திருக்குறள்அகரமுதலி செகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி செகர வரிசை[தொகு]

செகரம்[தொகு]

செ

செகுத்து[தொகு]

செகுத்து
= (உயிரைப்) போக்கி = கொன்று, 259.

செத்தாரின்[தொகு]

செத்தாரின்
= இறந்தவரைக் காட்டிலும், 926.
செத்தாருள்
= இறந்தவருள், 214.
செத்தான்
= இறந்தவன், 1001.

செப்பம்[தொகு]

செப்பம்
= நடுவுநிலைமை, 112, 149;
= (கருத்தும் சொல்லும் செயலும்) மாறாமை, 951.
செப்பின்
= சிமிழினது, 887.

செம்[தொகு]

செம்
= [செந்தண்மை] = செவ்விய(தண்ணளி), 30;
= [செம்பொருள்] = அறம், 91;
= கடவுள், 358;
= [செங்கோல்] = செவ்விய(கோல்), 390, 556;
= [செம்பாகம்] = சரி பாதி, 1092;
= [செங்கோன்மை] = அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை, அதி. 55.
செம்மல்
= தருக்கு = செருக்கு, 880.
செம்மாக்கும்
= இறுமாந்திருக்கும், 1074.

செய்[தொகு]

செய்
= [செய்வினை = வினைசெய்] செய்தல், 653;
= [செய்ந்நன்றி] = செய்த(நன்மை), 110;
= [செய்வினை] = 463;
= செய்யும்(வினை), 455;
= செய்யும்(தொழில்), 972;
= செய்யப்படும்(தவம்), 265;
= (வினை), 677;
= [செய்தக்க] [செய்தக்கது] = செய்ய, 466, 663;
= [செய்ந்நன்றியறிதல்] = தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை, அதி. 11.
செய
= செய்ய, 446, 1001, 1021;
= செய்தலால், 466.
செயப்பட்டார்
= (உதவி) செய்வித்துக் கொண்டவர், 105.
செயல்
= செய்தல், 40, 67, 316, 318, 437, 470, 538, 634, 664, 672, 677, 832, 835, 894, 905, 975;
= செய்க, 33, 333, 461, 471, 489, 516, 518, 637, 668, 673, 675, 676, 948, 949;
= [தெரிந்து செயல்வகை] அதி. 47;
= [வினை செயல்வகை] அதி. 68;
= [பொருள் செயல்வகை] அதி. 76;
= [குடி செயல்வகை] அதி. 103.
செயலின்
= செய்வதைவிட, 679.
செயற்கு
= செய்தற்கு, 26;
= ஆக்குதற்கு, 375;
= செய்து கொள்ளற்கு, 781.
செயற்கை
= செய்யுந்திறம், 637,
செயிர்
= நோக்கலாக நோய், 330.
செயிரின்
= (மயக்கமாகிய)குற்றத்தினின்றும், 258.
செயிர்ப்பவர்
= பகைப்பாரது, 880.
செயின்
= செய்தால், 104, 109, 116, 120, 150, 175, 181, 308, 483, 484, 493, 494, 497, 537, 547, 586, 804, 805, 808, 852, 881, 965, 1257, 1288.
செயும்
= செய்யும்(நீர்மையுடைய ஒப்புரவுகளை), 219.
செய்க
= செய்யவேண்டும், 36, 512, 669, 759, 893.
செய்கலாதார்
= செய்யமுடியாதவர், 26.
செய்கலான்
= செய்யான், 848.
செய்கிற்பாற்கு
= முடிவுசெய்ய வல்லானை, 515.
செய்கை
= செய்யும்வகை, 631.
செய்த
= இயற்றிய, 101, 102, 103, 109, 312, 1175, 1176, 1225.
செய்தது
= இயற்றியது, பண்ணியது, 1240, 1279.
செய்தபின்
= செய்தால், 313.
செய்தல்
= இயற்றல், 274, 843, 954, 1090, 1226.
செய்தலால்
= தருதலால், 1201.
செய்தலின்
= செய்தலைக் காட்டிலும், 182, 192.
செய்தற்கு
= செய்வதற்கு, 489.
செய்தற்பொருட்டு
= செய்வதற்காக, 81, 212.
செய்தார்
= இயற்றியவர், 208, 320.
செய்தாரை
= செய்தவரை, 158, 314.
செய்தார்கண்
= செய்தார்மாட்டு, 1243.
செய்தார்க்கு
= செய்தவர்க்கு, 658, 987, 1162.
செய்து
= இயற்றி, 118, 246, 388, 551, 563, 660, 815, 829, 878, 907, 934, 1025, 1028, 1035, 1073, 1275, 1294, 1303;
= [செய்தாங்கு - செய்து+ஆங்கு] நினைத்தபொழுது, 289;
= செய்தாற்போல, 803;
= [செய்துவிடல்] = செய்து மறத்தல், 314.
செய்ப
= செய்வர், 1195.
செய்யப்படும்
= திண்ணமாகச் செய்யத்தகும், 335.
செய்யல
= செய்யமாட்டா, 1086.
செய்யவள்
= திருமகள்/ இலக்குமி, 167.
செய்யற்க
= செய்யாதொழிக, 205, 206, 327, 590, 655, 656.
செய்யா
= இயற்றாத, 548, 553, 558, 569;
= [செய்யாவிடல்] = செய்யாமல், 203.
செய்யாக்கால்
= செய்யாதபோது, 987.
செய்யாது
= [அண்ணாத்தல் செய்யாது] = அங்காவாது (வாய்திறவாது, அங்கா=வாய்திறத்தல்), 255;
= செய்யாமல், 219, 437, 538.
செய்யாமல்
= செய்யாதிருக்க, 101, 313.
செய்யாமை
= செய்யாதிருத்தல், 157, 261, 297, 311, 312, 317, 655, 852;
= [இன்னாசெய்யாமை] அதி. 32;
= [வெருவந்த செய்யாமை] அதி. 57.
செய்யாமையான்
= செய்யாதிருத்தலால், 466.
செய்யார்
= செய்யமாட்டார்கள், 164, 172, 173, 174, 320, 654, 699, 956, 962.
செய்யாள்
= திருமகள், 84.
செய்யான்
= செய்யமாட்டான், 210;
- செய்யாதவன், 865
செய்யின்
= செய்தால், 157, 203, 319, 559, 590, 807, 1283.
செய்யும்
= (என்னபயனைச்)செய்யும், 57, 79, 272, 574, 803;
= செய்துகொள்ளும், 847;
= (துன்பஞ்)[நோய்செய்யும்] செய்யும், 941;
= செய்யும்[செய்யும் அறம்](அறத்தை), 249;
= செய்யும்[செய்யும் அரசு](அரசன்), 554;
= செய்யும்[செய்யும் வினை](வினைகளுள்),672
= செய்யும்[செய்யும்கிழமை](உரிமை), 700;
= செய்யும் [பாழ்செய்யும்] (உள்ளாய்நிற்கும் பகைவர்), 735;
= செய்யும் [பொருளாகச்செய்யும்](பொருளை), 751;
= செய்யும்[செய்யும் சிறப்பு](இன்பம்)1208;
= [செய்யும்அருவினை]= செய்யப்படும் (அரியவினை), 631.
செய்வார்
= இயற்றுவார்கள், 256;
= செய்பவர்கள், 26, 266, 584.
செய்வாரின்
= செய்வாரைக் காட்டிலும், 295.
செய்வார்கண்
= செய்வார் மாட்டு, 908.
செய்வார்க்கு
= செய்பவர்க்கு, 120, 462, 998, 1028.
செய்வான்
= செய்பவன், 520, 677;
= செய்வானது, 758, 867.
செய்வானேல்
= செய்வானானால், 655.
செய்வானை
= செய்பவனை, 516.
செய்வேன்
= இயற்றுவேன், 1211.

