இன்று மாலை இந்திய நேரம் 6மணிக்கு திரும்பவும் இருப்பேன். வருக!--த*உழவன் 07:11, 30 ஜூலை 2010 (UTC)
உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். எனது மின்னஞ்சல் inbamkumar@gmail.com --Inbamkumar86 07:16, 30 ஜூலை 2010 (UTC)

பயன்பாடு பற்றி[தொகு]

அரிய பல சொற்களைச் சேர்த்துவருகிறீர்கள். நன்றி. கூடவே, ஒரு எடுத்துக்காட்டு வாக்கியம் தரமுடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.பழ.கந்தசாமி 20:45, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

நானும் அவ்வாறே நினைகிறேன். நீங்கள் தொகுத்தப் பக்கங்களை பார்த்தேன். அருமை.--Inbamkumar86 04:03, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

குறிநிரல்[தொகு]

குறிநிரல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். வினையாக வேண்டும் எனில் குறியிடு அல்லது குறிசேர் எனலாம். தொடுப்பிடு, தொடுப்புசேர் என்றும் சொல்லலாம்.--செல்வா 20:51, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

நல்லது. அவ்வாறே பெயரிடுகிறேன். --Inbamkumar86 04:01, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

திட்டப்பணியில் சேருவது[தொகு]

விக்சனரி திட்டப் பணியில் சேர விருப்பம் . என்ன செய்வது ?

எந்தத் திட்டபணியில் சேர விருப்பாமோ, அதில் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். விக்கி முறைப்படி உங்களுக்கு விருப்பமான திட்டத்தில் சேர்ந்து பங்காற்றலாம். உங்களைப் போல திறமான, ஆர்வமானவர்கள் வந்து பங்களிப்பது, அத்திட்டத்தை விரைவாக வளர்க்க உதவும். கட்டாயம் சேருங்கள், இராச்குமார்!!--செல்வா 20:47, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
Wiktionary பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் .இந்தத் திட்டத்தில் பணியாற்ற பெயர் கொடுத்துள்ளேன். எனை அழைத்தற்கு நன்றி. --Inbamkumar86 03:58, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

த.இ.ப. திட்டத்தில், நீங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி. தினமும் எனது சந்தேகங்களுக்கு, நீங்கள் உடனுக்குடன் மின்னஞ்சல் செய்வதற்கு மிக்க நன்றி. எனது அலைப்பேசி எண்ணைக் கொடுத்துள்ளேன். இப்பொழுது நீக்குதல் குறித்த ஆவணத்தில், மேலும் சில ஐயங்களைக் கேட்டுள்ளேன். இது தீர்வு பெற்றால், த.இ.ப. திட்டம் முழுமைபெறும். காலவிரயத்தைத் தவிர்க்கலாம். ஏனெனில், ஏறத்தாழ 35,000 சொற்களை முன்கூட்டியே நீக்குகிறோம். ஒரு சொல்லுக்கு ஒரு நொடி என்று வைத்துக்கொண்டால் கூட, 35,000நொடிகள் (~10மணிநேரம்) கணினி இயக்கத்தைத் தவிர்க்கிறோம். அது நமது நாட்டின் மின்உற்பத்திக்கு சமமன்றோ.--த*உழவன் 05:29, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி[தொகு]

நிருவாகி ஆனதற்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. அதில் நீங்கள், விக்சனரியில் தரம் குறைந்துவிடாமல் இருக்க பல தீர்வுகளை உருவாக்கவும், விக்சனரியை வருங்கால சந்ததிகள் கண்டு பெருமை அடையுமாறும், உலகிலேயே தலை சிறந்த தமிழ் அகராதியாக உருவாக்க முயற்சிக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியதைக் கண்டு மகிழ்ந்தேன். நாம் அனைவருமாக சேர்ந்து உழைத்தால் நீங்கள் விரும்பும் அந்த நிலையை நாம் கட்டாயம் அடைய முடியும் என்று நம்புகிறேன். வெறும் பேச்சு இல்லை. உண்மையிலேயே தமிழில் மிக ஏராளமான சொற்கள் உள்ளன. நாம் தொகுத்து இட்டுக் காட்டினால் அது உண்மை என்பது புலப்படும். ஒரு நளைக்கு 3 சொற்கள் என 100 பேர் வந்து சேர்த்தாலும், ஓராண்டில் 100,000 சொற்கள் சேர்க்க இயலும். த.இ.ப சொற்களைச் சேர்த்தபின்பு, சிவப்பு இணைப்புகளுக்கு சொற்பக்கங்கள் உருவாக்க வேண்டும். அடுத்து தமிழின் சொல் வளமாகிய நடையழகு (பெண்ணின் நடையழகு, மிருதங்க வாசிப்பின் நடையழகு, ஒரு புதின எழுத்தாளனின் எழுத்தின் நடையழகு), கொடையழகு, இடையழகு, விடையழகு (விடை பகரும் அழகு), தொடையழகு (இது மேற்காலின் பகுதி அல்ல,அதுவ்ம் பொருந்தும் எனினும், இது தொடுக்கும் பழம்பாடல் என்னும் வரியில் வருமே அதுபோல பாடல் வரிகளின் சந்தம் போன்ற தொடுக்கும் தொடை அழகு, மாலை தொடுக்கும் தொடையழகு).... இப்படி மிக ஏராளமாக உள்ளன. இவற்றை எல்லாம் பதிவு செய்தல் வேண்டும்.உங்களைப்போன்ற நல்லார்வலர்கள் இன்னும் 10 பேர் இருந்தாலே நிறைய செய்ய முடியும். மருத்துவர் செந்தி அவர்களும் சேர்ந்திருக்கின்றார்கள். இன்னும் ஒரு 8-10 பேர், முதல் கட்டமாக். அசத்திடலாம், இராச்குமார்! நன்றி --செல்வா 22:11, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

நீங்கள் சொல்வது உண்மையே. நானும் பேச்சிற்காக சொல்லவில்லை. என் மனதில் என்ன ஆசைகள் உள்ளதோ அதைத்தான் எழுதினேன். இது போன்ற ஆசைகளால் தானே என்னால் விக்கியை விட்டு பிரிய முடியவில்லை. நாம் தொடர்ந்து நமது தரத்தை உயர்த்திக் கொண்டே போவோம். 99 விழுக்காடுகள் அனைத்து தமிழ் சொற்களையும் பதிவிட வேண்டும். அதுவே போதும். --Inbamkumar86 04:42, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்கள் ஆவணப்படுத்தல் சம்பந்தமான உதவிக்கு நன்றி இன்பம்குமார் --சி. செந்தி 12:14, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி எல்லாம் சொல்லாதீர்கள். உங்களுக்கு உதவப் போய் தான் இதனை கற்றுக் கொண்டேன். --Inbamkumar86 12:21, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆதாரமும் விளக்கமும்[தொகு]

