பயனர் பேச்சு:செல்வா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
new english word புதிய தமிழ்ச் சொல்
noun:
பெயர்ச்சொல்:

வாருங்கள், செல்வா!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 20:45, 24 பெப்ரவரி 2008 (UTC)

எழுதுகிறேன்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் அடுத்த மாதம் முதல் தினம் ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். தங்களின் கருத்திற்கு நன்றி புருனோ 20:22, 5 ஏப்ரில் 2008 (UTC)

குறிப்புகள்[தொகு]

நீங்கள் இங்கு சொற்களைச் சேர்ப்பது கண்டு மகிழ்ச்சி. ஆங்கிலச் சொற்களைச் சேர்க்கும் போது மறக்காமல் முதல் எழுத்து உட்பட அனைத்து எழுத்துகளும் சிறிய எழுத்துக்களாகச் சேர்த்து விடுங்கள். Bearded vulture பக்கம் தவறுதலாக capital B உடன் இருந்தது. நகர்த்தி இருக்கிறேன். நன்றி. --ரவி 10:40, 16 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி. தெரியும், ஆனால் மறந்துவிட்டேன்! நினைவில் கொள்ளுகிறேன்.--செல்வா 02:59, 18 ஏப்ரல் 2008 (UTC)

புது சொற்கள் உருவாக்கி அவற்றை ஒரு கலதுரையாடல் குழுவிற்கு சமர்ப்பிக்க விருப்பம். இப்படி ஓர் கலதுரையாடல் குழு இருக்கின்றதா? அதில் வரும் பரிந்துரைப்புக்களை விக்கியில் இடுவதற்கு ஏற்ப்பாடுகளும் தேவை. [sisrivas@yahoo.com]

சிறீவாசு விக்சனரிக்கு என்று ஒரு கூகுள் குழுமம் உள்ளது. தமிழ் மன்றம் என்றும் ஒரு கூகுள் குழுமம் தொடங்கியுள்ளேன். இரண்டிலும் கருத்துரையாடலாம். இவற்றின் தொடர்புகளுக்கு:
 • tamil_wiktionary@googlegroups.com
 • tamilmanram@googlegroups.com
--செல்வா 02:53, 16 ஆகஸ்ட் 2009 (UTC)

பதிவேற்றம் குறித்த விக்கி நிரல்[தொகு]

Wiktionary:ஆலமரத்தடியிலுள்ள, 15) "mass uploder" ஏதாவது இருக்கிறதா? எனும் பகுதியினைக் கண்டறியுங்கள்.த*உழவன்

நன்றி. பார்த்தேன். --செல்வா 02:55, 16 ஆகஸ்ட் 2009 (UTC)

ஒலிப்புதவி[தொகு]

Wiktionary:ஒலிப்புதவி பக்கத்தை துவங்கியுள்ளேன். வளர்தெடுக்க உங்கள் உதவி தேவை.--trengarasu 02:06, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

சந்தியிலக்கணம்[தொகு]

சமசுகிருதம் என்பது சரியா? சமசுக்கிருதம் என்பதை விளக்கவும். பேச்சு:சுட்டாங்கல் என்பதில் நீங்கள் எனக்குச்சுட்டிக்காட்டியதை, பல தமிழ் சொற்களில் காண்கிறேன். சுட்டாங்கல்லில் சொல்லாமல், உணர்த்தியமைக்கு மிக்க நன்றி.த*உழவன் 01:36, 28 பெப்ரவரி 2010 (UTC)

இது சந்தி இலக்கணம் பற்றியது அல்ல. ஒலிப்பு பற்றியது. சமற்கிருதம் என்பது பெருவழக்கு. காற்றொலி சகரம் வர வேண்டுமெனில் சமசுக்கிருதம் எனல் பொருந்தும். சமசுகிருதம் எனப்தும் சரியே. அதன் ஒலிப்பு samasugirudham. அதாவது கி என்னும் எழுத்து மெலிந்து ஒலிக்கும். அது தவறே அல்ல. தமிழ் ஒலிப்புக்கு இயல்பானது. ஆனால் samasukridham (Samskrith, Saskridham) என்பது போல ஒலிக்க வேண்டும் எனில் சமசுக்கிருதம் எனலாம். இடையே வரும் சு உகரம் குறைந்து ஒலிக்கும் பொழுது சற்று நெருக்கமாகத்தான் இருக்கும். எனவே சமற்கிருதம் (SamaRkridham), சமசுக்கிருதம், சமசுகிருதம் ஆகியவை ஈடானவையே. இராம.கி ஐயா அடிக்கடி பயன்படுத்தும் சங்கதம் என்பதும் இம்மொழியின் இன்னும் எளிமையான தமிழ் வடிவு. திருஞான சம்பந்தர் பயன்படுத்திய சொல்.--செல்வா 03:21, 28 பெப்ரவரி 2010 (UTC)

சொற்றொடர்[தொகு]

 1. உங்கள் கேள்வி, உங்களுக்கொரு கேள்வி என்பதில் மற்றொரு ஐயம்.
 2. உங்களுக்கு பேச்சு:exit_interview என்பதில் பழ.கந்தசாமியின் கருத்துரை
 3. அடிக்கடி செய்யும் வேலைகளை தானியக்கமாகச் செய்ய உதவும் மென்பொருட்களைப் பற்றி அறிந்திட எண்ணம். குறிப்பாக பின்வரும் இலக்குகளைச் செய்ய
 • ஒரு சொல்லின் மீது இரட்டைச் சொடுக்குச் செய்யும் போது, அது நகலெடுக்கப் பட வேண்டும். அந்நகலை MSexcelலின் கட்டத்தில் சொடுக்கும் போதே, ஒட்டி விட வேண்டும். இதன் மூலம் நிறைய சொடுக்கும் நேரம் குறையும். இணையத்தில் படிக்கும் போது, விக்சனரிக்காக எளிதில் சொல் வளத்தினை, குறைந்த காலத்தில் கூட்ட முடியும்.
 • புதிய சொற்களுக்கானப் படிவங்களுக்கு, MSexcelலிருந்து தகவல்களை, தானாகவே எடுத்து, நிரப்பிக் கொள்ளும் autofill மென்பொருள்.
 • தொகுத்தல் சாளரத்துள் நிற வேறுபாடுகளை ஏற்படுத்த முடியுமா? இதன் மூலம் புதிதாகச் சொற்களை உருவாக்கும் போது, தகவல் அளிக்கப் படவேண்டிய இடம் தெளிவாகத்தெரியும் அல்லவா?
 • கண்டறி என்ற கட்டத்தில் நாம் கொடுக்கும் சொற்களை ஏற்கனவே உருவாக்கிய சொற்களில் கண்டறிய வேண்டும். பிறகு இதைப் போலமாற்று என்று கட்டத்தில், நாம் கொடுக்கும் சொற்களை மாற்ற வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் விக்சனரியில் அடிக்கடி செய்யப்படும் வேலைகளையும், விக்சனரியின் சொல்வளத்தினை மேலும் அதிகப் படுத்தத் துணைபுரியும் மென்பொருள்கள் தேவை.

நான் இப்பொழுது AWB பயன்படுத்துகிறேன்.இதன் மூலம் தான் நீங்கள் எனக்குச்சுட்டிக்காட்டிய நான் செய்த தவறுகளை நீக்கினேன். தமிழ்ச்சொல்லுக்கு ==([[தமிழ்]])== என்று முன்பு தலைப்பு இட்டிருந்தேன். அங்ஙனம் தலைப்பிட வேண்டாமென்று உணர்த்தினீர்கள். நீங்கள் எனக்கு உணர்த்துவதற்கு முன்னமே, நான் 300 சொற்களுக்கும் மேலாக உருவாக்கியிருந்தேன். அதனை AWB மூலம் சுலபமாக நீக்கினேன்.

உலகிலுள்ள மேன்மையான மொழிகளில் ஒன்றாக உள்ள தமிழ், பல இடங்களில் பிற மொழிகளோடு ஒப்பிடும் போது பின் தங்கியே உள்ளது. விக்சனரியிலாவது முன்னணியில் இருப்பதை என் வாழ்நாளில் காண வேண்டும் என்று திண்ணமாக உள்ளேன். அதற்கு எனக்கு மேற்கண்ட மென்பொருட்கள் மிகவும் அடிப்படை ஆகும்.

கணினித்துறைப் பேராசிரியரான நீங்கள் எனக்கு (தமிழுக்கு) அடித்தளமிட்டுத் தாருங்கள்.

எதிர்பார்ப்புடன் முடிக்கும், இவண், த*உழவன் 02:28, 2 மார்ச் 2010 (UTC)

த*உழவன், நீங்கள் கேட்கும் கேள்வியைச் சுந்தர் போன்றவர்களிடம் கேட்டால் நல்ல வழி காட்டுவர். என் துறை கணினி செய்யும் குறைக்கடத்தி நுண்கருவிகளைப் பற்றியது. பொதுவாக நீங்கள் சொல்வதுபோல் எல்லாம் செய்ய இயலும் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு சொல்லை அதன் இருபுறமும் உள்ள வெற்றிடத்தைக் கண்டு பொறுக்க முடியும், உடனே ஒற்ற (படி எடுக்க, CRTL C)

இயலும். மைக்ரோசாஃவ்ட் எக்ஃசலில் ஒட்டவும் இயலும். சுந்தரிடம் கேட்டுப் பாருங்கள்.--செல்வா 05:47, 2 மார்ச் 2010 (UTC)

lotion பொருள்[தொகு]

செல்வா, ஈர் என்ற சொல்லுக்கு உங்கள் பொருள் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது :). சொல்வா அல்லது சொல்லின் செல்வா என்று சொல்லத் தோன்றுகிறது. உங்கள் மன அகராதியில் இருந்து lotion என்பதற்கு பொருளாக ஒரு யோசனை சொல்லுங்களேன்! (நீங்கள் மறவாமல், விக்சனரிக்கு அவ்வப்போது வந்தேனும் யோசனை தெரிவித்துக் கொண்டிருந்தால், மிகவும் மகிழ்ச்சியடைவோம். பழ.கந்தசாமி 04:25, 6 மார்ச் 2010 (UTC)

field observation[தொகு]

நன்றி செல்வா! கள நேர்ப்பார்வை என்ற சொல் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது; மீண்டும் வேண்டுகோள் வைக்கிறேன் -- அதிக நேரம் விக்சனரியில் இருக்க வேண்டும். --பரிதிமதி 15:25, 6 மார்ச் 2010 (இந்திய நேரம்)

