அபரிமிதம்
Appearance
அபரிமிதம் (பெ)
- அளவின்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அபரிமிதமான அன்பு
- அபரிமிதமான வளர்ச்சி
- அபரிமிதமான சலுகைகளைப் பெற்ற பின் பிள்ளைகள், தாயை மதிப்பதில்லை என்பது மட்டும் இல்லை; அவர்கள் தங்கள் கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்களுக்குத் தாயைக் கருவியாக்குகின்றனர். (புதிய சிறகுகள், ராஜம் கிருஷ்ணன்)
- அபரிமிதமான அழகுள்ளவர்கள் மேலெல்லாம் அவருக்கு இனம் புரியாததொரு புகைச்சல் உண்டு. (ஒரு வெறுப்பின் மறுபுறம், தீபம் நா. பார்த்தசாரதி)
- அவள் காட்டிய தீரம், பாண்டிய வீரர்களுக்கு அபரிமிதமான உற்சாகத்தை ஊட்டியது; போர்க்களத்தில் பாண்டிய குமாரி எந்தப் பக்கம் தோன்றினாலும், அந்தப் பக்கத்திலுள்ள பாண்டிய வீரர்கள், வீர கோஷத்தை எழுப்பிக் கொண்டு சோழர் படையின் பேரில் பாய்ந்தார்கள். (மோகினித் தீவு, கல்கி)
- பழைய தேவைகள் நிறைவாகும் வேகத்தை விட புதிய தேவைகள் உருவாகும் வேகம் அபரிமிதம். சில நேரம் பயணத்துக்காக தேவைகளா, இல்லை தேவைகளுக்காக பயணமா என குழம்புகிறேன் (வழிநடைப்பயணம், சுகா)
- உடனடியாக உன்னைப் பார்த்தாக வேண்டுமென்கிற வேட்கை அபரிமிதம் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அபரிமிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +