பயனர் பேச்சு:Pazha.kandasamy/2009

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Pazha.kandasamy/2009!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--trengarasu 06:42, 21 ஆகஸ்ட் 2009 (UTC)

உங்கள் பங்களிப்புகள்[தொகு]

உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் விக்சனரிக்கு தேவை. உங்கள் பங்களிப்புகளை கவனித்த போது அவற்றில் சில மாற்றங்களைச் செய்தால் நல்லது போல தோன்றியது. பிறப்பு என்ற பக்கத்தில் நான் செய்த மாற்றங்களை கவனிக்கவும். இந்த பக்கத்தை பயன்படுத்தினால் தேவையான தலைப்புகள் துணைத்தலைப்புகள் என்பன தானாக வந்துவிடும், நீங்கள் பொருளையும் மொழிபெயர்ப்பையும் மட்டும் இணைத்தால் போதும். நன்றி--trengarasu 12:32, 27 ஆகஸ்ட் 2009 (UTC)

பகல் கனவு, செலவினம் பக்கங்களைப் பார்த்தேன். நான் குறித்த மாற்றங்களுடன் புதிய பக்கங்களை ஆக்குவது கண்டு மகிழ்ச்சி. "அவகளே" போன்ற மதிப்புச் சொற்கள் நம்மிடையே வேண்டாமே. சொற்கள் நீக்கப்படுவது பற்றி: விசமத் தொகுப்புக்களையே நீக்கி வருகிறேன். பக்கத்தை ஆக்கியவர் தொடர்ந்து பங்களிப்பவராக இருந்தால் அவகாசம் கொடுத்த பின்பே நீக்குகிறேன். சில பிழையான எழுத்துக்கூட்டல் காரணமாக நீக்கினேன். இனிமேல் காரணத்தை குறித்துவிட்டு நீக்குகிறேன். நன்றி.--trengarasu 00:36, 28 ஆகஸ்ட் 2009 (UTC)

வரவேற்புரை[தொகு]

ஓங்குக தமிழ் வளம் !

Heart-beat.gif
Bouncywikilogo.gif
வாங்க! Pazha.kandasamy/2009,
 • நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!! தொடரும் உங்களது ஆக்கங்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.
 • இனி நானும் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன். இங்ஙனம் நாம் பங்களிக்கும் போது, நமக்கு முன்னவர் செய்த செயல்விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கருதுகிறேன். அதுபற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 • ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.
 • இதற்கு முன் நம் விக்சனரியின் மொத்த சொற்களின் எண்ணிக்கையை,
ஒரு இலட்சத்திற்க்கும் மேல் இருந்ததாக விக்கிக் காட்டியது. ஆனால், அது தற்போது500 பைட்டுகளுக்குக் கீழுள்ள சொற்களை சிறந்த பக்கமாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதனைப் பற்றி விரிவாக, இப்பக்கத்தில் காணலாம். எனவே, நாம் உருவாக்கும் புதிய பக்கங்கள் 500 பைட்டுகளுக்கும் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • ஒவ்வொரு பக்கத்திலும் கூடுமானவறை விக்கி ஊடக நடுவத்தின் படங்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போது அதிக பைட்டுகள் கிடைக்கும். மற்ற விக்சனரி பக்கங்களை விட, தமிழ் விக்சனரி அழகாகவும் இருக்கும்.
 • (எ.கா) - அங்கே
நன்றி. Tamil welcome sign வணக்கம்.PNG--த*உழவன் 15:10, 9 செப்டெம்பர் 2009 (UTC){தொடர்புக்கு..}

நல்வார்தைகளுக்கு நன்றி[தொகு]

முன்னோடிகள் வழியை பின்பற்றுவதில் எனக்கு முழு உடன்பாடே. புதிதாகச் சேர்ந்துள்ளதால், இன்னும் சரியான வடிவமைப்பு எது எனப் புலப் படவில்லை. இருந்தாலும், ஆக்கங்களை அளிக்கத் தொடங்கவேண்டும் என்று துவங்கிவிட்டேன்.

நம்முடைய ஆக்கங்களை ஒருவருக்கொருவர் சரிபார்ப்பதும் முக்கியம்

நன்றி, கந்தசாமி


ஓ.. மிக்க மகிழ்ச்சி!

 • முன்னர் தத்தல் என்று எழுதியிருந்தேன். அதனை, வரலாறு என்னும் தத்தல் என்று படிக்கவும். கவனக்குறைவுக்கு மன்னிக்கவும்.
 • உங்களுடன் உரையாட வேண்டுமென்று, நீங்கள் வந்த சில நாட்களிலிருந்து எண்ணினேன். இன்று தான் நிறைவேறியது. உங்களைப் போலவே நானும், ஆர்வத்தை மட்டும் துணையாகக் கொண்டு வந்தேன். பல சொற்களை கவனிப்பதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்.அங்கே என்ற சொல்லிலும், சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. கறையான் என்ற சொல்லினையும் காணவும்.
 • நீங்கள் ஒவ்வொன்றாக கேளுங்கள். நான் கற்றதை, உங்களுக்குக் கூறுகிறேன்.அதற்கு முன் உங்கள் பயனர்:Pazha.kandasamy பக்கத்தில், உங்களைப் பற்றிய அறிமுக உரையைக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவரா?த*உழவன் 16:37, 9 செப்டெம்பர் 2009 (UTC)

அனுபவக் குறிப்புரைகள்[தொகு]

உங்களிடம் எனது அனுபவங்களைக் கூறுவதன் மூலம், உங்களின் பங்களிப்புகள் மேலும் சிறக்கும் என நம்புகிறேன். அவ்வப்போது கூறுவதைக் கவனிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே, நம்மை போல் பலர் பங்களித்துள்ளனர். அவர்களின் உழைப்பை, நம் உழைப்போடு இணைக்க வேண்டும். அதுபற்றி படிப்படியாகக் காண்போம்.

