தொன்மம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொன்மம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- புராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும். இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர். இது தொன்மம் எனப்படுகிறது. (கலைச்சொற்கள் பற்றி…, ஜெயமோகன்)
- உலகம் முழுக்க எல்லா சமூகங்களிலும் மக்கள் தங்கள் வாழ்க்கை மூலம் அடைந்த அறிதல்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் விதத்தில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை தகவல்களாக அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது ஒன்று. இன்னொன்று அவற்றை நம்பிக்கைகள், சடங்குகள், ஆசாரங்கள்,கதைகள் வடிவில் அளிப்பது. இவை தகவல்கள் அல்ல. புனைவுமூலம் அவற்றில் பல உணர்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நெறிமுறைகள் இணைந்துள்ளன. இது மக்களின் மனமும் கலந்த தகவல்குவியல். இந்த இரண்டாவது வழிமுறையை ஒட்டுமொத்தமாக எப்படிச் சொல்வது? அதற்காகவே தொன்மம் என்ற கருதுகோள் உருவாக்கப்பட்டது. (கலைச்சொற்கள் பற்றி…, ஜெயமோகன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தொன்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +