திருக்குறள்அகரமுதலி சகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி சகர வரிசை[தொகு]

சகரம்[தொகு]

சமன்
= சரிநிலை, 118.
சலத்தால்
= வஞ்சனையால் = தீயவினைகளால், 660.
சலம்
= வஞ்சனை, 956.


சகர வரிசை முற்றும்

சாகார வரிசை[தொகு]

சாகாரம்

சா

சா[தொகு]
சா
=[சாப்புல்லல்] இறக்கும்படியாக, 829.
சாகாடு
= வண்டி, 475.
சாகிற்பின்
= சாகமுடியுமானால், 780.
சாக்காடு
= இறப்பு, 235, 339, 780.
சாதல்
= இறத்தல், 183, 1124.
சாதலின்
= இறத்தல்போல, 230.
சாம்
= [சாந்துணையும்] இறக்கும்(அளவும்), 397;
= [சாந்துயரம்] இறத்தற்கேதுவாய (துன்பம்), 792.
சாய
= கெட, 749.
சாயல்
= மேனியழகு, 1183.
சாய்தல்
= ஒழிதல், 858.
சாய்ந்து
= [எதிர்சாய்ந்து] (ஏற்றுக்கொள்ளாமல்)ஒழிந்து, 855.
சாய்பவர்
= தளர்பவர், 927.
சார
= (பின்னே)நிற்க, 323.
சாரா
= (உடன்)சேராத, 194, 815, 1047.
சார்தரா
= பற்ற மாட்டா, 359.
சார்தரும்
= பற்றுகின்ற (துன்பங்கள்), 359.
சார்பு
= துணை, 76, 359, 449, 900.
சார்வு
= துணையாதல், 15.
சால
= மிகுதியாக, 475, 770;
= விளங்க, 1233.
சாலப்படும்
= பணைத்து விளையும், 1037.
சாலும்
= அமையும், 165, 1060;
= [சாலும்கரி] அமையும்(சான்று), 25.
சால்பிற்கு
= அமைதிக்கு = பல குணங்களாலும் நிறைந்தமைக்கு, 986.
சால்பின்
= அமைதியினது, 105.
சால்பு
= அமைதி = நிறைகுணம், 956, 983, 984, 987, 1013, 1064.


சாவா
= சாவாமைக்குக் காரணமாகிய, 82.
சாவார்
= இறக்கவல்லவர், 723.
சாவாரை
= இறக்கவல்லவரை, 779.
சாற்றுவேன்
= சொல்லுவேன், 1212.
சான்ற
= நிரம்பிய, 56, 581, 1001.
சான்றவர்
= பலகுணங்களாலும் நிறைந்தவர், 990.
சான்று
= [சான்றாண்மை]குணங்களால் நிரம்பி, 981, 989, 990;
= [சான்றாண்மை] பல குணங்களானும் நிறைந்து அவற்றையாடற்றன்மை, அதி. 99.
சான்றோர்
= பலகுணங்களாலும் நிரம்பியவர், மேலானவர், 197, 656, 657, 802, 985, 1078;
= சான்றோரது, 840, 923, 982.
சான்றோரான்
= மேலானவரால், 922.
சான்றோர்க்கு
= பலகுணங்களானும் நிரம்பியவர்க்கு, 115, 118, 148, 299, 328, 458, 1014.


சான்றோன்
= கல்வி கேள்விகளால் நிறைந்தவன், 69.

சாகார வரிசை முற்றும்


சிகர வரிசை[தொகு]

சிகரம்

சி


சிதை[தொகு]
சிதைக்கலாதார்
= கெடுக்காதவர், 880.
சிதையாமல்
= அழியாமல், 578.
சிதைவு
= அழிதல், 112, 597.
சிமிழ்த்து
= பிணித்து, 274.
சில
= கொஞ்சம், 649.
சிலர்
= கொஞ்சம் பேர், 270, 1289.
சிவிகை
= பல்லக்கு, 37.
சிறக்கணித்தாள்
= சுருக்கினவள், 1095.
சிறந்த
= மிகுந்த, 531.
சிறந்தான்
= (நம்மாட்டு)அன்புடையான், 515.
சிறந்து
= மிகுந்து, 900.
சிறப்பின
= உயர்வுடையன, 961.
சிறப்பு
= உயர்ச்சி = பெருமை, 58, 74, 311, 590, 630, 752, 977;
= துறக்கம், 75;
= பொது அல்லாதது, 972;
= வேறுபாடு, 1012;
= இன்பம், 1208;
= [வான் சிறப்பு] அதி. 2;
= [காதற் சிறப்புரைத்தல்] அதி. 113.
சிறப்பொடு
= விழவுடன், 18;
= நன்கு மதிக்கற்பாட்டுடன், 195.
சிறிது
= சின்னது, 102;
= சின்னதாக, 412, 1075, 1301, 1302.
சிறிய
= குறைந்த, 963.
சிறியர்
= செயற்கரிய செய்யமுடியாதவர், 26.
சிறியவர்
= கீழ் மக்கள், 815.
சிறியார்
= சிறிதாக உடையவர், 680;
= சிறுமையுடையவர், 976.
சிறு
= [சிறுகை, சிறுபடையான், சிறுகாப்பின், சிறுபொருள், சிறுதுனி] சிறியதான, சின்ன, 64, 498, 744, 870, 1010, 1322;
= [சிறு நோக்கம்] அருகிய, 1092;
= [சிறுசொல்] இன்னாத, ஆ097.
சிறுகும்
= சின்னதாகும், சுருங்கும், 568.
சிறுகுவ
= சுருங்குவதற்குக் காரணமாகிய வினைகள், 798.
சிறுமை
= காமம், 431;
= சிறியோரியல்பு, 451;
= சிறிதாகல், 769;
= துன்பம், 934;
= சிறுமைக்குணம், 979;
= ஆற்றாமை, 1231;
= சிறுமையுடையோர், 978, 980.
சிறுமைக்கு
= தாழ்விற்கு, 505.
சிறுமைத்து
= சிறியதன்மையுடையது, 889.
சிறுமையுள்
= (பிறர்க்கு) நோய்செய்யுந் தன்மையுள், 98.
சிறை
= அரண், 57, 499, 569.
சிற்று
= [சிற்றினம்] சிறிதாகிய (சேர்க்கை), 451;
= [சிற்றின்பம்] நிலையில்லாத (இன்பம்), 173.
சினத்தான்
= வெகுளியுடையவன், 866.
சினத்தின்
= வெகுளியைவிட, 304.
சினத்து
= வெகுளியாகிய குற்றத்தின்கண், 568.
சினத்தை
= வெகுளியை, 307, 310.
சினம்
= வெகுளி, 301, 302, 305, 306, 431.
சினைப்பது
= அரும்புவது, 1203.