செரு[தொகு]

செரு
= போர், 569.
செருக்கி
= இறுமாந்து, களித்து, 916.
செருக்கு
= மயக்கம், 201, 346, 844;
= மதம்= செல்வக்களிப்பு, 431;
= மதித்தல், 598;
= மேம்பாடு, 613;
= தருக்கு, 759, 1193;
= செல்வம், 180, 860;
= களிப்பு, 878;
= [படைச்செருக்கு] அதி. 78.

செல்[தொகு]

செல்
= சென்ற[செல்விருந்து],86
= சென்ற[செல்லிடம்],301
= செல்லும்,498;
செல
மனங்கொள்ள,424
௸,686
௸719 [[Wikisource:ta:#|]]
௸722 [[Wikisource:ta:#|]]
௸724 [[Wikisource:ta:#|]]
௸728 [[Wikisource:ta:#|]]
௸730. [[Wikisource:ta:#|]].
செலல்
= செல்லுதற்குக் காரணம், 1293.
செலவு
= (நன்னெறிக்கட்)செல்லுதல்[வழிச்செலவு], 766.
செல்க
= போவானாக, 684.
செல்கிற்பின்
= செல்லமுடியுமானால், 1170.
செல்பவர்
= போகுபவர், 1033.
செல்லா
= செல்லக்கூடாத, 302,
- வறுமைகூர்ந்த, 330,
= செய்யாத, 561,
= போகாத, 1255.
செல்லாதது
= முடியாதது, 472.
செல்லாது
= நடவாது, 18, 326.
செல்லாமை
= பிரிந்து போகாதிருத்தல், 1151.
செல்லான்
= செல்லாதவனாக, 1039.
செல்லும்
= போகும், 594
= (நெடிதாகக்)காட்டும், 1269
= எய்தும்(இடத்தால்)[செல்லும் வாய்], 33
= முடியும்(ஓருபாயம்), 673.
செல்லுமிடத்து
= செல்லும்பொழுது, 250.
செல்வ
= செல்வத்தையுடைய[செல்வச்செவிலி], 757.
செல்வது
= போவது, 767.
செல்வத்திற்கு
= பொருள் மிகுதிக்கு, 178.
செல்வத்துள்
= செல்வங்கள் பலவற்றுள்ளும், 241, 411.
செல்வத்தை
= பொருள்மிகுதியை, 555.
செல்வம்
= பொருள் மிகுதி, 31
௸, 216
௸, 217
௸, 241
௸, 311
௸, 332
௸, 333
௸, 363
௸, 375
௸, 400
௸, 411
௸, 437,
௸, 524
௸, 565
௸, 738
௸, 837
௸, 937
௸, 939
௸, 1000
௸, 1006
௸, 1007
௸, 1008;
[நன்றியில் செல்வம்], அதி.101.
செல்வர்
= பொருட்பெருக்குடையவர், 731
௸, 1010.
செல்வரை
= பொருள் மிக்காரை, 752.
செல்வர்க்கு
= பொருள் மிக்கார்க்கு, 125.
செல்வாய்
= போவாய், 1248.
செல்வார்
= போவார், 1185.
செல்வார்க்கு
= போகுபவர்க்கு, 472.
செல்வான்
= செல்பவன், 950.

செவி[தொகு]

செவி
= காது, 389
௸, 411
௸, 413
௸, 418
௸, 694.
செவிக்கு
= காதுக்கு, 65
௸, 412
௵, 1199.
செவியின்
= காதினால், 120.
செவிலியால்
= வளர்ப்புத் தாயால், 757.
செவ்வி
= தகுந்த நேரம், 130
௸, 565
௸, 1289.
செவ்விது
= நேரானது, 279.
செவ்வியான்
= நேர்மையானவன், 169.

செறப்பட்டவர்[தொகு]

செறப்பட்டவர்
= வெகுளப்பட்டவர், 895
செறாஅ
= வெகுளாத = இனிய, 1097.
செறாஅஅய்
= செறுப்பாய் = தூர்க்க முயல்வாய், 1200.
செறாஅர்
= வெகுளாதவர், 1096
= வெகுளார், 1292.
செறி
= நெருங்கிய[செறிதொடி], 1275
= புணரப்புணர[செறியும் தோறும்], 1110.
செறிவு
= அடக்கம், 123
௸, 715;
= கூட்டம், 684.
செறின்
= வெகுண்டால், 778
௸, 897
௸, 900.
செறு
=அழிக்கின்ற[செறுபகை], 734.
செறுநர்
= பகைவர், 759.
செறுநரை
= பகைவரை, 488.
செறுப்ப
= அடக்க, 1318.
செறுவார்க்கு
= பகைவர்க்கு, 203
௸, 421
௸, 843
௸, 869.
செற்றவர்பின்
= அகன்று சென்றவர் பின், 1256.
செற்றார்
= பகைவர், 446
௸, 1097;
= வெறுத்தார், 1245.
செற்றார்க்கு
= பகைவர்க்கு, 313.
செற்றார்பின்
= அகன்று சென்றவர் பின், 1255.
செற்று
= அழித்து, 168
௸, 1009;
= அடக்கி, 335.

சென்ற[தொகு]

சென்ற
= போன
௸, 1261.
சென்றது
= போயிற்று, 1284.
சென்றார்
= போனவர், 1231
௸, 1263
௸, 1269;
= (பிரிந்து)போனார், 1278.
சென்றாரை
= (விட்டுப்)போனவரை, 1210.
சென்று
= போய், 207
௸, 753
௸, 895
௸, 966
௸, 967
௸, 1058;
= வந்து, 1045;
= விரைந்து[மேற்சென்று], 335;
= முற்பட்டு, 784.
சென்றேன்
= போயினேன், 1259
௸, 1284.


செகர வரிசை முற்றும்


அக இணைப்பான்கள்[தொகு]

செகு-செத்-செப்-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]-[[#|]]

பார்க்க:[தொகு]

அகர, ஆகார வரிசைகள் இகரம் ஈகாரம் உகரம் ஊகாரம் எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம்

க- கா, கி, கீ-கு, கூ- கெ, கே, கை-கொ, கோ, கௌ-
ச,சா,சி,சீ,சு,சூ செ சே, சொ, சோ
[[]]


சகரம்