அ) முதலில் விக்கி ஊடக நடுவத்தினைப் பயன்படுத்துவது பற்றி காண்போம்.

அங்குள்ள file பெயரை, இங்கு நகல் எடுத்தாலே, அப்படம் இங்கு தெரியும். அதே படங்களை இங்கு பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. இதனை எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், நம் தளத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான, பயனர்:Trengarasu ஆவார்.

(எ.கா)

நீங்கள் உருவாக்கிய போட்டி என்ற சொல்லினை, உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

போட்டி என்பதற்கு பல ஆங்கிலச்சொற்கள் மொழிபெயர்ப்பாக இருந்தாலும், competition என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப் படுவதால், அச்சொல்லுக்குரிய படங்களை, விக்கி ஊடக நடுவத்தில் தேடினால், சிறிய அளவில் நிறையபடங்கள் கிடைக்கும்.

அதில் நாம் பொருத்தமாகக் கருதும் படத்தின் மீது, சொடுக்கியை அழுத்தும் போது, அப்படம் பெரியதாகத் தெரியும். அப்பொழுதே, file:பெயரைக் காண முடியும். அங்கு நகலெடுத்த கோப்பின் பெயர்,Archery competition.jpg என்பதாகும்.

இப்பெயரினை, நான் ஏற்கனவே குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ள இவ்வரியில், 8 என்ற எண்ணுள்ள இடத்தில் ஒட்டி விடுவேன். [[file:8|thumb|right|154px|'''{{PAGENAME}}''']] இதனால் நேரமும், சில இடங்களில் ஏற்படக் கூடிய பிழைகளும் தவிர்க்கப் படுகின்றன.

'ஏற்படக் கூடிய பிழைகள்'

1) படிமம் என்ற சொல்லுக்குப் பதிலாக, file என்ற சொல்லினை தேர்ந்தெடுக்கக் காரணம், தமிழ் அல்லாத விக்கிகளில் பயன்படுத்தும் போது, இப்படிமம் அங்கும் தெரியும். படிமம் என்று பயன்படுத்தினால், அது தமிழ் அல்லாத விக்கிகளில் தெரிவதில்லை.

2) நான் Nhm writer பயன் படுத்துகிறேன். அதில் தட்டச்சும் போது படிம்ம் என்று முதலில் தெரியும். பின்னர் அப்பிழையை மாற்றவேண்டும். எனவே, file என்ற சொல்லையேப் பயன்படுத்துகிறேன்.

3) 154px என்பதனை பொது அளவாகக் கொண்டால், அது 95% இடமின்மையால், சொற்களைப் பாதிப்பதில்லை. 210px என்பதனை குறைந்த விவரச் சொற்களுக்குப் பயன்படுத்துகிறேன். இந்த px அளவுகளை மாற்றுவதினால், நாம் விரும்பும் அளவுப் படம் பெரிதாக்கலாம் () சிறிதாக்கலாம்.

4){{PAGENAME}} என்பதனைப் பயன்படுத்தினால், அது தானாகவே, அப்பக்கத்திற்குரிய சொல்லின் பெயரைப் போட்டுக் கொள்ளும். நாம் அதற்காக தட்டச்சும் நேரம் மீதமாகும்.

ஆ) ஆதாரம் பற்றியவைகள் விவசாயி என்ற சொல்லிலுள்ள ஆதாரம், பெரும்பாலான தமிழ் சொல்லுக்கான மூலமாக விளங்கும். சிறிய இடைவெளி கூட பிழைகளைக் காட்டும்.கவனமாகக் கையாளவும்.

ஆதாரப் பிழை

ஒவ்வொரு முறையும் சென்னை இணையப் பேரகரமுதலிக்கானத் தொடுப்பைச் சொடுக்கி, இணைப்பைச் சரி பார்க்கவும்.அதில் {{PAGENAME}}க்கு அடுத்து, இடைவெளி (அநேகமாக நகல் எடுக்கும் போது) வரும். {{PAGENAME}} என்பதற்க்கும், அடுத்துள்ள &matchtype என்பதனையும் இடைவெளி இல்லாமல் செய்தால், ஆதாரத்திற்க்கானத் தொடுப்பு ஒழுங்காகும்.

இ) பகுப்புகள் பற்றியவை சிறப்பு:Categories என்ற பக்கத்தில், பல்வேறு பகுப்புகளைக் காணலாம். அனைத்துச் சொற்களுக்கும, ஒரே மாதிரியானப் பகுப்பு பொருந்தாது. விவசாயி என்ற சொல்லில் ஏற்படுத்தப்பட்ட பகுப்பினைக் கண்டறியவும்.

இவை அடிக்கடிப் பயனாகும் பகுப்புகளாகும். அந்தந்த பகுப்புரையைக் கண்டுணர்ந்த பின்புப் பயன்படுத்தவும். அப்படியே நகலெடுத்து ஒட்டவும். சிறிய இடைவெளிக்கூட பகுப்புகளைச் சிவப்பாகக் காட்டி, அப்பகுப்புகள் இல்லாதது போல காண்பிக்கும்.