சிகர வரிசை முற்றும்

சீகார வரிசை[தொகு]

சீகாரம்

சீ


சீர்
= பெருமையாகிய ஆற்றல், 499;
= வீர மிகுதி, 778;
= புகழ், 934, 962, 1010;
= [சீரிடம்] வாய்க்கும்(இடம்), 821;
= பெருமை, 977.
சீரார்
= தவமுடையவர், 900.
சீரின்
= புகழ்செய்யுமிடத்து, 962.
சீரொடு
= புகழொடு, 962.
சீர்த்தவிடத்து
= காலம் வாய்த்தால், 400.
சீர்மை
= விழுப்பம், 123, 195.
சீறின்
= சினந்தால், 568, 899.


சீகார வரிசை முற்றும்

சுகர வரிசை[தொகு]

சுகரம்

சு

சுட
= காய்ச்ச, 267.
சுடச்சுட
= காய்ச்சக் காய்ச்ச, 267.
சுடப்படின்
= எரிக்கப்பட்டால், 896.
சுடரும்
= [சுடரும் பொன்] ஒளி வீசுகின்ற(பொன்), 267.
சுடல்
= கொளுத்துதல், 1159.
சுடின்
= எரித்தால், 1159.
சுடும்
= வெதுப்பும், 293, 306, 799, 1207;
= கெடுக்கும், 1019.
சுட்ட
= எரித்த, 129.
சுதை
= சுண்ணாம்பு, 714.
சுமக்க
= பணிக, 488.
சுருக்கத்து
= வறுமையில், 963.
சுவை
= உருசி, 27, 253, 420.
சுழலும்
= [சுழலும் இசை] (துறக்கத்துத் தம்மொடு செல்லாமல் வையத்தைச்)சூழ்ந்து நிற்கும்(புகழை), 777.
சுழன்று
= செய்து திரிந்து, 1031.
சுற்றத்தார்கண்
= உறவினர் மாட்டு, 521.
சுற்றத்தால்
= கிளைஞரால், 524, 525.
சுற்றப்பட
= சூழப்படும் வகை, 524.
சுற்றப்படும்
= சூழ்ந்துகொள்ளப்படும், 525.
சுற்றம்
= கிளைஞர், 166, 451, 522, 529, 584, 1025;
= [சுற்றந் தழாஅல்] அரசன் தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல், அதி. 53.
சுற்றும்
= சூழ்ந்து கொள்ளும், 1025.

சுகர வரிசை முற்றும்

சூகார வரிசை[தொகு]

சூகாரம்

சூ


சூடின்
= அணிந்தால், 1313.
சூடினீர்
= அணிந்தீர், 1313.
சூதர்க்கு
= சூதாடுபவர்க்கு, 932.
சூதின்
= சூதாட்டம்போல், 934.
சூதினை
= சூதாடலை, 931.
சூது
= சூதாட்டம், 936, 938;
= சூதாடுபவன், 940;
= [சூது] சூதினியல்பு, அதி. 94.
சூழ
= நினைக்க, 176.
சூழற்க
= நினையாதொழிக, 204.
சூழாது
= ஆராயாமல், 465, 554.
சூழாமல்
= ஆராயாமல், 1024
சூழின்
= நினைத்தால், 204, 380.
சூழும்
= எண்ணும், 2014;
= [சூழும் நெறி] கருதும்(நெறி), 324.
சூழ்ச்சி
= விசாரம் = உபாயம் நினைத்தல், 671.
சூழ்ந்தவன்
= எண்ணியவனுக்கு, 204.
சூழ்ந்து
= உபாயம் ஆராய்ந்து, 445, 461, 640.
சூழ்ந்துவிடும்
= எண்ணித்துணியும், 451.
சூழ்வது
= நினைதல், 1276.
சூழ்வார்
= அமைச்சர், 445;
= எண்ணுபவர், 1294.
சூழ்வாரை
= அமைச்சரை, 445.
சூழ்வான்
= மறவாதவன், 325.


சூகார வரிசை முற்றும்



அக இணைப்பான்கள்[தொகு]

குட

பார்க்க[தொகு]

அகர, ஆகார வரிசைகள் இகரம் ஈகாரம் உகரம் ஊகாரம் எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம்

க- கா, கி, கீ-கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ-

ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ- ஞா [[]]

நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|