வெப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வெப்பு(பெ)

 1. சூடு, உஷ்ணம்
 2. சுர நோய்
  மேயவெப்பிடர் மீனவன் மேலொழித்ததுவும் (பெரியபு. திருஞான. 1050)
 3. சுரதேவதை.
  மோடியும் வெப்பும் முதுகிட்டு (திவ். இராமானுசநூற். 22)
 4. சுரநட்சத்திரம்
  குருநின்றநாட் கொன்பதேழ் வெப்பென்பரே (விதான. குணாகுண. 40)
 5. தாபம்
  வெப்புடை மெய்யுடை வீரன் (கம்பரா. அயோமுகி. 62)
 6. கோபம்
  வெப்புடைக் கொடிய மன்னன் (கம்பரா. மிதிலைக். 99)
 7. பொறாமை
 8. ஆசை
 9. துயர்
 10. கொடுமை
  வெப்புடை யாடூஉச் செத்தனென் மன் யான் (பதிற்றுப். 86, 4)
 11. தொழுநோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. heat
 2. fever
 3. the God of fevers
 4. (Astrol.)The 7th or 9th stars from that with which Jupiter is in conjunction
 5. feverish feeling, as due to grief, anger, etc.
 6. indignation
 7. spite, spleen
 8. desire
 9. sorrow
 10. severity
 11. leprosy


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

வெப்பம் - வெதுப்பு - வெம்மை - வெதும்பல் - தட்பவெப்பம் - சூடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெப்பு&oldid=1243100" இருந்து மீள்விக்கப்பட்டது