உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி காகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி காகார வரிசை

[தொகு]
அக இணைப்பான்கள்
[தொகு]

கா காட் காண் காத் காய் காம் காய் கார் கால் காவ காழ் கான கிட கிழ கிள கீழ்

கா

[தொகு]

கா

கா
= (காவடி) காத்தண்டு, 1163;
= காவடிச் சுமை, 1196.
காக்க
[தொகு]
காக்க
= காப்பாற்றுக, 122, 127, 132, 281, 305, 434;
= பரிகரிக்க, 883.
காக்கின்
= தடுத்தால், 301;
= காப்பாற்றிக் கொள்ள நினைத்தால், 305.
காக்கும்
= காப்பாற்றுவான், காப்பாற்றும் 547;
= காப்பாற்றும்,[காக்கும்-காப்பு, கருவி, அறிவினார்க்கு, பெற்றியார்] 57, 421, 429, 442.
காக்கை
= காவெனக் கத்துதலையுடையது: காகம், 481, 527.
காடிக்கு
[தொகு]
காடிக்கு
= புளிப்புநீருக்கு (நீராகாரத்திற்கு), 1050.
காட்சிக்கு
= காண்டற்கு, 386.
காட்சியவர்
= அறிவுடையவர், 174, 199, 218, 654, 699.
காட்சியவர்க்கு
= அறிவுடையார்க்கு, 352.
காட்சியார்
= அறிஞர், 258.
காட்ட
= காண்பித்தலால், 1171.
காட்டி
= காண்பித்து, 167, 334;
= புலப்படுத்தி, 454.
காட்டிய
= காண்பிக்க வேண்டி, 1313.
காட்டிவிடும்
= கண்கூடாகக் காண்பிக்கும், 28.
காட்டுதல்
= காட்டித் தெளிவித்தல், 929.
காட்டும்
= கொண்டு காட்டும், 706;
= காண்பிக்கும், 959;
= [காட்டும் பளிங்கு] கொண்டு காட்டும் (பளிங்கு), 706.
காட்டுவான்
= அறிவிக்கப் புகுகின்றவன், 849.
காண்
[தொகு]
காண்
= இலக்கணச் சொல்: முன், அசை, வியப்புக்குறி, 1185, 1202;
= (உரையசை) 1294.
காண
= உண்டாக்க, 1079;
= பார்க்க, 1119, 1140, 1210, 1281.
காணப்படும்
= அறியப்படும், 114, 185, 349, 1327;
= உண்டாம், 298.
காணல்
= பார்த்தல், 1244.