நாளும் என்னைக் கவனி[தொகு]

செல்வா, த*உழவனும் நானும் பைத்தான் தானியங்கி மூலம் பதிவு பற்றிப் பேசிக்கொண்டுள்ளோம். எனது பணிப்பளுவின் காரணமாக, அது சற்றுத் தள்ளிப்போகிறது. இருந்தாலும், 'தினமும் என்னைக் கவனி' என்று விக்சனரி அழைப்பதால், அன்றாடம் சில சொற்களாவது சேர்த்துக்கொண்டுள்ளேன். நீங்களும், தினம் எங்களைக் கவனித்தால், விக்சனரியும் நாங்களும் சொல்வளம் பெறுவோம். நன்றி. பழ.கந்தசாமி 01:14, 7 மார்ச் 2010 (UTC)

 • அடியேனும் அங்ஙனம் வேண்டுகிறேன்.த*உழவன் 01:29, 7 மார்ச் 2010 (UTC)


நண்பர்களே, கட்டாயம் நானும் பங்குகொள்கிறேன். நானும் அன்றாடம் சில சொற்களையாவது சேர்க்க முயல்வேன். அவ்வப்போழுது கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறேன். தமிழில் குறைந்தது 500,000 சொற்களுக்கான பொருள் விளக்கம் தர வேண்டும். குறைந்தது 4 மடங்கு கூட வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த உலக மொழிகளில், முதல் 10 பெரிய மொழிகளில், உள்ள சொற்களில் 1/3 பங்கினுக்கேனும் தமிழில் பொருள் எழுதுதல் வேண்டும். செய்வோம்.--செல்வா 03:55, 7 மார்ச் 2010 (UTC)

 • பகுப்பு:கருவச் சொற்கள் தொகுத்தவரைப் பற்றி அறிய ஆவல். இவைகளை அடிப்படையாகக் கொண்டு, பிற இந்திய மொழிகளுக்கு மொழி பெயர்க்கலாமா?. அதற்கான முதற்கட்டச் செயலே, இந்தி மொழியாக்கம். ஏறத்தாழ 1200சொற்கள் இதிலுள்ளன. இவைகளில் விடுபட்டச் சொற்கள் உள்ளனவா? இவையே போதுமா? ஆங்கிலத்தின் அடிப்படைச் சொற்களைப் பட்டியலிட்டுள்ளனர். அது போல இக்கருவச்சொற்களைக் கருதலாமா?த*உழவன் 05:35, 7 மார்ச் 2010 (UTC)

மிக அருமையான தொகுப்பு. நெஞ்சார்ந்த பாராட்டுகள்!மெக்கால்ப்பினுடைய சொற்தொகுப்பில் பல பிழைகள் உள்ளன, பல சாய்வுகள் உள்ளன. எ.கா. அல்லது என்னும் சொல்லைக் காட்டி அதன் பேச்சுவழக்கு வடிவமாக இல்லாட்டா என்று எழுதியுள்ளார். இது தவறு இல்லாவிட்டால் என்னும் திருந்திய வடிவமே இல்லாட்டி ஆகியது. வி என்னும் எழுத்து மறைவது பேச்சு வழக்கில் நெடுக நிகழ்வது. பிடிக்கவில்லை என்னும் சொல் பிடிக்கலை (அல்லது பிடிக்கல), மறையவில்லை என்னும் மறையலை (மறையல), போகவில்லை -> போகல. அமெரிக்கா என்பனவற்றை அடிப்படைச் சொற்களாகக் கருதுவது அவர்கள் வழக்கம். அப்பட்டியொரு பட்டியலை அவர் உருவாக்கியதைக் கட்டாயம் பாராட்ட வேண்டும், ஆனால் அது திருத்தம் செய்ய வேண்டிய ஒன்று. பொதுவாக ஒருவர் ஒரு மொழியைப் பேச 400-600 அடிப்படைச் சொற்கள் வேண்டும். 1000 சொற்கள் வரை விரிவு செய்தால், தொடக்க்க நிலையில் ஓரளவுக்கு நல்ல சொற்றொகுதி என்று சொல்லலாம். இந்த இல்லாட்டா என்னும் சொல் வேறு பல சொற்களையும் நினைவூட்டும். சொல்லாட்டா, கிடைக்காட்டா, வராட்டா, பிடிக்காட்டா (என்ன பண்றது), போகாட்டா ஏறாட்டா, இறங்காட்டா.. என்று போகும். இவற்றில் விட்டால் என்னும் பின்னொட்டு முதல் எழுத்தாகிய வி-யும், கடை எழுத்தாகிய இடையின லகர ஒற்றும் (அதாங்க ல் ) மறைந்து பேச்சு வடிவம் தோன்றும். இப்படி யார் வேண்டுமானாலும் "கண்டுபிடிச்சு" ஒரு 100-200 என்று சில பலவற்றை "ஆய்ந்தால்", ஆச்சு முனைவர் பட்டம் :). ஒரு மொழியில் அடிப்படைச் சொற்களாகக் கருத்தத்தக்கன

 • தன்னிலை-முன்னிலை முதலான சொர்கள் (நான், நீ, அவன் அவள் அது நாம்..),
 • எண்ணிக்கை (ஒன்று, இரண்டு..),
 • உடல் புற உறுப்புகள் (கை, கால்),
 • அடிப்படை உறவுகள் (அம்மா, அப்பா, அண்ணன்..),
 • அடிப்படைப் பயன்பாட்டுப் பொருள்கள் (அரிசி, நாற்காலி, கண்ணாடி..),
 • அடிப்படை வினைகள் (வா, போ, குடி, பிடி, வாங்கு வில்லு (விற்றல்), சாப்பிடு, தூங்கு..),
 • அடிப்படை இடம்சார்ந்த சொற்கள் (மேலே, கீழே, அடியிலே, உள்ளே வெளியே..),
 • காலம் சார்ந்த சொற்கள் (இன்று, நாளை, காலை, மாலை..)..
 • இப்படியாக ஒரு 30-40 வகைகளில் ஒவ்வொன்றிலும் தோராயமாக 10-15 சொற்கள் என்று கொண்டால் ஒரு 400-600 சொற்கள் தேறும். இலக்கண வடிவங்களும் ஒரு 10-15 தெரிந்தால் போதும். குழந்தைப் பருவத்தில் இருந்து பயன்படத்தக்க சொற்களைத் தொகுக்க வேண்டும். இப்பொழுது இது போல தமிழில் பலரும் செய்திருக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.--செல்வா 14:29, 7 மார்ச் 2010 (UTC)

Orange pog.svg உங்களின் கருத்துப்படி, கவனிக்கப்பட வேண்டியவற்ற உணர்ந்தேன். இணையத்தில் இதுபோல சொற்தொகுதிகள் உள்ளன. இருப்பினும் நம் விக்சனரியில் அடிப்படையானச் சொற்களை, ஆழமாகச் சிந்தித்துத் தொகுக்க நீங்கள் வழிவகுக்க வேண்டும். அச்சொற்களை பல இந்திய மொழிகளுக்கு மொழிப்பெயர்க்கும் வேலையை நான் உள்பட பலரும் அமைக்க முன்வருவர். அதுவே நம் சாதனையாக இருக்கும். இல்லாவிட்டால், ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கே, தமிழ் விக்சனரி பயன்படும். அனைவரும் குறிப்பிட்டு பேசும் அளவு, இதன் வீச்சு இருக்காது. ஆரம்ப நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கும்,த*உழவன் 17:54, 7 மார்ச் 2010 (UTC)

தமிழிலக்கணப் பதங்கள்[தொகு]

பகுப்பு:தமிழிலக்கணப் பதங்கள் என்ற பகுப்பிருப்பதை, இங்கு சுட்ட விரும்புகிறேன்.த*உழவன் 04:10, 12 மார்ச் 2010 (UTC)

செய்யலாம். தமிழிலக்கணச் சொற்கள் என்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். தமிழிலக்கணப் பதங்கள் என்று இருந்தாலும் சரியே. பதம் என்பது பிற பொருள்களும் கொள்ளக்கூடும் என்பதால் சொல் என்னும் பொதுச்சொல்லைக் குறிப்பிட்டேன். இப்பொழுதுதான் உங்கள் குறிப்பைப் பார்க்கின்றேன். காலத்தாழ்விற்கு வருந்துகிறேன்.--செல்வா 21:32, 17 ஏப்ரல் 2010 (UTC)
 • உங்களைப்போன்றே, இலக்கணச்சொற்கள் என்று, நானும் பகுக்கத்துவங்கும் போது சிந்தித்தேன். இடத்தினை நடந்து கடக்க பாதம், மொழியினை கடக்க பதம். அதவாது இலக்கணப்பதம் என்ற பொருளில் அப்பெயரிட்டேன். த*உழவன் 04:25, 18 ஏப்ரல் 2010 (UTC)
நல்ல சிந்தனை :) பதம் என்பது தமிழ்வழி கூர்மையான, தேர்ந்த சொல் என்று பொருள் தரும். ஆழப் பதியக்கூடியது என்றும் பொருள்தரும். நடனங்களில் காமச்சுவை கூடிய ஒரு வகையான ஆக்கங்களைச் சுட்டும். --செல்வா 13:23, 18 ஏப்ரல் 2010 (UTC)

சொல் பற்றிய பகுப்புகள்[தொகு]

 1. பகுப்பு:சொல் பற்றிய விரிவான உரையாடல்கள்
 2. பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்

இவ்விரண்டில் ஒன்றினை நீக்கவிடலாமெனக் கருதுகிறேன். உங்களின் பரிந்துரை என்ன?த*உழவன் 13:16, 18 ஏப்ரல் 2010 (UTC)

ஆமாம் ஒன்றை நீக்கிவிடலாம் அல்லது பிணைத்து விடலாம். சொல் பற்றிய உரையாடல்கள் என்பது போதும் (விரிவான என்பது தேவை இல்லை)) அப்படி ஒன்று இருந்ததை மறந்துவிட்டேன். கண்டுபிடித்து சுட்டியமைக்கு நன்றி.--செல்வா 13:20, 18 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி த*உழவன்.--செல்வா 14:01, 18 ஏப்ரல் 2010 (UTC)

ஒரு ஐயம். மேலுள்ள சிறிய எழுத்துக்களுக்கான வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, அதனைத் தொடரும் சொற்கள் அடுத்தவரியில் வராமலிருக்க என்ன செய்யவேண்டும்?TamilBOT 14:34, 18 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி[தொகு]

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா!