[[பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள்]]

[[பகுப்பு:ஆங்கில வினைச்சொற்கள்]]

[[பகுப்பு:இந்தி பெயர்ச்சொற்கள்]]

[[பகுப்பு:தமிழ் மொழி]] இப்பகுப்பில் பல உபப்பகுப்புகளைக் காணலாம்.

[[பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள்]]

[[பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள்]]

[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]

[[பகுப்பு: வேற்றெழுத்து வேறுபாடுகள்]]

[[பகுப்பு:வந்தேறிச் சொற்கள்]]

[[பகுப்பு: உடற்பகுதிகள்]]

[[பகுப்பு:பழங்கள்]]

தங்களின் ஆங்கிலப் பெயர்சொற்களுக்கு, [பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள்] என்பது மட்டும் போதும். ஏனென்றால், ஆங்கில மொழி என்பதன் துணைப்பகுப்புத்தானே, [பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள்] என்பது. பெயர் சொற்கள், வினைச்சொற்கள் என பகுக்க முடியாத நிலையில் இருக்கும் போது, [பகுப்பு:ஆங்கில மொழி] என்று பொதுவாக பகுக்கக் கேட்டுக்கொள்கிறேன். நாளுக்கு நாள், உங்களது திறன் செம்மையாகிறது. ஒரு சொல்லுக்கு பல பயன்பாடுகள் இருப்பினும், முதன்மையானதை அல்லது அனைவரும் கவனிக்க வேண்டிய பயன்பாட்டினை பதிவு செய்தால் மட்டும் போதும். ஏனெனில், இப்போதைக்கு நமது தேவை. 500 - 600 பைட்டுகள் போதுமென்பது என் கருத்து.த*உழவன் 06:17, 5 அக்டோபர் 2009 (UTC)

(ஈ) {{விக்கிப்பீடியா}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தினாலே, அது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இணைப்பை ஏற்படுத்தும். தங்களின் நேரமும் மீதமாகும்.(எ.கா) புளிப்பு

தகவலுழவனின் அனுபவ வித்துக்கள்[தொகு]

தங்களின் அனுபவங்களை இங்கே விதைப்பதற்கு நன்றி. தொடர்ந்து விதையுங்கள், நல்ல அறுவடை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

படங்களை பதிவேற்றாமல் இணைக்க இயலும் என்று நினைத்தேன். ஆனால் சரிஆக முயற்சி செய்யவில்லை. இனி செய்கிறேன்.

கந்தசாமி

 • தங்களின் அனுமதிக்கு நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் வாக்கியங்களை எடுத்துக்காட்டுகளாக எழுதுவது அருமை. நான் முன்பு, ஒருசில சொற்களில் எழுதினேன். ஆங்கில அனுபவ அறிவு, எனக்குக் குறைவு என்பதால் விட்டு விட்டேன். தொடரட்டும் உங்களின் சேவை. த*உழவன் 15:29, 10 செப்டெம்பர் 2009 (UTC)

கர்ப்பஸ்திரீ போன்ற வடமொழிச்சொற்களைத் தவிர்க்கவும். இதில் பகுப்பு மாற்றம் செய்துள்ளேன். ஜன்னல் போன்ற அயலகச் சொற்களுக்கு அவசியம் தேவை என்பது என் கருத்தாகும். கருவிற்கான படமாற்றங்களும் செய்துவிட்டேன்.த*உழவன் 07:16, 18 செப்டெம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

படிம வேண்டுகோள்[தொகு]

 • உங்களின் மாராப்பு சொல்லுக்கான தாவணி படம் கண்டேன். அது போல நிறைய படங்கள் விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்றப் பட வேண்டும். உங்களுக்கு அதற்குரிய நேரம் இல்லையெனில் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நான் photoshopல் தேவையெனின் மெருகேற்றி, அந்நடுவத்தில் பதிவேற்றம் செய்கிறேன். இங்கு பதிவேற்றம் செய்யும் போது, பின்னாளில் நீக்கப்படலாம். அங்கு நிறைய விதிகள் பின்பற்றப் படுகின்றன. இங்கு அங்ஙனம் இல்லை. எனவே, நீங்கள் உரிமை மீறல் இல்லாப் படங்களைப் பதிவேற்றலாம். அல்லது எனக்கு அனுப்புங்கள். நன்றி. த*உழவன் 15:22, 12 செப்டெம்பர் 2009 (UTC)
 • நன்றி! இணையத்தில் தேடி உரிமை மீறல் இல்லாத படமா என்று சரி பார்க்க நேரமாகிறது. தரிசனம், குட்டிச்சுவர், கட்டை/குதிரை/மாட்டு வண்டி, இது போல் தமிழகத்துக்கே உரிய, சொற்களால் விளக்க இயலாத பதங்களுக்கு படங்கள் கிடைக்கும் போது பதிவேற்றம் செய்ய முடிந்தால், செய்து தரவும். உதவிக்கும் ஆர்வத்துக்கும் நன்றி - கந்தசாமி
 • உங்களைப் போன்றே நானும் எண்ணி சில படங்களை விக்கி ஊடக நடுவத்தில் சேர்த்துள்ளேன்.

பொதுவாக, பின்வரும் இணைப்புகள் உதவும்.

