கட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. firewood - விறகு
  2. funeral pyre - ஈமவிறகு. நடுக்கட்டையிலே கிடத்து மட்டும் (தனிப்பா. i, 195, 10
  3. block, small stump, piece of timber - குற்றி
  4. stake - கடாவு முளை.
  5. wooden float of a big sea-fishing net - கடலுள் வலையிருக்குமிடங் காட்டும் குற்றி.
  6. body - உடல். கட்டை யிருக்கையிற் சிதம்பரம் போய் நான் காண வேண்டும்.
  7. corpse - பிரேதம்
  8. That which is short, low, dwarfish; that which is diminished or worn out by use, as a broom-stick; தேய்ந்தது.

கட்டைத் துடைப்பம்

  1. deficiency in length or in breadth, insufficiency - பற்றாதது. அகலக்கட்டை.
  2. defect; imperfection; lowness, as of price; inferiority - குறைவு. விலைக்கட்டை, மாற்றுக்கட்டை.
  3. refuse or residuum, of the grains after pounding and sifting - திப்பி.
  4. roughness of the beard after shaving, hair-stump - மயிர்க் கட்டை.
  5. shortness of stature - குட்டை. ஆள் கட்டையானவன்
  6. The first count in a game of jackstones - கழற்சிக்காய் ஆட்டத்தின் முதற்றொகை.
  7. flatting, as a defect in singing - ஒருவகை இசைக் குற்றம். (திரு வாலவா. 57, 26.)
  8. கட்டைச் சாரீரம்
  9. The key-note in the harmonium - ஆர்மோனியத்தின் இசையெழுப்புங் கருவி.
  10. dam across a stream - அணை.
  11. கட்டைச்சுவர்
  12. brick-built structure in the shape of a pillow constructed along the length of a pial in

an Indian dwelling house - திண்ணையுடன் சேரக்கட்டிய அணை.

  1. mile - மைல்
  2. copper core - செப்புக் கட்டை
விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---கட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
  1. நாட்டுக்கட்டை - வலுவான உடம்பைக் கொண்ட ஆண் அல்லது பெண்
  2. ஒண்டிக்கட்டை - தனியாக வாழ்பவர்.
  3. உடன்கட்டை - இறந்த கணவனை எரியூட்டும் போது மனைவி உடனே அதே தீயில் விழும் கொடும் பழக்கம்
  4. கரலாக்கட்டை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டை&oldid=1969088" இருந்து மீள்விக்கப்பட்டது