அன்புடைய இராஜ்குமார்!வணக்கம். 'அல்குல்' என்பதற்குப் 'பக்கம்' என்பதும் 'பெண்குறி' என்பதும்தாம் நேரடிப் பொருட்கள். அகரமுதலிகளில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க: அதே பக்கத்திலுள்ள இணைய அகரமுதலிப் பக்கம் அல்லது கோனார் தமிழ்க் கையகராதி, பழனியப்பா பிரதர்ஸ், இராயப்பேட்டை, சென்னை-600014). 'அரை' என்பது அல்குல்லிற்கு இடக்கரடக்கலாகச் சொல்லப்படும் பொருள்தானே தவிர இலக்கணப்படிப் பார்த்தால் நேரடியாக அஃது அப்படிப் பொருள்படுவதாகத் தெரியவில்லை. அப்படியே பொருள்பட்டாலும் அதை இரண்டாம்பட்சமாகத்தான் ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியிருக்கையில் அல்குல்லிற்குப் பெண்குறி என்ற பொருளையே அங்கு குறிப்பிடாதிருந்தது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. எனவேதான் அதை அங்கே சேர்த்திருக்கிறேன். அன்புடன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 15:56, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி ஞானப்பிரகாசன். நானும் அப்போதே அந்த அகரமுதலியை கண்டு அறிந்தேன். --இராஜ்குமார் 16:36, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ்ச்சொற்கள் ஆதாரங்கள்[தொகு]

நீங்கள் இடும் அலுகோசு, அலுங்கு முதலிய பக்கங்களில் ஆதாரங்களைச் சொடுக்கினால், அவைகளில் அச்சொற்கள் இல்லை. ஆதார வார்ப்புருவில் உள்ள அகராதிகள் சொற்களைக் கொண்டிருக்கவில்லை என்றால், அவற்றை நீக்கிவிடவும். மேலும் வேறு ஆதாரங்களில் இருந்து எடுத்தால், அவற்றைச் சேர்க்கவும். பயன்பாடு குறிப்பிட முடிந்தால், அவற்றையும் சேர்க்கவும். பழ.கந்தசாமி 17:55, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஆதாரத்தொடுப்புகளில் அப்பக்கம் இல்லையென்றால், சொற்களைச் சேர்க்கும்போதே நீக்க முயற்சிக்கவும். நீங்கள் பலப்பல சொற்கள் சேர்த்துவருவது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நன்றி. பழ.கந்தசாமி 18:05, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
கண்டேன். நன்றி.--இராஜ்குமார் 19:18, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

தானியங்கிச் சோதனை-1[தொகு]

இப்பக்கத்தில், தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவித்தால் அது மறுசீரமைப்பில் கவனத்தில் ஆலோசிக்கப்படும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:59, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பங்களிப்புகளுக்கு நன்றி[தொகு]

கடந்த 2 நாட்களாக நீங்கள் மிகுந்த முனைப்புடன் சொற்களைச் சேர்த்துவருவதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். பழ.கந்தசாமி 15:11, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு வாரத்திற்குள் 9வது இடத்திற்கு கொண்டு செல்ல எண்ணுகிறேன். நன்றி. --இராஜ்குமார் 15:15, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
எனது பாராட்டுகளுள் :-). கதிர்வேற்பிள்ளை அகராதியிலிருந்து சேர்க்கும் சொற்கள் அனைத்தும் பெயர்ச்சொற்களா?. பகுப்பு இணைக்க வேண்டும். இதுவரை இணைத்தவை அனைத்தும் பெயர்ச்சொற்களெனில் எளிதாக இணைத்து விடுவேன். கலந்து வருகின்றனவென்றால் சற்று பாகுபடுத்தி உதவ வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:44, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
அகராதியில் பெயர்ச்சொல்லா? வினைச்சொல்லா? என்ற குறிப்பில்லை. கலந்து வருபவை தான். நான் உறுதியாகத் தெரிந்தவைகளை பகுக்கிறேன். நீங்களும் உதவுங்கள்! நன்றி. --இராஜ்குமார் 06:56, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி அவ்வாறே செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:17, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

{.{நா.கதிர்வேல்பிள்ளை}} ,தமிழ் ஆதராவார்ப்புருவுடன் இணைப்பு[தொகு]

நீண்ட நாட்களுக்கு பிறகு பங்கு அளிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்கு சில ஐயங்கள் உள்ளது. மின்னஞ்சலைப் பார்க்கவும். உங்களது பதிவுகளின் இறுதியில் {{தமிழ்ஆதாரங்கள்}} என்று இணைத்தால், அச்சொல்லை மேலும் வளர்க்க பிறருக்கு உதவுக்கூடும். எனவே, அதனைப் பயன்படுத்தவும். அப்படியே அங்கு இருப்பதை எழுதாமல் சற்று மாற்றி பதிவு செய்தால், காப்புரிமை குறித்த கேள்விகள் எழாது என்பதனையும் தெரிவிக்க விரும்புகிறேன். வணக்கம்.--17:14, 10 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றி. அவ்வாறு செய்ய முயற்சிக்கிறேன். --இராஜ்குமார் 17:20, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • கதிர்வேலுப்பிள்ளையின் பெரும்பாலான சொற்கள் சென்னைப்பேரகரமுதலியில் இருக்கின்றன. அப்படி அவை இருந்தால், சென்னைப்பேரகரமுதலியிலிருந்து எடுத்துப் பதிவு செய்தல் நலம். சென்னைப்பேரகரமுதலியில் காப்புரிமை பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன். மேலும் அதில் ஆங்கில மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆதாரம் முதலியவற்றோடு இருப்பதால் அவற்றோடு விக்சனரியில் பதிவிட்டால் விக்சனரியில் மேலும் வளம் சேரும். கருதவும். பழ.கந்தசாமி 23:25, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தங்கள் கருத்துக்கு நன்றி. நான் சென்னைப்பேரகரமுதலியில் இருந்தோ, அல்லது வேறு சில இணையத்தில் இருந்தோ இலக்கிய ஆதாரத்தை இடுகிறேன். ஆனால் தமிழ் சொற்களுக்கு ஆங்கில விளக்கமோ, மொழிப்பெயர்ப்போ தமிழ் விக்சனரியில் இடுவது தேவையற்றது. அது ஆங்கில விக்சனரியின் வேலை. மேலும் தகவலுழவன் கூறியது போல் வேண்டுமானால் அதிலுள்ளதை அப்படியே எழுதாமல் சிறு சிறு மாற்றங்கள் செய்யலாம். --இராஜ்குமார் 05:47, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • அன்புள்ள இராஜ்குமார், தமிழ் வார்த்தைகளுக்குத் தமிழில் பொருள் தருவதுடன், வேற்றுமொழி மொழிபெயர்ப்புகளும் தந்துவருகிறோம். தமிழ் கற்கும் வேற்றுமொழியினர் இங்கு வந்தால் மொழிபெயர்ப்பு இருந்தால்தானே அவர்கள் தமிழறியமுடியும்? தமிழை அவர்களுக்கு வேறு எப்படிக் கொண்டு சேர்க்கமுடியும்? மேலும் பன்னாட்டில் புலம்பெயர்ந்தவர்களும் பயன்படுத்தும் ஓர் அகராதி இது. அதனால்தான் இங்கு பலமொழிகளிலும் தமிழில் மொழிபெயர்க்க வார்ப்புருக்கள் உள்ளன. பக்கவார்ப்புருக்களும் அதைக்கருத்தில் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி முன்பு பல கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. சென்னைப்பேரகரமுதலியிலிருந்து பொருள் இடும்போது அங்கே ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளதால், அப்படியிடுதலே நலம். நன்றி, பழ.கந்தசாமி 06:01, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி. --இராஜ்குமார் 06:56, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

