பயனர் பேச்சு:SankarVaiyapuri

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

வருக!
  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--11:05, 8 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
நன்றி அன்பரே! நமது தமிழ் அகரமுதலியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கங்கள் எந்த முறையில் அமைய வேண்டும் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் வேறு விதமாக இருக்கிறது. --சங்கர் வையாபுரி (பேச்சு) 13:50, 9 சூன் 2012 (UTC)

அமைப்பு

உங்களின் கூற்று உண்மையே. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விதமாக உள்ளது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பலருடன் கலந்துரையாடிய பின்னும் தெளிவான தொரு முடிவை எடுக்க இயலாமல் உள்ளது. ஏனெனில், இதில் மொழியறிவும்,தொழில்நுட்ப தேவையும், துறைசார்ந்த வல்லுனர் வழிகாட்டலும் தொடர்ந்து, நிரம்பத் தேவைப்படுகிறது. எல்லாவற்றிற்க்கும் மேலாக தொடர்ந்து ஆர்வத்துடன், ஆய்வுடன் பங்களிப்பவர்கள் மிகவும் குறைவே. உங்களைப் பற்றி, உங்கள் பயனர் பக்கத்தில் எழுதினால் நாம் உரையாட வசதியாக இருக்கும். உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகள், தெரிந்த மொழிகள், பிற மொழி பேசக்கூடிய நண்பர்கள் போன்றவை. அத்தகவல்கள் மூலம் நம் தமிழ் விக்சனரியை மேலும் சிறப்பான வழியில் நடத்த ஏதுவாகும். தங்கள் பதிலை, ஆர்வத்துடன் எதிர் நோக்கி முடிக்கிறேன். வணக்கம்.--15:15, 9 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
உன்மைதான். இப்பொழுதாவது ஒரு முடிவு செய்து விட்டால் நமக்கு பழு குறைவாக இருக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு சொல்லையையும் மீண்டும் திருத்தம் செய்ய வேண்டி இருக்கும். அது நம் ஒவ்வொருவருடைய நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கும் என்றே கருதுகிறேன். புதிதாக ஒரு சொல்லைச் சேர்க்க முயலும் போது அதை எப்படி அமைப்பது என்று மிக குழப்பமாக இருக்கிறது. இதற்கு ஒரு முடிவு காண ஆங்கில விக்சனரியை காணுமாறு வேண்டுகிறேன்.--சங்கர் வையாபுரி (பேச்சு) 21:29, 9 சூன் 2012 (UTC)
நீங்கள் மாதிரிச் சொற்களை முன் வையுங்கள். வடிவமைப்பு அலைப்பேசியில் இருந்தபடியும் தொகுக்க வசதியாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.ஏனெனில், எதிர்காலம் பெரும்பாலும், அனைத்தும் கையடக்கமே எனக் கருதுகிறேன். சொற்கள் பல வகை என்றாலும், பெயர்ச்சொற்கள் தான் அதிகம் உள்ளன. எனவே, அதன் வடிவமைப்பு குறித்து கருத்திடுக.--01:22, 10 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அன்பரே! எனக்கு போதிய நேரம் இல்லாததால் ஒரு வார்ப்புருவை மட்டும் சமர்பிக்கிறேன். இது என்னுடைய கருத்து. மற்றவர்களுடன் கலந்து விரைவில் முடிவு எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சொல்

தலைப்பு


பலுக்கல்

(தமிழ்)

இல்லை
(கோப்பு)

பெயர்ச்சொல்[தொகு]

  1. பொருள்1
  2. பொருள்2

சொற்பிறப்பு[தொகு]

  • சொல் தோண்றிய விவரம்

சொல்லியல்[தொகு]

  • சொல் + இயல்

பயன்பாடு[தொகு]

  • பயன்பாடு1
  • பயன்பாடு2

இணைச்சொல்[தொகு]

  • சொல்1
  • சொல்2
  • சொல்3

எதிர்ச்சொல்[தொகு]

  • சொல்1
  • சொல்2
  • சொல்3

வருவப்பட்ட சொற்கள்[தொகு]