 1. தமிழ் மொழி
 2. தமிழ்நாடு

தொகைச் சொற்கள்[தொகு]

[[பகுப்பு:தொகைச் சொற்கள்]] என்ற இப்பகுப்பில் பேரிளம் பெண், பெதும்பை..போன்றவற்றினை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு சொல்லில் பட்டியலிடக் கேட்டுக் கொள்கிறேன். த*உழவன் 05:18, 20 செப்டெம்பர் 2009 (UTC)

எண்ணிக்கைக்கூட்ட[தொகு]

சிறிது நேரத்திற்கு முன் 4 ஆங்கில வாக்கியங்களைச் சீர் செய்திருந்தீர்கள். அதற்கு முன் எண்ணிக்கை 99,321 நேரம் - 5.06 UTC. எண்ணிக்கையைக் கூட்ட அவற்றில் பகுப்பு மற்றும் அயல் மொழிக்கான இணைப்புகள் கொடுத்துப் பார்த்தேன். ஏற்கனவே உள்ள 4 சொற்களும் எண்ணிக்கை 99,326 என கூடி விட்டது. acerbic என்ற சொல்லால் 325 என்பதற்கு பதில், 326 என வந்துள்ளது கவனிக்கத் தக்கது. இந்நிகழ்வு மேலும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். த*உழவன் 06:15, 28 செப்டெம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

 • நிறைய வார்த்தைகளைச் சீர் செயது வருகிறோம், எண்ணிக்கை ஏன் அதிகரிக்க வில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருப்பதை ஆய்வதற்கு நன்றி. நீங்கள் கண்டுபிடிப்பதை நிச்சயம் தெரிவியுங்கள். (பகுப்பு பகுதியை நான் சரி வர இன்னும் செய்வதில்லை. பழகிக்கொள்ள வேண்டும்). Pazha.kandasamy 06:43, 28 செப்டெம்பர் 2009 (UTC)
 • உங்களின் படைப்புகள் தரமாக இருக்கிறது. உங்களைப்போல எழுத எனக்கு எண்ணம். ஏனெனில், தரேமே, நீரந்தரமல்லவா? ஆங்கில விக்சனரியை பெரும்பாலான சொற்பக்கங்கள் அதிக பைட்டுகளுடன் இருக்கிறது. தமிழிலுள்ள சொற்களில், அதிக பைட்டுகள் தங்களின் பங்களிப்பே. அவ்வப்போது தொடர்ந்து வருக!த*உழவன் 02:26, 8 அக்டோபர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
 • உங்களின் படைப்புகளில், இனி ஆதாரம் என்பதனை ஆதாரங்கள் என்ற குறிப்பிட கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரத்தைக் தருகிறீர்கள்.
 • சிதை என்ற சொல்லில், படிப்பதற்கு வசதியாக சில மாற்றங்களைச் செய்துள்ளேன். அதிலுள்ள சிதை1, சிதை2, சிதை3 என்பதிலுள்ள எண்களை மற்றும் அதற்குரிய மேல் நோக்கிய அம்புக்குறிகளை, அழுத்திப் பார்க்கவும். உங்கள் கருத்தென்ன?
 • த*உழவனே! 1, 2 ...மேற்குறியீடு மிகப் பொருத்தமாக இருக்கும். அவ்வாறே பயன் படுத்துவோம். ஆதாரங்களும் அப்படியே! நன்றி Pazha.kandasamy 06:35, 10 அக்டோபர் 2009 (UTC)

வாருங்கள் கந்தசாமி![தொகு]

தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்கள் பங்களிப்புகள் சிறப்பாக வருகின்றன. மேலும் பங்களிக்க வேண்டுகிறேன். -- பரிதிமதி 16:35, 27 செப்டம்பர் 2009 (UTC)

 • நன்றி பரிதிமதி Pazha.kandasamy 06:43, 28 செப்டெம்பர் 2009 (UTC)

இலகரத்திற்கான கரம் உங்களுடையதே?[தொகு]

 • உங்களால் தான் எனக்குள் அவ்வேகம். அவ்வெல்லையை, நீங்கள் தான் கடக்க வேண்டும் என்று எனக்குள் ஆசை. எனவே, இலகரத்திற்கான இறுதி 5 சொற்கள், நீங்கள் தான் செய்யணும். நான் அதற்குரிய படங்களைச் சேர்க்க முயலுவேன்.த*உழவன் 07:07, 14 அக்டோபர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
 • த*உழவனே! நன்றி! நான் கடைசியில் வந்த கடைக்குட்டி. நீங்கள் உலாவிக் கடைகளில் தமிழுக்கு உழைக்கும் 'கடை'க்குட்டி. அதைக் கேட்டபோதே எவ்வளவு உந்துதல் உங்களுக்கு என்பது எனக்கு சொல்லாமலே புரிந்தது, அதனால் இலகரச் சொற்களை நீங்கள் எழதுவது சாலப் பொருத்தம் என்பது என் கருத்து.
       பலகரம் கோர்த்துப் பணி ஆற்றினர்
       இலகரம் என்ற இலட்சியம் அடைய! - இன்றைய 
       இல கரம் நிலை இனி மாறி 
       சிகரம் தாண்டி செல்க நம் தமிழே!

