உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி தாகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி தாகார வரிசை

[தொகு]

தாகாரம்

தா

தா
= கேடில்லாத[தாவில்], 853.

இலக்கணக்குறிப்பு: ‘தா’ பண்புப் பெயர், உரிச்சொல்.

தாஅம்
= தாங்கள், 1176.

இலக்கணக்குறிப்பு: ‘தாஅம்’ பன்மை பொதுப்பெயர்.தாம்-தாஅம் அளபெடை.

தாஅயது
= கடந்த பரப்பு, 610.

இலக்கணக்குறிப்பு: ‘தாஅயது’ தாவு-பகுதி+ இ-இடைநிலை+ ய்-உடம்படுமெய்+ அ-சாரியை+ து-விகுதி. (தாவியது)தாயது எனக் குறைந்து நின்றது; தாயது- தாஅயது: அளபெடை; அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை, இறந்தகால வினையாலணையும் பெயர்.

தாக்க
= மோதுமானால், 1068.

" இலக்கணக்குறிப்பு: தாக்கு-பகுதி+அ-விகுதி; செய எனும் எதிர்கால வினை எச்சம்.

தாக்கற்கு
= பாயும் பொருட்டு, 486.

இலக்கணக்குறிப்பு: தாக்கு-பகுதி+அல்-விகுதி, அல்~அற்-திரிபு, கு-வேற்றுமை உருபு. தொழிற்பெயர். 4-ஆம்வேற்றுமை.

தாக்கு
= தாக்கி வருத்துகின்ற[தாக்கணங்கு], 1082.

இலக்கணக்குறிப்பு: முதனிலைத் தொழிற்பெயர். தாக்கணங்கு-வினைத்தொகை.

தாங்காது
= பொறுக்காது, 990.

இலக்கணக்குறிப்பு: தாங்கு-பகுதி+ ஆ-விகுதி+ து-விகுதி. எதிர்மறை ஒன்றன்பால் வினை முற்று.

தாங்கி
= கேடில்லாமல் இனிதிருப்பச் செய்து, 733;
= மேல் வாராமல் தடுத்து, 767.

இலக்கணக்குறிப்பு: தாங்கு-பகுதி+ இ-விகுதி. செய்து எனும் இறந்தகால வினை எச்சம்.

தாங்கும்
= சுமக்கும்(நிலம்), 151;
= விலக்கும்(வகுப்பு), 767.

இலக்கணக்குறிப்பு: தாங்கு-பகுதி+ உம்-விகுதி. செய்யும் எனும் எதிர்மறைப் பெயரெச்சம்.

தாம்

தாம்
= தாங்கள், 158
= ௸, 228
= ௸, 229
= ௸, 319
= ௸, 399
= ௸, 539
= ௸, 646
= ௸, 724
= ௸, 843
= ௸, 989
= ௸, 1073
= ௸, 1076
= ௸, 1103
= ௸, 1140
= ௸, 1150
= ௸, 1169
= ௸, 1171
= ௸, 1173
= ௸, 1191
= ௸, 1194
= ௸, 1195
= ௸, 1202
= ௸, 1299
= ௸, 1300
= ௸, 1325;

இலக்கணக்குறிப்பு: பண்புப் பெயர். பொருட்பெயர்.

= ௸, (சாரியை), 658.
தாமரை
= தாமரை மலர், 1103.
 இலக்கணக்குறிப்பு:  அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை. பொருட் பெயர். ஆகுபெயர். 
தாமரையினாள்
= திருமகள், 617.

இலக்கணக்குறிப்பு: தாமரை-பகுதி+ ய்-உடம்படுமெய்+ இன்-சாரியை+ ஆள்-விகுதி. உயர்திணை பெண்பாற் படர்க்கை. பொருட் பெயர்.

தாய்
= அன்னை, 69.

இலக்கணக்குறிப்பு: உயர்திணை பெண்பாற் படர்க்கை. பொருட் பெயர்.

தாயான்
= தாயினால், 1047.

இலக்கணக்குறிப்பு: தாய்-பகுதி+ ஆன்-வேற்றுமை உருபு. உயர்திணை பெண்பாற் படர்க்கை. 3-ஆம் வேற்றுமை.

தார்

தார்
= தூசிப்படை, 767.