இராஜ்குமார், தமிழ் விக்சனரியை 9-வது இடத்துக்கு முன்னேற்ற உதவிய உங்களின் பங்களிப்புகளுக்கு வாழ்த்துகள். நன்றி.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி. சொற்களை கொஞ்சம் கொஞ்சமாக பல உள்ளடக்கங்களுடன் மெருகூட்டுவோம். --இராஜ்குமார் 03:09, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தமிழ்-தமிழ்-அகரமுதலி வளருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.புசி வருமாறு AWB-யில் மாற்றங்களை ஏற்படுத்தினால், குறைந்த பங்களிப்பாளர்களையும் எளிதில், அண்மையமாற்றங்கள் பக்கத்தில் காண இயலும். நீங்கள் ஆலமரத்தடியில் தானியங்கி அணுக்கம் பெற, விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.--05:03, 12 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
AWB ஓட்டும்போது ”minor edit" check box ஐத் தெரிவு செய்தால் “புசி” வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:07, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி அவ்வாறே செய்கிறேன். --இராஜ்குமார் 06:34, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

மேல்விக்கியின் புள்ளிகள்[தொகு]

  • தங்களது பதிவுகள் சிறக்க பின்வருவன உதவியாக இருக்கக் கூடும்.
  1. உங்கள் பதிவுகளை தானியங்கி மூலம் பதிவு செய்தல் நன்று. அதறகு ஆலமரத்தடியில் விண்ணப்பிக்கவும். இரவி உங்களுக்கு அதனைத் தருவார்.
  2. தமிழ் பொருள் அண்மையமாற்றங்கள் பக்கத்தில் தெரியுமாறு செய்யுங்கள்.
  3. ஆங்கில மொழிபெயர்ப்பு செய்வது, ஆங்கில விக்சனரியின் பணி என்று கூறியிருந்தீர்கள்.அதுபோலவே, ஆங்கில ஒலிப்பையும் குறிப்பிடாமல் விட்டு விடலாம் என எண்ணுகிறேன்.ஏனெனில், ஆங்கில ஒலிப்பை ஆங்கில விக்சனரியில் இப்படியே குறிப்பிடுகின்றனர்.
  4. ஆங்கில உச்சரிப்பு என்பதில் உச்சரிப்பு என்பதனைத்தவிர்த்து ஒலிப்பு என எழுதலாம். இது பற்றி முன்பு நடந்த வாக்கெடுப்பைக் காணவும். அப்பக்கத்தில்7.1 என்பதில் ஒலிப்பு என குறிப்பிட 6நபர்கள் வாக்கிட்டுள்ளனர்.
  5. கொடுக்கப்படும் தமிழ் மொழிபெயர்ப்பானது, இங்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட சொல்லுடன் இணைப்பு ஏற்படுத்த பட்டால், அதுவும் மேல் விக்கியால் சிறப்பாகக் கருதப்படுகிறது.எனக்கு அதனை குறைந்த நேரத்தில், அதிக சொற்களுக்கு உருவாக்கத்தெரியவில்லை.நீங்கள் முயன்று பார்க்கவும்.
  6. பல்வகை மேல்விக்கியின் உங்களின் பங்கீடு-1தமிழ்விக்சனரி-2 பயனர் பார்வைகள்-3, ஒரு முறை காணவும்.
  7. எனக்கும் உங்களைப் போல தமிழ் சொற்களை அதிகரிக்க எண்ணம். உங்களைப் போன்று, கதிர்வேல்பிள்ளை அகரமுதலியில் இருந்து எக்செலில் தகவல்களை எடுப்பது எப்படி? ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வேண்டுமா? ஆவலுடன்..--16:28, 12 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பழ.கந்தாமி[தொகு]

  • நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, சென்னைப்பேரகரமுதலியில் கதிர்வேலுப்பிள்ளையின் பெரும்பாலான சொற்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடனும், ஆதாரங்களுடனும் உள்ளன. அதில் காப்புரிமைப் பிரச்னையும் இருக்காது என்பதால், ஏன் அங்கிருந்து இடக்கூடாது? கருதவும். இங்கு ஆங்கில மொழிபெயர்ப்பு அவசியம் இல்லை எனக் கூறமுடியாது. புலம்பெயர்ந்தோருக்கும் வேற்றுமொழியினரும் தமிழ்மொழிச் சொற்களுக்குப் பொருளறிய அது மிகவும் பயன்படும். முடிந்தவரை ஆங்கில மொழிபெயர்ப்பு இடுதல் நல்லது. பழ.கந்தசாமி 19:27, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • மொழிப்பெயர்ப்பை ஏன் தமிழ் விக்சனரியில் கொடுக்கத் தேவை இல்லை என்று கூறினேன் என்றால் நீங்கள் தமிழ் சொற்களை ஆங்கில விக்சனரியில் சென்று பார்த்தீர்களானால் அதில் ஆங்கில விளக்கங்கள் கொடுத்துள்ளனர். இது போல் அனைத்து மொழிச் சொற்களையும் அவர்கள் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கின்றனர். பின் பிற மொழியில் விளக்கங்கள் தேடுவோர்களுக்கு {.{மொழிப்பெயர்ப்பு-மேல்}} போன்ற வார்ப்புருக்கள் மூலம் தொடுப்பு கொடுக்கின்றனர். இதுவே, விக்கியின் நோக்கம். புலம்பெயர்ந்தோருக்கும் வேற்றுமொழியினரும் தமிழ்மொழிச் சொற்களுக்குப் பொருளறிய ஆங்கில விக்சனரியை பயன்படுத்திக் கொள்வார்கள். நமது வேலை தமிழ் விக்சனரியில் தமிழில் பொருள் கொடுத்து, ஆங்கில விக்சனரியில் உள்ள அதே தமிழ் சொற்பக்கத்திற்கு தொடுப்பு கொடுப்பது மட்டுமே. அவ்வாறு அதே தமிழ் சொற்கள் ஆங்கில விக்சனரியில் இல்லை என்ற பட்சத்தில் நாம் அதனை உருவாக்கி அங்கு நீங்கள் சொல்வதைப் போல் ஆங்கில விளக்கம் கொடுக்க வேண்டும். பயனர்கள் எந்த மொழியில் பொருள் அறிய விரும்புகிறாரோ அந்த மொழி விக்சனரியை பயன்படுத்துவார்கள். இல்லாவிடில் விக்கித்திட்டத்தில் குழப்ப நிலை உண்டாகும்.--இராஜ்குமார் 19:52, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • மொழிப்பெயர்ப்பு தமிழ் விக்சனரியில் கொடுக்க தேவையில்லை. கொடுப்பதும் தவறில்லை. ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தவறு. தமிழ் விக்சனரியில் தமிழ் சொற்களை விட அதிகமாக ஆங்கிலச் சொற்கள் பெருகி வருகிறது. அதனாலேயே நான் இதனை குறிப்பிட்டேன். மொழிப்பெயர்ப்பை ஒரு பெரும் உள்ளடக்கப் பகுதியாக தமிழ் விக்சனரியில் பாவிப்பது சரியல்ல என்பதே என் கருத்து.--இராஜ்குமார் 19:57, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • எனக்கு இதில் மாறுபட்ட கருத்து உண்டு. தமிழ் மொழி வார்த்தைகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புப் பார்க்க ஆங்கில விக்சனரி செல்லுமாறு எதிர்பார்த்தால், இன்றைய சூழலில் தமிழ் விக்சனரியின் பயனளவு குறையும். விக்சனரிப் பயனர்கள் பெரும்பாலோர் மொழிபெயர்ப்பைக் காணவே இங்கு வருகின்றனர் என்பதை மறந்துவிடலாகாது. எப்போது இங்கு பதிவிடும் சொற்களுக்கு அங்கே மொழிபெயர்ப்புத் தரப்போகிறோம்? ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து இங்கே பங்களிப்பவர்கள் எத்தனை பேர்? பங்களிப்பாளர்கள் குறைவாக உள்ள ஒரு விக்சனரியில் அதற்கான நேரம், பங்களிப்பாளர்கள். சாத்தியக்கூறு முதலியவற்றைக் கவனிக்கவேண்டும். அதனால்தான், வார்த்தை பதிவிடும்போது இயன்றவரை அதற்கான மொழிபெயர்ப்பையும் தந்துவிடல் சிறந்தது என்கிறேன். மேலும் இதைப்பற்றியெல்லாம் பேசித்தான் சென்ற ஆண்டு தமிழ்ச் சொற்களுக்கான பக்கவார்ப்புரு வடிவமைக்கப்பட்டது.
  • கதிர்வேலுப்பிள்ளை அகராதியை விட பயன்பாடும் பொருளும் அதிகமுள்ள, காப்புரிமைப் பிரச்னையற்ற சென்னப்பேரகரமுதலியிலிருந்து இதே சொற்களைப் பதிவிடுதல சிறந்தது என்பது பற்றி உங்கள் கருத்து? பழ.கந்தசாமி 20:30, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • சென்னை அகரமுதலியில் உள்ள சான்றுகளையும், மொழிப்பெயர்ப்புகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆனால் அனைத்தையும் நான் ஒருவனே செய்தால் 25 ஆண்டுகள் பிடிக்கும்.--இராஜ்குமார் 20:52, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • கதிர்வேலுப்பிள்ளையிலிருந்து எடுப்பதற்குப் பதில் செ.பேரகரமுதலியிலிருந்து இட உங்களுக்கு எவ்வாறான உதவி தேவை என்று கூறினால் உதவமுடியும். (காட்டாக தகவலுழவன் AWB இயக்குகிறவர்). அவ்வாறு செய்தால் முதல் முயற்சியிலேயே மேலும் பொருளையும் ஆதாரங்களையும் சேர்க்கமுடியும். இந்த ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வது உங்கள் ஆர்வத்தைக் குறைத்துவிட அல்ல. நம்மைப்போன்ற சிலர் மட்டுமே இங்கு தொடர்ந்து உத்வேகத்துடன் வருவதால் இணைந்து பணியாற்றி முதல்முறையிலேயே நன்கு செய்துவிடல் நல்லது. நன்றி. பழ.கந்தசாமி 21:03, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்சனரியின் வேலையை தமிழ் விக்சனரியிலேயே செய்யலாம். நன்று தான். கதிர்வேலுப்பிள்ளையிலிருந்து அகர வரிசையில் மட்டும் 27000 சொற்களை எக்சலில் எடுத்துள்ளேன். செ.பேரகரமுதலியிலிருந்து எப்படி எடுப்பது என்று பார்த்து விட்டு உதவியை கோருகிறேன். நன்றி.--இராஜ்குமார் 21:11, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • சென்னை அகர முதலியில் இருந்து சொற்களை எக்சலுக்கு மாற்றுவது கடினமாக உள்ளது. ஆகையால் அதனை பின்பு தான் தொகுக்க வேண்டும்.அதனை தானியங்கி இல்லாமல் தான் பதிவிட முடியும். வேறு வழியைத் தேடுவோம். --இராஜ்குமார் 00:16, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • கருதியமைக்கு நன்றி. எனது கவலையெல்லாம் இப்போது பல்லாயிரக்கணக்கான சொற்களை கதிர்வேலிலிருந்து பதிவேற்றினால் பின்னர் அப்பக்கங்களை செ.பே.முதலியின் ஆதாரம், பொருள், மொழிபெயர்ப்பு முதலியவற்றைக் கொண்டு மாற்றுவது இன்னும் கடினமாகிவிடுமா என்பதே? முதலில் கதிர்வேலில் உள்ள, ஆனால் செ.பே.முதலியில் இல்லாத சொற்களை எளிதில் அறிய முடிந்தால் அவற்றை மட்டும் சேர்க்கலாமா? பின்னர் ஏதாவது செ.பே->எக்சல் மென்பொருள் (script) மாற்றி தயாரித்து மற்றவற்றை பதிவேற்றலாமா? தகவலுழவன், சோ.பா உங்கள் கருத்துகள்?
  • இராஜ்குமார், உங்கள் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறேன் என்றுமட்டும் நினைக்கவேண்டாம். எப்படி நம் அனைவரின் வேலையையும் இதில் குறைக்கமுடியும் என்பதே எனது நோக்கம். நன்றி பழ.கந்தசாமி 00:38, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

த*உழவன்[தொகு]

இ.குமார்! பின்வருவனவற்றை நீங்கள் ஆழ்ந்து கருதக்கோருகிறேன்.

  • ஒரு சொல்லுக்கு, மற்றொரு தமிழ் சொல் என்று இந்த முறையில் பதிவேறுவது என்னைப்பொறுத்தவரை பல இடர்களையே தருகிறது. அதிக அளவுள்ள தகவல்களைக் கொண்டு நான் சொல் உருவாக்கி இருந்த போதிலும் AWB அதனை SKIP செய்து விடுகிறது. 80,000 சொற்கள் என்னிடம் உள்ளது. அவற்றில் தமிழ் தலைப்பும், ஆங்கில மொழிப்பெயர்ப்பும் இருக்கிறது. அதில் தமிழ் விளக்கம் இல்லாததால், அதனை பதிவேற்ற வேண்டாம் என்று சோடாபாட்டில் எனக்கு விளக்கினார்.எனவே, அதனை கைவிட்டேன்.நீங்களும் தற்காலிகமாக கைவிடுக.
  • எண்ணிக்கை அதிகமாவது மகிழ்ச்சிதான். ஆனால், மேல்விக்கியில் தரத்தின் அளவை, படிவத்தை கழித்து விட்டு, உள்ளே உள்ள தகவல்களைக் கொண்டே மதிப்பிடுகின்றனர். தரத்தின் அடிப்படையில் நாம், நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமான, பிற விக்சனரிகளை விட முன்னணியில் உள்ளோம். 8வது இடத்தில் இருக்கிறோம்.மேலுள்ள புள்ளியியல் தரவுகளை கவனியுங்கள். அதுபற்றி விரிவாக எடுத்துக் கூற, விளக்க பல நாட்கள் தேவை. அதனை நாம் அனுசரிப்போம். இந்த முறையில் பதிவேற்றினால் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
  • ஆங்கிலமொழிப்பெயர்ப்புகளை இணைப்பது அவசியமே. தமிழகத்தில் அகராதி என்றோலே ஆங்கிலம்-தமிழ் அகராதியைதான் பலர் எண்ணுவர். ஆங்கில மோகம் அதிகமுள்ள அவர்களுக்கும், ஆங்கிலகட்டுரைகளை மொழிபெயர்க்கும் தமிழ் விக்கிப்பீடியா நண்பர்களுக்கும் அது இன்றியமையாததாக உள்ளது. மேலும், CSV loder எழுதிய திரு.கணேசு.கே நிறைய தமிழ் சொற்களை, இங்குள்ள ஆங்கில மொழிப்பெயர்ப்புகளைக் கொண்டே புரிந்து கொள்கிறார். ஏனெனில், அவருக்கு தமிழ் அவ்வளவாகத்தெரியாது. எனவே, ஆங்கில ஒலிப்பைத் தவிர்த்து, ஆங்கில மொழிப்பெயர்ப்பை இயலுமாயின் இணையுங்கள்.ஆனால் தமிழ் விளக்கம் மிக அவசியமே.