Pazha.kandasamy 07:29, 14 அக்டோபர் 2009 (UTC)

இலகரம் எட்டுவதற்கான வாழ்த்துக்கள்[தொகு]

கந்தசாமி! தமிழரனைவருக்கும் தீபத்திருநாள் பரிசாக நம் விக்சனரி நமக்கு இலகரத்தைத் தருவதற்கு உதவியமைக்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும். -- பரிதிமதி 03:10, 15 அக்டோபர் 2009 (UTC)

 • என் மின்னஞ்சல் பற்றி என்ன பிழை எனக்குப் புரியவில்லை. THA (dot) UZHAVAN (at) GMAIL( dot) COM அனைத்தையும் சிறிய ஆங்கில எழுத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள். தூக்கம் தள்ளுகிறது. இன்னும் 10 நிமிடங்கள் காத்திருக்கிறேன்.இப்பொழுது நண்பனின் வீட்டிலிருந்து தட்டுகிறேன்.த*உழவன் 18:29, 15 அக்டோபர் 2009 (UTC)

Tamil 100,000+[தொகு]

வணக்கம் The following message is reproduced for your kind notice please. --TRYPPN 09:36, 30 நவம்பர் 2009 (UTC)


Please note that Tamil is having more than 101,046+ words. we request you to kindly move Tamil in the 100,000+ Category.

--TRYPPN 00:16, 29 November 2009 (UTC)

please send a message, once the job is done, in my user talk page

http://en.wikipedia.org/wiki/User:TRYPPN

Regards and Best wishes.

Done. —Stephen 03:46, 30 November 2009 (UTC)

Thank You for moving TAMIL to 100,000+ Category on English Wiktionary mainpage. --TRYPPN 05:14, 30 November 2009 (UTC)


சுவடுகள்[தொகு]

Mangga indramayu 071007-0327 rwg.jpg

1) தலைமையகத்தின் ,(Pazha.kandasamy) ஆங்கில பெயரின் பதிவேடு

2)தலைமையகத்தின் ,(பழ.கந்தசாமி) தமிழ் பெயரின் பதிவேடு

எனவே, உங்கள் காலச்சுவட்டினை இழக்காதீர்கள்.

ஆங்கிலப்பெயரில் புகுபதிகை செய்த பிறகு மேலே என்விருப்பத்தேர்வுகள் என்ற தத்தலை சொடுக்கி, அங்கு கையொப்பம் என்ற இடத்தில் தமிழில் உங்கள் பதிவு செய்யுங்கள்.

அப்பொழுது உங்கள் பதிவுகளையும் இழக்கமாட்டீர்கள். உங்கள் பெயரும் தமிழில் தெரியும்.

ஒரு கல்லுல இரண்டு மாங்கா !

த*உழவன் 18:51, 15 அக்டோபர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


 • மேலுள்ள Help us make it easier to add pictures to Wiktionary by taking a 2-minute survey! என்ற விளம்பரத்தில், உங்கள் கருத்துக்களை பதிவு செய்து விட்டீர்களா?த*உழவன்
 • கருத்து பதிவு நீங்கள் சொல்லியபின் செய்தேன் பழ.கந்தசாமி 07:03, 28 அக்டோபர் 2009 (UTC)

சிரம் என்பதிலுள்ள..[தொகு]

சிரம் என்பதிலுள்ள மாற்றங்கள் சிறப்பாக இருக்கிறதா? இங்ஙனம் வடிவமைப்பதற்குக் காரணம், படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்ற நோக்கமே ஆகும். த*உழவன் 06:28, 26 அக்டோபர் 2009 (UTC)

முதற்பக்க மாற்றங்கள்[தொகு]

1)தேடுசாளரத்தின் அமைப்பு எப்படி உள்ளது?த*உழவன் 07:27, 1 நவம்பர் 2009 (UTC)

 • முதல் பக்கம் முதன்மைப் பக்கமாகத் தொடங்கிய முதல் முயற்சிக்கு நன்றி பழ.கந்தசாமி 04:51, 2 நவம்பர் 2009 (UTC)

2) நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், எளிமையாகவும் அசத்தலாகவும் இருக்கிறது. பகுப்பு:கருவச் சொற்கள் என்பதிலுள்ள சொற்களுக்கு ஆங்கில மற்றும் தமிழ் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். வாரம் 5 சொற்கள் செய்தால் நலம். என்னுடைய செயல்களுக்கு நன்றியுரைத்து, என்னை நெளிய வைக்காதிங்க! பங்களிப்பது என் கடமை, என்றே எண்ணி செயல்படுகிறேன். த*உழவன் 05:49, 2 நவம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

Index.gifதொடரட்டும் முதற்பக்க மாற்றங்கள். அருமை. எப்போதும் 1 அல்லது 1.5 மணி நேரமே இணைய இணைப்பில் இருப்பேன் என்பதனை நீங்கள் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது வெளியூரில் இருக்கிறேன். மீண்டும் பார்ப்போம்.வணக்கம்த*உழவன் 07:52, 20 நவம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

ஒரு சொல் ஒரு படம்[தொகு]

ஒரு சொல் ஒரு படம் ---> Wiktionary:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல் இதை விரிவு படுத்தலாமா? முன்பு இவ்வாறு தானே கூறியிருந்திங்க? த*உழவன் 07:49, 5 நவம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

 • இது மாதிரி என்று சொல்லலாம்; ஆனால், வகைப்படுத்தப்பட்ட தொகுப்புகளில் படங்களுடன் தரப்பட்டால் மிகப் பயன்படும். உரையாடுவோம் பழ.கந்தசாமி 21:00, 5 நவம்பர் 2009 (UTC)

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:23, 9 டிசம்பர் 2009 (UTC)

Original message கோளம் என்று நீங்கள் ஆரம்பித்தப் பதிவினை சோதனை முயற்ச்சிக்காக மேம்படுத்தியுள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன். என்னுடைய கருத்து வருமாறு;- 1) ஒவ்வொருசொல்லுக்கும் வலப்பக்க மேல் மூலையில் மிகப் பொருத்தமான ஒரு படம் இருந்தால் நலம். 2) பிற படங்கள் சொல் இறுதியில் இருந்தால் நலம். அங்கும் நான்கு படங்களுக்கு மேல் வேண்டாம்.

REPLY

தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி, அவர்களுக்கு, வணக்கம். தங்களது கருத்துக்களை கவனித்தேன்.

 • தங்களது கருத்தில் சறிது மாற்றம். அதாவது, மிக அதிகமாக 8 படங்களை சேரக்கலாம் என்று எண்ணுகிறேன்.
 • யாராவது 8 படங்களுக்கு மேல் சேர்த்தால் அதனை மற்ற பயனர்கள், 8-க்கு மேற்பட்ட, தேவை அற்ற படங்களை நீக்க அனுமதிக்கலாம்.
 • கோளம் --- என்று ஆரம்பித்தப் பதிவினை சோதனை முயற்ச்சிக்காக மேம்படுத்தியுள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.

--- என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

பக்க வடிவமைப்பு: கருத்துகள்[தொகு]

நன்று. எனது கருத்துக்கள் ---

 • நான் கடந்த சில நாட்களாக பல சொற்களை பகுப்பு செய்யும் போது கவனித்தேன். (Difficult to type in Tamil. So, I am switching over to English to Save Time. Please pardon me.)
 • Each and every word is having different FORMAT. The appearance of the PAGE is not having any particular STANDARD.
 • My suggestion is that in the initial stage of CREATING the word, the proper TEMPLATE should be provided. Then only we can maintain a standard.
 • Now yourself mentioned that you have improved the page by inserting the better format. I appreciate that, but as all of know; now we are having more than 1 Lakh words.
 • Is it possible to improve those number of words which are really requiring major “clean up” in formatting.
 • If any separate list for “clean up required” provided, then any user can try to clean those pages.
 • For the future development I request that we should try for a appropriate TEMPLATE FOR ADDING NEW WORDS. This is the real requirement.
 • How to Create Template and How to attach with the New word Creation Template. --- If I get little bit idea on the subject, then I can put my effort to develop and contribute.

I expect the reply from both தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி.

Thank you for reading upto this. நன்றி. வணக்கம்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:23, 9 டிசம்பர் 2009 (UTC)


 • TRYPPN அவர்களே! தங்கள் கருத்து மிகவும் சிறந்தது; செய்யப்பட வேண்டியது. பலபேர் பல வருடங்களாகத் தொகுத்தது, தானியங்கி முதலியவை தான் பலவிதமான வடிவமைப்புக்குக் காரணங்கள். மற்ற விக்சனரிகளிலும் இதே பிரச்சனைகள் இருக்கின்றன. பழைய பதங்கள் 100,000 தாண்டிவிட்டதால், அவற்றை ஒரே வடிவத்த்துக்குக் கொண்டு வர சில காலமாகலாம். அவ்வப்போது பழையவற்றின் வடிவமைப்பை மாற்றியும், புதியவற்றை ஒரே வடிவிலும் தொகுத்து வருகிறேன், இருப்பினும், நாம் அனைவரும் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தவேண்டும். அதுவும் முக்கியம்.
 • த*உழவன் கருத்தையும் கேட்டு நாம் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தலாம்.
 • நீங்கள் மென்பொருள் வல்லுநர் என்றால், இந்த ஆக்கத்திற்கு எளிதான வழியிருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி பழ.கந்தசாமி 22:33, 9 டிசம்பர் 2009 (UTC)

கருவச் சொற்கள்[தொகு]

TRYPPN! நீங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வார்த்தைகளைச் சரிபார்ப்பதற்கு நன்றி! ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறோம். ஒரு சிறிய வேண்டுகோள்.

கருவச் சொற்கள் என்ற பகுப்பு இருந்தால் அவற்றை நீக்கவேண்டாம் என்பது என் கருத்து. அவை அடிப்படையான வார்த்தைகளைக் குறிக்கும் பகுப்பு. தேவையான பகுப்புகளை வேண்டுமென்றால் புதிதாகச் சேர்த்துக் கொள்ளவும்.

தங்கள் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் மீண்டும் மிக்க நன்றி! பழ.கந்தசாமி 00:05, 8 டிசம்பர் 2009 (UTC)


--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:32, 8 டிசம்பர் 2009 (UTC)

Pazha.kandasamy|பழ.கந்தசாமி அவர்களுக்கு, வணக்கம். தங்களது கருத்துக்களை கவனித்தேன். நான் தற்போது, பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள், பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள், பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள் --- ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். மேற்கண்ட பகுப்புக்களை மிகுந்த கவனத்துடன் செய்துகொண்டிருக்கிறேன். பழைய பகுப்புக்களை நீக்காமல், அதனுடன் 1,2,3 எழுத்து சொல் பகுப்புக்கள் இல்லாமல் இருந்தால் மட்டும், இந்த 1 / 2 / 3 எழுத்து சொல் பகுப்புக்களை இணைத்துவருகிறேன்.