இலக்கணக்குறிப்பு: சினைப் பெயர்.

தாழ்
= தாழ்ப்பாள், 71
= ௸, 1251.

இலக்கணக்குறிப்பு: அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை. பொருட் பெயர்.

தாழாது
= சளைக்காமல், 620;
= விரைந்து, 1024.

இலக்கணக்குறிப்பு: தாழ்-பகுதி+ ஆ-இடைநிலை+ து-விகுதி. எதிர்மறை வினையெச்சம்.

தாழ்ச்சியுள்
= (பொழுதால்)வினை நீட்டிப்பின்கண், 671.

இலக்கணக்குறிப்பு: தாழ்-பகுதி+ ச்-சந்தி+ ச்-விகுதி+ ய்-உடம்படுமெய்+ உள்-வேற்றுமை உருபு. தொழிற்பெயர். 7-ஆம் வேற்றுமை உருபு.

தாழ்ந்த
= ஆட்படுவதற்கு ஏதுவாகிய, 903.

இலக்கணக்குறிப்பு: தாழ்-பகுதி+ த்-சந்தி+ ந்-விகாரம்+ த்-இடைநிலை+ அ-விகுதி. செய்த எனும் இறந்தகாலப் பெயரெச்சம்.

தாழ்வு
= வறுமை, 117;
= கேடு, 731.

இலக்கணக்குறிப்பு: தாழ்வு-பகுதி+ வ்-இடைநிலை+ உ-விகுதி. தொழிற்பெயர்.

தாள்

தாள்
= அடி, 02
= ௸, 07
= ௸, 08;
= முயற்சி, 212
= ௸, 617
= ௸, 1065;
= முயற்சி[தாளாண்மை], 613
= ௸, 614.

இலக்கணக்குறிப்பு:

தாளை
= அடிகளை, 09.

வார்ப்புரு:smaller

தான்

தான்
= குறித்த ஒரு பொருள், 11[[]]
= ௸, 17
= ௸, 380
= ௸, 451
= ௸, 707
= ௸, 990
= ௸, 1023
= ௸, 1024
= ௸, 1060;
= குறித்த ஒருவன், 43
= ௸, 82
= ௸, 206
= ௸, 209
= ௸, 250
= ௸, 251
= ௸, 268
= ௸, 272
= ௸, 305
= ௸, 316
= ௸, 318
= ௸, 327
= ௸, 367
= ௸, 387
= ௸, 398
= ௸, 424
= ௸, 446
= ௸, 524
= ௸, 540
= ௸, 548
= ௸, 792
= ௸, 834
= ௸, 835
= ௸, 847
= ௸, 848
= ௸, 849
= ௸, 862
= ௸, 875
= ௸, 974
= ௸, 1006
= ௸, 1018
= ௸, 1026
= ௸, 1094
= ௸, 1102
= ௸, 1290;
= தேற்றப்பொருள்<சாரியை)[வினைதான்], 515
= ௸, 785
= ௸, 977
= ௸, 1215;
= (அசைநிலை), 980.
தானம்
= கொடை, 19
= ௸, 295.
தானை
= படை, 767
= ௸, 768
= ௸, 770
= ௸, 1082.

(திருக்குறள் அகரமுதலி தாகார வரிசை முற்றும்)

திருக்குறள் அகரமுதலி திகர வரிசை

[தொகு]