கற்றலின் கேட்டல் நன்று என்பதுநமது சான்றோர் வாக்கு. அதனை அனுசரிப்போம்.

  1. தரம் என்பது பல அளவீடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய அளவில் தமிழ் எடுத்துக்காட்டாக நாம் திகழ வேண்டும்.தற்பொழுது மலையாள மொழி பங்களிப்பாளர்கள் முன்னணியில் வர செயல்திட்டம் தீட்டி வருகின்றனர். நாளை அவர்களோடு, ஒப்பிடும் போது, நமக்கு அது மனவருத்தத்தையே தரும்.
  2. ஆங்கில ஒலிப்புகளை இணைப்புகளை நீக்கியதற்கு நன்றி. இதற்கு முன் உருவாகப்பட்ட சொற்களிலும் அதனை நீக்கக் கோருகிறன். பிறகு பதிவேற்றத்தை தொடர என மிகவும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
  3. உங்களுக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்புகளை இணைப்பது பிடிக்க வில்லையெனில், தமிழ் விளக்கங்களை தவறாமல் இணைக்கக் கோருகிறேன்.
  4. ஒவ்வொரு சொல்லும், பக்கப்படிவத்தை விட அதிக உள்ளீடுகளைக் கொண்டு500பைட்டுகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.
  5. மற்றொன்று உள்ளீடுகள் அகத்தொடர்புகளைப்(internal links) பெற்றிருக்க வேண்டும்.
  • இதற்கு முன் நான் எண்ணிக்கையை அதிகரிக்க செயல்பட்ட போது, தற்காலிகமாக தடைசெய்யப்பட்டேன். அன்று தடைசெய்யபட்டபோது, எனக்கு மனவருத்தம் அடைந்தேன். என்னை விட அதிகப்பிழைகளை இந்த விக்சனரியில் செய்தவர்கள் இருக்க முடியாது. அந்த பிழைகளை களைவது அயர்ச்சியான வேலை. உங்களுக்கு அத்தகைய அயர்ச்சி வேண்டாம். மற்றொன்று சில நிமிடங்களுக்குள்ளாகவே, உங்களது பதிவுகளை தற்காலிகமாக நீக்கியும் விடுவர். அப்படி எனது சொற்கள் 800 நீக்கப்பட்டது. அதனால் ஆலமரத்தடியில் தானியங்கிக்கு விண்ணப்பிக்கவும். நமக்கு முன்னே பின்பற்றிய மேலாண்மையை நாமும் பின்பற்றுவோம்.
  • ஏறத்தாழ 25,000 தொகுத்தல்களை, AWB உதவி இல்லாமல் செய்துள்ளேன். அப்பொழுது எனது பல தவறுகள் பலரால் சுட்டப்பட்டுள்ளன. அதில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் திட்டமும் ஒன்று. இரவி அடிக்கடி சொல்வார். எண்ணிக்கையை நோக்கமாக கொண்டு செயல் படக்கூடாது. இனி ஆலமரத்தடியில் நாம் ஒரு அறிவிப்பையும், சொல் மாதிரிகளையும் அறிவித்து, எதிர்ப்பு இல்லையெனில் பதிவேற்றுவோம்.

நிருவாக அணுக்கம் பெற்ற ஓரிருவர் கூறுவதை, நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கவே இதனைப்பகிர்ந்தேன். என்றும் உங்கள் பங்களிப்புத்தேவை.நாளை உங்களுக்கும் நிருவாக அணுக்கம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, சிந்திக்கவும். நன்றி.

நீங்கள் உருவாக்கிய சொல்லை, இன்றைய முதற்பக்கத்தில் விரிவாக்கி அமைத்துள்ளேன். அது போன்று நீங்களும் கதிர்வேல் பிள்ளை அகரமுதலி சொற்களை விரிவாக்கலாமே? அதில் ஆங்கில மொழிபெயர்ப்பை இணைக்காவிட்டாலும் பரவாயில்லை. தமிழில் ஒரு சில வரிகளாவது இருக்க வேண்டும். அதற்கு எத்தகைய உதவி தேவை எனக்குறிப்பிட்டால் என்னால் இயன்றளவு உதவுவேன். எனவே, தற்காலிகமாக உங்கள் பதிவேற்றத்தை நிறுத்துங்கள். தங்களின் மேலாண்மை சிறக்கவும், தங்கள் மனம் நோகாமல் இருக்கவும் சற்று அதிகமாகவே சொல்லியுள்ளேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். வணக்கம்.--02:46, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மொழிப்பெயர்ப்பையும், இலக்கியச் சான்றயும் இடமாட்டேன் என்று கூறவில்லை. அதை தானியங்கியின் மூலமாக பதிவிடக் கடினம் என்பதால் பதிவிடவில்லை. பிறகு இந்த பகுப்பில் உள்ள அனைத்து சொற்களையும் விரிவாக்குவோம். கவலை வேண்டாம். நீங்கள் சொல்வதைப் போன்று செய்தால் குறந்த பத்து ஆண்டுகள் ஆகும். தகவல் உழவன் நான் அகர வரிசையை முதலில் பதிவிடுகிறேன். பிறகு அதனை விரிவாக்குகிறேன். நீங்கள் ஆகார வரிசையை பதிவிட்டு விரிவாக்குங்கள். இந்த இரு வரிசைச் சொற்களையும் பதிவிட்டப் பின், இகர,ஈகார வரிசையை தொடருவோம். என்னால் தரம் எப்பொழுதும் குறையாது. அப்படி குறைந்தால் அவற்றை அழித்து விடுங்கள்.நன்றி. --இராஜ்குமார் 03:35, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தானியங்கி அணுக்கம் இல்லாமல் நீங்கள் தானியங்கியை இயக்குவது தவறே. அதனால்தான் உங்களை ஆலமரத்தடியில் விண்ணப்பித்துத் தொடர வேண்டுகிறேன். நீங்கள் வருவதற்கு முன்னமே, சீனம்-தமிழ், அரபியம்-தமிழ் எனதிட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளேன். அதனை ஆலமரத்தடியில் இட்டே பதிவேற்றுவேன். எனக்கு நிருவாக அணுக்கம் இல்லாதபோது, நிருவாக அணுக்கம்பெற்றவர் கூறிய கருத்தினை ஏற்றேன். நீங்கள் ஏற்றல் சால சிறந்தது.
மேலும், அவினை பதிவேற்றி முடித்து விட்டீர்களென எண்ணுகிறேன். எனவே, அதனை மெருகேற்றும் வரை வினை பதிவேற்ற வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் வருகைக்கு முன்னமே, நான் திட்டமிட்ட செயல்கள் பாதியிலேயே நிற்கிறது. அதனை விட்டுவிட்டு வர மனம் ஒப்பவில்லை. எனினும், தினம் 10 சொற்களை அவரிசையில் தொடங்கி, விரிவாக்குகிறேன். எனக்கு ஆங்கில மொழிபெயர்ப்புதிறன் குறைவு என்பதால் அதனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பெயர்ச்சொற்கள் என்பதால் படங்கள் இடலாம்.
சென்னைப் பேரகரமுதலி 10வருட உழைப்பில், 100பேர்களுக்கும் மேல் உருவாக்கப்பட்டது. அதனால் தான் அது இன்றும் நிலைத்து நிற்கிறது. இப்பொழுதும் அது சீரமைக்கப்பட்டு புதிய பதிப்பு வர உள்ளது. நமது வாழ்நாளில் 1000 சொற்களை சிறந்த முறையில் உருவாக்கினால் அதுவே பெரிய சாதனை ஆகும்.ஏனெனில், தமிழ் சொல்லின் பொருள் ஆழம் மிக மிக அதிகம்.எனவே, வோடு தானியங்கி இயக்கம் போதும். இனி அணுக்கம் பெற்று பதிவேற்றவும். ஆலமரத்தடியில் விண்ணப்பிக்கவும். நான் எதனையும் நீக்குவது இல்லை. மாறாக பிறரோடு, பிறரின் ஆக்கங்களோடு மேம்படுகிறேன்.மேம்படுத்துகிறேன். இத்துடன் இது குறித்த இந்த உரையாடலை முடித்து. பிறிதொரு உரையாடலில் சந்திக்க விழைகிறேன். வணக்கம்.--04:00, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தினம் ஒரு சொல்[தொகு]