மகிழ்

ஒப்புரவு[தொகு]

இந்த இடுகையில் தாங்கள் செய்த திருத்தம் நன்று!--George46 17:31, 14 மே 2010 (UTC)

Evangelist[தொகு]

 • செல்வா, evangelist என்ற சொல்லுக்கு திருப்தியற்ற மொழிபெயர்ப்புத் தந்துள்ளேன் (குறிப்பாக technology evangelist என்பதற்கு). அதைத் திருத்துமாறு வேண்டுகிறேன். நன்றி பழ.கந்தசாமி 02:31, 27 மே 2010 (UTC)

exploratorium[தொகு]

 • exploratorium என்பதற்கான தமிழ்ச்சொல் தேவை. ஆராய்வகம், ஆராய்வுக் காட்சியகம், ஆய்வுக் காட்சியகம்?... பழ.கந்தசாமி 16:49, 28 மே 2010 (UTC)

விவாதிக்கப்படும் சொற்கள்[தொகு]

 • செல்வா, சரியான மொழிபெயர்ப்புத் தேடி நான் விவாதிக்கும் சொற்களை ஆலமரத்தடியில் இடலாம். அவ்வகையில் spelling bee வருகிறது. விவாதத்தை அவ்வச்சொற்களின் பேச்சுப் பகுதியில் வைத்துக்கொள்வோம். பழ.கந்தசாமி 23:22, 29 மே 2010 (UTC)

Swahili[தொகு]

seven (7) is saba, not siba Robert Ullmann 00:41, 31 மே 2010 (UTC)

Thank you! Yes, it is saba and not siba. It is my mistake. Now, it is corrected. Please feel free to correct me. I learnt just a little when I was in Tanzania while climbing Kilimanjaro and I've quite a number of reliable books and I've a sense of the language (not that I'm proficient in it, far from it). --செல்வா 00:49, 31 மே 2010 (UTC)
 • தான்சானியா நீங்கள் சென்றது குறித்து மகிழ்கிறேன். 'சிக்குன்கனியா' காய்ச்சல் தமிழகத்தினையே ஆட்டிப்படைத்தது உங்கள் நினைவிலிருக்கமென எண்ணுகிறேன். அப்போது அதைப் பற்றி தெரிந்து கொள்ளவே தமிழ் விக்கிப்பீடியா வந்தேன். தான்சானியாவில் தான் உலகில் முதல் தாய் தோன்றியிருக்கலாம். இந்திய நிலப்பரப்பு ,ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்து ஆசியாவுடன் ஒட்டியதும் உங்களுக்குத் தெரிந்ததே. இந்திய முன்பு அப்படி ஒட்டிய இடம், தான்சானியா என்று அறிந்து வியந்தேன். மற்றொன்று உலகின் மூத்த தாய் ஒருவேளை நமது மூதாதையருடன் நெருங்கிய தொடர்பு உடையவராக இருக்கலாமல்லவா? இதனை கற்பனையோடு, சிந்தித்தே கூறுகிறேன்.
 1. பல்லாங்குழி விளையாட்டு அங்கும் இருக்கிறது. அப்படத்தினை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைத்துள்ளேன்.
 2. மரத்தில் அவர்கள் வடிக்கும் சிலைகளின் நுட்பங்கள் இன்றும் தமிழகத்தில் செய்கிறார்கள்.
 3. கலாச்சாரத்தினையும், மதங்களையும் ஒன்று பண்ணுவதில்லை.

எது எப்படியாகினும், நான் காணவிரும்பும் நாடுகளில் தான்சானியாவும் ஒன்று. நீங்கள் கண்டுணர்ந்தாலும், எனக்கும் அது மனமகிழ்ச்சியே. முடிந்தால் சில படங்களை, அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். (த*உழவன் 12:39, 31 மே 2010 (UTC))

உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறும் நிலவியல் நிகழ்வுகள் (உண்மையெனில்) அவை மாந்தன் என்னும் ஓர் இனம் தோன்றும் முன் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாக இருக்கும். ஆனால் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய மாந்த இனம், இன்றைய தமிழகம் வழியாகவும் நிகழ்ந்தது (அதுவும் மிக முற்காலமாகிய 50,000 ஆண்டுகள் வாக்கில்) என்பது உண்மை. ஆப்பிரிக்கர்களுக்கும், நடுத்த்ரைக் கடல் மக்களுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். ஆத்திரேலிய பழங்குடியினரிடமும் தொடர்பு இருக்கக்கூடும். எப்படிப் பார்த்தாலும் மாந்த இனத்தில் உள்ள அனைவருமே சொந்தக்காரர்கள்தாம் :) ஆப்பிரிக்காவிலும் தமிழகத்தில் பயன்பட்டு வந்தது போன்றே உரலும், பிற கல்கருவிகளும் பயன்படுத்தினர். தான்சானியா சென்றுவந்ததைப் பற்றி பல பதிவுகள் படங்களுடன் இட நினைத்திருந்தும், இன்னும் நிறைவேறாமலே உள்ளன. செய்கிறேன். --செல்வா 13:18, 31 மே 2010 (UTC)
 • உலக மாந்தர் குறித்த உங்களது பார்வை, எனது சிந்தனைகளை அகலப்படுத்தியது. படங்களுடனானப் பதிவுகள் குறித்து விரைவில் எழுதுங்கள். அதில் தேர்ந்தெடுத்தவைகளை விக்கி ஊடக நடுவத்திலும் பதிவேற்றிட வேண்டுகிறேன். ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் முடிக்கும்...(த*உழவன் 13:32, 31 மே 2010 (UTC))

பகுப்பு+வார்ப்புருக்கள் குறித்த மாற்றங்கள்[தொகு]

1) [[பகுப்பு:மொழி-தலைப்பு|எண்]]-->எடுத்துக்காட்டு[[பகுப்பு:கிசுவாகிலி-பெயர்ச்சொற்கள்|9]] என்பதனைத் தளமாகக் கொண்டு, ஏற்கனவே உள்ள சொற்களைத் தொகுத்துள்ளேன். இனி நீங்கள் உருவாக்கும் மொழிப் பகுப்புகளையும் அவ்வாறே தொகுப்பின், ஒரு சீராக இருக்கும். மேலும், பல பகுப்புத்தவறுகளைத் திருத்திய அனுபவத்தினால் மேற்கண்ட படி பகுத்தால் பிழைகள் வராமலிருக்கும் என்பதனைத் தெரிவிக்க எண்ணுகிறேன்.

2) எந்த வார்ப்புரு உருவாக்கும் போதும், <noinclude>[[பகுப்பு:வார்ப்புருக்கள்]]<noinclude> என்று சேர்க்க மறவாதிங்க. அவ்வாறு செய்யவில்லையெனில், ஒவ்வொரு சொல்லிலும், [[பகுப்பு:வார்ப்புருக்கள்]] தானாகவே இணைந்து விடுகிறது. இதற்கு முன் நீங்கள் உருவாக்கிய சில வார்ப்புருக்களில் அத்தகைய மாற்றங்களை சேர்த்துவிட்டேன்.

3) மொழிமாற்றம் செய்யும் சொற்களை, தமிழ்சொல்லிலும் இணைத்தால் தமிழ்-->பல்மொழி என்பது உருவாகும் அல்லவா? இப்பொழுது தமிழ்-->ஆங்கிலம் மட்டுமே அதிகமாக உள்ளது. தமிழ் தெரிந்தவரும் பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பு வளரும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--த*உழவன் 12:17, 31 மே 2010 (UTC)

மிக்க நன்றி த*உழவன். இவற்றைக் கருத்தில் கொள்கிறேன். சிலவற்றை அறிந்திருந்தும் மறந்துவிட்டேன்.--செல்வா 13:35, 31 மே 2010 (UTC)
 • பல்துறை வித்தகராக இல்லாமல், சிறிது காலம் (தமிழ் முதல்5இடங்கள் வரும் வரை) விக்சனரி வித்தகராக நீங்கள் இருந்தால் ..
வெற்றி நிச்சயம். இது வேத தத்துவம்.. 
கொள்கையென்பதே நாம் கொண்ட இலட்சியம்..

--(த*உழவன் 07:21, 1 ஜூன் 2010 (UTC))

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம் செல்வா, விக்சனரியில் நீங்கள் காட்டி வரும் தொடர் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் பல்வேறு திட்டங்களில் உள்ள ஈடுபாடு காரணமாக நேரத் தட்டுப்பாட்டுடன் உள்ளதை அறிவேன். ஆனால், வளரும் விக்சனரியைப் பராமரிக்க இன்னும் நிறைய பேரின் உதவி தேவைப்படும். அவ்வப்போத்து உங்கள் கண்களில் தென்படும் குறைகளை நீக்கவாவது இந்தப் பொறுப்பு உதவும். தங்களுக்கு விருப்பம் என்றால், தங்கள் பெயரை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிய விரும்புகிறேன். நன்றி--ரவி 07:23, 22 ஜூலை 2010 (UTC)

முன்மொழிய வருவது அறிந்து மகிழ்ச்சி, ரவி. நன்றி. ஒப்புகிறேன். அதே நேரத்தில் பொறுப்பாக பங்களிக்கும் பயனர் பவுல் அவர்களையும் பரிந்துரைக்கிறேன். --செல்வா 11:39, 22 ஜூலை 2010 (UTC)

பொறுப்பேற்க முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. Wiktionary:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பொறுப்பேற்க முன்வருவதாக முறைப்படி குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி.--ரவி 19:04, 25 ஜூலை 2010 (UTC)

செல்வா, நிருவாகப் பொறுப்புக்கு என் பெயரைப் பரிந்துரைத்தமைக்கு உளமார்ந்த நன்றி! விக்கிக்கு நான் புதியவன். விக்கி நெறிகளைப் படிப்படியாகக் கற்றுவருகிறேன். சிறிது காலம் சென்றபின் பொறுப்பேற்றல் பற்றி சிந்திக்கலாம் என்னும் கருத்துக் கொண்டுள்ளேன். வணக்கம்!--பவுல்-Paul 01:19, 27 ஜூலை 2010 (UTC)

/* நன்றி */[தொகு]

செல்வா, நிருவாக அணுக்கத்திற்கு வாக்கை நல்கியமைக்கு நன்றி. --பரிதிமதி 17:55, 26 ஜூலை 2010 (UTC)


