பாங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பாங்கு:
முகம்மதியர்களின் தொழுமிடம் பள்ளிவாசலிலுள்ளது
பாங்கு:
ஒரு கிறித்துவ கன்னியாஸ்திரீயின் தொழுமிடம்
பாங்கு:
கோல்கத்தாவிலுள்ள இந்திய அரசு வங்கியின் தலைமையகம்


ஒலிப்பு
(கோப்பு)

பொருள்[தொகு]

 • பாங்கு, பெயர்ச்சொல்.
 1. பக்கம்
  (எ. கா.) காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (சூளா.நாட். 2).
 2. இடம்
  (எ. கா.) பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறு மின் (மணி. 1, 61).
 3. ஒப்பு
  (எ. கா.) பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78).
 4. நன்மை
  (எ. கா.) பாங்கலாநெறி (வாயுசங். இருடி. பிரம. 11).
 5. அழகு
  (எ. கா.) பாங்குறக் கூடும் பதி (பு. வெ. 9, 51, கொளு).
 6. தகுதி
  (எ. கா.) பாங்குற வுணர்தல் (தொல். சொல். 396).
 7. செளக்கியம்
  (எ. கா.) திருமேனி பாங்கா? Vaiṣṇ.
 8. இயல்பு (W.)
 9. ஒழுக்கம்
  (எ. கா.) பாங்குடையீர் (திருவாச. 7, 3).
 10. தோழமை
  (எ. கா.) நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5, 4, 2).
 11. துணையானவ-ன்-ள்.
  (எ. கா.) வேல் விடலை பாங்கா (திணைமாலை. 87).
 12. இணக்கம் (W.)
  (எ. கா.) நின்னோடு பாங்கலா மன்னர் (இலக். வி. 611, உதா.).
 13. பட்சம்
  (எ. கா.) வேந்த னொருவற்குப் பாங்குபடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர் (யாப். வி. 96, பக். 515).
 14. வழி
  (எ. கா.) கடன் தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை Nāñ.
 15. தொழுமிடம் ---- (முகம்மதியர் பயன்பாடு)--- புறமொழிச்சொல்--பாரசீகம்.
 16. வங்கி ---- புறமொழிச்சொல்--ஆங்கிலம்--Bank.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. side, neighbourhood
 2. place, location
 3. equality, likeness
 4. goodness
 5. beauty, fairness, neatness
 6. agreeableness,suitability, adaptability, appropriateness
 7. health
 8. nature, propriety
 9. fashion, style, manners, carriage, custom, gentility, politeness
 10. companionship
 11. companion
 12. accommodation, conciliation
 13. partisanship, interest, favour
 14. means
 15. cell for prayer
 16. bank

சொல்வளம்[தொகு]

பாங்கு
உளப்பாங்கு, மணற்பாங்கு, பாசனப் பாங்கு,வடிவப்பாங்கு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 = மின்நூல் வடிவம்) - பாங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாங்கு&oldid=1980113" இருந்து மீள்விக்கப்பட்டது