காணா
= காணமாட்டாத, 866, 1285.
காணாக்கால்
= காணாதபோது, 1286.
காணாதவர்
= கண்டறியாத மகளிர், 1219.
காணாதான்
= பிறரால் ஒன்று அறியாத தன்மையில்லாதவனை, 849.
காணாது
= காணாமல், 1178, 1283.
காணார்
= அறிய மாட்டார், 857, 1220.
காணான்
= நினையான், 859;
= அறியான், 1197;
= அறியாதவன், 849.
காணின்
= கண்டால், 488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112, 1114;
= (வாய்க்குமிடம்)பெற்றால், 821.
காணுங்கால்
= பார்க்கும்போது, 710, 930, 1286.
காணும்
= பார்க்கும் = நினைக்கும் 859;
= [காணும் ~ அளவு, பூ] பார்க்கும் (அளவும்), 224;
= பார்க்கப்படும் (பூ), 1112.
காணேன்
= நான் காண்கின்றிலேன், 1167, 1286;
= காணமாட்டேன், 1285.
காண்க
= காண்பேனாக, 1265.
காண்கம்
= காணக்கடவோம், 1301.
காண்கிற்பின்
= காணமுடியுமானால், 190, 436.
காண்டலின்
= கண்ட காட்சியால், 1213.
காண்பது
= காணுதல், 355, 358, 423, 424.
காண்பர்
= பார்ப்பார், 620, 1034.
காண்பவர்
= இயைந்து அநுபவிப்பவர், 379.
காண்பான்
= அநுபவித்து அறிகின்றவன், 99;
= பார்ப்பவன், 656.
காண்பு
= காணல், 16.
காதல்
[தொகு]
காதல்
= வேட்கை, 284, 440, 921, 1298;
= காமவேட்கை, 1195, 1242;
= [காதற்சிறப்புரைத்தல்]= தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும், தலைமகள் தன் காதல் மிகுதி கூறலுமாம், அதி. 113.
காதல
= காதலித்த பொருள்கள், 440.
காதலம்
= காதலையுடையேம், 1314.
காதலர்
= காதலையுடையவர், 1150, 1185, 1208, 1211, 1216, 1219, 1224, 1246, 1278, 1308.
காதலவர்
= ஆசையுடையவர் 286;
= காமவேட்கையுடையவர் = காதலர், 1126, 1127, 1128, 1249.
காதலன்
= காதல் (=அன்புசெய்தல்) உடையவன், 209.
காதலார்கண்
= காதல் உடையவர் மாட்டு, 1099.
காதலிக்கும்
= காதலைச் செய்யும் = விரும்பும் (சூதன்), 940.
காதலை
= காதலையுடையாய், 1118.
காதற்று
= காதலையுடையது, 940.
காதன்மை
= அன்புடைமை, 507, 832.
காத்த
= காப்பாற்றியவை, 385.
காத்தல்
= தடுத்தல், 29;
= காப்பாற்றுதல், 385, 632.
காத்து
= காப்பாற்றி, 56, 130, 549;
= போற்றி, 642.
காப்ப
[தொகு]
காப்ப
= (மறதிபுகாமல்) காப்பாற்றிக் கொள்ள, 878.
காப்பான்
= காப்பாற்றுபவன், 24, 301.
காப்பின்
= பாதுகாப்போடு, 744.
காப்பு
= காவல், 57, 781, 1038;
= காத்தல், 388.
காம
[தொகு]
காம
=[காமக்கலன்] விரும்பிய (மரக்கலம்), 605;
= காமமாகிய, 1134, 1159, 1164, 1167, 1175, 1251, 1255, 1280.
காமத்தால்
= காதலால், 1257.
காமத்தான்
= காமம் உடையவன், 866.
காமத்தில்
= மெய்யுறு புணர்ச்சியில், 1092.
காமத்திற்கு
= காமமுடையவருக்கு, 1281;
= காமநுகர்ச்சிக்கு, 1330.
காமத்து[]
= காம நுகர்ச்சியாகிய (கனி), 1191;
=[காமத்துப்பால்] அதி. 109 முதல் 133 வரை.
காமத்தை
= காதலை, 1253.
காமம்
= காதல் = பெண்ணின்பால் இன்பம் விழைதல், 360, 1090, 1109, 1110, 1131, 1137, 1138, 1139, 1144, 1145, 1148, 1163, 1166, 1196, 1201, 1202, 1247, 1252, 1254, 1282, 1289, 1306, 1326;
= இன்பம், 1214;
= காமத்துடன், 1264.
காமன்
= வேள், 1197.
காமுறுதல்
= விரும்புதல், 402.
காமுறுவர்
= விரும்புவர், 399, 649.
காமுற்றார்
= காதல் மிக்கவர், 1133.
காமுற்று
= விரும்பினாற் (போலும்), 402.
காம்பு
= மூங்கில், 1272.
காய்
[தொகு]
காய்
= (இன்னாத) காய், 100;
=[கருக்காய்] இளங்காய், 1306.
காயார்
= வெகுளார், 1208.
காயின்
= சினந்தால், 707.
காயும்
= எரிக்கும், 77;
= வெகுளும், 1313, 1319, 1320.
காய்தி
= நீ வெகுள்கின்றாய், 1246.
காய்வார்
= (குளிர்)காய்பவர், 691.
காய்வு
= சினத்தல், சினம், (நிலையில்)வெறுப்பு, 1246.