செல்வா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எனக்கு வாக்களித்தமைக்கு நன்றி.
நிர்வாக பொறுப்பை என்னைவிட மூத்த பங்களிப்பாளர்கள் தற்போது ஏற்றுக்கொள்ளட்டும். தகுந்த காலம் வரும்வரை காத்திருப்பேன். ஆகவே, நிர்வாக பொறுப்பு தேர்வில் இருந்து விலகிக்கொள்கிறேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:13, 27 ஜூலை 2010 (UTC)

எண்ணிலிருந்து எழுத்து[தொகு]

கந்தசாமி, நீங்கள் கேட்டுக்கொண்டபடி ஆங்கில விக்கியிலிருந்து நகலெடுத்து உருவாக்கியிருக்கிறேன். சோதித்து சொல்லவும். {{Number to word|98387}} = , தொன்னூற்று எட்டு ஆயிரத்து, முன்நூற்று எண்பத்தி ஏழு. தற்போது ஆறு இலக்க எண்வரை வேலை செய்யும். ஆனால் இலட்சத்திற்கு இதுவரை எழுத வில்லை. தேவையெனில் அதனையும் செய்யலாம். -- Mahir78 06:05, 28 ஜூலை 2010 (UTC)

வணக்கம்[தொகு]

வணக்கம். சும்மா காற்று வாக்கில் இணையத்தில் சுற்றி திரிந்து கொண்டு தான் இருந்தேன். எங்கு சுற்றினாலும் இங்கு தான் வருவேன். பதிவுலகத்தை பார்த்து பிரமித்து போய்விட்டேன் . எப்படியெல்லாம் போட்டி போட்டு எழுதுகிறார்கள் . அப்பப்பா! நினைவில் கொண்டு அழைத்ததற்கு நன்றி. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நமது விக்கி ஆய்வரங்க உரையை பார்த்தேன் யூடியூப்-இல். அருமை. --Inbamkumar86 16:02, 29 ஜூலை 2010 (UTC)


bookmarklet தமிழ் என்ன ?[தொகு]

bookmarklet = புத்தக குறிப்பு நிரல்; நூற்குறிப்பு நிரல்.

இது சரியானதா ? --Inbamkumar86 03:48, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

bookmark and applet என்பது சேர்ந்து bookmarklet ஆகியது அல்லவா? bookmark என்பதில் நூல் என்பது முகன்மை அல்ல (நூலில் கடைசியாகப் படித்த பக்கத்தை நினைவில் கொள்ள ஏதோ ஓர் அடையாளக்குறியை வைத்துக்கொள்வது). நூலுக்கு என்று இருக்கும்பொழுது (நூலின் பக்க) நினைவுக்குறி. ஆனால் இங்கே bookmark என்பது நினைவில் வைத்துக்கொள்வது என்பது ஒன்றே பொருள். நூல் என்பது பொருளற்றது பு'க்மார்க் என்பது சேர்ந்து வேறு பொருள் வருவது. ஆகவே குறிநிரல், பதிநிரல் (பதிவுநிரல்) என்று சூழலில் புரியும்படி கூறலாம். இன்னும் துணிந்து குறிசி எனலாம். சுருக்கம் நல்லது. சொல் என்பது சூழல்சார்ந்த ஒரு சுட்டு. பொருளுணர்த்தும் சுட்டு. வேறு இடங்களில் குறிசி என்பது வேறு ஒன்றைக்கூட சுட்டலாம். சொற்களின் தன்மை இப்படியானதே. ஆங்கிலத்தில் express என்றால் ஒரு கருத்தைச் சொல்லுவது என்றும் பொருள்படும், விரைவுந்து என்பதனையும் சுட்டும், விரைந்து அஞ்சலில் வரும் கடிதத்தையும் சுட்டும். ஆகவே நினைவி, குறிசி போன்ற சுருக்கமான பெயர்களையும் கருதலாம். --செல்வா 14:10, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
குறிசி என்ற சொல் நன்றாக உள்ளது. ஆனால் அது பழமையான சொல்லாக உள்ளது போன்று தோன்றுகிறது. பிறருக்கு புரியுமா ? வேறு ஒருவரிடம் குறிசி என்பதின் பொருள் என்ன என்று கேட்டால் அவர்கள் யூகிப்பது கண்டிப்பாக பழமையானச் சொல்லகாத்தான் இருக்கும். எனக்கு இது போன்ற சொல் பிடிக்கும் அது வேறு. ஆனால் குறிப்பு என்று அழுத்தி சொன்னால் தான் இக்கால மக்களுக்கு அது note பண்ணுவதை சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்வர். குறியுங்கள், குறிப்பு எடுங்கள், குறித்து வையுங்கள், குறிப்பு எடு என்று இவ்வாறு விளக்கினால் தான் அவர்களுக்கு புரியும் என்று நினைகிறேன். உங்கள் பரிந்துரையில் அனைத்துமே எனக்கு பிடித்து இருந்தாலும், குறிநிரல் என்ற சொல் மற்றவர்களுக்கு எளிதில் புரிந்து விடும் என நம்புகிறேன்.

பல முறை நான் bookmarklet என்ற சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் இத்தனை நாட்கள் எனக்கு தெரியாது இது ஒரு நிரல் என்று. இதற்கு தமிழ் என்ன என்று சிந்தித்து தேடிய போது தான் இது நிரல் என்றே அறிந்தேன். இதற்கு தான் தமிழில் கற்க வேண்டும் என்று சொல்கிறார்களோ ? என்று நினைத்து கொண்டேன்.

நினைவி என்ற சொல்லிலும், பதிநிரல் என்ற சொல்லிலும் எனக்கு அவ்வளவாக பிடிப்பு இல்லை. ஏனென்றால் அதை அதிகமாக பல கலைச்சொற்களில் பயன்படுத்தி விட்டோம் என்று நினைகிறேன். எத்தனை நினைவகம், பதிவு ஏற்றல் , இறக்கல் , நினைவு ஏறுகிறது , மறு நினைவேறுகிறது . இப்படி பல இடங்களில் பயன்படுத்தி பழகி விட்ட காரணத்தினால் எனக்கு அதில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. --Inbamkumar86 15:15, 1 ஆகஸ்ட் 2010 (UTC)


bookmark - குறி (வி) அல்லது குறிப்பு (பெ), bookmarks - குறிப்புகள், bookmarklet - குறிநிரல். இவ்வாறு குறிப்பிடலாமா ? --Inbamkumar86 15:30, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

குறிநிரல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். வினையாக வேண்டும் எனில் குறியிடு அல்லது குறிசேர் எனலாம். தொடுப்பிடு, தொடுப்புசேர் என்றும் சொல்லலாம்.--செல்வா 20:50, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்சனரி திட்டப் பணியில் சேர விருப்பம்[தொகு]

விக்சனரி திட்டப் பணியில் சேர விருப்பம் . என்ன செய்வது ?

எந்தத் திட்டபணியில் சேர விருப்பாமோ, அதில் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். விக்கி முறைப்படி உங்களுக்கு விருப்பமான திட்டத்தில் சேர்ந்து பங்காற்றலாம். உங்களைப் போல திறமான, ஆர்வமானவர்கள் வந்து பங்களிப்பது, அத்திட்டத்தை விரைவாக வளர்க்க உதவும். கட்டாயம் சேருங்கள், இராச்குமார்!!--செல்வா 20:45, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆலாபனை முதலியன[தொகு]

செல்வா, நீங்கள் கருநாடக, தமிழிசைச் சொற்களில் புலமை உள்ளவர்போலத் தோன்றுகிறது. முடிந்தால் அவற்றைச் சேர்க்கவும். நான் தேடித்தான் பொருள்சேர்க்கிறேன். புலமையற்றவன் :( பழ.கந்தசாமி 00:27, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

thou கட்டமைப்பு மீட்டெடுப்பு[தொகு]

பேச்சு:thou காணவும் நன்றி.என்னாலும் பிறராலும் மாற்றியமைக்கப்பட்ட, உங்களின் சொற்கட்டமைப்பை மீட்டளித்திருக்கிறேன்.--த*உழவன் 16:49, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

சோதனை உதவி[தொகு]

உங்களுடைய இந்தப் பக்கத்தில் User:செல்வா/Monobook.js சென்று importScript("User:Mahir78/Monobook.js"); ஒட்டி, கண் பக்கத்திற்கு சென்று உடல் உறுப்பு பெட்டியில் தொகுப்பதற்கு ஏற்ற textbox, பொத்தான் வரும். சோதித்து சொல்லுங்களேன். தேவையான திருத்தங்கள் இருந்தாலும் சரிசெய்து பின்னர் பொதுவில் எல்லோருக்கும் வரும்படி செய்யலாம். நன்றி-- Mahir78 17:57, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

த*உழவனின் த.இ.ப. சொற்களுக்குரிய படிவ கருத்து இடமாற்றம் செய்யப்படுகிறது[தொகு]

த*உழவனின் த.இ.ப. சொற்களுக்குரிய படிவ கருத்து உரிய பக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு மேலும் சில..--த*உழவன் 05:51, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

மணிச்சட்டம் - மொழிபெயர்ப்புப் பெட்டி +த.இ.ப. சொற்கள்[தொகு]

மணிச்சட்டம் - மொழிபெயர்ப்புப் பெட்டி பார்த்தேன். அருமை. படங்களுக்காக அகலத்தை சுருக்கி விட்டீர்கள் என நினைக்கிறேன். பெட்டியின் அகலத்தை, இன்னும் (பயன்படுத்தப்படுகின்றது என்ற மேலுள்ள வரி வரை) அதிகம் படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். en:emperor penguin உள்ளது போல, மொழிப்பெயர்ப்பு அமைத்தால் மிக நன்றாக இருக்கும். இவ்வசதி தமிழ் சொற்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, பிறகு தொடரலாமென்று நினைக்கிறேன். த.இ.ப.சொற் பதிவுகளுக்கு முன்னுரிம தாருங்கள். உங்களின் இறுதி கட்ட சொல்லினைத் தாருங்கள். அது 90% முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறேன். நன்றி. வணக்கம்--த*உழவன் 17:32, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

மிக நன்றாக இருக்கிறது; அனைத்தும் இவ்வாறே அமைதல் தமிழ் அகரமுதலி உலகிற்கு ஒரு புதிய திருப்பம் ஆகும்.. --சி. செந்தி 10:41, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

த.இ.க.க (த.இ.ப.) குறித்த கலந்துரையாடல் ஒருங்கிணைப்பு[தொகு]

dado4[தொகு]

பணியடர்வு என்று கூறியிருந்தீர்கள். எனினும், சிறு வேண்டுகோள். பேச்சு:dado4 என்பதில் மாற்றுகருத்து இட்டுள்ளேன். மீதமுள்ள ஒரு வடிவத்தை இறுதி கட்டமாகக் கொள்ளலாமா? இதற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ள சுந்தர் தானியங்கி படிவ வடிவம் ஏன் வேண்டாமென்று சில வரிகள் எழுதக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்தினை அறிந்த பிறகு, தேவையெனின் எனது எண்ணங்களை தெரியப் படுத்த எண்ணுகிறேன். நன்றி.வணக்கம்.--த*உழவன் 16:42, 4 செப்டெம்பர் 2010 (UTC)

dado2[தொகு]

இறுதியாகபேச்சு:dado2 வில் சில கருத்துக்கள்.காணவும். dado4கருத்திட்டமைக்கு நன்றி.--த*உழவன் 02:09, 5 செப்டெம்பர் 2010 (UTC)

பங்களிப்பு கணக்கீடு[தொகு]

அருநாடன் பக்கம் கண்டேன்.மகிழ்ச்சி.ஒரு பயனர் எவ்வளவு சொற்கள் உருவாக்கியுள்ளார் என்று எப்படி கண்டறிவது? நம் விக்சனரியில் எப்பக்கங்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதனையும், எத்தனை பேர் நம் தளத்திற்கு தினம் வருகின்றனர் என்பதனையும் எப்படி கண்டறிவது? வழிகாட்டவும்.

 • பிற மொழியில் அமைந்துள்ள dado சொல்லமைவுகளையும் கண்டால், அது நமது வடிவ மாற்றத்திற்கு உதவும். ஆங்கிலக் கூட்டுச்சொற்கள்(ஏறத்தாழ நம் விக்சனரியில் இப்ப 35 உள்ளது. பதிவேறவிருக்கும் சொற்களில் 40,000க்கும் மேல் வரும்.), பிற மொழிச்சொற்கள் முதலியவற்றில் தற்பொழுதுள்ள கொடிமுதல் வரி அழகாக இருக்கிறது. dove,dado போன்ற இலத்தீனிய தனிச்சொற்களில் , பிறமொழிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பதால், அவற்றில் ஒரே ஒரு கொடி போதுமெனக் கருதுகிறேன்.
 • புதிய பகுப்புகள் உருவாக்கினதைக் கண்டேன்.பகுப்பு:கணிதம், பகுப்பு:ஆங்கிலம்-கணிதம் என்று ஏற்கனவே உள்ளது.பகுப்பு:பிரான்சியம்-கணிதச் சொற்கள் என்ற பகுப்பினைக் கண்டேன்.ஒரே மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். கணிதவியல் சொற்கள் என்றோ, வேறு பல பெயர்களில் பிறர் உருவாக்க, நாமே வழிகாட்டியதாக அமைந்து விடும் என்ற நோக்கில், இதனைக் குறிப்பிடுகிறேன்.
 • நேற்று வெளியூரில் இருந்த போது, இணையக் கடையில் ஒரு மணி நேரம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வின்டோசு' எக்சுபி தான் பயன்படுத்தினர். தமிழ் மொழியை நிறுவாததால், வேறு வழியில்லாமல், பிற மொழியில் அமைந்துள்ள dadoக்களை பார்த்தேன். ஏதோ ஒரு மொழி dadoவில், கொடி வார்ப்புருவினை சமக்குறியீடுகளுக்குள் அமைத்திருந்தனர். குறிக்கத் தவறி விட்டேன். பிறகு, தேடித்தருகிறன். நன்றி. வணக்கம்.--த*உழவன் 00:51, 9 செப்டெம்பர் 2010 (UTC)

மறுமொழிகள்[தொகு]

 • எந்த விக்கித்திட்டத்தின் புள்ளிக்குறிப்புகளையும் காண, இப்பக்கத்துக்குப் போகவும். அங்கே Wiktionary என்னும் திட்டத்தைச் சொடுக்கினால், எல்லா மொழிகளிலும் உள்ள விக்சனரிகள் பற்றிய தரவுகளும் கிடைக்கும். அதில் உள்ள Tables என்னும் தொடுப்பைச் சொடுக்கினால் தமிழ் விக்சனரிக்கான எல்லா தரவுகளும் கிடைக்கும். வரலாற்று நோக்கில் எப்பொழுது எந்த அளவுக்கு வளர்ந்தோம் என்று அறியலாம். முதல் அட்டவணைக்குக் கீழே இப்பொழுது சில காலமாக புதிதாக இன்னொரு அட்டவணை தருகின்றார்கள். அதில்,ஒவ்வொரு தர அளவீட்டு அலகிலும் ஒரு விக்சனரியானது உலக மொழிகள் வரிசையில் எந்த வரிசையில் உள்ளது என்று அறியலாம். எடுத்துக்காட்டாக, தமிழ் விக்சனரியராகிய நாம் ஏப்ரல் 2010 இல், தொகுப்புகள் (edits) என்னும் தர அலகில், 3 ஆவதாக இருக்கின்றோம். இது வியப்பூட்டுவது. பை'ட் அளவில் (பருவளவில்), தமிழ் விக்சனரி உலக மொழிகளில் வரிசையில் 10 ஆவதாக உள்ளது. இதுவும் மிகவும் பாராட்டத்தக்கது. இன்னும் கீழே வந்தால் பங்களிப்பாளர்கள் வரிசை பங்களிப்புகள் என்று ஏராளமான தரவுகள் உள்ளன. அதிக முறை தொகுக்கப்பட்ட பக்கங்களைப் பார்க்கலாம். ஆனால் அதிகம் பார்க்கப்படும் பக்கத்தைப் பார்க்க வேறு ஒரு தொடுப்பு உள்ளது இங்கே பார்க்கவும். ஒவ்வொரு பக்கமும் நாள்தோறும் எத்தனை முறை பார்க்கப்படுகின்றது என்பதை பிறிதொரு வழியில் காண வேண்டும். அடுத்து அதைப்பற்றிக் கூறுகின்றேன்.
  • மேற்கூறியப் பக்கங்களை மேலோட்டமாக க் கண்டுணர்ந்தேன். மிக்க மிகழ்ச்சி. பழ.கந்தசாமி வந்த வேகத்தினையும், பங்களிக்கும் வேகத்தினையும் பார்த்தால் அவரே தமிழ் விக்சனரியின் செம்மல். செமையாக பக்க எண்ணிக்கையையும், அதிலுள்ள்ள ஊள்ளீடுகள் அளவினையும் அதிகரித்துள்ளார். பொறுமையாக நீங்கள் கொடுத்த தொடுப்பை அலச வேண்டும். கொஞ்சம் அரும்பாடுபட்டு நம் விக்சனரியை தினம் பார்ப்பது பற்றிய வழியைக் கண்டறியவும். அது நம்மை மேலும் பாடுபட தூண்டும். மிக்க நன்றி.--த*உழவன் 01:03, 11 செப்டெம்பர் 2010 (UTC)
 • பயனர் உருவாக்கிய பக்கங்களைக் கணக்கிடுதல்: அருநாடன்2 என்னும் பயனர் உருவாக்கிய பக்கங்களைப் பார்க்க இப்பக்கத்தைப்] பாருங்கள். மற்ற பயனர்களுக்கும் அவர்களின் பயனர் பெயரை இட்டுப் பார்க்கலாம். எண்ணிக்கையைக் காண இப்பட்டியலை ஒற்றி எக்ஃசல் தாளில் இட்டால் எண்ணிக்கையை அறியலாம். நீங்களும், பழ.கந்தசாமியும் 4,000 பக்கங்களுக்கு மேல் உருவாக்கி உள்ளீர்கள்.
 • பகுப்பு:கணிதம் என்னும் பகுப்பு மொழியைத் தாண்டி, கணிதம் பற்றிய சொற்களுக்கான பகுப்பு. அதற்குள் இருக்கும் துணைப்பகுப்பு: ஆங்கிலம்-கணிதம். இதே போல இடாய்ச்சு-கணிதச் சொற்கள் இன்னொரு துணைப்பகுப்பு. கணிதச் "ஆங்கிலம்-கணிதச் சொற்கள்" வேண்டாம் எனில் "ஆங்கிலம்-கணிதம்" என்று இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் "கணிதம்" என்னும் தாஅய்ப்பகுப்புக்குள் அடங்கும்.
  • ஒவ்வொரு பகுப்பும், பல துணைப்பகுப்புகளிலும் உருவாக்க வேண்டும். ஓரளவு பெயர்ச்சொல்லில் உருவாக்கினேன். அதனை உருவாக்கியதோடு சரி. மேலும், அதனை வளர்க்கத்தவறி விட்டேன். தாய்தொகுப்பிலும் அந்த சொல்லைத் தொடர்ந்து இருக்கச் செய்யவேண்டும்.ஏனெனில், பிற விக்சனரியர் தாய்பகுப்பைக் கொள்வரென்று, ஒரு முறை பெயர்ச்சொற்களைப் பற்றி ஆலமரத்தடியில் நீங்கள் உரையாடிய போது கொடுத்த, புள்ளி விவரத்தால் தெரிந்து கொண்டேன்."ஆங்கிலம்-கணிதம்" உள்ளது.--த*உழவன் 01:03, 11 செப்டெம்பர் 2010 (UTC)

பிறவற்றுக்குப் பின்னர் விடை பகர்கின்றேன் (மிகவும் நீண்டுவிட்டது).