ஒவ்வொரு நாளும் நம்தளத்தின் முதற்பக்கத்தில் தெரியும், தினம் ஒரு சொல் என்பதில் நீங்களும் பங்களித்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.ஒரு வருடத்திற்கு தேவையான உள்ளீடுகளை இடவேண்டும்.பல மாதங்களுக்கான உள்ளீடுகளை பழ.கந்தசாமியும்,நானும், சோபாவும் இட்டுள்ளோம். இடாத நாட்களில் நீங்களும் பங்களிக்க வேண்டுகிறேன். இட்டபின்பு அது தானாகவே, தினமும் அப்பக்கத்தில் தோன்றும். நீங்கள் பங்களிக்க விரும்பினால், அப்பக்கம் சென்று, பரண் என்பதனைச் சொடுக்கவும். அங்கு இம்மாதமான செப்டம்பரை அழுத்தவும். வரிசையாக நாட்பட்டியல் தோன்றும். இல்லாதவைகள் சிவப்பாகத்தோன்றும். ஒரு நாளைத்தேர்ந்தெடுக்கவும்.அதில், ஏற்கனவே பதிவாகி இருக்கும் சொல்லின் உள்ளீடுகளை ஒட்டவும். ஒட்டிய நகலில், புதிய சொல்லினை பற்றி பதியவும்.உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கும் --02:19, 14 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றி தகவல் உழவன். கட்டாயம் அவ்வாறு செய்கிறேன். --இராஜ்குமார் 10:18, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆங்கிலக்கூட்டுச்சொற்களின் ஒலிக்கோப்பு[தொகு]

ஆங்கிலக்கூட்டுச்சொற்களுக்கு ஒலிக்கோப்புகள் விக்கி ஊடக நடுவத்தில்(commons) உருவாக்கப் படுவதில்லை. அங்கு சுந்தர் அதற்கான முயற்சிகளை எடுத்தார். பின் சில காரணங்களால் கைவிட்டார்.எனவே, நாம் தனிச்சொற்களுக்கு மட்டும், ஒலிப்பை இணைத்தால் போதுமென்று எண்ணுகிறேன்.இங்கு நீங்கள் 10,000க்கும் மேற்பட்ட ஆங்கில ஒலிக்கோப்புகளை காண இயலும்.

மற்றொன்று தமிழ் இணையக் கல்விக் கழகத்தாரின் பகுப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன. எனவே, நீங்கள் உருவாக்கும் சொற்களில், அதில் உங்கள் மேலாண்மையைச் செலுத்துங்கள். --03:54, 16 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பரண்[தொகு]

வீட்டில் பயன்படாதப் பொருட்களை பரணில் /அட்டம் போட்டு விடுவோம். என்றாவது தேவைப்படும் போது. அதனை நாம் எடுத்து, தூசு தட்டிப் பயன்படுத்துவோம். அது போலத்தான் இங்கும் நாம் பரண் என்பதனைக் கையாள்வோம். நீங்கள் ஆலமரத்தடி பரணில், உங்களின் தானியங்கி கோரிக்கையைப் போட்டு வைத்துள்ளீர்கள்.உரிய இடத்துக்கு மாற்றுக.--17:14, 16 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பகுப்புக்கருவி[தொகு]

  1. மேலுள்ள என்விருப்பத்தேர்வுகள் என்ற தத்தலுக்குள் செல்லவும்.
  2. அதில் கருவிகள் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. HotCat என்பதனைத் தெரிவு செய்யவும்.
  4. கீழுள்ள சேமி என்ற ஆழியை அழுத்தவும்.
  5. பகுப்பதற்கு முன், குறிப்பிட்ட பகுப்பின் தாய், சேய் பகுப்புகளை ஒரு முறை நோட்டம் விட்டுக் கொள்ளவும்.
  6. இந்த உரையாடலுக்கு பிறகு, இப்பகுப்பானது, இப்படி மாற்றப்படுகிறது. நீங்களும் மாற்றினால், தளத்தின் சீர்மை மேம்படும். நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--18:41, 22 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மேலும்[தொகு]

  1. கூட்டல் குறிகளை அழுத்தி மாற்றம் செய்யலாம். கழித்தல் குறிகளைப் பயன்படுத்தி, முற்றிலும் நீக்கலாம்.
  2. ஒன்றிற்க்கும் மேற்பட்ட பகுப்புகளில் மாற்றம் செய்ய, பகுப்பு என்ற சொல்லுக்கு அடுத்து இருக்கும், இரு கூட்டல் குறிகளை அழுத்திய பிறகு, மாற்றங்களை ஏற்படுத்திய பின்பு, சேமித்தால், முன்தோற்றம் தோன்றும். பிறகு வழக்கம் போல, பக்கத்தைச் சேமி என்பதனை அழுத்தவும்.

