உப்பரிகை
Appearance
பொருள்
உப்பரிகை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோதாவரியை ஒட்டி ஒரு பெரிய விருந்தினர் மாளிகை. நான்கு தூண்கள் மேல் அந்தரத்தில் அமைந்தது. இரு குளிர்சாதன படுக்கையறைகள். சமையலறை. நான்கு பக்கமும் உப்பரிகைகள். ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குரிய வசதிகள். பின்பக்க உப்பரிகையில் இருந்து இதை எழுதுகிறேன். கண்ணெதிரே பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது கோதாவரி, அப்பால் தென்னந்தோப்புகள். தனிமை. இன்னும் பொருத்தமாகச் சொன்னால் ஏகாந்தம். ஏக அந்தம். (ஓர் இடம், ஜெயமோகன்)
- உப்பரிகை மேல் மாடங்களிலிருந்து இரு சக்கரவர்த்திகளும் அமர்ந்து சென்ற பட்டத்து யானை மீது மலர் மாரி பொழிந்து கொண்டிருந்தது. (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆடகப்புரிசை உப்பரிகை (மச்சபு. நைமிசா. 2).
ஆதாரங்கள் ---உப்பரிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +