வெப்பு
Appearance
பொருள்
வெப்பு(பெ)
- சூடு, உஷ்ணம்
- சுர நோய்
- மேயவெப்பிடர் மீனவன் மேலொழித்ததுவும் (பெரியபு. திருஞான. 1050)
- சுரதேவதை.
- மோடியும் வெப்பும் முதுகிட்டு (திவ். இராமானுசநூற். 22)
- சுரநட்சத்திரம்
- குருநின்றநாட் கொன்பதேழ் வெப்பென்பரே (விதான. குணாகுண. 40)
- தாபம்
- வெப்புடை மெய்யுடை வீரன் (கம்பரா. அயோமுகி. 62)
- கோபம்
- வெப்புடைக் கொடிய மன்னன் (கம்பரா. மிதிலைக். 99)
- பொறாமை
- ஆசை
- துயர்
- கொடுமை
- வெப்புடை யாடூஉச் செத்தனென் மன் யான் (பதிற்றுப். 86, 4)
- தொழுநோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- heat
- fever
- the God of fevers
- (Astrol.)The 7th or 9th stars from that with which Jupiter is in conjunction
- feverish feeling, as due to grief, anger, etc.
- indignation
- spite, spleen
- desire
- sorrow
- severity
- leprosy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
வெப்பம் - வெதுப்பு - வெம்மை - வெதும்பல் - தட்பவெப்பம் - சூடு