வரும் நாட்களில் தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்கிறேன். தங்களது கருத்துக்களுக்கு நன்றி. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:32, 8 டிசம்பர் 2009 (UTC)


2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை[தொகு]

Fotothek df pk 0000319 027 Sommer 1947 und Nov. 1948.jpg
எப்படி இருந்த நான்!
இப்படி ஆயிட்டேன்!!

ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.

ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய ரவியை மறவேன்!

தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

Yellow pansy.jpg
.த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


தானியங்கிப் பதிவேற்றம்[தொகு]

 • நிங்கள் தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்ய துவங்கிவிட்டீர்களென நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நாளை அரட்டை அரங்கத்தில் பேசலாமா? எந்த UTC நேரம் என்பதைக் கூறவும்.எனக்கு இந்த நேரம் ஒத்து வரும். உங்களுக்கு?த*உழவன் 05:21, 12 டிசம்பர் 2009 (UTC)
 • பரீட்சார்த்தமாகச் செய்து கொண்டுள்ளேன். தங்களோடு பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதே முடிந்தால் பேசலாம். பழ.கந்தசாமி 05:34, 12 டிசம்பர் 2009 (UTC)

எசுப்பானியம் - உடற்பகுதிகள்- பகுப்பு[தொகு]

 • உங்களைப் போன்றே நம் விக்சனிரியில் எசுப்பானிய மொழியில் ஆர்வமுடையவர் பயனர்:Srunika_rajkumar.
இதனால்
 1. உடற்பகுதிகள்,
 2. ஆங்கிலம் - உடற்பகுதிகள்
 3. எசுப்பானியம் - உடற்பகுதிகள்
 4. இந்தி - உடற்பகுதிகள்

என சொல் ஒற்றுமை உண்டாகும். இதனை ஏனைய மொழிகளிலும் பின்பற்றலாம்.

(குறிப்பு:தமிழ் - உடற்பகுதிகள் என்ற முன்னொட்டு தேவையில்லை . ஏனெனில், இது தமிழ் விக்சனரி தானே.)

இத்துடன் செய்ய வேண்டுவன,

 1. முன்பு செய்தபடி,உங்கள் சொற்களுடன் விக்கிப்படங்களை இனி இணைக்கத் துவங்குகிறேன்.
 2. அனைத்து எசுப்பானியச் சொற்களை, தமிழ் சொற்களின் மொழிப்பெயர்ப்புப் பகுதியில் இணைக்க வேண்டும்.
த*உழவன் 08:04, 13 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
 1. எனக்கு முன்பு இது தெரியாததால், 'எசுப்பானியம் - உடல் பகுதிகள்' என எனது பதிவேற்றத்தில் இட்டுவிட்டேன். ஹூம். இனி மாற்றவேண்டும்.
 2. பொதுவாகப் புதுவார்த்தைகளைப் பகுப்புகளோடு சேர்த்துவிட வேண்டும் (பெயர்ச்சொற்கள், இவை போக மேல்பகுப்புகள். புதிதாகக் கற்கவிரும்புபவர்களுக்கும், நமக்கும் இது நல்லது. இந்தியில் கூட அவ்வாறு செய்தால் நலம்.
 3. வேறு மொழிப் புதிய வார்த்தைகளைக் கூடுமானவரை தானியங்கி மூலம் ஏற்றிவிட்டு, அவற்றுக்கான தமிழ்ப் பதங்களில் சேர்ப்பதை நாம் கையால் தொகுக்கலாம். (தானியங்கி மூலம் அதையும் எப்படிச் செய்வது என்று அறியும் வரை).

புது இந்திவார்த்தகள் சிலவற்றை எனக்கு அனுப்புங்கள். பொருளுடன். நான் மொத்தமாக ஏற்றப் பார்க்கிறேன். நன்றி பழ.கந்தசாமி 08:17, 13 டிசம்பர் 2009 (UTC)

 • இப்பொழுது பகுப்பு: கருவச் சொற்கள் என்பதை இந்தி மொழிக்கு மாற்றுகிறேன். நீங்கள் கேட்டவற்றை மின் மடலிடுகிறேன். வழக்கமான பொருளாதார வேலைக்குச்செல்ல வேண்டும். இன்னும் 6 மணிநேரம் கழித்து, இந்த ஆழ்மன வேலைக்கு வருவேன். ceja மாற்றங்களைக் காணவும். த*உழவன் 08:25, 13 டிசம்பர் 2009 (UTC)

எசுப்பானிய உருவாக்கம்[தொகு]

 • camello என்பதிலுள்ள சிறிய எழுத்துக்களாக வரும் சொற்களை வலப்பக்கம் மாற்றியுள்ளேன். மேலும் எசுப்பானியம் என்ற தலைப்பையும் சிறியதாக மாற்றியுள்ளேன். இதனால் மொழிப்பெயர்ப்புகள் மிக நெருக்கமாகத் தடித்த எழுத்துக்களில் அமைந்துமுன்பை விட , பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது அல்லவா? இதனை விரும்புகிறீர்களா? அகரமுதலி புத்தகத்தில் அடைப்புக்குறிக்குள் இருப்பவை, சொற்களின் வலப்பக்கம் அமைத்திருப்புது போல நாமும் அமைப்போமே?த*உழவன் 05:02, 14 டிசம்பர் 2009 (UTC)
 • camello, el அல்லது camellos, los என்று ஒன்றாக வரவேண்டும். குறுக்கே (ஒ), (ப) வரக்கூடாது. விவாதிப்போம். 70.231.254.19 05:26, 14 டிசம்பர் 2009 (UTC)
 • [1] ல் உள்ளதுபோலச் செய்யலாமா? பெயர்ச்சொல், ஒருமை/பன்மை, ஆண்/பெண் எல்லாம் ஒரே வரியில் சுருக்கமாக. பழ.கந்தசாமி 06:04, 14 டிசம்பர் 2009 (UTC)