 • விக்சனரியில், பக்கங்களைப் பார்க்கும் கருவி கிடைத்தால் பின்னர் குறிப்பிடுகின்றேன். ஆனால் விக்கிப்பீடியாவில் உள்ள எந்தக் கட்டுரையையும் நாள்தோறும் எத்தனை முறை பார்க்கப்படுகின்றது என்பதைக் கீழ்க்காணும் மென்கலக் கருவிவழி கண்டுபிடிக்கலாம்:
 • நாய் என்னும் கட்டுரையை நாள்தோறும் பார்வையிடும் புள்ளிக்குறிப்பு. இது தமிழ் விக்கிப்பீடியாவில் செப்டம்பர் 2009 உக்கான புள்ளிக்குறிப்பின் படி 338 ஆவதாக உள்ள கட்டுரை. இதனை வேறு மாதங்களுக்கும் மாற்றி எத்தனை முறை பார்க்கப்பட்டது எனக் காண இயலும். இது போல விக்சனரிக்கும் இருக்க வேண்டும்.--செல்வா 19:09, 10 செப்டெம்பர் 2010 (UTC)

--செல்வா 01:31, 9 செப்டெம்பர் 2010 (UTC)

உருசிய இடுகையில் பிறமொழிகள் பகுதி நீக்கப் பரிந்துரை[தொகு]

நன்றி செல்வா, Diego பயனரால் செய்யப்பட்ட 10:27, 16 ஆகஸ்ட் 2009 அன்றிருந்தவாரான Diego (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:27, 16 ஆகஸ்ட் 2009 அன்றிருந்தவாரான собака எனும் சொல்லிற்குரிய புதுப்பக்கத்தை மையமாக வைத்துக்கொண்டே உருசிய சொற்களை இடத்தொடங்கினேன்; நீங்கள் கூறியது சரியாகப் பட்டதால் உங்களின் பரிந்துரைக்கேற்ப நீக்கி விட்டேன். மேலும் அழைக்கும் விதத்தை தெளிவு படுத்தியமைக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.--சி. செந்தி 17:55, 9 செப்டெம்பர் 2010 (UTC)

உருசியச் சொற்கள்[தொகு]

உருசியச் சொற்கள் பற்றி ஆய்விற்கு ஒரு புதிய பகுதி உருவாக்கினால் நன்று எனக் கருதுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட улей எனும் சொல்லைப் பார்வையிட்டேன், அங்கு ("பலுக்கல்" ) ஒலி வடிவம் அல்லது IPA எங்கே இடுவது? பயனர்:Drsrisenthil/இரசிய மொழி இதனைப் பாருங்கள்.

 • தமிழில் உருசிய அனைத்து ஒலிபையும் எழுத்து மூலம் தெரிவிப்பது சிக்கல் எனத் தங்களுக்கு தெரியும் எனக் கருதுகின்றேன், எ.கா: жара எனும் சொல், இங்கு ж ஆங்கிலத்திலோ தமிழிலோ குறிப்பிட முடியாதது, ஆங்கிலத்தில் zh பயன்படுத்துகின்றனர்.
 • உருசிய மொழியில் பெயர்த்திரிபு உள்ளதால் ஆங்கில விக்சனரியில் உருவாக்கி உள்ளது போல

அதற்கென்று வார்ப்புரு ஒன்று உருவாக்க வேண்டும். இதனைப் பார்க்கவும் : பயனர்:Drsrisenthil/வார்ப்புருக்கள், *பெயர்ச்சொற்களுக்கென இரு வகை பகுப்புகள் உள்ளன, எனவே பகுப்பு: உருசியப் பெயர்ச்சொற்கள் அல்லது பகுப்பு: உருசியம்-பெயர்ச்சொற்கள் நீக்கப்படுவது நன்று, உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.--சி. செந்தி 19:12, 9 செப்டெம்பர் 2010 (UTC)

  • பகுப்பு இருவகையாக இருப்பதை முன்னரே பார்த்தேன். இதனைச் சரி செய்ய வேண்டும். இது பற்றி சிறிது கலந்துரையாட வேண்டும். (1) மொழியின் முழுப்பெயர்-பகுதியின்பெயர் (எ.கா கன்னடம்-பெயர்ச்சொற்கள்) என்று இருக்க வேண்டுமா அல்லது (2) மொழியின் பெயர் உருசிய, பிரான்சிய, கன்னட- எனச் சரியான முன்னொட்டுடன் வர வேண்டுமா? இதே போல உருசியம்-உடலுறுப்புகள் என்று இருந்தால் போதுமா அல்லது உருசியம்-உடலுறுப்புச் சொற்கள் என்று இருக்க வேண்டுமா? இதையெல்லாம் ஆல மரத்தில் இட்டு உரையாட வேண்டும். இது இப்போதைக்கு.
  • செந்தி улейஎன்னும் பக்கத்தில் ஒலிப்புக்கான பகுதிகளைச் சேர்த்திருக்கின்றேன். பார்கவும். ஒலிக்கோப்பும் வேலை செய்கின்றது. ஆகவே அந்த ஒலிப்பின் படியும் தமிழ் எழுத்தால் காட்டும் ஒலிப்பைச் சற்று மாற்றி எழுதியுள்ளேன். எந்த மொழியும் மற்றொரு மொழியின் ஒலிப்புகளைக் காட்ட இயலாது. ж (பிரழ்சினேவ்) என்னும் சொல்லில் வரும் ஒலியை அனைத்துலக ஒலியன் குறியில் ʐ என்று இட்டுக் காட்டுகின்றனர். நாம் ழ்3 என்று காட்டலாம். உருசிய ஒலிக்குறிப்புகள் என்பதற்கு ஈடாக தமிழில் ஒரே நாளில் வடிக்கலாம். நீங்களும், நானும், சிறீதரன் கனகும் கலந்து பேசி வடிக்கலாம். அதன் பின் அப்பக்கத்துக்கு உள்ளிணைப்பு தருவது எளிது. ஆங்கிலத்துக்கு இது போல dado2 என்னும் பக்கத்தில் தந்துள்ளேன். பார்க்கவும். ழ்3 என்று குறிப்பிட்டாலும், அனைத்துலக ஒலிப்புக் குறியாகிய ʐ என்பதால் குறிப்பிட்டாலும், முதல் மொழியின் "жэ" என ஒலிக்கப்பெறும் ж என்னும் எழுத்தாலே குறித்தாலும், அந்த ஒலியைக் கேட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒரு குறியுடன் (அது எந்தக்குறியாக இருந்தாலும்) பொருத்தி நினைவில் கொள்ள முடியும். இதே எழுத்து இரட்டித்து வருகையில் жж சற்று மாறுபட்டு ஒலிக்கும், இதனை அனைத்துல ஒலியன் குறி ʑʑ என்று இட்டுக்காட்டுகின்றது. ஒலிப்பைக் குறிக்க சீர்தரம் செய்து நாம் வகுத்துக்கொள்ளலாம். --செல்வா 20:18, 9 செப்டெம்பர் 2010 (UTC)
 • நன்றி செல்வா, "உருசியம்-உடலுறுப்புகள்" எனும் போது சுருக்கமாகவும் விளக்கமாகவும் உள்ளதே, உருசிய என்று தொக்கு நிக்கும் போது "உருசிய உடலுறுப்புகள்" என்று அமைந்தால் கருத்து வேறாக அமையக் கூடிய சாத்தியம் உள்ளது., எனவே "கன்னடம்-பெயர்ச்சொற்கள்" என்று இருப்பதே நன்று என கருதுகிறேன். நேரம் கிடைக்கையில் மேற்கொண்டு உருசிய சொற்களை அம்முறைகேற்ப இடுகின்றேன். --சி. செந்தி 09:50, 14 செப்டெம்பர் 2010 (UTC)

absolute line[தொகு]

absolute line என்பதில் ஒலிப்பு என்ற பட்டையை அமைத்துள்ளேன்.உங்களின் கருத்தென்ன?--த*உழவன் 02:22, 12 செப்டெம்பர் 2010 (UTC)

மொழிப்பட்டை[தொகு]

இந்த தளத்தில் உள்ளது போல அமைத்தால் கொடியுடைய பட்டை விக்கி நிரலுக்குள்ளும் வரும் என்பது எனது எண்ணம். எவ்வளவு அழகாக மொழிப்பட்டை தொகு வசதியுடன் இருக்கிறது. இங்கும் நமது மொழிபட்டையில் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் --த*உழவன் 17:34, 13 செப்டெம்பர் 2010 (UTC)

இப்பொழுது இருக்கும் வடிவமே அழகாக உள்ளது. பட்டை மிகவும் பெரியதாக இருந்தால் அழகாக இராது (போலந்திய மொழிப் பட்டை நம்முடையதைவிட எடுப்பாக உள்ளதாக நான் கருதாவில்லை). ஆனால் இப்பொழுது இருக்கும் பட்டைக்குள்ளேயே தொகு வசதி கொண்டு வர இயலும் என்றால், மற்றவர்களும் விரும்பினால் செய்யுங்கள். எனக்கு மறுப்பில்லை. --செல்வா 21:14, 13 செப்டெம்பர் 2010 (UTC)

தானியங்கிச் சோதனை-1[தொகு]

இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவித்தால் அது மறுசீரமைப்பில் கவனத்தில் கொள்ளப்படும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 02:17, 8 அக்டோபர் 2010 (UTC)

 • ஓரிடத்தில் விரிவாக த.இ.பக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, மேல் எண்1 பற்றிய குறிப்புகளை சோதனைச் சொற்களில் நீக்கிவிட்டேன். எனவே, ஆதரவுபகுதியில் அது பற்றிய குறிப்புகளை நீக்கினால் நலமாக இருக்கும்.எனவே, அக்குறிப்புகளை நீக்கக் கோருகிறேன். வணக்கம்.--த*உழவன் 01:28, 10 அக்டோபர் 2010 (UTC)

துஷ்யந்தன்-இவர்?[தொகு]

--துஷ்யந்தன் என்ற பெயரில் 20வது நபராக வாக்களித்துள்ளார். இவரை எந்த விக்கித்திட்டத்திலும் காணமுடியவில்லை. இதுபோன்றவரின் வாக்கினை எந்நிலையில் வைப்பது? அல்லது என்ன செய்யவேண்டும்? --த*உழவன் 17:06, 14 அக்டோபர் 2010 (UTC)

நிறப்பட்டை நீட்டம்[தொகு]

நிறப்பட்டை நீட்டத்தை பற்றிய சிறுமுயற்சியினை ஆலமரத்தடியில் தொடர்ந்துள்ளேன். மேலும், உங்கள் கருத்தறிய ஆவல்.--தகவலுழவன் 02:11, 27 பெப்ரவரி 2011 (UTC)

விக்சனரி நிருவாகி தேர்தலில் வாக்களிக்க வேண்டல்[தொகு]

வணக்கம். நடைபெறும் விக்சனரி நிருவாகி தேர்தலில் தங்கள் வாக்கு அல்லது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 06:49, 4 மே 2011 (UTC)

கனட நண்பர்களின் சொற்கோவை[தொகு]