--18:59, 22 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றி. இப்பொழுது தான் கற்றுக்கொண்டேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். --இராஜ்குமார் 19:02, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தானியங்கிப் பதிவேற்றம்[தொகு]

இராஜ்குமார்,உங்களின் தானியங்கி இயங்குவதறிந்து மகிழ்ச்சி. imbambot தானியங்கி (தா) என ஏன் பதிவுகளில் காட்டுவதில்லை? மேலும், அவ்வாறு பதிவிடும் சொற்களுக்கு நிச்சயம் அக இணைப்புத் தரவும். இல்லையென்றால், அதைத் தனியாகச் செய்யவேண்டியிருக்கும். நன்றி. பழ.கந்தசாமி 15:03, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இன்பம் நீங்கள் அவசரப்படுகிறீர்கள்.முதல் இந்திய விக்கி மாநாட்டிற்காக முனைப்புடன் நமது அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.இம்முறை தவறு. எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். நீங்கள் செல்வாவிடம் கேட்டுப் பாருங்கள். நன்கு விளக்கமாகக் கூறுவார். ஆரமரத்தடியில் இதனைப்போல நாம் அனைவரும் காணும் படி செய்துவிட்டு, மறுப்பு இல்லையெனில் தொடருங்கள். --18:32, 23 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
எது தவறு. எனக்கு புரியவில்லை. நான் தானியங்கி கணக்கில் தானே பதிவேற்றுகிறேன். இதனை பதிவேற்றுவது பற்றி முன்பே கூறியுள்ளேனே! --இராஜ்குமார் 19:13, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
சொற்களை உங்களுக்கு மின்னஞ்சல் அணுப்புகிறேன். நீங்களே பதிவேற்றுங்கள். ஆனால் மாதக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளாமல் விரைவில் ஒரு வார காலத்திற்குள் பதிவேற்றுங்கள். அப்பொழுதுதான் இதனை மெலும் மேம்படுத்த முடியும். ஒவ்வொரு சொல்லிற்கும், பகுப்பதம், வேர் வரலாறு, எதிர்ச்சொல் இலக்கணம், பயன்பாடு, சொல்நயம், என்று எத்தனையோ இருக்கு. தமிழில் இருந்து ஆங்கில சொல்லாகிய வரலாறும் உண்டு. இவை எல்லாம் அழகாக எழுத வேண்டும் என்றால் அனைத்து சொற்களும் முதலில் பதிவேற்றிக்கொண்டால் தான், தேடி மேம்படுத்த வசதியாக இருக்கும். அத்தனை எழுத வேண்டும். ஏற்கனவே இருக்கும் சொற்கள் இவையெல்லாம். இதனை நாம் வேகமாக எழுதினால் தான் ஐந்து வருடங்கள் பின் வருவோர்கள், இதனை மேலும் வளர்க்க உதவியாக இருக்கும். சொற்களை பதிக்கி வைப்பதால் பயனில்லை. இருக்க இருக்க சொற்கள் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது. --இராஜ்குமார் 20:06, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்தத் தானியங்கிக் கணக்கு குறித்த ஆலமரத்தடி விண்ணப்பத்துக்கு என் மறுமொழியை இட்டுள்ளேன். தயவு செய்து, அந்த உரையாடலில் முடிவில் மீண்டும் பதிவேற்றத்தைத் தொடங்கலாம். அது வரை பதிவேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோருகிறேன். நன்றி--ரவி 04:14, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அட்டவணைச் செயலி[தொகு]

அட்டவணைச்செயலியில், இரண்டு சொற்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் ]] என்ற அடைப்புக் குறியை இடமுடியுமா? வழிகாட்டவும்.--13:09, 24 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நீங்கள் அக இணைப்பிடுதலை கேட்கிறீர்களா ? --இராஜ்குமார் 13:45, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆம்.மற்றொரு வினா. ஒன்றிற்க்கும் மேற்பட்ட நேர்குத்துவரிசைக் கட்டங்களை இணைப்பது எப்படி? எடுத்துக்காட்டாக, Column C, Column d இரண்டு வரிசைகளையும் ஒன்றாக ஒரே Column போடுவது எப்படி?Column C, Column d --> single column --20:02, 24 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • இரண்டு வரிசைக் கட்டங்களிலும் எந்த தரவும் இல்லை என்றாலோ அல்லது ஒரு கட்டத்தில் மட்டும் தரவு உள்ளது என்றாலோ "merge cell" என்ற வசதியைப் பயன்படுத்தலாம். அக இணைப்பு இடுவது கடினம். கைமுறையாகத் தான் செய்ய வேண்டும். அதற்கு பெசாமல் பதிவேற்றிய பின்னே விக்கியில் விரிவுபடுத்தும் பொழுது செய்துவிடலாம். நன்றி.--இராஜ்குமார் 20:09, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
அக இணைப்பை விட்டுவிடலாம். கோப்பு ஒன்றினை மின்னஞ்சல் செய்கிறேன். இரண்டினையும் ஒன்று படுத்த முடியுமா பாருங்கள். இப்பொழுது இரவு மணி இரண்டு.தூக்கமாக வருகிறது. இன்னும் 10நிமிடங்கள் காத்திருக்கிறேன்.--20:16, 24 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
கோப்புள்ள மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.--20:27, 24 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

வணிகவியல் -->வங்கியியல்[தொகு]

உங்களை திரும்ப சந்திப்பதிலே மகிழ்ச்சி. அண்மையில் நீங்கள் செய்த பதிவுகளை வணிகவியல் என்பதில் இருந்து வங்கியியல் என்பதற்கு மாற்றியுள்ளேன். இனிவரும் பதிவுகளில் அங்ஙனமே மாற்றக் கோருகிறேன்.முடிந்தால் ஒவ்வொரு இணைப்பின் பொருளையும், அக இணைப்பு செய்யவும். வணக்கம்.--04:17, 30 ஏப்ரல் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஆயிரம் நன்றிகள்[தொகு]

இன்பம்குமார், இந்த ஆயிரம் சொற்களில் உங்களது கணிசமான பங்களிப்பும் இருந்தது. மிக்க நன்றி. சொற்களில் பகுப்புகள் (பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், உரிச்சொற்கள்), அக இணைப்புகள், மொழிபெயர்ப்பு முதலிய பகுதிகளுடன் பங்களித்துவருவதற்கு நன்றி. விரைவில் 3 இலட்சம் சொற்களை அடைய நீங்கள் தொடர்ந்து பங்களிப்பீர்கள் என நம்புகிறோம். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 15:30, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

நிச்சயம் தொடர்ந்து பங்களிப்பேன். விரைவில் 3 இலட்சத்தை அடைவோம். நன்றி --இராஜ்குமார் (பேச்சு) 16:03, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]
எனக்கும் மகிழ்ச்சியே. மொழிப்பெயர்ப்புகள் என்பதற்கு == இரு சமக்குறியீடுகளைப் பயன்படுத்தினால், அலைப்பேசியில் இருந்து தொகுப்பதற்கு வசதியாக இருக்கிறது.மற்றொன்று, இலக்கணக்குறிப்புகளுக்கு, சமக்குறியீடுகளை பயன்படுத்தாமல் இருத்தல் நலம். இதுபற்றி செம்மொழிமாநாட்டின் போது ஒரு மித்தமாக அனைவரும் ஒப்புக்கொண்டனர்.எடுத்துக்காட்டாக, சிங்கம் என்ற சொல்லைக் காணவும். அதிலிருப்பது போல இலக்கணக் குறிப்புகளை காட்டலாமென்று நான் எண்ணுகிறேன். தொடருவோம்.வணக்கம்.--17:51, 1 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

AWB - நுணுக்கங்கள்[தொகு]

கீழ்காணும் சில குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தினால், இன்னும் தங்கள் பதிவுகள் செம்மையாகும்.