பகுப்புகள் செய்வது குறித்து[தொகு]

ORIGINAL MESSAGE

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:19, 15 டிசம்பர் 2009 (UTC)

 1. நீங்கள் தொடர்ந்து தமிழ் பகுப்புகளில் கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
 2. 500bytes கணக்கை, நான் உங்களுக்கு அறிய வைத்தேனா?
 3. பழ.கந்தசாமி அவர்கள் எசுப்பானியம் மொழியில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு நாம் தோள் கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன். (நான் அச்சொற்களுக்கு விக்கிப்படம், இந்தி மற்றும் தமிழ்சொற்களுடன் இணைத்தலைச் செய்கிறேன்.)
நீங்களும் இணைய விரும்பினால், கீழ்கண்ட இணைப்பிலுள்ள சொற்களில் பகுப்பு மாற்றம் செய்யலாம்.

http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit&redlink=1

இதிலுள்ள 10 சொற்களிலுள்ள பகுப்பை நீக்கி விட்டு, பகுப்பு: எசுப்பானியம் - உடற்பகுதிகள் என்று சேர்க்கலாம்.

 • திரு.பெரியண்ணன் அவர்களே! தங்களுடைய தொடர் அர்ப்பணிப்புக்கு நன்றி!

நான் த*உழவன் பேச்சில் குறிப்பிட்டதுபோல எசுப்பானியம் போன்ற வேறுமொழிச் சொற்களுக்கு மொழிபெயர்ப்புகளை தமிழ், ஆங்கிலத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். தமிழ் மொழி வார்த்தைகளுக்கு நமக்குத் தெரிந்த எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

பழ.கந்தசாமி 06:21, 15 டிசம்பர் 2009 (UTC)

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:19, 15 டிசம்பர் 2009 (UTC)


REPLY

தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி, அவர்களுக்கு, வணக்கம்.

தங்களது கருத்துக்களை கவனித்தேன்.

 1. ஓரெழுத்துச் சொற்கள்
 2. இரண்டெழுத்துச் சொற்கள்
 3. மூன்றெழுத்துச் சொற்கள்

என்ற பாகுபாட்டின் கடைசி பகுதியை இன்று அல்லது நாளை செய்து முடித்துவிடுவேன்.

அதன் பிறகு தங்கள் இருவருடனும் இணைந்து, செயல்படுவேன். நான், இதனை, தமிழுக்காற்றும் சிறு தொண்டாக கருதுகிறேன்.

தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:19, 15 டிசம்பர் 2009 (UTC)

அயல்மொழிகளுடனான இணைப்பு[தொகு]

இனி ஆங்கிலச் சொற்களை உருவாக்கும் போது, மறவாமல் பகுப்புக்குப் பிறகு, [[en:{{PAGENAME}}]] என்பதனை சேர்த்து விடுங்கள். அது interwicket தானியங்கியால், அயல் மொழிகளுடன் இணைத்து விடும். த*உழவன் 06:54, 24 டிசம்பர் 2009 (UTC)

 • நிச்சயம் செய்கிறேன். இந்த வார இறுதியில் ஒரு நாள் பக்கவடிவமைப்பு பற்றிக் கலந்துரையாடலாம் நீங்கள், TRYPPN, நான் மூவரும்.

பழ.கந்தசாமி 15:53, 24 டிசம்பர் 2009 (UTC)

ஆங்கிலம்-இத்தாலியம்- எசுப்பானியம் வடிவமைப்பு[தொகு]

dove என்ற சொல்லிற்கான ஆங்கிலம்-இத்தாலியம் கொடுக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு பற்றி உங்கள் கருத்தை, அச்சொல்லிற்கான, உரையாடலில் தெரிவிக்கவும்.

 • இங்கே இருமொழிகளையும் அடைப்புக்குறிக்குள் தந்துவிடலாம்.
 • வேறு மொழிச்சொற்களைப் புதுப் பக்கங்களில் சேர்க்கும்போது நாம் இப்படிப்பட்ட ஒரு சொல் பல மொழி சொற்களை பக்கத்தை வெவ்வேறு மொழிக்கான பகுதிகளாகப் பிரித்து அந்தந்த மொழியின் அடியில்தான் பொருள் தரவேண்டும். ஏனென்றால், சில சொற்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் வருகின்றன. (அப்போது முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக மாற்றுவது மட்டும் போதாது. மேலும், வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருள்களும் சொற்களுக்கு வருவதுண்டு பழ.கந்தசாமி 01:22, 27 டிசம்பர் 2009 (UTC)

செருமன் மொழியில் சிறிய எழுத்துக்கும்,பெரிய எழுத்துக்கும் வெவ்வேறு பொருள் இருப்பது போல, எசுப்பானியத்தில் உண்டா?த*உழவன் 01:00, 27 டிசம்பர் 2009 (UTC)

 • எசுப்பானியத்தில் எனக்குத் தெரிந்தவரை அப்படியில்லை. பழ.கந்தசாமி 01:22, 27 டிசம்பர் 2009 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pazha.kandasamy/2009&oldid=1685021" இருந்து மீள்விக்கப்பட்டது