கார்
[தொகு]
கார்
= கருமையுடைய = இருண்ட (அறிவு), 287.
காரணத்தின்
= ஒன்று குறித்து = நிமித்தத்தால், 530.
காரணம்
= முதல், அடிப்படை, 270 529, 929.
காரிகை
= அழகு, 571, 1262, 1272;
= அலங்காரம், 777.
கால்
[தொகு]
கால்
= [ஒரு கால்] (ஒரு)பொழுது, 248;
= பொழுது, 36, 379, 674, 710, 733, 859, 930, 1064, 1104, 1166, 1179, 1218, 1285, 1286;
= முதல் = அடிமரம் (வழிக்கு உரியார்), 1030;
= உருளை, 496;
= பாதம் = அடி, 500, 840;
= முளை, 959;
= முகிழ் = காம்பு, 1115;
= இலக்கணப் பொருள்: எதிர்மறை வினையெச்ச விகுதி, 14, 127, 301, 305, 362, 489, 503, 673, 695, 763, 773, 830, 987, 1080, 1094, 1270, 1296.
காலத்தால்
= காலத்தோடு பொருந்த, 686.
காலத்தினால்
= காலத்தோடு = இறுதி வந்த எல்லைக்கண், 102.
காலத்தோடு
= உரிய பொழுதொடு(படுத்து), 516.
காலம்
= காலப்பொழுது, பருவம், 483, 485, 487, 631, 675, 696, 830, 949;
= செவ்வி, 687;
= [காலமறிதல்] = வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேற் சேறலுற்ற அரசன் அச்செலவிற்கேற்ற காலத்தினையறிதல், அதி.49.
காலை
= காலத்தில், 799;
= பொழுது, 937, 1094;
= முன்னே, 1236;
= விடியல், 1227.
காலைக்கு
= விடியற்காலைக்கு, 1225.
காவலன்
[தொகு]
காவலன்
= காத்தலில் வல்லவன் = மன்னன், 560.
காவாக்கால்
= காப்பாற்றா விட்டால், 127;
= தடுக்காவிடில், 301, 305.
காவாதான்
= (குற்றம்)கடிந்துகொள்ளாதவனது, 435.
காவாது
= காக்காமல், 535.
காவார்
= காக்கமாட்டார், 127.
காவான்
= காக்க மாட்டான், 560.
காழ்
[தொகு]
காழ்
= பரல் = விதை, 1191.
காழ்த்தவிடத்து
= முதிர்ந்த நிலைமையில் = வைரம் பாய்ந்தால், 879.
காழ்ப்ப
= இறப்ப மிக = முதிர, 760.
கான
[தொகு]
கான
=[கானமுயல்] கானத்தின்கண் ஓடும் (முயல்),772.
காகார வரிசை முற்றும்

கிகர வரிசை

[தொகு]

கி

கிடந்தது
[தொகு]
கிடந்தது
= கூடியது, 446, 583, 1001.
கிடந்தமை
= இயல்பு = உள்ளபடி, 959.
கிடந்தேன்
= படுத்திருந்த நான், 1187.
கிழக்கு
[தொகு]
கிழக்கு
= கீழ்(இடம்) = (தலை)கீழாகும், = கெடுவர், 488.
கிழமை
= உரிமை, 785, 805.
கிழமையை
= உரிமையை = உரிமையாற் செய்வனவற்றை, 801.
கிழவன்
= உரியவன், 1039.
கிளத்தல்
[தொகு]
கிளத்தல்
= சொல்லுதல் [நெஞ்சொடு கிளத்தல்], அதி.125.
கிளவா
= சொல்லாத, 715.
கிளைஞரை
= நட்பாளரை, 796.


கிகர வரிசை முற்றும்

கீகார வரிசை

[தொகு]

கீ

கீழ்
[தொகு]
கீழ்
=(7-ஆம் வேற்றுமை உருபு) இல், கண் 389;
= உள்ளாக, 558, 929, 1034;
= கீழான இடம், 973;
= கீழ்க்குலம், 409;
= சிறியர், 973;
= கீழாயினான், 1074, 1079;
= கீழாயினார், 1078.
கீழ்களது
= கயவரது, 1075.
கீழ்ந்திடா
= சிதையாத, 801.
கீகார வரிசை முற்றும்


அக இணைப்பான்கள்
[தொகு]

கா காட் காண் காத் காய் காம் காய் கார் கால் காவ காழ் கான கிட கிழ கிள கீழ்

பார்க்க:

அகர, ஆகார வரிசைகள் இகரம் ஈகாரம் உகரம் ஊகாரம்

எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம்

ககரம்- குகரம், கூகாரம்-

கெகரம்,கேகாரம்,கைகாரம்- திருக்குறள்அகரமுதலி கேகாரவரிசை கொகரம்,கோகாரம்,கௌகாரம்- சகரம்,சாகரம்,சிகரம்,சீகாரம்- செகரம்- சேகாரம்,சொகரம்,சோகாரம்-ஞாகாரம்- [[]]