உள்ளடக்கத்துக்குச் செல்

கவ்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கவ்வை(பெ)

 1. ஒலி
  • எவ்வையர்சேரி யிரவு மிமைபொருந்தாக் கவ்வை (பு. வெ. 12, பெண்பாற். 10)
 2. பழிச்சொல்
  • கவ்வையற்ற நடைபயில (தாயு. சிற்சுகோ. 8)
 3. துன்பம்
  • கவ்வையொழிந் துயர்ந்தனன் (கம்பரா. திருவவ. 66)
 4. கவலை
 5. பொறாமை
 6. கள்

(பெ)

 1. காரியம்
  • இவணீசேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பரா. திருவவ. 63)
 2. எள்ளின் இளங்காய்; எள்ளிளங்காய்எள்ளின் பிஞ்சுப் பருவம்
 3. ஆயிலியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

 1. sound, din, noise, roar
 2. scandal, slander, calumny
 3. affliction, distress
 4. anxiety, care
 5. jealousy
 6. toddy

(பெ)

 1. concern, business, affair
 2. green sesamum seed
 3. the ninth star
 • அலர் - ஊர்ப்பேச்சு - ஊர்வாய் - idle talk in a village about any lovers - light rumor
 • கவ்வை - பழிச்சொல் - slanderous talk
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • கவ்வை இன்றாக, நுங்கள் வரவு (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவ்வை&oldid=1384445" இலிருந்து மீள்விக்கப்பட்டது