கலைமகள்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கலைமகள், பெயர்ச்சொல்.
- ஆங்கிலம்
- Sarasvati, Goddess of learning
படைக்கும் கடவுளான இறைவன் பிரம்மதேவனின் பத்தினி...அனைத்து கலைகளும், கல்வியும், ஞானமும் அருளும் தெய்வமானதால் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள்...
-
- மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
- திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க - திரைப்பாடல்
- உனக்கேன் ஆசை கலைமகள் போலே - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கலைமகள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிளத்தி, நாமகள், நாமடந்தை, நாமாது, வாணி, திருமகள் , மணமகள்
சரஸ்வதியைக் குறிப்பிடுகையில் இனிமையானப் பேச்சு அமைந்திருக்குமிடம், மகிழ்ச்சியின் விளிம்பு, உயர்வான சிந்தனைகள் உள்ள இடங்களில் உறைபவள் என்கிறது. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று ரிக்வேதம் கூறுகிறது.
மூளை, எண்ணங்களுக்குரியவள், கலை பண்பாடு இவற்றின் உருவமாகக் கொண்டு அமைந்திருப்பவள், விண்ணுலக மங்கையருடன் தொடர்புடையவள் (கந்தர்வ கன்னிகளுடன்) விண்ணில் இசைத்தல், நடனமித்தல் எங்கும் நிறைந்திருப்பவள். கலைவாணியின் அம்சம் பொருந்தியவர்கள் கல்வியில் ஈடுபாடுள்ளவர்கள். இந்திய படிமக்கலையில் சரஸ்வதியின் உருவ அமைதியும், சாந்தமும் கொண்டதாகக் காணப்படுகிறது. மொழி என்பது தொடர்ச்சியான ஒலி, சரஸ்வதி இதில் நிறைந்து எண்ணம், கருத்து, கலை, கலாச்சாரம் ஆகிய கூறுகளில் பரிணமித்து பரிவர்த்தனையாகிறாள். தேவிபாகவதம், குறிப்பிடுகையில் கல்வி நிலையங்கள் நூலகங்கள் இவற்றின் கடவுளாகச் சுட்டிக் காட்டுகிறது. சரஸ்வதி தேவி இல்லங்களில் வழிபடும் கடவுள் மட்டுமல்ல, இவள் கலாச்சாரக் கடவுள் புதுப்புது பண்பாடுகளையும், நாகரீகங்களையும், புதுமையான கலைகள், கல்வி முறைகளுக்கானவள். படிமக்கலை: சரஸ்வதி அல்லது கலைமகள் வெள்ளைத்தாமரையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இவரது நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்கமாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், வெள்ளைத் தாமரையும், தலையில் சடா மகுடம் தரித்திருப்பார். யக்ஞோபவீதம் அணிந்திருப்பார். அனைத்து விதமான அணிகலன்களும் அணிந்திருப்பார். இவ்வாறாக அம்சுமத் பேதாகமம் குறிப்பிடுகிறது.
சரஸ்வதி தேவியின் சிற்பமானது முற்கால சோழர் கோயில் (துறையூர்), இடைக் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களில் தேவகோட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் தனியாக கோயில், மயிலாடுதுறைக்கருகில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகில் அமைந்துள்ளது.