 • தங்களின் கூட்டு முயற்சி மூலம், எனக்களித்த கனட நண்பர்களின் சொற்கோவையை, நமக்கு ஏற்றப்படி சீர் படுத்தியுள்ளேன். அப்பாவின் உடல் நிலைக்காரணமாக, அவருடன் அதிக நேரம் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிய நிலை. அவருக்கு வயது 75க்கும் மேல் என்பதால், பலவற்றை எண்ணி படிப்படியாக செயல்பட வேண்டியுள்ளது. இனி விக்சனரியில் தினம் அரைமணி நேரமாவது இருப்பேன்.அச்சொற்கோவையில் ஏறத்தாழ 5000 சொற்கள் உள்ளன.அவற்றில் 95%கூட்டுச்சொற்களே. அவர்கள் அளித்த வடிவத்தால் (ஒரு ஆங்கிலச்சொல்=தமிழ் மொழிபெயர்ப்பு) பிரித்தெடுப்பது சற்று கடினமாக இருந்தது. தானியங்கிக்கு ஏற்றவாறு ஆயுத்த நிலையில் இருக்கிறேன். நம் விக்சனரியில் ஏற்கனவே உள்ள சொற்களை, கனட சொற்கோவையில் நீக்க வேண்டும்.இவ்வாரத்தில் அதனை நீக்கி, நம் விக்சனரியில் இல்லாத சொற்களைத் தருகிறேன். சொற்வடிவம் பற்றி, நாம் மறு ஆய்வு செய்ய வேண்டுமென நினைக்கிறேன். இது குறித்துத் தொழில் நுட்ப வல்லுனரின் கருத்தறிய ஆவலாக உள்ளேன்.--தகவலுழவன் 07:10, 18 மே 2011 (UTC)

கனடிய சொற்பதிவேற்றம்[தொகு]

கனடிய நண்பரின் சொற்கோவைப் பதிவேற்றத்தை, நாம் துவங்கலாமா? இங்கு உங்கள் ஆலோசனையையும் தரக் கோருகிறேன்.--15:41, 22 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மலாய் சொற்பதிவுகள்[தொகு]

 1. மலாய் சொற்பதிவுகள் மலைக்க வைக்கிறது. அது மலைப் போல வளரும் என்றே எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி. பின்வரும் கூறுகளை கவனத்தில் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.
 2. ஒவ்வொரு சொல்லும் நீங்கள் விக்கிப்பீடியாக் கட்டுரைக்கு 5000பைட்டுகள் இருக்க வேண்டும் என்று உணர்த்தியது போல, இங்கு 500பைட்டுகள் என்பது வரையறை.
 3. உரிய தமிழ் சொற்பக்கத்தில், மலாய் சொல்லை உடனுக்குடன் இணைத்தால் நம் தமிழ் வளம் பெறும் என எண்ணுகிறேன் தமிழில் இருந்து பல மொழிகளுக்குச் செல்லும் பாதையை விரிவு படுத்த, பேராவல் கொள்கிறேன்.--04:40, 26 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • நன்றி த.உழவன்! மலேசிய நண்பர்கள் சிலரை ஊக்கமூட்டி இங்கே பங்களிக்க அழைக்கும் முகமாகவே இவற்றை நான் செய்கின்றேன். ஏறத்தாழ 2 - 2.5 நாட்களில் 100 சொற்கள் சேர்க்க இயன்றது. ஆர்வம் மிக்க மலேசிய நண்பர்கள் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் நல்ல தமிழார்வம் மிக்கவர்கள். அவர்களில் ஒரு 10 பேர் வந்து பங்களித்தாலும் ஒரு 2-3 நாட்களிலேயே ஆயிரம் மலேசியச் சொற்களைத் விக்சனரியில் சேர்க்கலாம் என்று காட்டவே இதனைச் செய்தேன். எண்ணிப்பாருங்கள், அதே 10 பேர் ஓர் இருபது முப்பது நாட்கள் உழைத்தால் 10,000 சொற்கள் உருவாக்கமுடியும். இயந்திர மொழிபெயர்ப்புகளுக்கு முதல் அடிபப்டை (முழு அடிப்படை அல்ல) இப்படியான அகரமுதலிகள் இருப்பதே. முகநூலில் (பேசுபுக்கில்) சில மலேசிய நண்பர்களுடன் உரையாடி இங்கே அழைத்துவர ஒரு முயற்சியாகவே இதனைச் செய்கின்றேன். மலாய்ச் சொற்களை உடனுக்குடன் தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப்புப் பகுதிகளில் சில நேரம் இணைத்தும் வருகின்றேன் ஆனால் சீராகச் செய்யவில்லை. அதே நேரம், தமிழ்ச்சொற் பக்கங்களையும் திருத்தியும் வருகின்றேன். இந்த மலாய்ச் சொற்கள் முயற்சி மேற்கூறிய காரணங்களுக்காக. இங்கே பைட் அளவு பார்க்க வேண்டாம் என்பது என் கருத்து, ஆனாலும் நீங்கள் சொல்லும் 500 பைட்டை மிக எளிதாகத் தாண்டும். ஏனெனில், எடுத்துக்காட்டு கூற்றுகள், தொடர்புடைய, ஒத்த சொற்கள் முதலியவற்றைச் சேர்க்கும் பொழுது கூடிவிடும். இப்பொழுது நான் செய்வது மேற்குறிப்பிட்ட நோக்கத்துக்காக. இவற்றை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டு. தமிழ்மொழிக்கு ஈடான சொற்களை, தமிழில் மொழிபெயர்க்கும் சொற்களை, முதலில் தென்னிந்திய மொழிகளுடனும், அடுத்து இந்தி, வங்காளி, மராத்தி போன்ற ஒரு 4-5 வட இந்திய மொழிகளுடனும், சிங்களம், மலாய், சீனம் போன்ற தமிழர்களோடு உறவு பின்னும் மொழிகளுடனும், பின்னர் ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், போன்ற ஐரோப்பிய மொழிகள் 5-6 உடனும், நிப்பானிய, கொரிய மொழிகளுடனும் பிணைத்துச் செய்வது நல்லது. ஆப்பிரிக்க மொழிகளில் கிசுவாகிலி முகனை (முகனையானது -முக்கியமானது). தமிழ் விக்சனரி இன்னும் விரைவாகவும் பல கோணங்களிலும் விரிவடையும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு. சொற்பொருள் துல்லியம், படங்கள் இணைப்பில் பொருத்தம் இருத்தல், வடிவமைப்பில் சீர்மை முதலிய இன்னும் பல படிகள் உயரவேண்டியன. பகுப்புகளிலும் சீர்மை கூட்ட வேண்டிய தேவை உள்ளது.--செல்வா 12:25, 26 மே 2011 (UTC)
 • "உள்ளுவதலெல்லாம் உயர்வு என்ற குறளே ஞாபகம் வருகிறது. உங்களுடன் சேர்ந்து இருப்பது, சோர்ந்த எனக்குப் புத்துணர்வாக இருக்கிறது.நீங்கள் பைட் கணக்கு பற்றிக் கூறியதைக் கவனத்தில் கொண்டேன். இப்பக்கதில் உள்ள தானியங்கி வடிவ அட்டவணைச் செயலியைப் பயன்படுத்தி, நேரத்தை வெகுவாகக் குறைக்கலாம். மலேய நண்பர்கள், நம் தளம் வந்து பங்களித்தால் மகிழ்ச்சியே. வர இயலாதவர், தானியங்கி அட்டவணைச் செயலி வடிவில் பங்களித்தால் கூட போதும். அவர்கள் பெயரிலேயே, அப்பதிவுகளை செய்ய இயலும். நம் தமிழ் விக்சனரியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதை செய்ய/ உதவக் காத்திருக்கிறேன்.சூன் மாதம் 10தேதிவரை (அப்பாவுக்கு அறுவைச் சிகிச்சை) வெளியூரில் இருப்பதால், என்னால் உதவ இயலாது. ஏனெனில், வெளியூரில் இருந்து செயல்பட அதிகம் செலவாகும். வெளியூர் செல்லும் போது உணவுச்செலவே சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே, அதற்கு பிறகு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.--12:53, 26 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • த.உழவன், நீங்கள் உங்கள் தந்தையுடன் இருந்து பணியாற்ற வேண்டிய அரிய நேரம் இது. ஆகவே அருள்கூர்ந்து இதுபற்றிக் கவலை கொள்ளாதீர்கள்! நீங்கள் செய்யும் மிக அரிய பணியை விக்கி நண்பர்கள் எல்லோரும் அறிவார்கள். நீங்கள் குறிப்பிட்ட செயலி பற்றியும் தெரிவிக்கின்றேன். உங்கள் அருமைத் தந்தையார் நலம்பெற இறைஞ்சுகிறேன். நீங்களும் அருள்கூர்ந்து சோர்வடையாமல் உங்கள் உடலையும் உள்ளத்தையும் நலமுடன் காக்கவும் வேண்டுகிறேன்.--செல்வா 13:43, 26 மே 2011 (UTC)
தெம்பளித்ததற்கு நன்றி. அப்பாவின் நினைவுகளைக் குறைக்கவே இங்கு வந்தேன். எல்லாம் நலமும் எனக்கும், தமிழ் விக்கித்திட்டங்களுக்கும் வரும் என்றே எண்ணுகிறேன். வணக்கம்--14:08, 26 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

dado2 தலைப்பு மாற்றம்[தொகு]

விக்கியிடை தானியங்கியருடன் நடந்த உரையாடல் காரணமாக, dado2 என்ற தலைப்பு விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 எனமாற்றப்பட்டுள்ளது. அத்தலைப்பில் பல உரையாடல்கள் நடந்துள்ளதால், குறிப்பிடப் பட்ட இடங்களில் அதனை மாற்றினால், அந்தந்த உரையாடல்கள் முழுமைபெறும்.(எ. கா.) இதில் பல இடங்களில் dado2 பயன்படுத்தப்பட்டுள்ளது.--02:18, 4 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் செல்வா,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வணக்கம் செல்வா[தொகு]

எப்படி இருக்கிறீர்கள்? நலமா? உங்களை இரண்டு வாரங்களாக காணவில்லை. வேலைப் பழு அதிகமா? --இராஜ்குமார் 22:00, 15 செப்டெம்பர் 2011 (UTC)