  1. '''{{PAGENAME}}''' என்பதனை, சுந்தர் தானியங்கி பயன்படுத்தியது.அதற்கு காரணம், அவ்வார்ப்புருவினால், கூகுள் போன்ற தேடுபொறிகளில், நாம் இங்கு கொடுக்கும் பொருள் தெரியும் என்று கேட்டு அறிந்து கொண்டேன். மேலும், அவர்,மாகிர் போன்றவர்கள் தேடுபொறி மேம்பாட்டுப்பிரிவில் இயங்கிய நிரலர்கள் என்பதால் அதனை அப்படியே ஏற்றேன்.
  2. நான் '''{{PAGENAME}}''' என்பதோடு, இலக்கணக்குறிப்புகளை சிறிதாகத் தரவேண்டும் என்ற பிறரின் எண்ணத்தோடு இணைந்து, *'''{{PAGENAME}}''', <small>பெயர்ச்சொல்</small> என்பதனை இணைத்துக் கொண்டேன். சில சொற்கள் வினை, உரியாகவும் வரும்போது, அதற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வேன்.ஆனால், இதுபற்றி இன்னும் நிறைய ஆராய வேண்டும்.
  3. ஆன்வல்லவர் என்ற பக்கத்திலுள்ள (சூடா.), என்பது சூடாமணி நிகண்டுவைக் குறிக்கிறது. மேலும் பலவற்றை, இங்கு காணலாம்.இது போல சுருக்கங்கள் வரும் போது, நாம் AWB- உள்ள Find_and_replace பயன்படுத்தி, (திவாகர நிகண்டு) என முழுமையாக தெரியும் படி செய்யலாம்.(எ. கா.) காண்க.பகுப்பு:நிகண்டுகளின் சொற்கள்
  4. பொதுவாக தமிழ் சொற்களின் அமைப்பு குறித்து, ஒருமித்த தெளிவான வரையறையை இன்னும் நம் தமிழ் விக்சனரியில் உருவாகவில்லை. ஆனால், அது குறித்து எண்ணங்கள் வலுத்து வருகிறது. தமிழ்99 உருவாக்க காரணமாக இருந்த, அண்ணாப் பல்கலைக் கழகப் பேராசிரியர். கிருட்டிணமூர்த்தியை தற்செயலாக ஒரு பயிலரங்கில் சந்தித்தப் போது, அவர் அலைப்பேசியின் தாக்கம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று எடுத்துரைத்து, தமிழை தட்டச்சு மூலம்,எளிமையாக உள்ளீடு செய்யும் வகையை கண்டறிந்த செய்து காண்பித்தார். அம்முறையை கண்டறிந்த இரண்டு நாட்களுக்கு பிறகே எங்களுக்கு செய்து காண்பித்தார். நமது சந்தைக்கு வர இன்னும் எவ்வளவு நாட்களை ஆகும் என்று தெரியவில்லை. அது குறித்த இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பிறகு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால், அது அலைப்பேசியின் ஆங்கில தட்டச்சில் இருக்கும்T9 வசதியை ஒட்டி அமைத்திருந்தார். அதற்கு k9 என்று பெயரிட்டுள்ளார்.
  5. மற்றொன்று கூகுள் அரட்டை அரங்கில் ta.dictionary என்பதனை ஒரு பயனராக நாம் கருதி நமது முகவரிப்பட்டியலில் இணைத்த பிறகு, அதனை அக்கணக்கின் பொறுப்பாளர் ஏற்றுக் கொள்வார். பின்பு,அதனிடம் எந்த ஒரு ஆங்கிலச் சொல் அல்லது தமிழ் சொல்லை அடித்தால் அது, அதற்குரிய பொருளை அங்கேயே தரும். அப்பொருள் இல்லையெனில், நாம் அதனை தேடுவோர் எண்ணிக்கையப் பொறுத்து இங்கே அச்சொல்லை உருவாக்கலாம்.இது முதல்நிலை ஓட்டத்தில் உள்ளது. அதனை இன்னும் சில ஆய்வுகளுக்கு பிறகு நம் விக்சனரியில் இணைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளோம். இதனால், நம் விக்சனரியை பயன்படுத்துவோரை, நம் தளத்திற்கு வராமலேயே அதிகப்படுத்தலாம். நமக்கு அதனால் மேல்விக்கியால் பல நன்மைக்ள வர வாய்ப்புண்டு. அதன் [முன்னோட்டத்தை]ta.dictionary என மின்னஞ்சல் செய்துள்ளேன். காண்க.
ஆக நமது உள்ளீடுகளில் இன்னும் பல தரங்கள் சேர்க்கப்பட வேண்டும். அதனால், பிறமொழிகளுக்காக உருவாக்கப்ட்ட மென்பொருட்களை நம் தமிழுக்கும் கொண்டு வரலாம். கொஞ்சம் தமிழ் சொற்களை பதிவேற்றுவதில் அவசரம் காட்ட வேண்டாம் என வேண்டுகிறேன். இது எனது வேண்டுகோள். சொல்லில் உயர்ந்த சொல் தமிழ் சொல். அதன் பதிவுகளை நாம் பிறரிடமிருந்து நகலெடுத்து அப்படியே இங்கு போடுவதை விட, சற்று மேம்படுத்த போட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். இணைய இணைப்பு இல்லாமல், ஒரு சொல்லை நமது தமிழ் இலக்கியங்களில் தேடி, இங்கு உள்ளீடாக மாற்றுவது பற்றி ஏற்கனவே தங்களிடம் தெரிவித்து உள்ளேன். இரண்டு மூன்று நபர்களை ஒன்றிணைக்க சற்று காலதாமதம் ஏற்படுகிறது. மற்றவை உங்கள் கருத்துக் கண்டு,மீண்டும் சந்திப்போம். வணக்கம்--14:53, 2 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பகுப்புகளில் புதிய வசதி[தொகு]

இங்கு பகுப்புகளில் ஏற்படுத்தியுள்ள வசதிப் பற்றி கருத்திடவும்.--14:39, 29 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

உங்கள் புதிய சொற்கள்[தொகு]

  • நீங்கள் இடும் புதிய சொற்கள் பக்கத்தின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், விக்சனரியின் சொல் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா? பழ.கந்தசாமி (பேச்சு) 13:49, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • கீழ்கண்ட குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
  1. ஒவ்வொரு சொல்லும் 500பைட்டுகள் இருக்கணும்.அப்படி இருந்தால், அண்மைய மாற்றங்கள் பகுதியில், தடிமனாக தெரியும்.
  2. ஒவ்வொரு பகுப்பும், 90பைட்டுகள்
  3. 150px படம் - 050
  4. காட்சியக4படங்கள் - 260
  5. ஒரு தமிழ்விசைக்கு - 003
  6. ஆங்கில விசைக்கு - 001
  7. அகத்தொடர்பும்(internal links)-ம், பகுப்பும், ஆதாரங்களும் இருப்பது சிறப்பு.-- உழவன் +உரை.. 17:19, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]

நல்வரவு[தொகு]

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளை பதிவேற்றுவதற்கான இறுதிப்பணி(பகுப்பு:சென்னைப் பேரகரமுதலிக்கானக் குறிப்புகள்) நடந்து கொண்டு உள்ளது. பல்வேறு சூழல்களால் தற்போது, அம்மா, அப்பா போன்ற சொற்கள் போன்று பதிவேற்றம் நடைபெற உள்ளது. பேச்சு:அம்மா என்பதில் உங்கள் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 18:32, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:01, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க[தொகு]

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:48, 11 சூலை 2015 (UTC) [பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Inbamkumar86&oldid=1312666" இலிருந்து மீள்விக்கப்பட்டது