  • சொல்1
  • சொல்2
  • சொல்3

தொடர்புடைய சொற்கள்[தொகு]

  • சொல்1
  • சொல்2
  • சொல்3

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் : ஆங்கிலச் சொல்
  • ஃப்ரென்ச் : ஃப்ரென்ச் சொல்
  • ஹிந்தி : ஹிந்தி சொல்

உசாத்துணைகள்[தொகு]

  1. உசாத்துணை1
  2. உசாத்துணை2

சங்கர் வையாபுரி (பேச்சு) 13:26, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

தொடர்புடைய சொற்கள்[தொகு]

சங்கர் வையாபுரி அவர்களுக்கு வணக்கம். அக்கன் என்ற பக்கத்தில் சொல்வளப் பகுதியில் இருந்த சொற்களை நீங்கள் நீக்கியிருந்தது கண்டேன். சொல் வளப்பகுதியில் தொடர்புடைய சொற்களை அல்லது வேறு பார்த்தால் பயனரின் சொல்வளம் பெருகும் என்று நினைக்கும் சொற்களையே இட்டுவருகிறோம். அப்பெயரை வேண்டுமானால், தொடர்புடைய சொற்கள் என்று மாற்றலாம். அதனால், அப்பகுதியை தயவுசெய்து நீக்கவேண்டாம். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 22:11, 13 சூன் 2012 (UTC)[பதிலளி]

நான் சொல் வளம் பகுதியை நீக்கியதன் காரணம் அக்கன் என்ற சொல்லுக்கு அக்கா என்ற பொருள் தவறானது. சென்னை பேரகரமுதலியில் தவறாக தொகுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த பக்கத்தை இற்றைப்படுத்தினேன். தாங்கள் மீண்டும் ஒரு முறை அதை சரிபார்க்க வேண்டுகிறேன்.
  • சொல்வளம் பகுதி ஒத்த பொருளையுடைய சொற்களை மட்டும் தருவதில்லை. அச்சொல் போன்று வேறு தொடர்புடைய சொற்களையும் தருவது. அக்கன் என்ற சொல்லை அக்கா என்ற சொல்லோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, "ஆகா, அதுபோன்றதா இது" என்ற ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறதல்லவா? அதற்காக! சொல்வளம் என்ற தலைப்பு தெளிவற்றது என்று தோன்றினால், நிச்சயம் வேறு பெயரைக் கருதலாம். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 15:33, 14 சூன் 2012 (UTC)[பதிலளி]
  • பேரகரமுதலியில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் ஒரு எடுத்துக்காட்டுத் தொடரும் தந்துள்ளனரே? எதன் அடிப்படையில் அப்பொருள் தவறு என்கிறீர்கள்? நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 15:40, 14 சூன் 2012 (UTC)[பதிலளி]
தற்பொழுதுள்ள சொல்வளப்பகுதியில், அக இணைப்பு இல்லாததால், நமது கோணங்கள் மாறி விட்டன என எண்ணுகிறேன். எனவே, இனி சொல்வளம் அல்லது சொல்விரிவு என அக இணைப்புத் தருவோம். (எ. கா.) கரப்பு. இதற்குரியத் தலைப்பு எப்படி இருந்தாலும், இது தேவையானதொரு பகுதி. நான் அறிந்த வரை, எந்த ஒரு அகர முதலிகளிலும், இதுபோன்ற தொரு முயற்சி தொடரப்படுவதில்லை. நாம் முனைப்புடன், முனைவோம். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு --17:15, 14 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

என்னுடைய தவறுக்காக வருந்துகிறேன். இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.சங்கர் வையாபுரி (பேச்சு) 16:21, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]

கருத்திடுக[தொகு]

அம்மா,திமில்,அரசர்சின்னம் என்ற சொற்களைக் கண்டு அவற்றின் உரையாடற்பகுதியில் கருத்திடுக.-- உழவன் +உரை.. 12:13, 6 மே 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:SankarVaiyapuri&oldid=1884533" இலிருந்து மீள்விக்கப்பட்டது