வணக்கம். நான் மலேசியாவில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த "கற்றல்-கற்பித்தல் - புதிய சிந்தனைகள்" (ஆகத்து 12-14, 2011) என்னும் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். பின்னர் இந்தியா சென்றேன். எனவே 20 நாட்களுக்கும் மேலாக பயணத்தில் இருந்தேன். செப்டம்பர் 2 அன்றுதான் கனடா திரும்பினேன்..விரைவில் மீண்டும் வருவேன். நான் நலமே. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்! நன்றி.--செல்வா 00:56, 20 செப்டெம்பர் 2011 (UTC)
 • ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.உடலும்,உள்ளமும் புத்துணர்ச்சி பெற வேண்டுகிறேன்.வணக்கம்--01:00, 20 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
நன்றி த.உழவன். வணக்கம். உடலும் உள்ளமும் நீங்கள் சொன்னவாறு புத்துணர்ச்சி பெற்றுள்ளது! மலேசியப் பயணத்தில் கோலாலம்பூர், பாரிட் புந்தார், மலாக்கா ஆகிய இடங்களிலே விக்கிப்பீடியா, விக்சனரி பட்டறை நடத்தினேன். பல புதிய செய்திகளையும் கருத்துகளையும் அறிந்தேன். நிரைய நண்பர்களைப் பெற்றேன். பலரையும் ஊக்குவித்து விக்கித் திட்டங்களில் பங்களிக்க வேண்டியிருக்கின்றேன், வழியும் காட்டியுள்ளேன். தமிழ்-மலாய்மொழி அகரமுதலி ஒன்று கிட்டியது. ஆக்கியவர்களின் ஒருவரான பேரா. எசு. குமரன் அவர்களே அன்பளிப்பாகத் தந்தார். மலாய் மொழி தெரிந்த தமிழர்கள் மிக ஏராளமாக உள்ளனர். அவர்கள் நினைத்தால் ஒரு 5-10 நாட்களிலேயே பல்லாயிரம் சொற்களைத் தொகுக்க இயலும்!!மலாய் மொழி படிவத்தையும் காட்டி எத்தனை எளிதாக சொற்களைத் தொகுக்கலாம் என்றும் காட்டினேன். பொறுமையாக ஊக்குவிப்போம் :) நல்ல உணர்வாளர்கள், விரைவில் செயலாண்மையும் காட்டுவார்கள் என்று நம்புவோம்.--செல்வா 03:29, 20 செப்டெம்பர் 2011 (UTC)
இங்கும், த.வி.யிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டது கண்டு மகிழ்ந்தோம். ஒலிக்கோப்புகளையும் அவர்களைக் கொண்டு பதிவேற்றினால் மிகச்சிறப்பாக இருக்கும்.காலத்தையும் வெல்லும், உங்கள் செயலாண்மைக்கு என் தலைகுனிந்த வணக்கங்கள். மிக்கநன்றி. --04:40, 20 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நிறப்பட்டையும், தொகு வசதியும்[தொகு]

=====மொழிபெயர்ப்பு===== நாம் 5 சமக்குறியீடுகளை அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதால் சோதனைக்காக அதனை எடுத்துக்கொண்டேன். நாம் முன்பு உரையாடிய படி, தொகு வசதியும், நிறப்பட்டையும் கொண்டு வந்துள்ளேன்.</nowiki> எடுத்துவிட்டு, முன்தோற்றம் காணக் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் கருத்தறிய ஆவல்.--19:43, 16 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

த.உழவன், நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. வேறு எங்காவது விளக்கி இருந்தால் அருள்கூர்ந்து தொடுப்புகள் தாருங்கள். --செல்வா 15:13, 17 பெப்ரவரி 2012 (UTC)
இங்கு மேலுள்ள <.nowiki> என்பதனை எடுத்து விட்டு பார்த்தால், தொகு வசதியுடன் கூடிய, மொழிபெயர்ப்பு என்ற நிறப்பட்டை வரும்.காண்க. முன்பு நாம் நிறப்பட்டையையும், தொகு வசதியையும் ஒன்றிணைக்க முடியாமல் இருந்தோம். இப்பொழுது பிறரின் துணையுடன் இணைத்திருக்கிறேன் என்பதனையே கூறினேன். இது குறித்து, இதற்குமுன் நடந்த உரையாடல்கள் விரவிக்கிடப்பதால், இப்பொழுது என்னால் எடுக்க, போதுமான நேரம் ஒதுக்கமுடியவில்லை.மற்றுமொரு நாளில், தங்கள் பார்வைக்கு எடுத்துத்தரலாமென்று எண்ணுகிறேன்.
எது எப்படி இருப்பினும், ஒரு மொழி மட்டும் வரும் பக்கங்களில், நீங்கள் கொரிய பக்கத்தினை எடுத்துக்காட்டாகக் கூறினீர்களல் அல்லவா? அப்பக்கமே சிறப்பாக எனக்கும் படுகிறது. அதனை நம் விக்சனரியில் கொண்டு வர, எடுத்த முயற்சியில் இதுவரைத் தோல்வியே. வெற்றி கிட்டின் தெரிவிக்கிறேன். வணக்கம்.--05:51, 24 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

வழக்கில் உள்ள வழு களைய முடியுமா...[தொகு]

ஐயா, வலி என்பது வலிமை, வல்லமை, இழுவை, இழு, என்னும் ஆளுமை பொருள் கொண்ட வார்த்தை. இது தற்காலத் தமிழ் வழக்கில் முறனாக Pain என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான பொருளுடன் வழங்கப்பட்டு வருகிறது. தலைவலி, காக்கை வலிப்பு என்பன முறையே தலையில் இழுத்துப்பிடிப்பதுப்போல் உள்ள வேதனையான நிகழ்வாகும், காக்கை வலிப்பு என்பது கை கால்கள் கட்டுப்பாடு இழந்து இழுப்பது என்பன போன்ற பொருட்களைத் தர வல்லது என்பது என் கருத்து. இக்காலத் தமிழர்கள் தாங்கள் உரையாடுவதால் அதே பொருளில் விக்கிப்பீடியாவில் பொருத்துகின்றனர். எல்லா தவறான வார்த்தைகளையும் விக்கிப்பீடியா ஏற்றுக்கொள்ள வேணடுமா அல்லது நம் மக்கள் பிழை களைந்து உரையாடுதல் என்பது முதன்மையான தேவை என்பதை கருத்தில் கொண்டு பிழையைத் திருத்தும் பணியும் விக்கிப்பீடியாவில் மேற்கொள்ளலாமா என்பது எனக்கு நீண்ட நாள் ஐயமாகவே உள்ளது. இதற்கு நல்ல மாற்று கிடைத்தால் சிறப்பாக இருக்கும். இல்லை இது நம் மொழிக்கு ஏற்பட்ட மாறா இழுக்கு என நினைத்து விடுவதா என்பது எனக்கு தெரியவில்லை. இது போன்று உச்சரிப்பு சிரமத்தால் காலத்தால் மாற்றப்பட்டவை உழுந்து - உளுந்து; பவழம் - பவளம். ஐயா, காலமாற்றம் என்பது தேவையானதே. ஆனால், இது மொழிச்சிதைவு என எனக்குத் தோன்றுகிறது. உங்களின் கருத்தைப் பகிர்ந்தால் எனக்கு உதவியாய் இருக்கும். நன்றியுடன். --சிங்கமுகன் (பேச்சு) 14:49, 25 மே 2012 (UTC)

லகர,ளகர, ழகர ஒலிப்புச் சிதைவு போதிய பயிற்றுமை (பயிற்சி தருவது) இல்லாமையால் சிதைந்து வருகின்றது. இதனை மிக எளிதாகச் சீர் செய்யலாம். தொடக்கக்கல்விக் கூடங்களில் (இவை ஒரு 10000 போல் தான் இருக்கும் என நினைக்கின்றேன்) வலியுறுத்தி நல்ல ஒலிப்பறிந்த ஆசிரியர்களை அமர்த்துதல். ஊடங்கங்களிலே பிழையாக ஒலிப்பவர்களை அழுத்தம் தந்து மாற்றச் செய்யலாம். இவை எல்லாம் நடக்குமா நடக்காதா என்பது மக்களி திறத்தைப் பொருத்தது. pain என்பதற்கு நோவு(தல்) என்னும் சொல்லும் உள்ளது வலி என்பதும் மிகவும் சரியான சொல். வலித்தல் என்றால் இழுத்தல் என்னும் பொருள்தான், ஆனால் அதுவே வலிக்குக் 9நோவுதலுக்குக்) காரணமாக உணரப்படுவது. எனவே வலி என்றால் நோவுதல் என்பது மிகவும் சரியான பொருளே. இது முரண் இல்லை! பிழை இல்லை!! காக்கா வலிப்பு என்பது கால்-கை வலிப்பு என்பதன் மரூஉ. கால்-கை -> காக்கை ->காக்கா.--செல்வா (பேச்சு) 15:08, 25 மே 2012 (UTC)
நன்றி ஐயா, மேலும் அதற்கு இணையான வார்த்தைகள் சில. குடைச்சல், உளைவு, வருத்தம் என்பன. இது இவ்வாறு இருக்க பெண் என்பதை பொண், பெண்பிள்ளை என்பது பொம்பளை என மாற்றம் கண்டது. ஆனால் பொம்பளைப்பிள்ளை எனவும் புழக்கத்தில் மாறி வருகிறதே. இது குறித்து உங்கள் கருத்து ஐயா.--சிங்கமுகன் (பேச்சு) 15:19, 25 மே 2012 (UTC)

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:07, 3 சூலை 2014 (UTC)

நீக்கலாமா?[தொகு]

வார்ப்புரு:ஒலிப்பு-2 பயன்பாடற்ற இவ்வார்ப்புருவை நீக்கலாமென்று எண்ணுகிறேன். தங்களின் எண்ணமறிய ஆவல்.-- உழவன்+உரை.. 00:45, 13 ஏப்ரல் 2015 (UTC)

meaning[தொகு]

Hi, Selva. Can you tell me what this means in English? Someone asked me, but I can't read it.

ஜம்மூஸ்டோபிணிகடாட் பெட்ராக்ஸாமிவ்லட், கோழிற்றொரு பிமுலகினிற்: போட்டிரணம் இஸ்துட்ஜ்ககள், சரிகோவில் இன்டிரோட்டுவம்
Thanks. Stephen G. Brown (பேச்சு) 15:06, 12 நவம்பர் 2017 (UTC)
That is pure gibberish. Seems to be some transliteration of something into Tamil script (but even this is unlikely).--செல்வா (பேச்சு) 23:36, 12 நவம்பர் 2017 (UTC)
Thanks, Selva. I'm not surprised that it's gibberish. Stephen G. Brown (பேச்சு) 19:36, 14 நவம்பர் 2017 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:செல்வா&oldid=1884601" இருந்து மீள்விக்கப்பட்டது