குடிமக்கள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குடிமக்கள்(பெ)
- ஒரு நாட்டில் வாழ உரிமை பெற்ற மக்கள்
- வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றச்சன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன்,பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள்.
- அடிமைகள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒவ்வொரு பயங்கரவாத வன்முறையின்போதும் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டிருப்பவர்கள் இந்நாட்டின் அப்பாவிக் குடிமக்கள். இந்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறதே தவிர, பொதுமக்கள் உயிர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. (பயங்கரவாதம் வளர்வது ஏன்?, தினமணி, 20 செப் 2011)
- குடிமக்கள்மானியம் - பணிசெய்யும் வண்ணான் அம்பட்டன் முதலிய குடிமக்கட்கு விடப்பட்ட இறையலி நிலம் - land given free of rent to washermen, barbers, etc. for the services rendered by them to villagers
(இலக்கியப் பயன்பாடு)
- இந்திரியங்களுக்குக் குடிமக்களாய் வர்த்திக்கிற லீலாவிபூதி (திவ். திருமாலை, 13. வ்யா.)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---குடிமக்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- குடிமகன் - குடிமகள் - குடி - மக்கள் - குடிமக்கள்மானியம் - பொதுமக்கள்