உள்ளடக்கத்துக்குச் செல்

கார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கார் (பெ)

  1. கருமை
  2. கரியது
  3. மேகம்
  4. மழை
  5. கார்ப் பருவம், கார்க்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம்
  6. நீர்
  7. கார்நெல்
  8. கருங் குரங்கு
  9. வெள்ளாடு
  10. ஆண்மயிர்
  11. எலிமயிர்
  12. கருங்குட்டம்
  13. இருள்
  14. அறிவு மயக்கம்
  15. ஆறாச் சினம்
  16. பசுமை
  17. அழகு
  18. செவ்வி
  19. சிற்றுந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. car, automobile
  2. blackness
  3. that which is black
  4. cloud
  5. rain
  6. rainy season (in the Tamil months of Aadi and Aavani)
  7. water
  8. paddy harvested in the rainy season
  9. black monkey
  10. goat
  11. men's hair
  12. rat's hair
  13. black leprosy
  14. darkness, gloom of night
  15. ignorance, illusion
  16. rancour, deep-seated and implacable hatred
  17. freshness, greenness
  18. beauty
  19. ripeness, maturity, flowering period, as of a plant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • களங்கனியைக் காரெனச் செய்தாரு மில் (நாலடி, 103)
  • வைகறை கார்பெற்ற புலமேபோல் (கலித். 38)
  • காரரிசி மந்தம் (பதார்த்த. 799)
  • காரு மாலையு முல்லை (தொல். பொ. 6)
  • காரக்குறைந்து (கலித். 65)
  • காரடுகாலை (பரிபா. 12, 85)
  • களவென் னுங் காரறிவாண்மை (குறள், 287)
  • காரார் குருந்தோடு (திணைமாலை. 112)

(இலக்கணப் பயன்பாடு)


கார் (வி)

  1. கறுப்பாகு
  2. அரும்பு
  3. காரம் முதலியவற்றால் உறை
  4. உப்புக் கறி
மொழிபெயர்ப்புகள்
  1. darken, grow black
  2. bud
  3. be pungent, acrid, hot to the taste
  4. be very saltish or brackish
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கார்க்கின்ற மெய் யவுணர் (கந்தபு. பானுகோ. 122)
  • வண்கொன்றைகள் கார்த்தனவே (திவ். இயற். திரு விருத். 68)

ஆதாரங்கள் ---கார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கார்

 :கருமை - மழை - மேகம் - # - #

  1. நிறம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கார்&oldid=1995177" இலிருந்து மீள்விக்கப்பட்டது