திகரம்

தி


திகழ்தரும்
= புலனாகும்(நூல்), 1273.
திகழ்வது
= புலனாகின்றது, 1273.
திங்களை
= சந்திரனை, 1146.
திட்பம்
= திண்மை = உறுதி, 661
= ௸, 665
= ௸, 670;
= [வினைத்திட்பம்], அதி. 67.
திண்ணியர்
= வலியர், 666.
திண்மை
= கலங்கா நிலைமை, 54;
= வலிமை, 743
= ௸, 988.
திரிந்து
= வேறுபட்டு, 90
= ௸, 452;
= கெட்டாற்(போன்றது)[திரிந்தற்று], 1000.
திரியாது
= வேறுபடாமல், 124.
திரு
= செல்வம், 168
= ௸, 215
= ௸, 374
= ௸, 408
= ௸, 568;
= நன்மை, 1072;
= அழகையுடைய[திருநுதல்], 1011
= ௸, 1123;
= திருமகள், 179
= ௸, 519
= ௸, 616.
திருவினை
= செல்வத்தை, 482
= ௸, 616.
திறப்பாடு
= கூறுபாடு, 640.
திறம்
= கூறுபாடு, 501
= ௸, 1184
= ௸, 1298;
= [பகைத்திறந்தெரிதல்], அதி. 88.
திறன்
= செய்யத்தகுந்தவை, 157;
= கூறுபாடு, 179
= ௸, 441
= ௸, 635;
= தகுதி வேறுபாடுகள், 644;
= நெறி, 754;
= உளையுந்தன்மையுடைய பழிகள் <ஆகுபெயர்>, 186.
தினல்
= தின்னுதல், 254
= ௸, 256.
தினிய
= தின்னுதற் பொருட்டு, 1296.
தினை
= தினைப்பயிரின் அலகு, 104
= ௸, 144
= ௸, 433
= ௸, 1282.
தின்பவர்க்கு
= உண்ணுபவர்களுக்கு, 252.
தின்னும்
= தின்பன போன்று நலியா நிற்கும், 1244.

(திருக்குறள் அகரமுதலி திகர வரிசை முற்றும்)

திருக்குறள் அகரமுதலி தீகார வரிசை

[தொகு]

தீகாரம்

தீ


தீ
= நெருப்பு, 674
= ௸, 691
= ௸, 947
= ௸, 1104
= ௸, 1159.
= விளக்கு, 929;
= கொடிய, 128
= ௸, 138
= ௸, 201
= ௸, 206
= ௸, 209
= ௸, 210
= ௸, 227
= ௸, 460;
= இழிந்த[தீ நட்பு], = தீக்குணத்தாரோடு உளதாய நட்பு, அதி. 82;
= [தீவினையச்சம்]= பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல், அதி. 21.
தீங்கு
= தீமை, 827.
தீண்டல்
= தொடுதல், 65
= ௸, 227.
தீண்டலால்
= தொடுதலால், 1106.
தீண்டா
= சென்றடையா, 62.
தீது
= கொடிது, 182
= ௸, 192
= ௸, 222
= ௸, 282
= ௸, 302
= ௸, 531;
= குற்றமுடையது, 671;
= துன்பம், 190;
= கொடியது, 422;
= கொடுங்கோன்மை, 754.
தீமை
= கெடுதி, 143
= ௸, 291
= ௸, 511;
= குற்றம், 984.
தீமைத்து
= தீங்குடையது, 450.
தீமையால்
= கெடுதியால் / குற்றத்தால், 1000.
தீய
= கொடிய சொற்கள், 139;
= துன்பங்கள், 202;
= தீவினைகள், 203;
= கொடியவை, 302
= ௸, 303
= ௸, 375.
தீயவை
= துன்பங்கள், 62;
= கொடிய வினைகள், 202
= ௸, 205
= ௸, 208.
தீயில்
= நெருப்பின்கண், 1260.
தீயின்
= நெருப்பைக் காட்டி(லும்), 202.
தீயினால்
= நெருப்பால், 129.
தீயுழி
= நரகத்தின்கண், 168.
தீர்
= நீங்கிய[பொய்தீர் ஒழுக்கம்], 6
தீர
= முற்றும் அற, 348;
= அற, 675.
தீரா
= நீங்காத, 508
= ௸, 510
= ௸, 1201.
தீராமை
= நீங்காமல், 482.
தீர்க்கும்
= விடுவிக்கும் (மருந்து), 1241
= ௸, 1275.
தீர்த்தல்
= போக்குக, 226.
தீர்ந்த
= நீங்கியவை, 199;
= நீங்கிய, 292.
தீர்ந்தன்று
= விட்டது, 612.
தீர்ந்தார்
= நீங்கினவர், 170.
தீர்ந்தாரின்
= செய்யாது விட்டாரை அல்லது நீங்கினார் போல, 612.
தீர்ப்பான்
= (நோயை)ஆற்றுபவன், 950.
தீர்வாம்
= நீக்கக் கடவோம், 1063.


(திருக்குறள் அகரமுதலி தீகார வரிசை முற்றும்)

துகரம்

[தொகு]

து

=


பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-

- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ- ஞா த- து-த- பா-| ம-|