உன்னதம்
Appearance
உன்னதம் (பெ)
- உயர்ச்சி
- மேன்மை
- ஒன்றின் உச்ச நிலை வெளிப்பாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உன்னதமான இலக்கு - lofty goal
- இசைகேட்கும்போது நீங்கள் ஒரு வெறும் மிருகமாக ஆகும் கணங்கள் உண்டு என்பதே அதன் உன்னதம். (கடிதம், ஜெயமோகன் )
- புனிதம் உன்னதம் மகத்துவம் என்றெல்லாம் வழிபடு பிம்பங்களை உருவாக்கும் செயலை பகடி தலைகீழாக்குகிறது. (பகடி, ஜெயமோகன் )
- அடிப்படை நன்றி, விசுவாசம் போன்ற உன்னத உணர்வுகளைக் கூடப் பணமும் வசதிகளும் மாற்றிக் கெடுத்து விடுவதை உணர முடிந்தது. ( சாயங்கால மேகங்கள், தீபம் நா. பார்த்தசாரதி )
- அவர் உன்னத ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நானோ, கைதியின் கூண்டில் நின்று கொண்டிருந்தேன். ( நம்பர் 888, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உன்னதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +